பிரான்சைஸ் வியாபாரத்தை ஊக்குவிக்கும் முதல் முறை தொழில்முனைவோர்

பிரான்சைஸ் வியாபாரத்தை ஊக்குவிக்கும் முதல் முறை தொழில்முனைவோர்

First time Entrepreneurs are promoting the Franchise Business Model

 

இந்தியாவில் புதுமையான தொழில்களும், தொழில்முனைவோர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உரிமையாளர்கள் வணிகம் என்று சொல்லப்படும் பிரான்சைஸ் (Franchise Business) வியாபாரம் இன்றளவில் மேம்பட்டு கொண்டிருக்கும் தொழிலாகவும் உள்ளது.

 

ஏற்கனவே சந்தையில் வியாபாரமாகும் ஒரு தொழிலின் உரிமையை பயன்படுத்துவதற்கு பிரான்சைஸ் முறை துணைபுரிகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த துறை 30-35 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இந்திய சந்தை வளர்ந்து வரும் சூழ்நிலையில், பிரான்சைஸ் வியாபாரம் உலகளவில் 25 சதவீத இடத்தை தக்க வைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இதன் விகிதம் 13 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

 

தற்போது நாட்டில் உள்ள பிரான்சைஸ் வியாபார அளவு சுமார் 48 பில்லியன் அமெரிக்க டாலராகும். உலகளவில் அமெரிக்காவை அடுத்து இந்தியா தான் பிரான்சைஸ் முறை தொழிலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

( Read this post after the advertisement… )

  

இந்தியாவில் 4600 பிரான்சைஸ் நிறுவன உரிமையாளர்களும், ஒன்றரை லட்சம் பிரான்சைஸீகளும் உள்ளனர். பிரான்சைஸ் வியாபாரம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 150 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையதாக இருக்கும் என கணிக்கப்படுகிறது.

 

பிரான்சைஸ் வியாபாரத்தில் ஈடுபடுவோரில் 35 சதவீதம் முதல் முறை தொழில்முனைவோர் ஆவார்கள். இந்த 35 சதவீதம் பேர், இதுவரை எந்த தொழிலும் செய்யாமல், முதல் முறை தொழிலாக பிரான்சைஸ் வியாபாரத்தை தேர்ந்தெடுத்துள்ளனர்.

 

மேலும் இந்த வியாபாரத்தை பெரிதும் ஊக்குவிப்பது முதல் முறை தொழில்முனைவோர்கள் தான் என்று சொல்லப்படுகிறது. பிரான்சைஸீ(Franchisee) என்பவர் தான் பெறும் தொழிலின் உரிமையாளருக்கு (Franchisor) ஒரு தொகையை கட்டணமாக செலுத்தி விட்டு, அந்த தொழிலின் பகுதி உரிமையை பெறுகிறார். வியாபார வளர்ச்சியை பொறுத்து, அதன் உரிமையாளருக்கு ராயல்டி தொகையை பிரான்சைஸீ கொடுக்கிறார்.

 

அதற்கு பதிலாக உரிமையாளரின் வணிக சின்னம், தொழில் கொள்கை மற்றும் பயன்பாடை பிரான்சைஸீ பெறுகிறார். ஒரு வணிக உரிமையாளர் தனது சேவை மற்றும் தயாரிப்புகளை மற்றொருவருக்கு பகுதி அளவில் உரிமையை கொடுப்பதே பிரான்சைஸ் வியாபாரத்தின் நோக்கம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.