பங்கு சந்தை பகுப்பாய்வு 6.0 – Dividend Yield
- ஒரு நிறுவனம் தான் சம்பாதிக்கின்ற லாபத்தின் ஒரு பகுதியை, பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிப்பதை ஈவு தொகை (Dividend) என்கிறோம்.
- பங்குதாரர்களுக்கு ஈவு தொகையை கொடுக்கும் தீர்மானம், அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிய இயக்குனர்களுக்கு(Board of Directors – BOD) உண்டு.
- ஈவு தொகை பற்றி நாம் பேசும் பொழுது, Ex-Date & Record Date என்று இரு தேதிகள் உள்ளன.
- ஒரு பங்கினை அதன் Ex-date தேதி அன்றோ (அ) முன்னரோ வாங்கியிருக்கும் பட்சத்தில், உங்களுக்கு ஈவு தொகை பெறுவதற்கு உரிமை உண்டு. Record Date அன்று யார் பெயரெல்லாம் பங்குதாரர் பட்டியலில் சேர்க்கபட்டுள்ளதோ, அவர்கள் ஈவு தொகை பெற உரிமை உண்டு.
- பொதுவாக ஈவு தொகையை அறிவிக்கும் ஒரு நிறுவனம், அந்த தொகையினை எவ்வளவு ரூபாய் என்று சொல்லாமல், ஈவு தொகை சதவிகிதமாக அறிவிக்கும்.
- ஈவு தொகை பற்றி பேசும் போது, Cum Dividend & Ex-Dividend என்று சொல்வதுண்டு. ஈவு தொகை கொடுக்கும் முன்னரும், கொடுத்த பின்னரும் உள்ள நிறுவனத்தின் நிதி அறிக்கையை விவரிப்பதற்கு இவை உதவும்.
- நிறுவனத்தின் லாபம் என்று சொல்லப்படும், EPS ஐ ஒரு நிறுவனம் இரு வழிகளில் பயன்படுத்தலாம். ஒன்று அந்த நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு(Re-investment) பயன்படுத்துவது (அ) பங்குதாரர்களுக்கு ஈவு தொகையாக(Dividend) கொடுப்பது.
- ஈவு தொகை என்பது ஒரு நிறுவனம் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. அந்த நிறுவனம் நன்கு வளர்ச்சியடைந்து மீதி இருக்கும் லாபத்தை, பங்குதாரர்களுக்கு நியாயமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் செய்யலாம்.
- நாம் பெரும் ஈவு தொகைக்கு எந்த விதமான வரியும் (No Brokerage/ Tax) இல்லை. ஆகையால், அந்த தொகை நேரிடையாக நமது வங்கி கணக்கில், அந்நிறுவனத்தால் வரவு வைக்கப்படும்.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !
நன்றி, வர்த்தக மதுரை