மீண்டும் ஒரு வங்கிகள் இணைப்பு: பரோடா வங்கி, விஜயா மற்றும் தேனா வங்கி
Bank of Baroda, Vijaya Bank and Dena Bank – Yet again merger of PSU Banks
வங்கிகளின் வாராக்கடன் அளவு அதிகரிப்பு ஒரு புறம் எனில், பொதுத்துறை வங்கிகளின் இணைப்பும் மற்றொரு நிலையில் ஏற்பட்டு கொண்டிருக்கிறது. முன்னர் பாரத ஸ்டேட் வங்கியுடன் சில பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டன. தற்போது பரோடா வங்கி (Bank of Baroda), விஜயா வங்கி (Vijaya Bank) மற்றும் தேனா வங்கி (Dena Bank) மூன்றும் இணைக்கப்பட உள்ளன.
மூன்று பொதுத்துறை வங்கிகளின் இணைப்பு பரோடா வங்கிக்கு பாதகமாக அமையும் என பொருளாதார வல்லுநர்கள் கூறியிருந்தாலும், தேனா வங்கிக்கு (Dena Bank) இது ஜாக்பாட் (Jackpot) தான். தேனா வங்கி ஏற்கனவே மத்திய ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் உள்ளன.
PCA (Prompt Corrective Action) பட்டியலில் உள்ள வங்கிகளில் தேனா வங்கியும் ஒன்று. இதன் காரணமாக தேனா வங்கி கடன் அளிக்க முடியாத வங்கியாக அமைந்தது. தற்போதைய வங்கி இணைப்பு செய்தி இந்த வங்கிக்கு சாதமாக உள்ளது. ஏற்கனவே பொதுத்துறை வங்கித்துறையின் வாராக்கடன் 10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
தேனா வங்கியின் மொத்த கடன் ரூ. 1,09,690 கோடியாகவும், மொத்த வாராக்கடன் 16,360 கோடி ரூபாயாகவும் (Non Performing Asset -NPA) உள்ளது. மொத்த வாராக்கடன் சதவீதம் 22 ஆகவும், நிகர வாராக்கடன் விகிதம் 11 சதவீதமாகவும் இருக்கிறது. கடந்த ஜூன் காலாண்டில் தேனா வங்கி ரூ. 722 கோடியை நஷ்டமாக கொண்டுள்ளது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தேனா வங்கியின் வட்டி வருமானம் ஜூன் மாத காலாண்டில் ரூ. 2248 கோடியாகும். விஜயா வங்கியின் நிகர வாராக்கடன் விகித 4.1 % அளவில் உள்ளது. அதே நேரத்தில் பரோடா வங்கியின் நிகர வாராக்கடன் 5.5 சதவீதமாகவும், அதன் கடந்த காலாண்டு நிகர லாபம் ரூ. 528 கோடியாக உள்ளது.
மூன்று வங்கிகளின் இணைப்பு சில விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தாலும், அரசின் இந்த முடிவால் வங்கிகளின் நிர்வாக திறன் மேம்படும் என சில பொருளாதார வல்லுனர்களும் எடுத்துரைக்கின்றனர். இணைப்புக்கு உள்ளாகும் இந்த மூன்று வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையெனவும், அவர்களின் பணிச்சேவை இனி மேம்படும் எனவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை