வெற்றிகரமான தொழிலுக்கான 6 அடிப்படை கொள்கைகள்
Six basic principles for a Successful Business
ஒரு தொழில் புரிவதற்கு, அந்த தொழில் சார்ந்த அறிவு மற்றும் முதலீடு அவசியமானது என்றாலும் எந்த தொழிலுக்குமான சில அடிப்படை கொள்கைகள் இருப்பதை காணலாம். அது போன்ற அடிப்படை விஷயங்கள் தான் ஒருவரின் தொழில் வெற்றியை உறுதி செய்கின்றன.
வெறுமனே பணத்தை மட்டும் முதலீடு செய்து விட்டு, நாம் எந்த தொழிலிலும் வெற்றி பெற்று விட முடியாது. தனித்துவமான வெற்றிக்கு குணாதிசயம் என்னும் கொள்கைகள் தான் நீண்ட கால தொழில் திறமைக்கு வித்திடுகின்றன.
இதனை பற்றி வெற்றிகரமான தொழிலதிபர் திரு. ஹார்வ் எக்கர் (Harv Eker) ஆறு அடிப்படை கொள்கைகளை வகுத்துள்ளார். இந்த ஆறு கொள்கைகளும் எந்த ஒரு தொழிலுக்கும் துணைபுரிவதாக அமைந்துள்ளன. ஹார்வ் எக்கரின், ‘கோடீஸ்வரரின் ரகசியங்கள் ‘ (Secrets of the Millionaire Mind) மிகவும் பிரபலமான புத்தகமாகும். 2005 ல் வெளிவந்த இந்த புத்தகம் சுய உதவி மற்றும் தன்னம்பிக்கை பிரிவில் பெரும் இடத்தை கொண்டது.
- Do your own business: உங்கள் தொழிலை நீங்களே தொடங்குங்கள்; கூட்டு வணிகத்தை காட்டிலும் தனிநபர் தொழில் முக்கியமானது. நீங்கள் புரியும் தொழில் உங்கள் சொந்த தொழிலாக இருக்கட்டும். ஏனெனில் நீங்கள் உங்கள் தொழிலுக்கு ஏற்றார் போல், மாற்றங்களை உருவாகும் சுதந்திரம் இங்கு உண்டு.
- Focus on your Only business: பல்வேறு தொழில் புரிவதை விட, ஒரே ஒரு தொழிலை தேர்ந்தெடுங்கள்; அவற்றில் உங்கள் முழு முயற்சியை கொடுங்கள். உங்கள் ஒருமித்த கவனம் தொழிலில் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும். இன்று நாம் பார்க்கும் வெற்றிகரமான தொழிலதிபர்கள் கார்லோஸ், பில்கேட்ஸ், வாரன் போன்றோர் ஒரே ஒரு தொழிலை தொடங்கி வெற்றி பெற்றவர்கள். வெற்றிக்கு பின் தான் அவர்கள் பல்வேறு தொழிலில் முதலீடு செய்து வருகின்றனர்.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
- Choose the business on what you love: உங்களுக்கு பிடித்த விஷயத்தை மற்றும் உங்கள் தினசரி பொழுதுபோக்கை ஒரு தொழிலாக மாற்ற முயற்சி செய்யுங்கள். பின்பு அதனையே முழுநேர தொழிலாக மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்த விஷயம் மட்டுமே, உங்களை சலிப்படையாமல் உற்சாகமாக இருக்க துணைபுரியும். நீங்கள் ஏதேனும் காரணத்தால் உங்கள் தொழிலில் தோல்வியடைய நேர்ந்தாலும், உங்கள் உற்சாகத்திற்கு பஞ்சமிருக்காது. அதுவே பின்னாளில் உங்களுக்கு மகத்தான வெற்றியை கொடுக்கும்.
- Take Responsibility: உங்கள் வெற்றி-தோல்விக்கு நீங்கள் மட்டுமே காரணம். தொழிலில் ஏற்படும் லாப, நஷ்டங்களுக்கு நீங்களே பொறுப்பு எடுக்கும் போது உங்களுடைய நம்பிக்கை அதிகரிக்கும். வெற்றி பெற்றவர்கள் தங்கள் தவறுகளுக்கு யாரையும் குறை கூறுவதில்லை. உங்கள் மனம் சொல்வதை கேளுங்கள், அதனை செயல்படுத்துங்கள். உங்கள் எண்ணமே உங்களின் உண்மையான தொழில் வளர்ச்சி (Character is your business). பிரச்சனைகளை எதிர்கொள்ள பழுகுங்கள். இதன் மூலம் உங்களுக்கான வாய்ப்புகள் கிட்டும்.
- Best of the one: வெற்றிகரமான தொழில் புரிவதற்கு நீங்கள் மேம்பட்டிருக்க வேண்டும். நீங்கள் உங்கள் தொழில் மூலம் அதிக வருமானம் பெறுவதற்கு, அதற்கான உரங்களை நீங்கள் போட்டிருக்க வேண்டும். அது பணமாக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை, உங்கள் அர்பணிப்பாக இருக்கலாம். விளையாட்டு அரங்கில் முதல் இடம் பெறுபவர்களை பார்த்தால் உங்களுக்கு புரியும், அது அவர்களது அயராத ஊக்கம்.
- Learn-able Skill: உங்கள் தொழிலுக்கான அடிப்படை அறிவை எப்போதும் கற்று கொள்ள தயாராகுங்கள். துறைக்கு உரித்தான தகவல்கள், சட்ட செயல்கள், மார்க்கெட்டிங் மற்றும் தொழில்நுட்ப அறிவை நீங்கள் பெற்றிருப்பது உங்களை மேம்படுத்தும். உங்கள் கற்றல் திறனை தினசரி பழக்கமாக்கி கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை