2025 ல் மூன்றாவது மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக இந்தியா திகழும்
Aim to World’s third and largest Consumer Market in 2025
நாட்டின் தொழில் முனைவு முன்னேற்றமும், முதலீட்டு வாய்ப்புகளும் அதிகரித்து இருப்பதால் இந்தியா 2025 ல் மூன்றாவது மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாக திகழும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘ இந்தியாவின் பொருளாதாரம் சுமார் 5 டிரில்லியன் அமெரிக்க டாலரை நோக்கி பயணித்து வருகிறது. உலக வங்கி மற்றும் சர்வேதச நாணய நிதிய அறிக்கையின் படி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரித்து கொண்டே செல்கிறது. வருங்காலத்திலும் இது நல்ல முன்னேற்றத்தில் பயணிக்கும்.
இந்தியா – கிரீஸ் இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் 530 மில்லியன் டாலராக உள்ளது. இன்று நம் நாட்டில் வணிக ரீதியாக ஏராளமான வாய்ப்புகள் குவிந்துள்ளன. வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பங்களிப்பும் திருப்திகரமாக உள்ளது.
மத்திய ஐரோப்பிய நாடுகளில் உட்கட்டமைப்பு, மருந்து மற்றும் எஃகு துறைகளில் சில இந்திய நிறுவனங்களும் உள்ளன. கிரீஸ் மற்றும் இந்தியாவின் பண்டைய கால நாகரிகம் மற்றும் பண்பாடு தங்கள் கொள்கைகளை பறைசாற்றுகின்றன.
இரு நாடுகளுக்கிடையேயான உறவும் மிக பழமையானது மற்றும் ஆழமானதும் கூட ‘ என்றார். கடந்த 11 ஆண்டுகளில் கிரீஸ் நாடு சென்ற முதல் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆவார்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை