Category Archives: Investopedia

அரவணைக்கும் ஆறு அடிப்படை காரணிகள் – பங்குச்சந்தை ரகசியங்கள்

அரவணைக்கும் ஆறு அடிப்படை காரணிகள் – பங்குச்சந்தை ரகசியங்கள்

Six Fundamental Factors as a Defensive Investor – Secrets of Stock Market

 

பொதுவாக பங்குச்சந்தையை பற்றிய செய்தி என்று நாம் கேட்டிருந்தால், பெரும்பாலும் இந்த இரண்டு விஷயங்களை தான் கேட்டிருப்போம். ‘ பங்குச்சந்தையில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் ‘ என்பது, மற்றொன்று ‘ பங்குச்சந்தை ஒரு சூதாட்டம் ‘. பங்குச்சந்தை சூதாட்டம் என்பவர்கள் இனி எப்போதும் பங்குச்சந்தைக்கு வருவதில்லை, ஆனால் அவர்களது சேமிப்பு அனைத்து காலங்களிலும் பங்குகளில் முதலீடு செய்யப்பட்டிருப்பது அவருக்கு தெரியாமல் இருக்கலாம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்கிற வார்த்தையே பங்குச்சந்தையில் பெரும்பாலானவர்களை நஷ்டப்படுத்த செய்கிறது. உண்மையில் பங்குச்சந்தை என்பது வங்கிகள், நிதி நிறுவனங்கள், அஞ்சலகம் போன்று இதுவும் நிதி சார்ந்த தொழிலே. தொழில் செய்பவர் வங்கிகளில் தனது தொழிலுக்கு தேவையான முதலீட்டை எவ்வாறு பெறுகிறாரோ அது போல தான் பங்குச்சந்தையில் ஒரு நிறுவனம் முதலீட்டாளர்களிடையே கடன் பெறுகிறது. வங்கிக்கும், சந்தைக்கும் உள்ள வேறுபாடு அதன் சட்டங்களும், அதனை சார்ந்த வரைமுறைகளும் மட்டுமே.

 

நமது பக்கத்துக்கு வீட்டில் உள்ள ஒரு நண்பர் நம்மிடம் ஒரு லட்சம் ரூபாய் கடன் கேட்டால் நாம் என்ன செய்வோம் ? மனமும், பணமும் இல்லையென்றால் அவரிடம் எதுவும் இல்லை என்று சொல்வோம். கொடுப்பதற்கான வாய்ப்பு இருந்தால், உடனே அவரிடம் ஒரு லட்சம் பணத்தை கொடுத்து விடுவோமா, என்ன ? நண்பரது தொழில், அவரது குடும்ப நிதி நிலை(Financial Background), ஏதேனும் காரணத்தால் அவரிடம் இருந்து நாம் பணம் பெற முடியவில்லை என்றால், அதற்கான மாற்று வழி என பலவற்றை நாம் சிந்தித்த பிறகே பணம் கொடுக்க முயல்வோம். ஆனால் பங்குகளில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் ?

 

பங்குச்சந்தையில் இப்போது உங்களது நண்பர் கடன் வாங்கவில்லை. ஒரு பெரு நிறுவனம் – டாட்டா, பிர்லா மற்றும் அம்பானி போன்றவர்கள். உங்களது முதலீடு அவர்களின் நீண்டகால நம்பிக்கையை பெறலாம். இல்லையனில் மல்லையா போன்று போனியும் ஆகலாம். பங்குச்சந்தையில் நீங்கள் வெறும் முதலீட்டாளர் மட்டுமல்ல. நீங்கள் கடன் கொடுத்தவர், ஒரு வங்கியை போன்று. உங்களுக்கென்று சில விதிமுறைகள் உண்டு, நீங்கள் கறாராக இருக்க வேண்டியது அவசியம்.

 

பங்குச்சந்தையில் நீங்கள் குறுகிய கால அல்லது நீண்ட கால முதலீட்டாளராகவோ இருந்து விட்டு போங்கள். அது உங்களுடைய விருப்பம். ஆனால் இனி சொல்லக்கூடிய ஆறு விஷயங்களை மட்டும் எப்போதும் உங்கள் மனதில் நிறுத்தி கொள்ளுங்கள். இது தான் உங்களை பெரும்பாலும் நஷ்டத்திலிருந்து தள்ளி வைக்கும்.

 

  • நிறுவனத்தின் சந்தை மதிப்பு (Adequate size of the Company):

 

பங்குச்சந்தையில் கடலளவு நிறுவனங்கள் உள்ளன, இனி வரும் காலத்தில் இதனை விட அதிகமான நிறுவனங்கள் வரக்கூடும். ஐந்து பைசாவுக்கும், ஐந்து ரூபாய்க்கும் பங்குகளை வாங்குவது(Penny stocks) உங்கள் நோக்கமல்ல. நீங்கள் ஒரு நிறுவனத்திற்கு கடன் கொடுக்க இங்கே வந்து இருக்கிறீர்கள். பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனத்தின் சந்தை மதிப்பு(Market Cap), ஆண்டு வருவாய்(Revenue) மற்றும் நிகர லாபம்(Net Profit) கோடிகளில் உள்ளவற்றை காணுங்கள்.

 

உதாரணத்திற்கு சந்தை மதிப்பு 1000 கோடி ரூபாய்க்கு மேலான நிறுவனங்கள், ஒவ்வொரு நிதியாண்டிலும் ரூ. 100 கோடிக்கு மேலான வருவாய் அல்லது லாபத்தை கொண்ட நிறுவனங்கள் என பங்குகளை தேர்வு செய்யுங்கள்.

 

  • வலுவான நிதி ஆதாரம் (Strong Financial Trend):

 

           ஒரு தற்காப்பு முதலீட்டாளராக நீங்கள் செய்ய வேண்டியவை – கடனில்லா

நிறுவனங்கள்(Debt Free), தற்போதைய வேலைக்கு மூலதனம்(Working

Capital) மற்றும் அதிக சொத்துக்களை கொண்டிருக்கும் நிறுவனங்கள் என

தேர்வுகளை துவக்குங்கள். சுருக்கமாக கடன்-பங்கு(Debt to Equity) விகிதம் 0.5

க்கு கீழ் உள்ளவாறு பார்த்து கொள்ளுங்கள்.

 

  • வருவாய் நிலைப்புத்தன்மை (Earnings Stability):

 

ஒரு நிறுவனம் காலாண்டு வருவாய் மற்றும் நிகர லாபத்தில்(Sales & Profit) தொடர்ச்சியான வளர்ச்சியை பெற்று வருகிறதா என ஆராயுங்கள். ஏதாவது ஒரு காலாண்டில் வருவாய் அல்லது லாபத்தின் அளவு குறைந்தால், அதற்கான காரணத்தை கண்டுபிடியுங்கள். வருவாய் அளவு குறையும் சமயத்தில் சந்தையின் பங்கு விலைகளில் மாற்றம் எவ்வாறு நிகழ்கிறது என்பதை கண்டு தீர்வு காணுங்கள்.

 

  • தொடர்ச்சியான ஈவுத்தொகை செலுத்துதல் (Dividend Track Record):

 

          பங்குச்சந்தையில் உள்ள ஒரு நிறுவனம் தான் பெற்ற லாபத்தை பல்வேறு வழிகளில் முதலீட்டாளர்களுக்கு திரும்ப அளிக்கலாம். சில நிறுவனங்கள் தங்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்காக லாபத்தை பயன்படுத்தும். இதன் விளைவு பங்குகளில் விலை மாற்றத்தை ஏற்படுத்தும். மற்ற சில நிறுவனங்கள் போனஸ் பங்குகள், நிறுவனமே பங்குகளை திரும்ப பெறுதல்(Buyback) அல்லது டிவிடெண்ட் என சொல்லப்படும் ஈவுத்தொகையை முதலீட்டாளருக்கு வழங்கும்.

 

வங்கிகளின் வட்டி வருமானத்தை போல, நிறுவனங்கள் அளிக்கும் டிவிடெண்ட்(Dividend) வருமானத்தை நாம் அவ்வப்போது பெற்று வரலாம். தொடர்ச்சியான ஈவுத்தொகையை கொடுத்து வரும் நிறுவனங்களை உங்கள் முதலீட்டுக்கு பரிசீலனை செய்யுங்கள். பங்குகளின் விலை அதிகமாக இருந்தாலும், உங்களுக்கான டிவிடெண்ட் வருமானம்(Dividend yield) முதலீட்டை பாதுகாக்கும்.

 

  • பங்கு – சொத்து மதிப்பு விகிதம் (Price to Assets Ratio):

 

         தற்போது வர்த்தகமாகி கொண்டிருக்கும் பங்கின் விலை அதன் புத்தக மதிப்பை காட்டிலும் அதிகமில்லாமல் பார்த்து கொள்வது நன்று. இருப்பினும், பிரபலமான மற்றும் தேவைப்பாடு அதிகமுள்ள நிறுவனங்களின் பங்குகள் எப்போதும் அதிகமான விலையில் தான் வர்த்தகமாகும். இதனால் அதன் புத்தக மதிப்பும்(Price to Book Value) பல மடங்கு இருப்பது இயல்பு.

 

நிறுவன பங்கின் விலை அதன் புத்தக மதிப்பை போன்று இரண்டு மடங்குக்கு அதிகமில்லாமல்(Not more than 2.0 X times) இருக்குமாறு கண்டறியுங்கள், பின் அந்த பங்கினை தேர்வு செய்யுங்கள்.

 

  • ஒரு பங்குக்கான வருவாயின் வரலாறு (Earnings Growth and Price to Earnings):

 

         பொதுவாக ஒரு நிறுவனத்தின் பங்கு விலை மற்றும் அதனை சார்ந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பில் மாற்றம் ஏற்படுவது இயல்பு. அதனை போல நிறுவனத்தின் வருவாய் மாற்றத்தை நாம் அந்த பங்கின் ஈ.பி.எஸ்.(Earning Per Share -EPS) மூலம் காணலாம். ஒரு முதலீட்டாளராக நாம் காண வேண்டியது, நிறுவனத்தின் வருவாயை காட்டிலும் ஒரு பங்கின் மீதான வருமானத்தை தான்.

 

பங்கின் மீதான வருமானம் என்பது மிகவும் எளிமையான கண்டுபிடிக்க கூடிய விஷயம் தான். கடந்த பத்து வருட காலத்தில் ஒரு நிறுவனத்தின் பங்கு விலையும், அதன் வருவாயும் எவ்வாறு உள்ளது என்பதை சந்தை குறியீட்டுடன்(Benchmark) ஒப்பிட்டு பாருங்கள். பின்பு துறையை சார்ந்த மற்ற நிறுவனங்களின்(Peer Companies) பங்கு விலை மற்றும் வருமானத்துடன் ஒப்பிட்டு பார்த்து பங்குகளை தேர்வு செய்யுங்கள்.

 

நீங்கள் கடன் அளிப்பவர் என்பதை எப்போதும் மறவாதீர்கள். பங்குச்சந்தையில் நிறைய சம்பாதிக்கலாமே ?  ஆம், யாரிடமும் ரகசியத்தை சொல்லாதீர்கள் 🙂

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4 விடைகள்

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4 விடைகள்

Personal Finance – Survey / Polling

 

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நான்காம் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

  • பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகத்தின்(Intra Day) மூலம் விரைவாக செல்வம் சேர்க்கலாம் ?

 

விடை:   இல்லை.

 

விளக்கம்:  பொதுவாக பங்குச்சந்தை மற்றும் பங்கு சார்ந்த முதலீடுகள் ரிஸ்க் நிறைந்தவை. சந்தையில் வர்த்தகத்தின் போது ஏற்ற-இறக்கம்(Volatility) எப்போதும் காணப்படும். பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் ஒருவர் நீண்ட கால நோக்கத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை நிச்சயம் பெறலாம்.

 

பங்குச்சந்தையில் நாம் பங்குகளை தினமும் வாங்கி விற்கலாம்(Intra day), குறுகிய காலத்தில்(Short term) வர்த்தகம் செய்யலாம் மற்றும் நீண்ட கால முதலீடாகவும் கொள்ளலாம். இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முடிவே ஆகும். சந்தையில் தினசரி வர்த்தகத்தில் சிறிய முதலீட்டில் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற வாய்ப்பு இருந்தாலும், எப்போதும் இது சாத்தியமில்லை. உதாரணத்திற்கு நாம் தினமும் பங்குச்சந்தையில் 5000 ரூபாய் சம்பாதிக்கலாம் என்பது நமது ரிஸ்க் திறனை பொறுத்தது. ஐயாயிரம் ரூபாய் லாபம் என்பது போல, அதற்கு நேரெதிரான நஷ்டத்திற்கும் வாய்ப்பு உள்ளது. ஆதலால் தினசரி வர்த்தகத்தின் மூலம் நாம் விரைவாக செல்வம் சேர்ப்பதற்கு வாய்ப்பு குறைவே. குறுகிய காலத்தில் பங்குச்சந்தையின் மூலம் பல மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என்று யாரவது உங்களிடம் சொன்னால், எச்சரிக்கை தேவை – இது ஏமாற்று பேர்வழிகளின் போன்சி திட்டங்களாக(Ponzi Schemes) இருக்கலாம்.

 

  • வங்கிகளில் கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி செலுத்த தேவையில்லை ?

 

விடை: இல்லை (தவறு).

 

விளக்கம்: வங்கியில் கிடைக்கும் வட்டி வருமானம் வரி செலுத்துதலுக்கு

உட்பட்டது. சேமிப்பு கணக்கு மற்றும் வைப்பு நிதிகளுக்கு(Fixed Deposit) வழங்கப்படும் வட்டி, தனி நபர் ஒருவரின் வருமான வரம்பிற்கு உட்பட்டு வரி விதிக்கப்படும். வருமான வரிச்சட்டம் பிரிவு 80TTA ன் கீழ் ஒருவரின் சேமிப்பு கணக்கில் உள்ள வட்டி தொகை வருடத்திற்கு ரூ.10,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கு மேலாக கிடைக்கும் வட்டி தொகைக்கு வரி உண்டு.

 

வைப்பு நிதிக்கு கிடைக்கப்பெறும் வட்டி தொகைக்கு வங்கிகள் பொதுவாக டி.டி.எஸ்.(TDS) பிடித்தம் செய்யப்படும். வருமான வரி வரம்புக்குள் வராதவர்கள் வங்கிகள் பிடித்த தொகையை திரும்ப பெற சிறப்பு படிவத்தை(Form 15G & 15H) பூர்த்தி செய்யலாம். நடப்பு வருட பட்ஜெட் தாக்கலின் படி, உங்களின் வைப்பு நிதியில் உள்ள வட்டி தொகை(Interest Income) ரூ. 40,000 மற்றும் அதற்கு குறைவாக இருக்கும் நிலையில், வங்கிகள் உங்களிடம் பிடித்தம் செய்யாது. அதே வேளையில் நீங்கள் வருமான வரி செலுத்துபவராக இருந்தால், வரி தாக்கல் செய்யும் போது உங்களது வட்டி வருமானம் மற்றும் டி.டி.எஸ். பிடித்தம் பதிவு செய்யப்படும்.

 

  • நிதி சார்ந்த கல்வியை கற்பதற்கு நீங்கள் நேரம் ஒதுக்குவது உண்டா ?

 

நாம் கற்கும் எந்தவொரு கல்வியும் நமக்கும், நமது சமுதாயத்திற்கும் பயன்படுமாறு இருத்தல் வேண்டும். அது பண்பாடு அல்லது தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி. நாம் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு செல்வதற்கோ அல்லது தொழிலை தொடங்குவதற்கோ நம்மிடம் தேவையான அடிப்படை திறன்(Basic Skills) இருத்தல் வேண்டும். இதனை நாம் கற்ற கல்வி அல்லது வேலைப்பயிற்சி மூலமாகவோ நாம் பெற்றிருக்கலாம்.

 

நமக்கான வேலை அல்லது தொழிலை செய்வதற்கு முன், நாம் பல வருடங்கள் பள்ளி மற்றும் கல்லூரி கற்றலில் அனுபவம் பெறுகிறோம். பின்னர் ஒரு நிறுவனத்தில் ஆரம்பகட்ட நிலையில் வேலை செய்கிறோம். ஐந்து முதல் பத்து வருட தொழில் அனுபவத்திற்கு பிறகே, நாம் அந்த தொழிலை 50 சதவீதம் புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கு வருகிறது.

 

பெரும்பாலோருக்கு ஒரே நிறுவனத்தில் தங்கள் வாழ்நாள் முழுவதும் வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நாம் சம்பாதிப்பதற்காகவே நம் வாழ்நாள் முழுவதையும் செலவு செய்யும் போது, பொருளாதாரம் அல்லது நிதி சார்ந்த அறிவை(Financial Education) கற்பதற்கு நாம் எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறோம் ?

 

நமது குடும்பத்திற்கான மாத வரவு-செலவு, குழந்தைகளுக்கான எதிர்கால நிதி திட்டமிடல், நமக்கான ஓய்வு கால திட்டமிடல், அவசர காலங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்கிறோமா என்பதனை நாம் சிறிது நேரத்தை ஒதுக்கி தான் திட்டமிட வேண்டும்.

.

உலகின் மாபெரும் முதலீட்டாளர் மற்றும் பணக்காரர் வாரன் பப்பெட், பில் கேட்ஸ் போன்றோர் புத்தக வாசிப்புக்கு மட்டும் தினமும் ஆறு மணிநேரம் செலவிடுகின்றனர். நமக்கு நேரமில்லாமலா போகும் !

 

அட, நம்ம பேஸ்புக் நிறுவனர் மார்க்(Mark Zuckerberg) இரண்டு வாரத்துக்குள் ஒரு புத்தகத்தை படித்து முடித்து விடுகிறாராமே 🙂

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

  • அவசர கால நிதி(Emergency Fund) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?

 

விளக்கம்: அவசர கால நிதி (Emergency Fund) என்றால் என்ன மற்றும் அதனை எவ்வாறு செயல்படுத்துவது என்பதை நாம் ஏற்கனவே கீழ்காணும் கட்டுரையில் பதிவிட்டுள்ளோம்.

 

அவசர கால நிதிக்கான திட்டமிடல்

 

அவசரகால நிதியை உருவாக்குவது எப்படி ?

 

  • உங்களுக்கு ஒரு விலையுர்ந்த கைபேசி(Smart Phone) வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. உடனே EMI முறையில் வாங்குவீர்களா அல்லது அதற்கான பணத்தை சேர்த்து வைத்த பின் வாங்க முயல்வீர்களா ?

 

விளக்கம்: அவசரத்திற்கு தவணை திட்டம்(Equated Monthly Installment -EMI) உதவலாம். வருமுன் காப்பது நல்லதா, வந்த பின் வருந்துவதா ? மூளையை யோசிக்க விடுங்கள். கீழே உள்ள சிறு பதிவை படியுங்கள். பின்னர் நீங்களே சாமர்த்தியமாக முடிவெடுப்பீர்கள்.

 

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

 

நிறைவு பெறுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

உங்கள் வாழ்வை வளமாக்கும் 10 அற்புதமான சிந்தனைகள்

உங்கள் வாழ்வை வளமாக்கும் 10 அற்புதமான சிந்தனைகள்

10 Commandments not to inspire you, but to Practice

 

2018ம் ஆண்டை நாம் கடந்து விட்டோம், 2018-19ம் நிதியாண்டையும் நாம் கடந்து வந்தாகி விட்டது. சிந்தனைகளுக்கும், அதனை சார்ந்த பழக்கத்திற்கும் துவக்க நாட்கள் என்று ஏதுமில்லை எனலாம். நாம் ஒரு புதிய சிந்தனையை அல்லது பழக்கத்தினை ஏற்படுத்தி கொள்ள வருடத்தின் ஆரம்பம் அல்லது பிறந்த நாட்கள், இல்லையெனில் நமக்கு பிடித்த முக்கியமான நாட்களில் முடிவெடுக்க பழகுகிறோம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

புதிய சிந்தனைகள் மற்றும் பழக்கங்களை துவக்க நாம் எந்த முக்கிய நாட்களையும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நிதி சார்ந்த  விஷயத்திலும் நமது முடிவுகள் பெரும்பாலும் அவசரமாகவே எடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் நினைவுபடுத்தி கொள்ளலாம். உண்மையில் முதலீடு செய்வதற்கு நாம் எந்த நாட்களையும் எதிர்பார்க்க தேவையில்லை, கடன் வாங்கும் நேரம் மட்டும் தான், நாம் அதனை பரிசீலனை செய்ய வேண்டும்.

 

நீங்கள் உலகத்தை மாற்ற விரும்பினால், அதனை உங்களிடம் இருந்து துவங்குங்கள்’ என்ற வாக்கியத்தை நீங்கள் கேட்டிருக்கலாம். நாம் ஒன்றும் உலகத்தை மாற்றவோ, புதிய உலகத்தை படைக்கவோ வேண்டாம். மாறாக, நமது அன்றாட வாழ்க்கையில் சிறிய மாற்றத்தை கொண்டு வந்தாலே, அது நமக்கு ஊக்கமளிக்க கூடியதாக அமையும்.

 

பின்வரும் பத்து கட்டளைகள் ஒவ்வொருவரின் வாழ்வையும் வளமாக்கும் அற்புதமான சிந்தனைகளாகும். எனது சமூக வலைதள நண்பர் திரு. யாக்னேஸ்வரன் கணேஷ்(Yagneshwaran Ganesh) அவர்கள் இந்த பத்து கட்டளைகளுக்கு சொந்தக்காரர், எளிமையாக வடிவமைத்ததற்கு நன்றி. பத்து கட்டளைகளும் ஒவ்வொருவருக்கும் ஊக்கமளிக்க கூடிய விஷயமாக இல்லாமல், அனைவரும் பயிற்சி செய்யும்படி அமைந்துள்ளது. ஆதலால், இதனை யாரும் வெறும் சிந்தனைகளாக மட்டும் கொண்டிருக்காமல், தங்கள் வாழ்வில் புகுத்தி பயன் பெறுங்கள்.

 

  • எதிர்மறைக்கு பதிலளிக்காதே (Do not respond to Negativity)

 

உங்களுடைய எதிர்மறை சிந்தனைகள், மற்றவர்கள் உங்களிடம் காட்டும் எதிர்மறை செயல்கள் மற்றும் வார்த்தைகளுக்கு எப்போதும் செவி சாய்க்காதீர்கள். நீங்கள் உங்கள் சிந்தனைகள் மற்றும் செயல்களை சுய பரிசோதனை(Introspect) செய்து கொள்ளலாமே தவிர, எதிர்மறை சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.

 

வெற்றியாளர்களின் மற்றும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளவர்களின் முதன்மையான பண்பே, இது தான்.

 

  • எதையும் எதிர்பாராமல் கொடுக்க பழகுங்கள் (Give without expecting to get)

 

நீங்கள் ஒருவருக்கு உதவி செய்ய வேண்டுமென முடிவெடுத்து விட்டால், உடனே அதனை செயல்படுத்துங்கள். அந்த உதவியில் உங்களுக்கு என்ன பலன் கிடைக்கலாம் என எண்ணாதீர்கள். இந்த உலகம் ஏமாற்றுபவர்களுடைய இடம் என நீங்கள் கருதினால், அப்புறம் நீங்கள் யார் ? உங்களுக்கு இந்த இடத்தில் என்ன வேலை ?

 

உங்களால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்கு அளிக்க தயாராகுங்கள். அதற்காக நீங்களும், உங்களது குடும்பமும் நிதி சார்ந்து கஷ்டப்பட தேவையில்லை. உங்களுக்கு தெரிந்த விஷயங்களை கொண்டு, நீங்கள் மற்றவர்களுக்கு உதவ துணைபுரிந்தாலே அதுவும் ஆரோக்கியமான விஷயமே. நீங்கள் எதிர்பார்க்காமல் செய்யும் உதவி தான், பின்னாளில் உங்களுக்கு மாபெரும் வளத்தை கொடுக்க முன்வரும். நம்புங்கள், இது உங்கள் உலகம் – உங்களை யாரும் ஏமாற்றி விட்டு செல்ல முடியாது 🙂

 

  • குறை சொல்லும் செயலை பழக்கமாக்கி கொள்ளாதீர்கள் (Do not Nitpick as a hobby)

 

எப்போதும் குறை சொல்வதையே சிலர் வழக்கமாக கொண்டிருப்பதை நாம் கண்டிருப்போம். குறை சொல்வதை மட்டுமே நாம் கொண்டிருந்தால், எதனையும் நம்மால் சரிப்படுத்தி விட முடியாது. மாறாக, நமது சிந்தனையில் அது சரி என தெரிந்தால் அதனை மற்றவர்களிடம் விளக்கி புரிய வைக்க முயற்சிக்க வேண்டும்.

 

பெரும்பாலான குடும்ப மற்றும் உறவுகள் சார்ந்த பிரச்னைகளில் ஆரோக்கியமான உரையாடல் நிகழ்ந்தாலே, சிக்கல்கள் குறையும். நாம் எடுத்த விஷயத்திற்கு எல்லாம் குறை சொல்ல பழகினால், பின்பு அதுவே நமது பழக்கமாகி விடும். நம்மை மற்றவர்கள் வெறுப்பதற்கும் இந்த பழக்க செயலே காரணமாகவும் அமைந்து விடும். ஒரு பிரச்னைக்கு குறை சொல்ல முயல்வதை காட்டிலும், அதற்கான தீர்வு பற்றி யோசியுங்கள்.

 

  • ஆற்றல் மிக்க நண்பர்கள் குழுவை உருவாக்குங்கள் (Create personal learning network of Friends)

 

‘ உங்களது நண்பர்களை காண்பியுங்கள், நீங்கள் யாரென்று சொல்கிறேன்’ என்ற வாசகம் சுய முன்னேற்ற கல்வியில் பெரும்பாலும் இடம் பெற்றிருக்கும். உங்களது நண்பர்களை தேர்ந்தெடுப்பதில் நீங்கள் எப்போதும் கவனம் செலுத்துதல் வேண்டும். உங்களது தினசரி பழக்க வழக்கத்திற்கு அதுவே காரணியாக இருக்கும் என்பதால், சக்தி வாய்ந்த அல்லது ஆற்றல் மிக்க சிந்தனை கொண்டவர்களை நண்பர்களாக்கி கொள்வது, உங்களை எப்போதும் நேர்மறை சிந்தனையில் வைத்திருக்கும்.

 

பணக்காரர்கள் ஏன் பணக்காரர்களாகவே இருந்து வந்துள்ளார்கள், ஏழைகள் ஏன் மேலும் ஏழைகளாகவே வாழ்கின்றனர் என்பதற்கு இதுவே சிறந்த சான்று எனலாம்.

 

  • மற்றவர்களின் வேலையை பாராட்டுங்கள் (Promote others good work)

 

மற்றவர்கள் செய்யும் வேலையை அல்லது முயற்சியை பாராட்ட முயலுங்கள். அவர்கள் செய்யும் வேலை, உங்களுக்கானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவை நம் சமுதாயத்திற்கு பயன்படும் படி அமையலாம். முன்னேற துடிப்பவர்களுக்கான உதவியை நீங்களே செய்யுங்கள். அவர்களது முயற்சியை பாராட்டி ஊக்கமளிக்க துவங்குங்கள், இதுவே ஒரு அமைதியான பண்பாட்டை ஏற்படுத்தும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

யாருடைய செயலுக்காகவும் நீங்கள் பொறாமை கொள்ள வேண்டிய அவசியமில்லை. இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை, தனிப்பட்ட செயல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதலால், உங்களுக்கு இங்கே யாரும் போட்டியாக இருக்க போவதில்லை. 60 வயதுள்ள ஒரு தொழிலதிபருக்கு, 30 வயது கொண்ட ஒரு இளைய தொழில்முனைவோர் எவ்வாறு போட்டியாளராக அமைந்து விட முடியும். இருவரின் தொழில்புரியும் காலங்கள், வாழ்க்கை மற்றும் கற்றல் முறை வெவ்வேறு. அப்படியிருக்க வெறும் எண்களை மட்டுமே கொண்டு, நாம் போட்டா போட்டிக்கு வந்து விட கூடாது.

 

  • எப்போதும் கற்றலை முன்னிறுத்துங்கள் (Do not try to sell, instead Educate)

 

நம்மில் பெரும்பாலோர் செய்யும் தவறு இது தான் – பள்ளி மற்றும் கல்லூரி காலங்கள் மட்டுமே கற்றலுக்கான நாட்கள் என்று நாம் எண்ணி கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் வாழ்நாள் முழுவதும் கற்று கொள்ள கடலளவு விஷயங்கள் இங்கே உள்ளன என்பதை மறந்து விட வேண்டாம். ‘கல்லூரி காலத்துடன் கற்றலை நிறுத்தியவர்கள் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் என்றும், வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கான நேரத்தை ஒதுக்குபவர்கள் தான் பின்னாளில் பணக்காரர்களாக இருந்துள்ளனர் ‘ என்று ராபர்ட் கியோசாகி(Robert Kiyosaki – Rich Dad Poor Dad) சொல்வதுண்டு.

 

ஒருவரிடம் உங்கள் கருத்து அல்லது ஏதேனும் பொருட்களை விற்க வேண்டுமானால், முதலில் அதனை பற்றிய கல்வியை அவர்களுக்கு அளியுங்கள். உங்கள் கருத்து அல்லது பொருட்களை தேர்ந்தெடுப்பது அவர்களுடைய கடமை ஆகும். பொருட்களை விற்பதை காட்டிலும், கற்றலுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

 

  • உங்கள் வார்த்தைகளில் கவனம் தேவை (Remember, your tone of Voice matters)

 

உங்கள் எண்ணம் செயலாக மாறுவதன் அதிசயம் நீங்கள் அறிந்ததாக இருக்கலாம். ஆனால் உங்கள் எண்ணம் வார்த்தைகளாக வெளிவரும் போது, நீங்கள் கவனத்துடன் அணுக வேண்டும். உங்கள் வார்த்தை தான் நீங்கள் யார் என்பதை இந்த சமுதாயத்தில் பிரதிபலிக்கும். நீங்கள் எதையும் உடனடியாக பேச வேண்டும் என்ற அவசியமில்லை, நிதானமாக யோசித்து பின்பு உங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். வாளை(Sword) விட உங்கள் வார்த்தை(Words) சக்தி வாய்ந்தது, கவனமாக பயன்படுத்துங்கள்.

 

  • நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் (Connect with people honestly)

 

இன்று நேர்மை எங்கே இருக்கிறது என்று நாம் கேட்கலாம். நாம் நினைப்பது போல லஞ்சம் தவிர்ப்பதும், ஊழல் செய்யாமல் இருப்பது மட்டும் நேர்மை அல்ல. நேர்மை என்பது நம் ஒவ்வொருவரின் மனதில் இருந்து வெளிப்படுவது. நீங்கள் உங்களுக்கு உண்மையாக இருந்தால் மட்டுமே, உங்களால் வெளி உலகில் நேர்மைத்துவத்தை வெளிப்படுத்த முடியும்.

 

பெரும்பாலான நேரங்களில் நாம் செய்யும் தவறுக்கு, காரணங்களை தேட முயற்சிக்கிறோம். வெற்றி பெற்றவர்கள் பொறுப்புகளை ஏற்று கொள்வார்கள், அது தான் அவர்களை தலை நிமிர்ந்து நடக்க செய்கிறது. உங்களது தவறு அல்லது தாமதத்திற்கு நீங்கள் வருந்த வேண்டிய அவசியமில்லை, ஆனால் அதற்கான பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளும் போது, உங்களுக்குள் தன்னம்பிக்கை வெளிப்படும். மற்றவர்களிடம் நீங்கள் எதிர்பார்ப்பதை போல, நீங்களும் அதனையே மற்றவர்களுக்கும் செய்யுங்கள்.

 

  • புத்திசாலியாக இருப்பதை விட அன்பாக இருக்க முயலுங்கள் ( Choose to be kind over clever)

 

எப்போதும் நீங்களே முதலிடத்தில் இருப்பதும், நீங்கள் சொல்வதை மற்றவர்கள் மட்டுமே கேட்டு கொண்டிருப்பதிலும் என்ன மகிழ்ச்சி உள்ளது. நீங்கள் புத்திசாலியாக இருந்ததால், மற்றவர்கள் அனைவரும் சந்தோசமாக இருந்துள்ளனர் என நீங்கள் எண்ணுகிறீர்களா ?

 

நீங்கள் உங்கள் தொழிலில் அல்லது பணிபுரியும் இடத்தில் வேண்டுமானால் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தலாம். உங்கள் குடும்பத்தில், உறவுகளில் உங்கள் புத்திசாலித்தனம் எதனை கொடுத்து விடும் என நாம் சிந்திக்க வேண்டும். இன்றைய நாட்களில், நாம் குடும்பம் மற்றும் உறவினர்கள் என்ற நிலையிலிருந்து வெளிவந்து விட்டோம். அப்புறம் எதற்கு நாம் புதிய நண்பர்களை தேடுகிறோம், நண்பர்களை உறவினர்களாக மாற்றி கொள்கிறோம். நாம் அன்பை மட்டுமே எதிர்பார்க்கிறோம் என நமது உள்ளுணர்வு மூலம் இது வெளிப்படுகிறது.

 

  • எளிமையான விஷயங்களை தேர்வு செய்யுங்கள் (Keep things simple)

 

நமக்கான லட்சியம் பெரிதாக இருக்கலாம், நமக்கான கடமையும் பிரமாண்டமாக இருந்திருக்கலாம். நாம் கையாளும் எந்தவொரு செயலையும் எளிமையாக வடிவமைத்து கொள்ளுங்கள். சிக்கல் நிறைந்ததாக நம் வாழ்க்கையை கொண்டிருக்காமல், எளிமையான சிந்தனைகளை கொண்டிருங்கள். முதலில் நம்மால் முடிந்த மற்றும் நமக்கு தெரிந்த விஷயங்களை செய்ய பழகுங்கள். பின்பு கற்றலின் மூலம் அடுத்தகட்ட செயலை செய்ய ஆரம்பியுங்கள்.

 

மிகவும் எளிமையான கணக்கு சூத்திரம்(Simple Formula), எளிமையான வாழ்க்கை முறை(Be Frugal) எப்போதும் நமக்கு மறந்து போகாது.

 

நீங்கள் தொழில் முனைவோராகவோ, நிறுவனத்தில் பணிபுரிபவர் அல்லது உங்களது குடும்பத்தின் ஒரு நபராக இருக்கலாம். மேலே சொன்ன பத்து சிந்தனைகளை கடைபிடிக்க முயற்சியுங்கள், உங்களது வாழ்க்கை உங்கள் வசமாகும். இது ஊக்கமளிக்கும் சிந்தனைகள் அல்ல, பயிற்சி பெற வேண்டிய சிந்தனைகள்..

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

மழைக்காலத்திற்கு தயாராக உள்ளீர்களா ? அவசர கால நிதிக்கான திட்டமிடல்

மழைக்காலத்திற்கு தயாராக உள்ளீர்களா ? அவசர கால நிதிக்கான திட்டமிடல்

Ready for the Rainy season ? – Plan for the Emergency Funding

இன்னும் பங்குனி-சித்திரை மாதங்களை தாண்டவில்லை, அதற்குள் மழைக்காலம் என்கிறீர்களா ? மழைக்காலமோ, அது வெயில் காலமோ அதற்கான பாதுகாப்பு அம்சங்களை நாம் முன்னரே திட்டமிடுவது சிறந்தது. ‘வருமுன் காப்போம்’ என்ற வாசகமே நாம் எந்த பிரச்சனைக்குள்ளும் சிக்காமல் நம் தினசரி வாழ்க்கையை வாழ்வதற்கான வழிமுறைகளை வகுத்து கொடுக்கிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தற்போதுள்ள வெயில் காலத்தில் நாம் நம்மை பாதுகாக்க என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும் என்பது நமக்கு தெரிந்திருக்கும். அது போல மழைக்காலத்தில் மிகவும் அடிப்படை விஷயமாக, வெளியில் செல்லும் போது குடை கொண்டு செல்வது நம் அனைவரது அவசியமாகும். காலத்திற்கு தகுந்தாற் போல், நாம் மாறிக்கொண்டு வந்தாலும், நமது நீண்டகால நிதி வாழ்க்கைக்கு பாதுகாப்பு கவசங்களை அணிகிறோமா என்பது தான் நமக்கான இன்றைய கேள்வி.

 

வளரும் நாட்டில் வேலைவாய்ப்புகள் பெருகி கொண்டு தான் இருக்கின்றன. படித்த படிப்புக்கு வேலையில்லை என்று சொன்னாலும், இன்று சேவை துறையில் அதிக வேலைவாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன என்றே சொல்லலாம். பத்து வருடங்களுக்கு முன்னர் பார்த்த வேலை தான், இன்று அது போல இல்லை எனலாம். பொதுவாக நுகர்வோர்(Consumer) சார்ந்த தொழில்கள் வளர்ந்து வரும் தருணத்தில், அதனை தொடர்ந்து வேலைவாய்ப்புகளும் பெருகும். நினைவிருக்கட்டும், இந்த வேலைவாய்ப்புகள் அரசாங்கம் ஏற்படுத்தியவை அல்ல, நாம் தான் – நமது நுகர்வு கலாச்சாரம் தான் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

 

வேலைவாய்ப்புகள் அதிகரித்து வந்தாலும் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு பணி மாறுபவர்களின் எண்ணிக்கையும், சில காரணங்களால் வேலையினை இழந்தவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்து வருகிறது. நிறுவன பணி மாறுதலோ அல்லது வேலை இழப்போ, இது போன்ற இடைக்கால நிகழ்வுகளை சமாளிப்பது தான் நமக்கான மழைக்கால குடை எனலாம். இது ஒரு தற்காலிக நிகழ்வு தான் எனினும், அதனை சமயத்தில் நாம் தீர்வு கண்டால் மட்டுமே, நமக்கான அடுத்தகட்ட வாழ்க்கை சரியாக அமையப்பெறும்.

 

இன்றைய சூழ்நிலையில் நாம் தற்காலிகமாக வேலைக்கு செல்ல முடியாமல் போவதற்கான காரணங்கள் பல உண்டு. இருப்பினும், அந்த சமயத்தில் நமக்கான பொருளாதார வாழ்க்கையும் பாதிக்கப்படும். இதனை களைய தான் அவசர கால நிதி திட்டமிடல் அவசியம்(Emergency Fund). எதிர்பாராத பொருளாதார இழப்பு அல்லது தற்காலிக நிதி நெருக்கடியின் போது, அவசர கால சேமிப்பு உங்களுக்கு உதவக்கூடும்.

அவசர கால நிதியை திட்டமிடுவது எப்படி ?

 

  • உங்கள் மாதாந்திர வரவு மற்றும் செலவை கணக்கிட்டு கொள்ளுங்கள் (Monthly Income and Expenses).
  • உங்களுக்கு தற்சமயம் உள்ள சொத்து மற்றும் கடன் விவரங்களை கணக்கில் எடுத்து கொள்ளுங்கள் (Asset and Liabilities). உங்களால் சொத்து மற்றும் கடன் விவரங்களை கணக்கிட கடினமாக இருந்தால், கவலையடைய வேண்டாம். விட்டு விடுங்கள், நமக்கான இலக்கு அவசரகால நிதியை செயல்படுத்துவது தான்.
  • உங்களது அவசரகால இலக்கை திட்டமிடுங்கள் மற்றும் இலக்கிற்கு எவ்வளவு தொகை வேண்டுமென்று குறித்து கொள்ளுங்கள். (Emergency – Due to Job Loss, Unexpected Incident, Medical Emergencies, Family Commitments, Desired Goals)
  • பொதுவாக அவசர கால தேவைக்கு 6 முதல் 12 மாத வருமானம் உள்ள தொகையை இலக்காக எடுத்து கொள்வது நன்று.
  • உங்களது இலக்கிற்கான சேமிப்பு / முதலீட்டு தொகையை ஒரு வங்கி சேமிப்பு கணக்கின் மூலம் தொடங்குங்கள். வட்டி வருமானம் குறைவாக  இருந்தாலும் பரவாயில்லை; நீங்கள் சேமிப்பு கணக்கில், எப்போதும், எங்கு வேண்டுமானாலும் பணத்தை எளிதாக எடுத்து கொள்ளலாம். (Save Only in Savings Accounts/Recurring Deposits. It will give only around 4-7 % Interest, but, you can take money anytime, anywhere. Don’t look out for the Equity, Gold or Real Estate for Emergency !)
  • உங்களது அவசரகால நிதியை எக்காரணத்திற்காகவும் வெளியே எடுக்காதீர்கள் (அவசரகாலம் தவிர !)

அவசர கால நிதியை திட்டமிடுவது எவ்வாறு என்பதை நாம் பார்த்து விட்டோம். அடுத்து அதனை செயல்படுத்துவது எவ்வாறு என்பதை கீழ்க்காணும் இணையப்பக்கத்தில் நாம் ஏற்கனவே கொடுத்துள்ளோம்.

அவசரகால நிதியை உருவாக்குவது எப்படி ? How to Start an Emergency Fund

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 4

Personal Finance – Survey / Polling

 

மூன்றாம் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

  • நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள். உங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம். உங்களது முதலீடு எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும் ?

 

விடை:       9 வருடங்கள்

 

விளக்கம்:  பணத்தை சேர்த்து வைப்பது என்னவோ பலருக்கு கஷ்டமான காரியமாக இருக்கலாம். ஆனால் நம்மில் பலருக்கு நாம் வைத்திருக்கும் பணம் இரண்டு மடங்காக மாறினால், மிகவும் சந்தோசப்படுவோம். நிதி கல்வியில் கூட்டு வட்டியின் பலன்(Compound Interest) முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதே நேரத்தில், கூட்டு வட்டியின் தன்மை இல்லாமல் நமது பணம் குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்பாவதற்கு வாய்ப்பு எங்கும் இல்லை.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

போன்சி திட்டங்களில்(Ponzi Schemes) நமது பணத்தை செலவு செய்து ஏமாற்றம் அடையாமல், பணம் எவ்வாறு இரு மடங்காகிறது என்பதை நாம் கற்று கொண்டாலே, நமக்கான முதலீட்டு வாய்ப்பை நாம் தேட செல்வோம். (Rule 72)விதி எண் – 72 என்ற எளிமையான கணக்கு நமது பணம் எத்தனை வருடங்களில் இரண்டு மடங்காக மாறும் என சொல்லிவிடும்.

Rule No. 72  = 72 / கிடைக்கக்கூடிய வட்டி விகிதம்

 

உதாரணத்திற்கு உங்களிடம் உள்ள ரூ. 1 லட்சம் எத்தனை வருடங்களில் இரு மடங்காகும் என்பதை அறிய, நமக்கு தேவையான தகவல் நமது பணத்தின் மதிப்பு மற்றும் கிடைக்கக்கூடிய வட்டி விகிதம். நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை 8 சதவீத வட்டியில் முதலீடு செய்தால், 9 வருடங்களுக்கு பிறகு அது இரண்டு லட்ச ரூபாயாக (72/8 =9 Years) மாறும். இது ஒரு மனக்கணக்கு போல செயல்படும். இதே போன்று நமது பணம் மூன்று மடங்காக வேண்டுமானால், அதற்கான சூத்திரம்:

 

115 / கிடைக்கக்கூடிய வட்டி விகிதம்

 

  • நம் நாடு சுதந்திரம் பெற்ற வருடத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு எவ்வளவு ?

 

விடை:  4.16 ரூபாய்

 

விளக்கம்: 1947ம் ஆண்டு சுதந்திரம் பெறுவதற்கு முன், நம் நாடு பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்துள்ளதை நாம் அனைவரும் அறிவோம். அப்போதைய காலத்தில் நம் நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ரூபாய் – பவுண்ட்(Rupee – Pound) மதிப்பில் தான் வர்த்தகமாகி கொண்டிருந்தது. 1927ம் ஆண்டு முதல் 1966ம் ஆண்டு வரை நமது வர்த்தகம் ரூபாய் – பவுண்ட் மாற்றத்தில் நடந்துள்ளது கவனிக்கத்தக்கது. அப்போது ஒரு பவுண்ட் மதிப்பு 13 ரூபாய் (13.37) என்ற அளவில் இருந்தது.

 

அப்படியிருக்கும் சமயத்தில், ஒரு பவுண்டுக்கு நிகரான டாலர் மதிப்பு 4 டாலர் என்ற அளவில் இருந்து வந்துள்ளது. அதாவது ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு – மூன்று ரூபாய்க்கும் மேலாக இருக்கிறது. எனவே நாம் சுதந்திரம் பெற்ற தருணத்தில்(இந்திய அரசியலமைப்பு துவக்கத்தின் போது), ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 4.16 ரூபாய் என்ற அளவில் தான் உள்ளது. நாம் நினைப்பது போல ஒரு டாலர் – ஒரு ரூபாய் என்ற மதிப்பில் இல்லை. 1913ம் ஆண்டு வாக்கில் ஒரு டாலரின் மதிப்பு, இந்திய ரூபாயில் 9 காசுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • லிக்விட் பண்ட்(Liquid Fund)  ___________ ?

 

விடை: ரிஸ்க் இல்லை

 

விளக்கம்: லிக்விட் பண்ட் என்பது பரஸ்பர நிதிகள் வழங்கும் கடன் சார்ந்த திட்டங்களாகும்(Debt Mutual Funds). இதில் பெறப்படும் முதலீடு அரசாங்க பத்திரங்கள், கருவூல மசோதா(Treasury Bills), வணிக ஆவணங்கள் மற்றும் வைப்பு சான்றிதழ்(Certificate of Deposit) போன்றவற்றில் முதலீடு செய்யப்படும். இவை பொதுவாக 91 நாட்களுக்குள் முதிர்வடையும் சாதனம்(Maturity) ஆகும். இவற்றில் ரிஸ்க் என்பது மிக குறைவு மற்றும் வங்கிகளில் உள்ள ரிஸ்க் தன்மையே லிக்விட் பண்டிலும் இருக்கும். எனவே இந்த பண்ட் வகைகளை ரிஸ்க் இல்லா முதலீடு(Risk Free) என்றே சொல்லலாம்.

 

லிக்விட் பண்டுகள் பொதுவாக வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை விட அதிக வட்டி கொடுக்கும் குறுகிய கால முதலீட்டு சாதனமாக பயன்படும். வங்கியில் டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் குறையும் போதும், லிக்விட் பண்டுகளில் வட்டி விகிதம் சற்று அதிகமாக தான் காணப்படும்.

  • உங்களுக்கான நிதி இலக்குகள்(Financial Goals) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?

விளக்கம்: எந்தவொரு முதலீட்டையும் நாம் மேற்கொள்ளும் முன், அவற்றில் முதலீடு செய்வதற்கான காரணத்தை நாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம். என்னிடம் இவ்வளவு பணம் உள்ளது, எனக்கு இவ்வளவு மடங்குகள் பணம் வேண்டும் என நாம் பொதுவாக சொல்லிவிட முடியாது.

 

நாம் கற்க போகும் கல்விக்கு, ஒரு அடிப்படை நோக்கம் இருப்பது போல முதலீட்டிற்கும் நோக்கம் இருந்தாக வேண்டும். இதனை தான் நாம் நிதி இலக்குகள்(Financial Goals) என சொல்கிறோம். உதாரணத்திற்கு, 5 வருட கல்வி செலவு, குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் திருமண செலவு, நான்கு சக்கர வாகனம் வாங்கும் திட்டம், ஓய்வு கால தொகை(Retirement Corpus), புதிய வீடு வாங்குதல் ஆகியவை நிதி இலக்குகள் என சொல்லலாம்.

 

நிதி இலக்குகளுக்கு முதலீடு செய்ய நம்மிடம் தேவையான பணம், காலம் மற்றும் தோராயமான வட்டியை அளிக்கும் முதலீட்டு சாதனம் அமைய பெற வேண்டும்.

 

குமார் என்பவருக்கு அடுத்த 15 வருடங்களில் தனது மகளின் மேற்படிப்புக்காக 10 லட்சம் ரூபாய் (இன்றைய மதிப்பில்) தேவை உள்ளது. 15 வருடங்களில் அவரது நிதி இலக்கினை அடைய தேவைப்படும் முதலீட்டு வாய்ப்பு – பங்குகள் / பரஸ்பர நிதிகள் / வங்கி வைப்பு நிதி / நிலம் / தங்கம். பொருத்தமான முதலீட்டு சாதனத்தை தேர்ந்தெடுப்பது நம் கடமை.

 

  • DICGC முறைப்படி உங்களது வங்கி சேமிப்பில் எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது ?

 

விடை:  ரூ. 1 லட்சம்  

 

விளக்கம்: பொதுவாக நம்மிடம் உள்ள காலங்காலமாக இருந்த நம்பிக்கை வங்கியில் பணம் போட்டால் அது பாதுகாப்பாக இருக்கும் என்பது. தற்போது அந்த நம்பிக்கையும் நம்மிடம் இல்லை எனலாம். வங்கிகளின் வாராக்கடன் சிக்கலுக்கு பின், வங்கிகளின் மேல் மக்களின் நம்பிக்கையும் குறைந்து விட்டது எனலாம்.

 

பாரத ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் துணை நிறுவனம் தான் DICGC(Deposit Insurance and Credit Guarantee Corporation) எனப்படும் வைப்புத்தொகை காப்புறுதி மற்றும் கடன் உத்தரவாத கூட்டுஸ்தாபனம். இந்த நிறுவனம் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளில் செய்யப்பட்ட வைப்பு தொகை, சேமிப்பு மற்றும் தொடர் கணக்கு தொகை, தொடர் வைப்பு தொகை(Recurring) ஆகியவற்றுக்கு காப்பீடு செய்யப்படும். சொல்லப்பட்ட கணக்கில் உள்ள தொகை அல்லது முதலீட்டிற்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை காப்பீடு எடுக்கப்படும். ஏதேனும் ஒரு காரணத்தால் வங்கியில் உள்ள நமது பணத்தை இழக்க நேரிட்டால், நமக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம் வரை மட்டுமே கிடைக்கும்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தனிநபர் ஒருவர் ஒரு வங்கியின் கீழ் பல்வேறு கிளைகளில் கணக்கு வைத்திருந்தாலும், அவருக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச காப்பீட்டு தொகை 1 லட்சம் ரூபாய் மட்டுமே. வெவ்வேறு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் ஒருவருக்கு ஒவ்வொரு வங்கிகளின் கீழும் ஒரு லட்ச ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும். காப்பீடு செய்யப்பட்ட தொகைக்கான ப்ரீமியத்தை குறிப்பிட்ட வங்கிகளே செலுத்த வேண்டும். வங்கிகள் சொல்லப்பட்ட ப்ரீமியத்தை செலுத்த தவறினால், வங்கியின் பதிவு மற்றும் காப்பீட்டை ரத்து செய்யும் அதிகாரம் DICGC க்கு உண்டு. எனவே வங்கிகளில் நீங்கள் வைத்திருக்கும் தொகைக்கு ஒரு லட்ச ரூபாய் வரை மட்டுமே இழப்பீடு(Rs.1 Lakh Insurance) தொகை கிடைக்கும் என்பதை மறவாதீர்கள்.

 

இந்த வார கேள்விகள்:

 

  • பங்குச்சந்தையில் தினசரி வர்த்தகத்தின்(Intra day) மூலம் விரைவாக செல்வம் சேர்க்கலாம் ?
  • வங்கிகளில் கிடைக்கும் வட்டி தொகைக்கு(Interest Income) வரி செலுத்த தேவையில்லை ?
  • நிதி சார்ந்த கல்வியை கற்பதற்கு நீங்கள் நேரம் ஒதுக்குவது உண்டா ?
  • அவசர கால நிதி(Emergency Fund) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?
  • உங்களுக்கு ஒரு விலையுர்ந்த கைபேசி(Smart Phone) வாங்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. உடனே EMI முறையில் வாங்குவீர்களா அல்லது அதற்கான பணத்தை சேர்த்து வைத்த பின் வாங்க முயல்வீர்களா ?

 

குறிப்பு:

 

நீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.

 

https://www.surveymonkey.com/r/8QLXFGZ

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

சிறந்த 5 நீண்ட கால பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்

சிறந்த 5 நீண்ட கால பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்

Best 5 Long term Equity Mutual Funds to Invest – 2019

 

பிப்ரவரி மாதத்தில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை குறைந்திருப்பது இந்திய பங்குச்சந்தையின் எழுச்சிக்கு காரணமாக அமைந்தது எனலாம். முன்னர் இருந்ததை விட கடந்த மாதத்தில் இறக்குமதியின் அளவு கணிசமாக குறைந்துள்ளது. சமீபத்திய டாலர்-ரூபாய் பரிமாற்றத்தில், ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதும் சந்தைக்கு சாதமாக உள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

வளர்ந்து வரும் நாடுகளில், அந்த நாட்டினுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த சில காலங்களாக நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி விரைவாக இல்லையெனினும், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் நமது நாட்டின் வளர்ச்சி சராசரிக்கும் மேலாகவே உள்ளன. பங்குச்சந்தை ஏற்ற காலங்களில் நல்ல பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்வதே பாதுகாப்பானது. பின்னாளில் சந்தை ஏதேனும் காரணத்தால் இறக்கம் கண்டாலும், நல்ல பங்குகளில் அந்த தாக்கம் அவ்வளவாக இருக்காது.

 

பங்குச்சந்தையில் அடிப்படை பகுப்பாய்வுகளை(Fundamental Analysis) ஆராய்ந்து பங்குகளை வாங்குவதற்கு நேரம் உள்ளவர்கள் பங்குச்சந்தையில் நேரிடையாக ஈடுபடலாம். மற்றவர்களுக்காகவே பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள்  இன்று பல கொட்டி கிடக்கின்றன. தொடர்ச்சியாக வளர்ந்து வரும் நாடுகளில் பொதுவாக நிதி சார்ந்த விஷயங்களும் நல்ல முன்னேற்றம் காணும். அந்த வகையில், இந்திய பங்குச்சந்தை நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானத்தை தரக்கூடியது.

 

இந்திய சந்தையில் நாம் முதலீடு செய்கிறோமோ இல்லையோ, ஆனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நம் நாட்டின் கடன் சந்தை(Debt Market) மற்றும் பங்கு சந்தையில்(Stock Market) தற்போது தொடர்ச்சியாக முதலீடு செய்து வருகிறார்கள். பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்ட் என்று சொல்லப்படும் பரஸ்பர நிதி திட்டங்கள் நீண்ட கால நிதி இலக்குகள் மற்றும் செல்வம் சேர்ப்பதற்கான ஒரு சிறந்த முதலீட்டு சாதனமாக உள்ளது. குறுகிய கால மற்றும் உடனடி தேவை உள்ளவர்களுக்கும் பரஸ்பர நிதிகளில் திட்டங்கள் அமைய பெற்றுள்ளன.

 

நடப்பு 2019ம் வருடத்தில் உங்கள் முதலீட்டை தொடங்குவதற்கான சிறந்த ஐந்து நீண்ட கால பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்கள்(Long term Equity Funds) இங்கே,

 

  • ஆக்ஸிஸ் ப்ளூ சிப் பண்ட் (Axis Blue Chip Fund)
  • ஐ.சி.ஐ.சி.ஐ. புரு ப்ளூ சிப் (ICICI Pru Blue Chip Fund)
  • மிரே அஸெட் எமெர்ஜிங் ப்ளூ சிப் (Mirae Asset Emerging Blue Chip Fund)
  • எச்.டி.எப்.சி. மிட்கேப் ஆஃபர்ச்சுனிடிஸ்(HDFC Midcap Opps Fund)
  • எச்.டி.எப்.சி. டாப் 100 பண்ட் (HDFC Top 100 Fund)

Best Long term Equity funds 2019

 

மேலே சொன்ன மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்(Mutual Funds) நீண்ட காலத்திற்கு உரியவை. ஐந்து வருட காலத்தில் சொன்ன அனைத்து திட்டங்களும் 12 சதவீதத்திற்கு மேல் வருவாயை கொடுத்துள்ளன. இவை எதிர்காலத்திலும் கிடைக்க கூடிய வருவாய் என நாம் சொல்ல முடியாது. அதே வேளையில் நீண்ட கால பயணத்தில் நல்ல வருமானத்தை அளிக்க கூடிய பண்டுகளாக இவை உள்ளன.

 

முதலில் உங்கள் நிதி இலக்குகளை தீர்மானியுங்கள். பிறகு அதன் காலத்திற்கு ஏற்றாற் போல், மேலே சொன்ன திட்டங்களில் முதலீடு செய்து விட்டு இலக்குகளை அடையும் வரை பொறுமையாக இருங்கள். ஐந்து நீண்ட கால பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் செலவின விகிதம்(Expense Ratio) என காணும் போது, சராசரியாக இரண்டிலிருந்து 2.5 சதவீதம் வரை உள்ளன. ஒரு வருடத்திற்குள் உங்கள் முதலீட்டை திரும்ப பெறும்(Redemption) பட்சத்தில், வெளியேறும் கட்டணமாக ஒரு சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுக்கும் முன், உங்கள் குடும்ப உறுப்பினர்களோடு கலந்து ஆலோசித்து முடிவெடுங்கள். ஒவ்வொரு முதலீட்டு சாதனமும் வெவ்வேறான ரிஸ்க் மற்றும் வருவாய் காலத்தை கொண்டிருப்பவை. தெளிவான முதலீட்டு முடிவுகளுக்கு தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் பயன் பெறுங்கள்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 3

வர்த்தக மதுரையின் நிதி அறிவு துளிகள் – பாகம் 3

Personal Finance – Survey / Polling

 

நமது வர்த்தக மதுரை தளத்தின் சார்பாக நிதி அறிவு துளிகள் என்ற தலைப்பில் நிதி சார்ந்த கேள்விகளும், அதற்கான பதில்களும் பெறப்படும். இது ஒரு வாக்கு பதிவு முறையில் அமையப்பெற்றது. உங்களுக்கான நிதி அறிவை நீங்கள் தற்சோதனை செய்து கொள்ள ஒரு தமிழ் களம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இரண்டாம் பாகத்திற்கான கேள்விகளும், அதற்கான விடைகளும் இங்கே…

 

  • வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ்(காப்பீடு) என்ற திட்டம் மட்டுமே உள்ளது ?

 

விடை:       இல்லை

 

விளக்கம்:  வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் என்ற திட்டத்தை தவிர பல வழிகளில் நாம் வரி சேமிப்பினை பெறலாம். வருமான வரிச்சட்டம் பிரிவுகள் 80C, 80D, 80E, 80G, 80U மற்றும் மேலும் பல வகைகளில் வருமான வரியை சேமிக்கலாம். வரி சேமிப்பை அறிய,

 

வருமான வரி சேமிப்பு வழிகள்

 

வருமான வரி சேமிப்பிற்கு காப்பீடு திட்டத்தை மட்டுமே பயன்படுத்துவது சரியான அணுகுமுறை அல்ல.

  • நமது நாட்டில் தங்கத்தின் விலை மதிப்பு எதனை சார்ந்து மாறுகிறது ?

 

விடை: டாலர் மதிப்பு (Dollar)

 

விளக்கம்: பொதுவாக ஒரு நாட்டில் உள்ள நுகர்வோர் பயன்படுத்தும் பொருட்களுக்கு அல்லது சேவைகளுக்கு, உற்பத்தி மற்றும் தேவைக்கு உள்ள இடைவெளியே(Demand-Supply) அதன் விலை மதிப்பை நிர்ணயிக்கும். உற்பத்தி பெருகி தேவை குறைந்திருப்பின், பொருள் அல்லது சேவைக்கான விலை குறைவாகவே இருக்கும். மாறாக தேவைகள் அதிகமாகவும், அதற்கான உற்பத்தி குறைவாக இருக்கும்பட்சத்தில் விலைத்தன்மை அதிகமாக இருக்கும்.

 

நம் நாட்டில் தங்கத்தின் தேவை இறக்குமதி மூலமாக(Gold Imports) தான் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆகையால் உற்பத்தி என்பது நம் நாட்டை சார்ந்ததல்ல. விழாக்காலங்களில் நகைக்கடைகளில் தங்கம் விலை அதிகமாக இருக்கும் என்பது உள்ளூர் சந்தையில் ஆபரண தங்கத்தின் விலை மதிப்பு அதிகரிப்பதையே காட்டுகிறது. மாறாக தங்கம் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதும், அதன் மதிப்பு அமெரிக்க டாலர்களில் தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பை பொறுத்தே தங்கத்தின் விலையும் பெறப்படும். ஆக தங்கத்தின் விலை தினமும் மாற்றம் பெறுவது பெரும்பாலும் டாலர் மதிப்பின் மாற்றமே.

 

  • பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும்(Mutual Funds) ஒன்றா ?

 

விடை: இல்லை

 

விளக்கம்: பங்குச்சந்தையும், பரஸ்பர நிதிகளும் வெவ்வேறானவை. பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகள் பரஸ்பர நிதி திட்டங்களில்(Mutual Fund Schemes) உள்ளன. ஆனால் பரஸ்பர நிதிகளில் உள்ள அனைத்து முதலீட்டு வகைகளும் பங்குச்சந்தையில் நாம் காண முடிவதில்லை. இரண்டுமே செபி(SEBI) என்ற ஒழுங்குமுறை அமைப்பின் கீழ் நிர்வகிக்கப்பட்டாலும், அதற்கான வழிமுறைகள் வேறுபாடுகள் கொண்டவை.

 

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் தங்களது முதலீடுகளை திரட்ட பொதுவெளியில் வருகின்றன. நிறுவனத்தின் வருவாயும், நிர்வாக திறனும் ஒரு முதலீட்டாளராக கவனிக்க வேண்டியது அவசியம். நாம் வாங்கிய பங்குகளின் நிறுவனம் சரியில்லை என்றால், நமது முதலீட்டிற்கு ரிஸ்க் அதிகம் தான். ஆதலால் தான் பங்குச்சந்தை ஒரு தொழில் சார்ந்த விஷயம் என்கிறோம்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பரஸ்பர நிதிகள் என்பது டிரஸ்ட்(Sponsor or Trust) என்று சொல்லக்கூடிய அறக்கட்டளை அமைப்பு முறையில் இயங்கி வருவது. பரஸ்பர நிதிகளுக்கு பொதுவாக பங்குச்சந்தை நிறுவனங்கள் போன்று எந்த முதலீடும் தேவையில்லை. பரஸ்பர நிதிகள் வங்கிகள் போன்ற செயல்பாட்டு முறையை கொண்டிருக்கிறது. பரஸ்பர நிதிகளில் நீங்கள் சேமிப்பு கணக்கு, வைப்பு நிதி, ஆர்.டி. டெபாசிட்(Recurring Deposit), கடன் பத்திரங்கள், தங்கத்தில் முதலீடு, ரியல் எஸ்டேட் முதலீடு, அரசாங்க பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை சார்ந்த  முதலீடுகள் என பல வகை திட்டங்களை காணலாம்.

 

இங்கே சேமிப்பு கணக்கு என்பது லிக்விட் பண்ட்(Savings -Liquid Fund) எனவும், வைப்பு நிதி என்பது Lumpsum முதலீடு எனவும், ஆர்.டி. முறை SIP(Systematic Investment Plan) முதலீடு எனவும் பெயர் மாற்றம் பெறுகிறது, அவ்வளவே. வங்கி சேமிப்புகள் பாதுகாப்பானவை  என நாம் நினைத்தால், பரஸ்பர நிதி திட்டங்களும் பாதுகாப்பானவை தான், திட்டங்களை சரியாக தேர்ந்தெடுப்பது அவசியம்.

  • நிதி சார்ந்த கல்வியினை பெற நீங்கள் எவ்வளவு தொகையை செலவிட தயாராக உள்ளீர்கள் ?

விளக்கம்: நம் நாட்டில் சேமிப்பு என்ற பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வந்தாலும், முதலீடு என்ற சாதனத்தில் சிலர் மட்டுமே பங்குபெறுவது வருந்தத்தக்க விஷயம். உண்மையில் நாம் சொல்லும் வளர்ந்த நாடுகளில் வேலை வாய்ப்புகளோ, பணக்காரர்களோ அதிகமில்லை. மாறாக அங்கே தொழில் சார்ந்த விஷயங்களும், முதலீடு பற்றிய விழிப்புணர்வும் தான் தாக்கத்தை பெறுகிறது.

 

பொதுவாக நாம் முதலீடு செய்வதில் அக்கறை காட்டுவதில்லை என்றாலும், மிகவும் ரிஸ்க் எடுக்கும் தன்மை நம்மிடம் உள்ளது எனலாம். இன்றும் போன்சி திட்டங்கள்(Ponzi Schemes) என்னும் சதுரங்க வேட்டைகள், தங்க முதலீடு(Gold Scam), பிட் காயின்(Bitcoin) முதலீடு, இன்னும் நமக்கு தெரியாத என்னென்னவோ விஷயங்களை செய்து வருகிறோம். பின்பு சில காலங்களுக்கு அவை மறைந்து விடும். நம்மிடம் உள்ள குறுகிய கால அணுகுமுறை தான் நம்மை தவறான வழிகளில் பணத்தை முதலீடு செய்ய முனைகிறது. பெரும்பாலும் நாம் ஏமாற்றப்படுவது நம்முடைய பணத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில் தான். புரிந்து கொள்ளுங்கள், வங்கி மற்றும் அஞ்சலக சேமிப்புகளில் உங்கள் பணம் இரட்டிப்பாக பத்து வருடங்களாகும். பங்குச்சந்தை மற்றும் தொழில்களில் நீங்கள் முதலீடு செய்தாலும் உங்கள் பணம் ஐந்து முதல் ஆறு வருடங்களுக்கு பின்னரே இரண்டு மடங்காகும். பங்குச்சந்தையில் நீண்டகால சராசரி வருமானம் 12-15 சதவீதம் மட்டுமே என்பதை மறந்து விடாதீர்கள்.

 

அப்படியிருக்க, போன்சி திட்டங்கள் என்றும் சொல்லப்படும் ஏமாற்று முறைகளில் ஒரு வருடம் முதல் மூன்று வருடங்களில் உங்கள் பணம் இரட்டிப்பாவது எவ்வாறு சாத்தியம் என்பதை சிந்தியுங்கள். உண்மையில் அப்படி ஒரு முதலீடு இருந்திருந்தால், ஏன் நம் நாட்டின் அம்பானியும், அதானியும், டாடா மற்றும் டி.வி.எஸ். நிறுவனமும் காலங்காலமாக தொழில் புரிய வேண்டும். அவர்களிடம் இல்லாத பணமா, முதலீடு செய்வதற்கு. அவர்கள் நினைத்திருந்தால் இது போன்ற ஏமாற்று திட்டங்களில் முதலீடு செய்து பல்லாயிரம் கோடிகளை பல மடங்காக மாற்றியிருக்கலாமே. மீண்டும் சிந்தியுங்கள்.

 

நாம் கற்ற கல்வி நமக்கு பல வருடங்களுக்கு பிறகே அதன் பயனை தருகிறது. நாம் நமக்கான கல்விக்கு செலவழித்த பணத்தை திரும்ப பெற, நம்மால் உடனே முடிவதில்லை. நமது மேற்படிப்பு கல்வி மூன்று முதல் ஐந்து ஆண்டு காலம் வரை உள்ளன. பின்பு நாம் அந்த துறையில் புதிய மனிதராக வேலை செய்கிறோம். ஐந்து வருட அனுபவத்திற்கு பிறகே நம்மால் அந்த துறையை பற்றிய ஒரு புரிதல் வருகிறது. அப்படியிருக்க முதலீடு என்ற விஷயத்திற்குள் நாம் நுழையும் போது, நாம் அதற்கான கல்வியை கற்கிறோமா, முதலீட்டை கற்று கொள்வதற்கு எவ்வளவு நேரத்தை செலவிடுகிறோம், அதற்கான செலவின விகிதம் ஆகியவை மிகவும் அவசியமான ஒன்று.

 

பொறியியல் படிப்பு முதல் மருத்துவ படிப்பு வரையிலான கல்விச்செலவை நாம் திரும்ப பெற, பல வருட காலங்களாகும்.

 

  • பங்குச்சந்தை(Share Market) ஒரு ___________ ?

 

விடை: தொழில்

 

விளக்கம்: பங்குச்சந்தை என்பது ஒரு சூதாட்டம் என்று சொல்லிக்கொண்டாலும், அது ஒரு தொழில் சார்ந்த விஷயமே. ஏன், பணக்காரர்கள் பணக்காரர்களாகவே இருக்கிறார்கள், ஏழைகள் ஏழைகளாகவே வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு திரு. ராபர்ட் கியோசகி(Robert Kiyosaki) அவர்களின், ‘ பணக்கார தந்தை, ஏழை தந்தை ‘ புத்தகமே சிறந்த உதாரணம்.

 

பணத்தை பற்றிய நமது கல்வி தான் பெரும்பாலும் நமது நிதி வாழ்க்கையையும் நிர்ணயிக்கிறது. ஐந்தாம் வகுப்பை தாண்டாத ஒருவர் மாபெரும் தொழிலதிபராக வருவதும், மெத்தபடித்தவர் வாழ்நாள் முழுவதும் வேலை செய்வதும் இதன் பின்னணியில் தான். பணம் மட்டுமே நம் வாழ்க்கையில்லை என நாம் சொல்லிக்கொண்டாலும், அதன் பின்பு தான் நாம் வாழ்நாள் முழுவதும் அலைந்து கொண்டிருக்கிறோம். மாறாக, பணத்தை நிர்வகிக்க தெரிந்தவர்கள் உண்மையில் தங்களுக்கு தேவையான விஷயங்களை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களை மகிழ்வாகவும் வைத்து கொள்கிறது.

 

ஒரு மரக்கன்றை தண்ணீர் ஊற்றி, அதனை பாதுகாத்து மரமாக்க பல வருடங்கள் ஆகும். இதனை போன்று தான் ஒரு தொழிலும், பங்குச்சந்தையும். உண்மையில் பங்குச்சந்தையிலும், எந்தவொரு தொழிலிலும் குறுகிய காலத்தில் நாம் வேகமாக வளர்ந்ததாக வரலாறு சொல்லவில்லை. அது நீண்டகால பயணம் மட்டுமே. ஒரு துறையை பற்றி நாம் எந்த அடிப்படை விஷயங்களையும் கற்காமல், அதனை பற்றிய கருத்துக்கு நாம் எப்படி செவிசாய்க்க முடியும்.

 

உங்கள் ஐந்து வயது குழந்தையின் இயல்பான குணம், போட்டிகளை எதிர்கொள்ளும் திறன் மற்றும் கல்வி அறிவை அதன் இருபது வயதில் எவ்வாறு இருக்கும் என உங்களால் இப்போதே உறுதியாக கணித்து சொல்ல முடியுமா ?

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஒவ்வொரு பாகத்திலும் ஐந்து கேள்விகள் கேட்கப்படும், அதற்கான பதில்கள் கருத்து கணிப்பின் வடிவில் அமையப்பெறும். கேள்விகளின் சரியான பதில்கள் நமது இணைய தளத்தில் வாக்கு பதிவு நாள் முடிந்தவுடன் வெளியிடப்படும். கருத்து கணிப்பின் முடிவில் வாசகர்கள் தங்கள் நிதி சார்ந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

இந்த வார கேள்விகள்:

 

  1. நீங்கள் ஒரு வங்கியில் ஒரு லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள். உங்களுக்கான வட்டி விகிதம் 8 சதவீதம். உங்களது முதலீடு எத்தனை வருடங்களில் இரட்டிப்பாகும் ?
  2. நம் நாடு சுதந்திரம் பெற்ற வருடத்தில் ஒரு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு எவ்வளவு ?
  3. லிக்விட் பண்ட்(Liquid Fund)  ___________ ?
  4. உங்களுக்கான நிதி இலக்குகள்(Financial Goals) என்ன என்பது உங்களுக்கு தெரியுமா ?
  5. DICGC முறைப்படி உங்களது வங்கி சேமிப்பில் எவ்வளவு தொகைக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது ?

 

குறிப்பு:

 

நீங்கள் வாக்கு பதிவு செய்வதற்கான இணைப்பை காண முடியவில்லை என்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிடவும்.

 

Personal Finance – Survey 3

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் திட்டம் மட்டுமே என்ற மாயை

வருமான வரியை சேமிக்க இன்சூரன்ஸ் திட்டம் மட்டுமே என்ற மாயை

Insurance Scheme alone does not help to save the tax

மார்ச் மாதம் வந்தவுடன் வருமான வரி செலுத்துவோருக்கு ஏதோ செலவுகள் இருப்பது போலவும், இன்சூரன்ஸ் ஏஜெண்ட்களுக்கு புதிய பாலிசிகள் அதிகமாக கிடைக்கும் காலமாகவும் பார்க்கப்படுகிறது. உண்மை அதுவல்ல, நாம் இங்கு யாரையும் குறைகூற விரும்பவில்லை. வருமான வரி செலுத்துபவர்கள் தங்களின் வரி சலுகையை பெற அவசரகதியில் இன்சூரன்ஸ் நிறுவனத்தை நோக்கி ஓடி செல்வதே இதற்கு காரணம்.

வருமான வரி செலுத்துபவருக்கு ஒரு நிதியாண்டில் ஏப்ரல் முதல் மார்ச் மாதம் வரை நேரம் இருக்கும் போது, நாம் ஏன் காப்பீடு திட்டங்களை அவசரமாக வாங்கி செல்ல வேண்டும். நமது மாத ஊதியம் எப்போது நமக்கு வரவு வைக்கப்படும் என்பது நமக்கு தெரியும். நமது ஊதிய உயர்வு ஒரு ஆண்டின் எந்த மாதத்தில் தரப்படலாம் என்பதும் நமக்கு அறிந்ததாக தான் இருக்கும். அப்படியிருக்கும் போது, நாம் ஒரு வருடத்தில் பெறப்போகும் வருமானத்தின் மதிப்பு தோராயமாக நமக்கு தெரிய வரும். நாம் இது போன்ற விஷயங்களை கவனத்தில் கொண்டாலே, வரும் காலத்தில் நமது வருமான வரி என்ன என்பதை நாமே கணக்கிட்டு கொள்ளலாம்.

வருமான வரி செலுத்தக்கூடிய நபராக நாம் மாறும் போதே, வரி சலுகையை பெறுவதற்கான வாய்ப்புகளை நாம் கண்டறிவது, நமக்கான சிறந்த சேமிப்பாக இருக்கும். வருமான வரியை நாம் வேலை பார்க்கும் நிறுவனம் பிடித்தம் செய்து விட்டது, அரசாங்கம் வரி கொள்ளையில் ஈடுபடுகிறது என்று சொல்லிக்கொண்டே நாம் நமக்கு தேவையில்லாத வரிச்சலுகை தரும் திட்டங்கள் என்று சில செலவுகளை செய்து வருகிறோம். வருமான வரி சலுகைக்கு நம்மில் பெரும்பாலோர் நம்பி கொண்டிருப்பது காப்பீடு திட்டம்(Insurance Schemes for Tax Saving) தான்.

காப்பீடு திட்டம் மட்டுமே வருமான வரி சலுகைக்கு உதவும் என்பது நம்மிடம் உள்ள தவறான அணுகுமுறை. நாம் ஏற்கனவே சொன்னது போல, காப்பீடு என்பது நமக்கு ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளிலிருந்து நமது குடும்பத்தை நிதிச்சிக்கலில் இருந்து பாதுகாக்க உதவும் ஒரு சாதனமே. ஆம், காப்பீட்டு திட்டங்களை கொண்டு நாம் வரியை சேமிக்கலாம். காப்பீடு திட்டத்திலும் சிறிதளவு சேமிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் காப்பீடு நிறுவனங்கள் வழங்கும் காப்பீடு திட்டங்கள் நமக்கான பாதுகாப்பு அம்சமாகவே நாம் காண வேண்டும். மாறாக அவற்றை ஒரு முதலீடாகவோ, வரி சேமிப்பாகவோ நாம் காண ஆரம்பித்தால் நமக்கு செலவு தான் ஏற்படும்.

சரி காப்பீடு திட்டம் மட்டுமே வரி சலுகைக்கு இல்லை என்று சொல்லிவிட்டீர்கள். வேறு என்ன வரி சேமிப்பு திட்டங்கள் உள்ளன ?

  • 80C, 80CCC, 80CCD (Income Tax Act) பிரிவின் கீழ்  – ஆயுள் காப்பீடு, வரி சேமிப்பு பத்திரங்கள், 5 வருட வங்கி வைப்பு நிதிகள், இ.எல்.எஸ்.எஸ்.(ELSS) மியூச்சுவல் பண்டு திட்டங்கள், செல்வ மகள் சேமிப்பு திட்டம், பி.எப்., பொது வருங்கால வைப்பு நிதி(PPF), மூத்த குடிமக்கள் திட்டம், தேசிய பென்ஷன் திட்டம்(NPS), ராஜிவ் காந்தி சேமிப்பு திட்டம், வீட்டு கடன் அசலை திரும்ப செலுத்துதல்
  • 80 D – மருத்துவ காப்பீடு மற்றும் செலவுகள்
  • 80DD & 80U – மாற்று திறனாளிகளுக்கான சலுகை
  • 80DDB – குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சை
  • 80E – கல்வி கடனுக்கான வட்டியை செலுத்தும் போது வரி சலுகை
  • 80EE – முதன்முறையாக சொந்த வீட்டை கொண்டவர்களுக்கு வீட்டுக்கடன் வட்டியில் வரி சலுகை
  • 80G – நன்கொடை மற்றும் நிவாரண நிதி அளிக்கும் போது
  • 80GG – வீட்டு வாடகையில் சலுகை
  • 80TTA – சேமிப்பு கணக்கு வட்டி வருமானத்திற்கு
  • Section 24 – வீட்டு கடன் வட்டியில் வரி சேமிப்பு

இது போக மற்ற வருமான வரி சட்ட பிரிவுகளிலும் வரி சலுகைகள் அனுமதிக்கப்படுகின்றன. வரி சேமிப்பு திட்டங்களை நாம் வரி சலுகைக்காக மட்டும் பெறாமல், நமக்கான முதலீட்டு வாய்ப்பாகவும் ஏற்படுத்தி கொள்வது, வருமானத்தை அதிகரிக்க உதவும். கடைசி நேர வரி சலுகை முதலீடு பயன் தராது. உங்களது வரி சேமிப்பு திட்டங்களை நிதியாண்டின் தொடக்கத்திலே துவங்க முனையுங்கள். வரி சேமிப்பு திட்டங்களை நீண்ட காலத்தில் பயன்படுத்தும் போது, அதன் மூலம் கிடைக்கும் வருமானமும் நன்றாக அமையும்.

காப்பீட்டு திட்டத்தை யார் தவிர்க்கலாம் ? (Who can avoid Insurance ?)

நமக்கான காப்பீடு தொகையை எவ்வாறு கணக்கிடுவது ?

இன்றும் பி.எப்., பி.பி.எப்.(Public Provident Fund) மற்றும் செல்வ மகள்(Sukanya Samriddhi) திட்டங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்றே சொல்லலாம். இது போன்ற வரி சேமிப்பு திட்டங்கள் பாதுகாப்பானவை மட்டுமல்ல, தொடர்ச்சியான வட்டி விகிதத்தை கொடுக்க கூடியவை. வாழ்க்கை மாற்றங்களுக்கு தகுந்தாற் போல, நோய்களுக்கும் பஞ்சமில்லை. 80D(Medical Insurance) பிரிவை நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவதில்லை. எதிர்பாராத மருத்துவ செலவுகளுக்காக காப்பீட்டு தொகையுடன், வரி சேமிப்பையும் ஏற்படுத்தலாம். பரஸ்பர நிதிகள் அளிக்கும் இ.எல்.எஸ்.எஸ்.(Equity linked savings scheme) திட்டங்கள் வரி சலுகையாக மட்டும் செயல்படாமல், பணவீக்கத்தை தாண்டிய நல்ல வருமானத்தை தரக்கூடியதாக உள்ளது. இனி, வரி சலுகைக்கு காப்பீடு திட்டங்களை மட்டுமே நம்பியிருக்காமல் உங்களுக்கு கிடைக்கும் அனைத்து வரி சலுகையையும் பயன்படுத்துங்கள், வருமான வரியை சாமர்த்தியமாக சேமியுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

பங்குச்சந்தையில் நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து லாபம் பார்ப்பது எப்படி ?

பங்குச்சந்தையில் நல்ல நிறுவன பங்குகளை கண்டறிந்து லாபம் பார்ப்பது எப்படி ?

How to choose good stocks to earn better returns in the Indian Stock Market ?

 

செவ்வாய் கிழமை அன்று (12-03-2019) இந்திய பங்குச்சந்தை நல்ல ஒரு ஏற்றத்தை கண்டிருந்தது. வர்த்தகத்தின் முடிவில் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி(Nifty50) 11,301 புள்ளிகளையும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்(BSE Sensex) குறியீடு 37,535 என்ற புள்ளிகளிலும் நிலை கொண்டது. அதிகபட்சமாக ஊடகம், வீட்டு மனை மற்றும் மூலதன பொருட்கள்(Capital Goods) ஆகிய துறைகள் இரண்டு சதவீதத்திற்கு மேல் ஏற்றம் கண்டது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தற்போது தேர்தல் செய்திகள் தவிர்த்து, உலகளாவிய செய்திகள் இந்திய பங்குச்சந்தையில் அவ்வளவாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பொதுவாக ஒவ்வொரு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், சந்தை மந்த நிலையில் இருப்பதும், தேர்தல் முடிவுக்கு பின்பு ஏற்றமடைவதும் இயல்பான நிலையாக உள்ளது. நடப்பாண்டில் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை பங்குகளை வாங்கி குவிப்பதற்கான காலமாக பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளுக்கு பின் நிலையான ஒரு அரசு அமையும் பட்சத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரிய கூடும். இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் தெரிய வரலாம்.

 

கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்(Foreign Institutional Investors) இந்திய பங்குச்சந்தையில் செய்த முதலீடு ரூ. 13,000 கோடிக்கும் அதிகமாகும். நமது நாட்டின் பங்குச்சந்தை வருங்காலத்தில் ஏற்றமடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், நல்ல நிறுவன பங்குகள் மட்டுமே நீண்ட காலத்தில் ஒரு முதலீட்டாளருக்கு லாபத்தை சம்பாதித்து தர முடியும். சந்தை ஏற்றத்தில் பெரும்பாலான பங்குகள் விலை அதிகரித்து வந்தாலும், நல்ல மற்றும் மதிப்பு மிக்க பங்குகள் அடுத்த ஐந்து முதல் பத்து வருட காலத்திற்கு தொடர் வருமானத்தை தரக்கூடியதாக அமையும்.

 

நல்ல நிறுவன பங்குகளை(Growth Stocks) தேர்வு செய்ய அடிப்படை பகுப்பாய்வு காரணிகள் எப்போதும் முன்னிலையில் நிறுத்தப்படும். உலகின் மாபெரும் முதலீட்டாளர் திரு. வாரன் பப்பெட்(Warren Buffet) சொல்வது போன்று, நல்ல நிறுவன பங்குகளை தள்ளுபடி விலையில் வாங்குவதும், அதனை தொடர்ந்து சந்தையில் பொறுமை காப்பதும் அவசியமானது. அடிப்படை பகுப்பாய்வின்(Fundamental Analysis) படி நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்கு இன்று பல தளங்கள் தகவல்களை அளித்து வந்தாலும், வெகு சில தளங்களே பட்டியிலடப்பட்ட நிறுவனங்களின் தரவுகளை முதலீட்டாளருக்கு எளிமையாக அளித்து வருகிறது.

 

அவ்வாறு நிதி தகவல்களை எளிமையாக அளிக்கும் ஒரு தளம் தான் – www.screener.in

 

இந்த தளத்தில் வழங்கப்படும் அடிப்படை நிதி தகவல்களை கொண்டு, நமக்கான நல்ல நிறுவன பங்குகளை நாமே தேர்வு செய்யலாம். ஒரு சிறந்த முதலீட்டாளர் என்பவர் பங்கு தரகர்கள் மற்றும் பங்கு சார்ந்த மோசடி செய்திகளால் ஈர்க்கப்படமாட்டார் என்பது கவனிக்கத்தக்கது. நிறுவனங்களின் தகவல்களை அலசி ஆராய்ந்து நாமே சிறந்த நிறுவன பங்குகளை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில், அதனால் பெறக்கூடிய லாபமும் நன்றாக இருக்கும். நிறுவனங்களை ஆராய நேரம் இல்லாதவர்கள், தகுந்த நிதி ஆலோசகரின் முன்னிலையில் அவ்ரகளுக்கான பங்கு முதலீட்டு முடிவுகளை எடுக்கலாம்.

 

முதலில், www.screener.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். இந்த தளத்தில் இலவசமாக உங்களை பதிவு செய்தும் கொள்ளும் போது, கூடுதலான சில நிதி தகவல்களும் கிடைக்கும்.

Stock Screener India

தளத்தின் வலது பக்க மேற்புறத்தில், கூட்டல் அடையாள குறி(Plus Sign) ஒன்று தென்படும், அதனை கிளிக் செய்யவும். அங்கே நமக்கான தேடல் வினவலை உருவாக்க(Create a Search Query – New Screen) ஒரு பெட்டி கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் எவ்வாறு உங்களது விதிமுறைகளை பதிவிட வேண்டும் என அருகிலேயே வழிமுறை கொடுக்கப்பட்டுள்ளது.

இலவச பங்குச்சந்தை வகுப்புகள்

 

உதாரணத்திற்கு, கீழே உள்ள விதிமுறைகளை நீங்கள் பதிவிட்டு அதற்கான முடிவுகளை காணலாம்.

Stock Screening Process 1

வினவலின் முடிவுகளில்(Query Results) உங்களுக்கென சில நிறுவன பங்குகளின் பெயர்கள் காண்பிக்கப்படும். கொடுக்கப்பட்டுள்ள நிறுவன பெயர்களை க்ளிக் செய்தால் நிறுவனத்தின் அனைத்து தரவுகளையும் நீங்கள் காணலாம். உங்களுக்கு தேவைப்படும் தரவுகளை நீங்கள் சேர்க்க, ‘Add Quick Ratio’ என்ற பெட்டியில் பதிவிடலாம்.

 

Stock Screening Process 2

 

முடிவுகளில் கிடைக்கப்பெறும் ஒவ்வொரு நிறுவனத்தின் தொழில்கள் உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா என முதலில் சிந்தியுங்கள். உங்களால் புரிந்து கொள்ளக்கூடிய தொழிலின் பங்குகளை தேர்ந்தெடுத்து, அந்த பங்கின் விலை தற்போது வாங்கக்கூடிய விலையில் உள்ளதா என சரிபார்த்து பின்பு வாங்க முயலுங்கள். நல்ல நிறுவன பங்குகளை ஐந்து வருடங்களுக்கு மேலாக நாம் வைத்திருக்கும் பட்சத்தில், நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம்.

 

பங்குகளில் முதலீடு செய்வதும் ஒரு கலை(Value Investing) தான், ஆனால் நஷ்டத்தை தவிர்ப்பதே நம்முடைய முதல் இலக்காக இருத்தல் வேண்டும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பங்குச்சந்தை ஏற்ற, இறக்கம் – இந்த வருடம் என்ன நடக்கலாம் ?

பங்குச்சந்தை ஏற்ற, இறக்கம் – இந்த வருடம் என்ன நடக்கலாம் ?

Indian Stock Market Ups and Downs – What can happen this year 2019 ?

 

கடந்த 2014ம் ஆண்டில் ஏற்றமடைய துவங்கிய சந்தை 2017ம் வருடம் சந்தையின் உச்சத்தில் இருந்தது. கடந்த ஒரு வருடமாக இந்திய பங்குச்சந்தை ஏற்ற-இறக்கத்தில் மட்டுமே வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. தற்போது நாடாளுமன்ற தேர்தலை நோக்கி சந்தையின் போக்கு சென்று கொண்டிருந்தாலும், கடந்த வரலாற்றில் அரசியலை சார்ந்து சந்தை பெரும்பாலும் இல்லை என்பது தெளிவாகிறது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பட்ஜெட் தாக்கல் மற்றும் தேர்தல் காலங்கள் சிறிய ஏற்ற இறக்கத்தை சந்தையில் ஏற்படுத்தியிருந்தாலும், அதன் பாதிப்பு இந்திய பங்குச்சந்தையில் வெகுவாக இல்லை எனலாம். நடப்பு நிதி ஆண்டில் சந்தையின் ஏற்ற இறக்கம் பெரும்பாலும் நிறுவனத்தின் வருவாய் அறிக்கை(Company Earnings) மற்றும் சந்தை அதிக மதிப்பில்(Market Valuation) வர்த்தகமாகி கொண்டிருந்தது தான் காரணமாக உள்ளது.

 

இனி அடுத்து வரும் காலங்களில் சந்தை எப்படி இருக்கலாம் என கணிப்பது அவ்வளவு சுலபமல்ல. இருப்பினும் வரலாற்று தகவல்கள் அதற்கான வாய்ப்பை நமக்கு எப்போதும் தந்து கொண்டு தான் இருந்துள்ளது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை, அமெரிக்க-சீன வர்த்தக போர், இங்கிலாந்து நாட்டின் பிரெக்ஸிட்(Brexit) பிரச்னை மற்றும் உள்நாட்டு நிகழ்வுகள் சந்தையில் பங்குகள் வாங்குவதற்கான வாய்ப்பாக அமைந்து கொண்டிருக்கிறது.

 

சந்தையில் முதலீடு செய்ய பல்வேறு வகையான அடிப்படை பகுப்பாய்வுகள் இருப்பினும், ஒட்டுமொத்த சந்தையின் விலையை அறிந்து கொள்ள கீழ்கண்ட நான்கு காரணிகள்(Four Factors) நமக்கு உதவும். இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையின் அடுத்தகட்ட நகர்வுகளை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

 

  • Price to Earnings(P/E)

  • Price to Book Value (P/B)

  • G-sec X PE (Price to Earnings)

  • Market Cap to GDP

 

Price to Earnings மற்றும் Price to Book Value பற்றி நமது வர்த்தக மதுரை தளத்தில் நாம் ஏற்கனவே சொல்லியுள்ளோம். இவை இரண்டும் அடிப்படை பகுப்பாய்வு காரணிகளை(Fundamental Analysis factors) சார்ந்தவை.

 

பங்குச்சந்தையை பற்றிய அடிப்படை கல்வி உங்களுக்கு இலவசமாக வேண்டுமா ?

 

சந்தையில் உள்ள ஒரு நிறுவனத்தின் பங்கின் விலையையோ அல்லது ஒட்டுமொத்த சந்தையின் விலையை அதனதன் வருவாயுடன் ஒப்பிட்டு பார்த்தல் Price to Earnings எனப்படுகிறது. ஒரு நிறுவனத்தின் அல்லது சந்தையின் விலையுடன் புத்தக மதிப்பை கொண்டு ஒப்பிட்டு ஆராய்தல் Price to Book Value ஆகும். கீழ்காணும் தேசிய பங்குச்சந்தையின் இணைய தளத்தில் இதன் விவரங்களை தெரிந்து கொள்ளலாம். பொதுவாக சந்தையில் பி.இ. மற்றும் பி.பி. விகிதம் அதிகமாக இருக்கும் சமயத்தில், ஈவு தொகை(Dividend Yield) குறைவாக இருக்கும்.

 

Nifty PE, PB, Dividend Yield Valuation – NSE India

 

மூன்றாவதாக அரசாங்க பத்திரங்கள்(Govt. Securities) வழங்கும் வட்டி விகிதங்களை, PE விகிதத்துடன் பெருக்கி விட்டு அதன் மதிப்பை சார்ந்து பங்குச்சந்தை நகர்வுகளை முடிவெடுப்பது. அரசாங்க பத்திரங்கள் பொதுவாக பத்து வருட காலத்தில்(10 year Bond Yield %)  முதிர்வடையும் திட்டத்திற்கு வட்டி விகிதங்களை அறிவிக்கும். இதனை சந்தையின் பி.இ. விகிதத்தில் ஒப்பிட்டு பார்க்கும் போது, நமக்கு தற்போதைய சந்தையின் நிலை தெரிய வரும்.

 

Valuation = G-Sec X PE

 

நான்காவதாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) எண்களோடு சந்தையின் மதிப்பை(Market Capitalization) ஒப்பிட்டு கொள்வது ஒரு மதிப்பீடு அம்சமாகும். கடந்த பத்து வருட காலத்தில் பங்குச்சந்தையின் மதிப்பை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் சில காலங்களில் சந்தையின் மதிப்பு மிக அதிகமாகவும், அதே வேளையில் பல சமயங்களில் சந்தை தள்ளுபடி விலையில் அதன் மதிப்பை கொண்டிருந்தது.

 

சென்ற வருடம் ஜனவரி மாதத்தில் சந்தையின் மதிப்பு ரூ. 156 லட்சம் கோடியாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 162 லட்சம் கோடியாகவும் இருந்துள்ளது. ஆக, உள்நாட்டு உற்பத்தியில் சந்தை மதிப்பு 4 சதவீத தள்ளுபடியில் மட்டுமே கிடைத்துள்ளது. இதுவே கடந்த டிசம்பர் 2007ல் சந்தை மதிப்பு அதிகமாக இருந்ததன் காரணமாக பின்னர் பெரிய வீழ்ச்சியை கண்டது நினைவிருக்கலாம். பின்னாளில் மார்ச் 2009ம் வருட காலத்தில் சந்தை 39 சதவீத தள்ளுபடியில் கிடைத்ததும், அந்த நேரத்தில் முதலீடு செய்தவர்கள் இன்று லட்சங்களையும், கோடிகளையும் குவித்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது.

 

தற்போது 2019ம் வருட காலத்தின் பிப்ரவரி மாதத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ. 186 லட்சம் கோடியாகவும், சந்தை மதிப்பு 140 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(Gross Domestic Product) சந்தை மதிப்பு 25 சதவீத தள்ளுபடியில் கிடைத்திருப்பதை காட்டுகிறது. சந்தையின் மதிப்பு எப்போதெல்லாம் தள்ளுபடி விலையில் கிடைக்கிறதோ அப்போது தான் முதலீட்டாளராக நாம் முதலீடு செய்ய வேண்டிய காலமிது.

 

சந்தை இன்னும் இறக்கத்தை காணலாம் என சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், தற்போது சந்தை தள்ளுபடியில் காணப்படுவதால் பங்குகளை வாங்கி வைப்பதற்கான காலமாகவே இன்று பார்க்கப்படுகிறது. சந்தை மேலும் இறக்கத்தில் சென்றாலும், அது முதலீடு செய்வதற்கான வாய்ப்பாகவே நாம் பார்க்க வேண்டும். இது கடந்த கால புள்ளிவிவர வரலாறு, எதிர்காலத்தை நம்மால் கணிக்க முடியாது. நீண்டகாலத்தில் பங்குச்சந்தை நல்ல வருமானத்தை தரும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com