Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்

 

வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்

What is Bank Repo Rate ?

 

வங்கிகள் அவ்வப்போது சேமிப்பு மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றத்தை கொண்டு வரும். தற்சமயம் பல வங்கிகளில் வட்டி விகித குறைப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை அறிவோமா…?

 

நமது நாட்டில் வங்கிகள் பெரும்பாலான தொழில்களுக்கும், பொருளாதாரத்திற்கும் ஊன்றுகோலாக அமைகின்றன. இந்த வங்கிகளின் செயல்பாடுகளையும், அதன் பணத்தையும் ஒழுங்குமுறைப்படுத்தி நிர்வகிப்பது நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India – RBI) ஆகும். RBI நாணயத்தின் மதிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்த ரிசர்வ் வங்கி தான் நாட்டின் தலைமை வங்கியாகவும் செயல்படுகிறது. வங்கிகளுக்கான கட்டுப்பாடுகள், கொள்கைகளில் இவை அதற்கான காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். நாட்டின் பணவீக்கத்திற்கு ஏற்றாற் போல, வங்கியின் வட்டி விகிதத்திலும் ஏற்ற, இறக்கம் இருக்கும். நீங்கள் வங்கிகளில் பெறும் வீட்டுக்கடனுக்கு சில காலங்களில் வட்டி விகிதம் அதிகரிக்கும் (அ) குறைக்கப்படும். நீங்கள் வங்கியில் சேமிக்கும் பணத்திற்கும் தான் அது போல !  வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் நமக்கு நல்லது தான். ஆனால் நமது சேமிப்பு, வைப்பு நிதி தொகைக்கு வட்டி குறைந்தால்… ?

 

நாம் எதிர்பார்த்த பலன் (பணம்) முதிர்வில் கிடைக்காது. வட்டி குறைப்புக்கான காரணத்தை வங்கிகளிடம் கேட்டால், “ ரிசர்வ் வங்கி, ரெபோ விகிதத்தை (Repo Rate) குறைத்ததால் நாங்களும் வட்டி விகிதத்தை குறைத்தோம் “ என்பார்கள் 🙂 செய்திகளிலும் நாம் எப்போதாவது கேள்விப்படும் வார்த்தை, ‘ ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரெபோ விகிதத்தை குறைத்தது ‘. அது என்ன ரெபோ விகிதம் (Repo or Repurchase Rate) ?

 

ரெபோ விகிதம் (Repo or Repurchase Rate):

 

நமது தொழிலுக்கோ, தனி நபர் அவசரத்திற்கோ (அ) வீடு கட்டுவதற்கோ நாம் வங்கியில் கடன் கேட்டு சென்றால், அவர்கள் நாம் பெறும் கடனுக்கு ஒரு வட்டி விகிதத்தை நிர்ணயிப்பார்கள். அதாவது வங்கிகள் நமக்கு இலவசமாக கடன் தர விரும்பவில்லை. மாறாக நாம் பெறும் தொகைக்கு ஒரு தொகையை கட்டணமாக வசூலிப்பார்கள், அது தான் அந்த வட்டி. அதனால் நமது கடன் தொகையுடன், வட்டியும் சேர்த்து நாம் கட்ட வேண்டும். இந்த  வட்டி தான் , “Cost of Credit” எனவும் சொல்லப்படும். அது போல வங்கிகளுக்கு பணத்தேவை ஏற்படும் போது ரிசர்வ் வங்கியை நாடுகிறது. ரிசர்வ் வங்கியும் வங்கிகளுக்கு தேவையான கடன் தொகையை அதன் அரசாங்க பத்திரங்கள் விற்பனை மூலம் பணத்தை திரட்டி தரும். அதற்கு ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு விதிக்கும் வட்டி விகிதமே, ரெபோ விகிதமாகும் (Repurchase Rate).

 

உதாரணமாக:

 

ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரெபோ விகிதத்தை 4 % என அறிவிக்கிறது எனில், வங்கி ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் ரூ. 100 க்கு,  4 ரூபாய் வட்டியை செலுத்தும்.

 

அதனால் தான் ரெபோ விகிதம் அதிகமாகும் போது வங்கிகளும் கடன் மற்றும் சேமிப்புக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கும்.

 

ரிவர்ஸ் ரெபோ விகிதம் (Reverse Repo Rate):

 

வங்கிகள் தங்களது உபரித்தொகையை (Surplus Funds) ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்தால் (குறுகிய காலத்திற்கு) அதற்கான வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெபோ விகிதம் எனப்படும். ரிசர்வ் வங்கி இந்த Reverse Repo விகிதத்தின் அடிப்படையில் வங்கிகளுக்கு வட்டியை அளிக்கும்.

 

பண இருப்பு விகிதம் (Cash Reserve Ratio -CRR):

 

வங்கிகள் தங்களிடம் உள்ள எல்லா பணத்தையும் கடனாக அளிக்க முடியாது. ஒரு சிறு தொகையை ரிசர்வ் வங்கியில் இருப்பு (Reserve) தொகையாக கட்டாய டெபாசிட் செய்ய வேண்டும். அது தான் Cash Reserve Ratio. வங்கிகள் இந்த டெபாசிட் தொகையை வர்த்தக, தனி நபர் கடன்களுக்கு அளிக்க இயலாது.

 

உதாரணமாக:

 

நாம் ரூ. 100 ஐ வங்கியில் சேமிக்கிறோம் என்றால், அந்த முழு பணத்தையும் வங்கி மற்றொருவருக்கு கடனாக கொடுக்க முடியாது. ரிசர்வ் வங்கியின் CRR விகிதம் –  6 % எனில், நாம் டெபாசிட் செய்த ரூ. 100 ல், 6 ரூபாயை ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யும்; மீதம் உள்ள ரூ. 94 ஐ கடன்களுக்கோ, மற்ற முதலீட்டு செலவுகளுக்கோ பயன்படுத்தும்.

 

அனுமதிக்கப்பட்ட பணப்புழக்க விகிதம் (Statutory Liquidity Ratio):

 

வங்கிகள் தாங்கள் பெறும் தொகையில் சிறு தொகையை அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யும். அந்த தொகை விகிதம் தான் Statutory Liquidity Ratio (SLR). இந்த தொகைக்கு அரசாங்கத்திடம் இருந்து வங்கி,  வட்டி வருமானத்தை பெறும். இந்த SLR விகிதத்தை நிர்ணயிப்பது RBI ஆகும்.

 

உதாரணமாக:

 

ரிசர்வ் வங்கியின் SLR விகிதம் – 10 %

 

வங்கி நம்மிடமிருந்து பெறும் ரூ. 100 ல்  10 ரூபாயை அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யும். ஏற்கனவே நாம் சொன்னது போல CRR விகிதத்திற்கும் டெபாசிட் செய்ய வேண்டும். ஆக, CRR மற்றும் SLR தொகை போக தான், வங்கிகள் கடன் மற்றும் முதலீடு, செலவுகளுக்கு பயன்படுத்த முடியும்.

 

நாட்டின் பொருளாதார தன்மை மற்றும் பணவீக்கத்திற்கு தகுந்தாற் போல தான், ரிசர்வ் வங்கி தனது வட்டி விகித கொள்கைகளை மாற்றியமைக்கும். Repo  விகிதம்,SLR மற்றும் CRR விகிதம் குறைந்தால், பணப்புழக்கமும் நன்றாக ஏற்பட்டு மக்களுக்கு குறைந்த வட்டியில் கடனும் கிடைக்கும். தொழில்களும் மேம்பட்டு, நாட்டின் பொருளாதாரமும் உயரும். மாறாக ரெபோ விகிதங்கள் அதிகமிருந்தால், பொருளாதாரத்தில் மந்தநிலையை உருவாகும்.

 

சில சமயம் நமக்கு ஒரு சந்தேகம் இருக்கும். அதாவது ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை குறைத்தாலும், வங்கிகள் நமக்கான கடன் தொகைக்கு வட்டியை குறைக்கவில்லையே என்று ! அதற்கு காரணம், வங்கிகளுக்கென ஒரு அடிப்படை வட்டி விகிதம் (Base Rate) உள்ளது. Base Rate என்பது ஒரு குறைந்தபட்ச விகிதத்தை பராமரிப்பது, அதற்கும் கீழ் வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்காது. இது அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். இந்த அடிப்படை விகிதம் எப்போது மாறுபடுகிறதோ (குறைந்தால்), அப்போது ரிசர்வ் வங்கியின்  ரெபோ விகித தாக்கம், நமக்கான கடன் வட்டிக்கும் பலனை தரும்.

சில அண்மைய புள்ளி விவரங்கள்:

வாழ்க வளமுடன்,

 

வாழ்த்துக்கள் வர்த்தக மதுரையுடன் !

 

2017-18 பட்ஜெட்டும் , வருமான வரியும் -Budget 2017 Highlights

2017-18  பட்ஜெட்டும் , வருமான வரியும்…

Union Budget 2017 Highlights…

 

2017-18(Financial Year) ம் நிதியாண்டுக்கான  பட்ஜெட் தாக்கலை கடந்த பிப். 1 ம் தேதி நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ அறிவித்தார். அறிக்கைகளில் சில…

 

  • விவசாய துறை 4.6 சதவீத அளவில் வளர்ச்சி அடையும். விவசாயத்துக்கான கடன்  ரூ.10 லட்சம் கோடி  வழங்கப்படும்.

 

  • கிராமப்புற, விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1,87,223 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 24% அதிகம்.

 

  • பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனாவின்(Pradhan Mantri Gram Sadak Yojana (PMGSY))  கீழ் ஒரு நாளைக்கு 133 கி.மீ  சாலை அமைக்கப்படும்.

 

  • 2019 ம் ஆண்டுக்குள் ஒரு கோடி ஏழைகளுக்கு வீடுகள் மற்றும் ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ. 48,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • வரும் நிதி ஆண்டில்(2017-18)  உரமானியத்துக்கு ரூ.70,000 கோடி மற்றும் சுகாதார துறைக்கு ரூ.48,900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • உள் கட்டமைப்புத் துறைக்காக ரூ.3,96,135 கோடி மற்றும் பென்ஷன் இல்லாமல் பாதுகாப்புக்கான நிதி ரூ.2.74 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • மூத்த குடிமக்களுக்கான ஆதார் அட்டையில், அவர்களின் உடல் நலம் சம்மந்தமான விவரங்கள் (அறிக்கை) இடம்பெறும் வசதி.

 

  • ரயில் பாதுகாப்பு நிதிக்காக ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.

 

  • IRCTC இணையதளத்தில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களுக்கு சேவை கட்டணம் ரத்து மற்றும் 3,500 கி.மீ  தூரத்துக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும்.

 

  • பென்ஷன் இல்லாமல் பாதுகாப்புக்கான நிதி ரூ.2.74 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

 

  • அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் நீக்கப்படுகிறது மற்றும் அந்நிய நேரடி முதலீடு 36% உயர்ந்துள்ளது;  தற்போதைய அந்நிய செலவாணி கையிருப்பு – 36,100 கோடி டாலர்.

 

  • டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான ‘BHIM APP’ செயலியை 1 கோடி மக்கள் பயன்படுத்துவதாகவும், வணிகர்களுக்கான ‘AADHAR PAYMENT’ செயலி விரைவில் அறிமுகமாகும்.

 

  • வரும் நிதியாண்டுக்கான(FY 2017-18) நிதி பற்றாக்குறை இலக்கு – 3.2 %  அதற்கு அடுத்த அடுத்த ஆண்டுக்கான நிதி பற்றாக்குறை இலக்கு – 3 %

 

  • ரொக்க பரிவர்த்தனைக்கான வரம்பு ரூ. 3,00,000 /-(Cash Transaction Limit)

 

  • அரசியல் கட்சிகள் காசோலை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் நன்கொடைகளை பெறலாம்.

 

  • அரசியல் கட்சிகள் ரொக்கமாக ரூ.2,000/- மட்டுமே நன்கொடையாக  வாங்க முடியும் மற்றும் கட்சிகள் கடன் பத்திரங்கள் மூலம் நிதி திரட்டுவதற்கு  ரிசர்வ் வங்கி சட்டம்  கொண்டு வர உள்ளது.

 

  • ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 % வரி செலுத்தினால் போதும்; தற்போது இது 10 % வரியாக உள்ளது.

 

  • ரூ.50 லட்சம் முதல் ரூ.1  கோடி வரையிலான வருமானத்துக்கு 10 % சர்சார்ஜ்(Surcharge) செலுத்த வேண்டும்.

 

  • ரூ. 1 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் இருப்பவர்கள் 15 % சர்சார்ஜ்(Surcharge) செலுத்த வேண்டும்.

 

2017-18 நிதி ஆண்டுக்கான வருமான வரிகள்(Income Tax Slabs):

நன்றி,

 

contact@varthagamadurai.com

www.varthagamadurai.com

 

4 Things to Know about Housing Loan

வீட்டுக்கடன்: கவனிக்க வேண்டிய நான்கு [4] விஷயங்கள்:

4 Things to know about Housing Loan:

பொதுவாக, நாம் வீட்டுக்கடன் வாங்க வங்கியிடம் செல்லும் போது, வட்டி விகிதம் மற்றும் கால அளவை மட்டுமே கருத்தில் கொள்கிறோம். இது போக நாம் சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  1. உங்கள் தகுதியை அறியுங்கள் (Know your Eligibility):
  • வீட்டுக்கடன் வாங்க செல்லும் முன், உங்கள் வருமானம் மற்றும் முந்தைய கடன் எவ்வளவு இருக்கிறது என்பதை குறித்து கொள்ளுங்கள்.

 

  • நீங்கள் வாங்க போகும் சொத்து / கடன் எவ்வளவு மதிப்பு என்பதையும் அறியுங்கள்.

 

  • உங்கள் கடனுக்கான சிபில் ஸ்கோரையும் (CIBIL Score) அறிந்து வைத்திருப்பது நல்லது.
  2. உங்கள் கடன் கட்டும் கால அளவை அறியுங்கள் (Know your Loan Tenure):
  • பெரும்பாலும், நாம் வீட்டுக்கடன் வாங்கிய பிறகு அதனை திரும்ப செலுத்தும் காலம் 15 முதல் 20 வருடங்களாக இருக்கலாம். அதனால் நமது மற்ற அடிப்படை தேவைகளுக்கு கவனம் கொள்ள வேண்டும்.

 

  • நாம் நீண்ட கால நோக்கில் கடனை திரும்பி செலுத்துவதால், நமக்கு சௌகரியமான மற்றும் சிறந்த கடனை வழங்கும் வங்கியை தேர்ந்தெடுக்கலாம்.

 

  • தவணை முறையில் கட்டுவதில் உள்ள தன்மை, நாம் வருடத்திற்கு ஒரு  முறை தவணை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது நமது கால அளவும் குறையும். இதன் மூலம் நாம் விரைவாக கடனையும் அடைக்கலாம்.

 

  • வீட்டுக்கடனை திரும்ப செலுத்தும் போது, உங்கள் வீட்டுக்கான வரி செலவு, பராமரிப்பு செலவு மற்றும் இதர கூடுதல் செலவுகள் ஏதேனும் இருந்தாலும் அவற்றையும் உங்கள் கடனுடன் கணக்கிட்டு கொள்ளவும்.

3. வட்டி விகிதத்தை அறியுங்கள் (Know your Interest Rate %):

  • வீட்டுக்கடன் வாங்கும் போது, வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும். பெரும்பாலும் அதன் வித்தியாசம் 0.1 – 0.25 – 0.50 % ஆக இருக்கலாம்.

 

  • நமது கடன் நீண்ட கால என்பதால், நாம் வங்கி நிர்ணயிக்கும் வட்டி விகிதத்திலே கட்ட வேண்டும் என்ற அவசியமில்லை; மாறாக, நாம் வங்கி அதிகாரிகளிடம் நமது தேவைகளை பேசி, வட்டி விகிதத்தை குறைக்கவும் செய்யலாம்.

 

  • வட்டி விகித மாறுபாட்டை சில வங்கிகளில் விசாரித்த பிறகு, கடன் பெறுவதற்கான வங்கியை தேர்ந்தெடுக்கலாம்.

 

  • ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் வங்கிகளுக்கு ஏதேனும் சலுகை அறிவித்தாலும், அதனையும் நாம் கருத்தில் கொண்டு வங்கிகளிடம் நாம் பெறும் கடனுக்கான வட்டியை குறைக்கலாம்.

 

4. காப்பீடும், வரி சலுகையும் (Benefits of Insurance and Taxes):

  • நமது வீட்டுக்கடனுக்கான தொகைக்கு வரிச்சலுகை எவ்வாறு மதிப்பிடப்பட்டுள்ளது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

  • வீட்டுக்கான காப்பீடு பெற்றுள்ளோமா என்பதனையும் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
  • கடைசியாக:  நாம் பெற போகும் ஒவ்வொரு கடனுக்கும், நமது தேவைகளை அறிந்து, அதற்கு மேல் எந்த அவசரமும் இல்லாமல் நாம் வங்கிகளையோ, முகவர்களையோ (அ) ஆலோசகரையோ நாட வேண்டும்.
    —-
    உங்களுடைய பகிர்வுகளுக்கு:
    –  நன்றி, வர்த்தக மதுரை

Interest Rate Cut on Small Savings Scheme 2016

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு:

Interest Rate Cut on Small Savings Scheme 

 

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில், மத்திய அரசு நேற்று(March18,2016) சில மாற்றங்களை அறிவித்துள்ளது. சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

இந்த மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதம் வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

 

வட்டி விகித மாற்றம் செய்யப்பட்ட திட்டங்கள்:

Savings Interest Rate – From April 1, 2016:

 

  • PPF (Public Provident Fund): 8.1 %  (முன்னர் – 8.7 %)
  • KVP ( கிஸான் விகாஸ் பத்திரம்): 7.8% (முன்னர் – 8.7%)
  • 5 வருட தேசிய சேமிப்பு பத்திரம் (NSC): 8.1 % (முன்னர் – 8.5 %)
  • 5 வருட கால வைப்பு திட்டம் (Time Deposits): 7.9 % (முன்னர் – 8.5%)
  • 1 – 3 வருட கால வைப்பு திட்டம் (Time Deposits): 7.1/7.2/7.4 % (முன்னர் – 8.4 %)
  • சேமிப்பு கணக்கு: 4 % (மாற்றம் இல்லை)
  • 5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: 8.6 % (முன்னர் – 9.3 %)
  • சுகன்யா சம்ரிதி கணக்கு திட்டம்: 8.6 % (முன்னர் – 9.2%) [Sukanya Samriddhi Yojana Account]

 

See Previous Small Savings Scheme

 

– வர்த்தக மதுரை

RAILWAY BUDGET 2016-17 HIGHLIGHTS

ரயில்வே பட்ஜெட் 2016-17 ( RAILWAY BUDGET 2016-17 )

 

ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று(25-02-2016) பகல் 12 மணியளவில் தாக்கல் செய்தார். அவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட சில தகவல்கள்:

 

  • பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை; புதிய ரயில்கள் அறிவிப்பும் இல்லை.
  • பயணிகள் நெரிசல் அதிகமிருக்கும் மார்க்கங்களில் முற்றிலும் முன்பதிவு அற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்.
  • முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்ய 139 ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்.
  • வர்த்தக மையங்களை இணைக்கும் பாதைகளில் இரவு நேரத்தில் மட்டும் டபுள் டக்கர் ரயில்கள் இயக்கப்படும்.
  • டிக்கெட் முன்பதிவின்போது காப்பீட்டுக்கான வாய்ப்பு வழங்கப்படும்.
  • வெளிநாட்டு கிரெடிட், டெபிட் கார்டு மூலமும் இ-டிக்கெட் சேவையைப் பெறலாம்.
  • இ கேட்டரிங் சேவை 408 ரெயில்நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
  •  பயணிகள் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளூர் உணவுகள் வழங்கப்படும்.
  • ரயில்களில் பெண் பயணிகள், மூத்த குடிமக்களுக்கான இருக்கை ஒதுக்கீடு அதிகரிப்பு. மூத்த குடிமக்களுக்கு 50% இருக்கை ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ரயிலிலும் 120 கீழ் படுக்கைகள் முதியோருக்கென ஒதுக்கப்படும்.
  • டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு பின்பற்றப்படும்.
  •  குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ரயில்வே கேட்டரிங்கில் வழங்கப்படும். அதேபோல், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களும் வழங்கப்படும்.
  •  ரயில் நிலையங்களில் பால், மருந்துப் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகள் அமைக்கப்படும்.
  • மூத்த குடிமக்கள் வசதிக்காக கொங்கன் ரயில்வேயில் சாரதி சேவா என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. விரைவில் இது அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
  • ரயில் பயணிகளின் பொழுது போக்குக்காக பெட்டிகளில் பண்பலை வானொலி வசதி ஏற்படுத்தப்படும்.
  • ரயில் நிலைய ஓய்வறைகளை ஆன்லைனிலேயே புக் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.
  • துறைமுகங்களை ரயில் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
  • இ-டிக்கெட்டிங் சேவை மூலம் நிமிடத்துக்கு 7200 பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகிறது.
  • அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.
  • அடுத்து வரும் ரயில் நிலையம் குறித்த விவரம் பயணிகளுக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் போர்டு மூலம் தெரிவிக்கும் சேவை விரைவில் தொடங்கப்படும்.
  • சரக்குகளை இருப்புவைக்க ரயில்வே சார்பில் இரண்டு பிரத்யேக கிடங்குகள் உருவாக்கப்படும்.
  • ரயில்வே துறையில் ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க ரூ. 50 கோடி ஒதுக்கப்படும்.
  • ரயில்வே துறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்ய எல்.ஐ.சி. முன்வந்துள்ளது.
  • 2016 -17-ல் ரயில்வே துறையில் ரூ.1.21 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.
  • 2016- 17 நிதியாண்டில் ரூ.1,84,820 கோடி வருவாய் ஈட்ட ரயில்வே திட்டம். இது கடந்த ஆண்டைவிட 10.1% அதிகமாகும்.

 

 

 

(தி இந்து (தமிழ்) இணையம் மூலம் தகவல் தொகுக்கப்பட்டது)

This budget announcement is Railway Minister Suresh Prabhu’s 2nd Budget.

Download the Budget Highlights(PDF) from Indian Railway Official website

 

 

Provident Fund interest rate hiked to 8.8%

Provident Fund interest rate hiked to 8.8%

பி.எப் வட்டி விகிதம் 8.8 % ஆக உயர்வு

 

  • 2015-2016 ம் நிதி ஆண்டுக்கான பி.எப் (வருங்கால வைப்பு நிதி) வட்டி விகிதம் 8.8 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

  • இதற்கு முன்னர் பி.எப் வட்டி(Provident Fund) விகிதம் 8.75 % இருந்தது.

 

  • EPFO ன் கமிட்டி [ EPFO Finance Audit and Investment committee (FAIC) ] வட்டி விகிதத்தை 8.95 % ஆக உயர்த்த பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

 

Provident Fund(PF) interest rate hiked to 8.8% for the financial year 2015-2016.

