மெய்நிகர் நாணய தடையில் எந்த மாற்றமுமில்லை – ரிசர்வ் வங்கி
No Change or Research on Cryptocurrency Ban – RBI
‘கிரிப்டோ கரன்சி’ (Cryptocurrency) எனப்படும் மெய்நிகர் நாணய வர்த்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று. மெய்நிகர் நாணயங்கள் Bitcoin, Ethereum, Litecoin, Ripple, Stellar என பல்வேறு வகைகளில் இணையத்தில் வர்த்தகமாகின்றன.
ஏறத்தாழ 1500 க்கும் மேற்பட்ட மெய்நிகர் நாணய வகைகள் மற்றும் அதன் வர்த்தக மதிப்பு 27,320 கோடி அமெரிக்க டாலராக இருப்பதாகவும் மெய்நிகர் நாணய தளங்கள் சொல்கின்றன.
இணையதள வாயிலாக செயல்படும் இந்த பரிமாற்றத்தில் தொழில்நுட்ப ரீதியாக நம்பகத்தன்மை இல்லை என்று பல நாடுகள் மெய்நிகர் பரிமாற்றத்தை தடை செய்துள்ளன. இவற்றில் இந்தியாவும் ஒரு நாடாக உள்ளது. இருப்பினும், சில வெளிநாட்டு மெய்நிகர் இணையதள தரகர்கள் மூலம் இந்தியாவில் இந்த கிரிப்டோ கரன்சி வர்த்தகம் சட்டவிரோதமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.
இன்னும் இதற்கான சட்டங்களும், ஒழுங்குமுறை கொள்கைகளும் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தகவல் அறியும் உரிமை (RTI) சட்டத்தின் கீழ் வருண் சேதி என்ற தொழில் ஆலோசகர், மெய்நிகர் நாணயம் சம்மந்தமாக பாரத ரிசர்வ் வங்கியிடம் தகவல் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி, ‘ மெய்நிகர் நாணயம் சம்மந்தமாக இதுவரை எந்த குழுவும் அமைக்கப்படவில்லை, இது சார்ந்து எந்த ஆராய்ச்சியும் மேற்கொள்ளப்படாது. மேலும் மற்ற நாடுகளுடன் கலந்து ஆலோசிக்கும் எண்ணம் இதுவரை இல்லை’ எனவும் கூறியுள்ளது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
கடந்த ஏப்ரல் 6 ம் தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு அறிக்கையில் (Prohibition on dealing in Virtual Currencies) மெய்நிகர் நாணய வர்த்தகம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்று எனவும்(Ban in India), இதனை கையாள்வதில் வங்கிகள், இ-வாலட் தளங்கள், பணப்பரிமாற்ற சேவை வழங்குவோர் மற்றும் வேறு ஏதேனும் தொழில் முனைவோர்களும் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை