ரயில்வே பட்ஜெட் 2016-17 ( RAILWAY BUDGET 2016-17 )
ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று(25-02-2016) பகல் 12 மணியளவில் தாக்கல் செய்தார். அவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட சில தகவல்கள்:
- பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை; புதிய ரயில்கள் அறிவிப்பும் இல்லை.
- பயணிகள் நெரிசல் அதிகமிருக்கும் மார்க்கங்களில் முற்றிலும் முன்பதிவு அற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்.
- முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்ய 139 ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்.
- வர்த்தக மையங்களை இணைக்கும் பாதைகளில் இரவு நேரத்தில் மட்டும் டபுள் டக்கர் ரயில்கள் இயக்கப்படும்.
- டிக்கெட் முன்பதிவின்போது காப்பீட்டுக்கான வாய்ப்பு வழங்கப்படும்.
- வெளிநாட்டு கிரெடிட், டெபிட் கார்டு மூலமும் இ-டிக்கெட் சேவையைப் பெறலாம்.
- இ கேட்டரிங் சேவை 408 ரெயில்நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
- பயணிகள் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளூர் உணவுகள் வழங்கப்படும்.
- ரயில்களில் பெண் பயணிகள், மூத்த குடிமக்களுக்கான இருக்கை ஒதுக்கீடு அதிகரிப்பு. மூத்த குடிமக்களுக்கு 50% இருக்கை ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ரயிலிலும் 120 கீழ் படுக்கைகள் முதியோருக்கென ஒதுக்கப்படும்.
- டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு பின்பற்றப்படும்.
- குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ரயில்வே கேட்டரிங்கில் வழங்கப்படும். அதேபோல், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களும் வழங்கப்படும்.
- ரயில் நிலையங்களில் பால், மருந்துப் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகள் அமைக்கப்படும்.
- மூத்த குடிமக்கள் வசதிக்காக கொங்கன் ரயில்வேயில் சாரதி சேவா என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. விரைவில் இது அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
- ரயில் பயணிகளின் பொழுது போக்குக்காக பெட்டிகளில் பண்பலை வானொலி வசதி ஏற்படுத்தப்படும்.
- ரயில் நிலைய ஓய்வறைகளை ஆன்லைனிலேயே புக் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.
- துறைமுகங்களை ரயில் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
- ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
- இ-டிக்கெட்டிங் சேவை மூலம் நிமிடத்துக்கு 7200 பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகிறது.
- அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.
- அடுத்து வரும் ரயில் நிலையம் குறித்த விவரம் பயணிகளுக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் போர்டு மூலம் தெரிவிக்கும் சேவை விரைவில் தொடங்கப்படும்.
- சரக்குகளை இருப்புவைக்க ரயில்வே சார்பில் இரண்டு பிரத்யேக கிடங்குகள் உருவாக்கப்படும்.
- ரயில்வே துறையில் ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க ரூ. 50 கோடி ஒதுக்கப்படும்.
- ரயில்வே துறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்ய எல்.ஐ.சி. முன்வந்துள்ளது.
- 2016 -17-ல் ரயில்வே துறையில் ரூ.1.21 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.
- 2016- 17 நிதியாண்டில் ரூ.1,84,820 கோடி வருவாய் ஈட்ட ரயில்வே திட்டம். இது கடந்த ஆண்டைவிட 10.1% அதிகமாகும்.
(தி இந்து (தமிழ்) இணையம் மூலம் தகவல் தொகுக்கப்பட்டது)
This budget announcement is Railway Minister Suresh Prabhu’s 2nd Budget.
Download the Budget Highlights(PDF) from Indian Railway Official website