Read more on:  வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்

 

நன்றி, வர்த்தக மதுரை 

உங்களுடைய பகிர்வுகளுக்கு:

 

https://www.facebook.com/varthagamadurai/

https://www.twitter.com/varthagamadurai/

contact@varthagamadurai.com          

 

E-VAHAN BIMA (ELECTRONIC MOTOR INSURANCE POLICY)

E-VAHAN BIMA (ELECTRONIC MOTOR INSURANCE POLICY)

மின்னணு மோட்டார் வாகன காப்பீடு

 

  • இது ஒரு மின்னணு /டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட மோட்டார் வாகன காப்பீடு. (அனைத்து வாகனங்களுக்கும்)
  • இது இந்திய அரசின் IRDA(INSURANCE REGULATORY AND DEVELOPMENT AUTHORITY OF INDIA) மூலம் துவக்கப்பட்ட திட்டம்.
  • நாம் வாங்கும் மோட்டார் வாகன காப்பீடுக்கு காகித வடிவிலான (நடைமுறையில் உள்ள) சான்று நமது முகவரிக்கும் , டிஜிட்டல் வடிவிலான சான்று E-MAIL க்கும் அனுப்பப்படும்.
  • மின்னணு மோட்டார் காப்பீடு (E-MOTOR INSURANCE POLICY) ஒரு QR (QUICK RESPONSE) CODE ஐ கொண்டிருக்கும்.
  • அந்த CODE ஐ நீங்கள் உங்கள் கைபேசியில் வைத்து கொள்ளலாம்; இல்லையெனில் நகலை பிரிண்ட் செய்து வைக்கலாம்.

 

  • போக்குவரத்து போலீசார், உங்களிடம் வாகன பாலிசி பற்றி கேட்கும் போது, நீங்கள் QR CODE யோ (அ) அதன் பிரிண்ட் செய்த நகலையோ அவரிடம் காண்பிக்கலாம். அவர் QR CODE ஐ ஸ்கேன் செய்து, காப்பீடு சம்பந்தமான தகவல்களை IIB (INSURANCE INFORMARTION BUREAU OF INDIA) யிடம் இருந்து பெற்று கொள்வார்.
  • E-VAHAN BIMA கைபேசி செயலியும் விரைவில் வெளிவர உள்ளது.

 

நினைவில் கொள்க:

 

  • தற்போது, மின்னணு மோட்டார் காப்பீடு திட்டம் ஜனவரி 2, 2016 முதல் தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது; அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் அமல்படுத்தபடலாம்.
  • இதனை பெறுவதற்கு, எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை; அரசாங்கத்தால் வழங்கப்படும் இத்திட்டம் ஒரு இலவச சேவையே.

மேலும் தகவல்களுக்கு IRDA ன் தகவல் புத்தகத்தை பதிவிறக்கி கொள்ளவும்…

Hand Book-E VAHAN BIMA

எதற்கு பான் எண் சமர்ப்பிப்பது அவசியம் ? Where quoting PAN Mandatory ?

 

Where quoting PAN Mandatory ? (From 1st January, 2016)
எதற்கு பான் எண் சமர்ப்பிப்பது அவசியம் ? [2016, ஜனவரி 1 ம் தேதி முதல் ]
1. வங்கியில் கணக்கு தொடங்குவதற்கு (Bank Account Opening).
2. வங்கியில் ஒரே பரிமாற்றத்தில்/ஒரு நாளில் ரூ. 50,000/- க்கு மேல் பண வரவு வைக்கும் போது.
3. தங்க நகை, வீட்டு உபயோக பொருட்கள் ஏதேனும் வாங்கும் போது, ஒரே பரிமாற்றத்தில் வாங்கும் மதிப்பு ரூ. 2,00,000 க்கு அதிகமாக இருந்தால்.
4. வாங்கும் சொத்தின் மதிப்பு ரூ. 10,00,000 (லட்சம்) க்கு மேல் இருந்தால்.
5. Hotel/Restaurant ல் செலவு ரொக்கமாக ரூ. 50,000/- க்கு அதிகமாக இருப்பின்.
6. DEMAT கணக்கு தொடங்குவதற்கு.
7. வெளிநாட்டு சுற்றுலா செலவு(Fare,Payment to travel agent)  ரூ. 50,000/- க்கு மேல் இருந்தால் (அ) வெளிநாட்டு நாணயத்தை வாங்கும் மதிப்பு ஒரு பரிமாற்றத்தில் ரூ. 50,000/- க்கு மேல் இருப்பின்.
8. காப்பீட்டுக்கு(Life Insurance) ஒரு வருடத்திற்கு செலுத்தும் பணம் ரூ. 50,000 /- க்கு அதிகமாக இருந்தால், பான் எண் சமர்ப்பிப்பது கட்டாயம்.

