Interest Rate on Savings Account
வங்கி சேமிப்பு கணக்கிற்கான வட்டி விகிதம்
- வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான(Savings account) வட்டியை காலாண்டுக்கு(மூன்று மாதத்திற்கு) ஒரு முறை வழங்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி(RBI) அறிவுறுத்தியுள்ளது. குறுகிய கால இடைவெளியில் (அ) காலாண்டுக்கு ஒரு முறை வட்டியை வழங்குவதால், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயன் பெறுவார்கள் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
- தற்போது வரை, சேமிப்பு கணக்கிற்கான வட்டி(Interest Rate) அரையாண்டிற்கு(6 மாதம்) ஒரு முறை தான் வழங்கப்படுகிறது. வட்டி கணக்கிடும் விதம், ஏப்ரல் 1,2010 முதல் தினமும் கணக்கிடப்படுகிறது.
- பொது துறை வங்கிகள் சேமிப்பு கணக்குகளுக்கு 4% வரை வட்டி வழங்குகின்றன. சில தனியார் வங்கிகள்(YES BANK, KOTAK MAHINDRA) 6% வரை வட்டி வழங்குகின்றன.
- ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பின்படி, வட்டி அளிக்க வங்கிகளுக்கு ரூ.500 கோடி வரை கூடுதல் சுமையாகும்
Read more on: வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்
நன்றி, வர்த்தக மதுரை
உங்களுடைய பகிர்வுகளுக்கு:
https://www.facebook.com/varthagamadurai/