 

மேலும் தகவலுக்கு, கீழே உள்ள Income Tax India ன் அட்டவணையை பாருங்கள்.

PAN-mandatory

 

வாசகர்கள் அனைவருக்கும் 2016 ன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

Happy New Year 2016  🙂

நலமும், வளமும் பெருகட்டும்..

முதலீடும் திருவினையாக்கும் !
வர்த்தக மதுரை

தங்க பத்திர திட்டத்தில் (Gold Bond Scheme) முதலீடு செய்யலாமா ?

 

தங்க பத்திர திட்டத்தில் (Gold Bond Scheme) முதலீடு செய்யலாமா ?

 

Should we invest in Gold Bond Scheme ?

 

  • மத்திய அரசினால் தொடங்கப்பட்ட திட்டம் தான் “தங்க பத்திர திட்டம்” (Gold Bond Scheme)
  • அரசின் நிதி பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்காகவும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் தங்கத்தின் அளவினை குறைக்கவும், அதனால் இந்திய ரூபாயின் மதிப்பு குறையாமல் தடுக்கவும் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இதுவாகும்.

 

எவ்வளவு முதலீடு செய்யலாம் ?

 

  • இந்த திட்டத்தில் தங்கம் யூனிட்களாக தரப்படும்.
  • குறைந்த பட்சமாக:    2 கிராம்,  (முறையே 2, 5, 10, 50, 100 கிராம்களில்)
  • அதிகபட்சமாக:     500 கிராம் வரை
  • முதிர்வு காலம்:   8 வருடங்கள்.  (5 வருடங்களுக்கு பிறகும் இந்த திட்டத்திலிருந்து வெளியேறலாம்)

 

வட்டி விகிதம் எவ்வளவு ?

 

  • வட்டி:    2.75 % ( ஆறு (6) மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்)
  • வாங்கப்படும் யூனிட்கள் தங்கத்தின் விலையில் தான் கிடைக்கும்.
  • யூனிட்கள் வாங்கும் போது இருந்த தங்கத்தின் விலைக்கு தான் வட்டி கணக்கிடப்படும் / கிடைக்கும்.
  • வாங்கப்படும் தங்க பத்திரங்கள், காகித வடிவம் மற்றும் டீமேட் வடிவத்திலும் கிடைக்கும்.
  • ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, (Gold Bond Scheme) பத்திரங்களை அடமானம் வைத்து கடனும் பெறலாம்.

 

யார் முதலீடு செய்யலாம் ?

 

  • இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும்

 

நினைவில் கொள்க:

 

  • முதிர்வு காலம் முடிந்தவுடன், பணமாக மட்டுமே (அன்றைய தங்கத்தின் விலையில் ) பெற முடியும்; தங்கமாக கிடைக்காது 🙂
  • தங்க பத்திரங்களை, வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் அஞ்சலகங்களிலும் வாங்கலாம்.
  • தங்க பத்திரங்களை நிதி சந்தையிலும்(Cash Market) வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
  • முதலீடுக்கு மூலதன ஆதாய வரி (தங்கத்தினை போல) விதிப்பு உண்டு; கிடைக்கும் வட்டி வருமானத்திற்கும் வரி விதிப்பு உண்டு.
  • முதலீடு முதிர்வு அடையும் போது, லாபமோ (அ) நஷ்டமெனில் அது முதலீட்டாளர்களையே சாரும்.
  • முதிர்வு தொகை முதலீட்டை விட குறைவாக இருக்கும் பட்சத்தில், முதலீட்டை அடுத்த மூன்று (3) வருடங்கள் வரை நீட்டிக்கலாம்.

 

கடந்த காலத்தில், தங்கத்தினை மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடும் அட்டவணை:

 

investment-returns-2015

(Comparison Chart – Data: Morgan Stanley)

 

முதலீடும் திருவினையாக்கும்… !!

நன்றி, வர்த்தக மதுரை