Why your dreams never come true ?

Why your dreams never come true ?

உங்கள் கனவுகள் ஏன் பெரும்பாலும் பலிப்பதில்லை(நிறைவேறுவதில்லை) ?

நம்மில் பெரும்பாலோருக்கு, ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடனோ, பதவி உயர்வு/ஊதிய உயர்வு  (அ) போனஸ் ஏதும் கிடைத்ததும் நமக்கு பலவித கற்பனை கனவுகள் வரும்; வளரும்.
எனது கனவு கார்(Car) வாங்குவது, ஒரு அபார்ட்மெண்ட்(Apartment) வாங்குவது, வெளிநாடு சுற்றுலா(Foreign Trip) செல்வது (அ) குறைந்தபட்சமாக நண்பர்களுக்கு விருந்து வைப்பது(Treat) என்று கனவுகள் நீண்டு கொண்டே போகும். ஆனால் நமக்கு கிடைப்பதோ ஒரே ஒரு சம்பளம், வருடத்திற்கு ஒரு ஊதிய உயர்வு, சில சமயம் போனஸ், அத்திபூத்தாற்போல் பதவி உயர்வு. உண்மையில் நாம் நமக்கு கிடைத்த பணத்தையும், கண்ட கனவையும் கொண்டு என்ன செய்வதென்றே புலப்படுவதில்லை.
ஒரு நிறுவனத்தில் நமக்கு கொடுக்கப்படும் பணம் அந்நிறுவனத்தின் வளர்ச்சி (அ) நமது திறமையான செயல்பாடு காரணமாக இருந்தாலும், நிதர்சன உண்மை அது விலைவாசியின் (பணவீக்கம் – Inflation) அடிப்படையிலே நிர்ணயிக்கப்படுகிறது.
தற்சமயத்தில் நம் அடிப்படை வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ளவே அந்த பணம் போதுமானதாக இருக்கும். நமது கனவுகளுக்காக அல்ல 🙂
அதனால் தான் நாம் பெரும்பாலும் நமக்கு தேவையற்ற ஒரு பொருளை வாங்கும் போது பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படுகிறோம்.
நாம் கனவு எதுவும் காணக்கூடாதா என்ன ?  தாராளமாக கனவு காணலாம்; அத்தனைக்கும் ஆசைப்படலாம் ! அதற்கு முன் நமக்கு எது தடையாக உள்ளது என்று பார்த்தால் அது விலைவாசி (பணவீக்கம்) தான்.
பணவீக்கத்தை நாம் புரிந்துகொண்டு செயல்படுவது தான் நமது கனவு நிறைவேறுவதற்கான பாதை !
பணவீக்கம்:
நாம் இன்று வாங்கும் பொருளும், நாளை வாங்க போகும் பொருளும் ஒரே விலையில் கிடைப்பதில்லை. காரணம், தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள வேறுபாடு தான். அது தான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விலையை நிர்ணயிக்கின்றன.
நாம் பல மாதமாக சிறுகச்சிறுக சேர்த்து வைத்த பணத்தை கொண்டு ஒரு இரு சக்கர வாகனம் வாங்கவேண்டுமென்று சென்றால், அதன் விலை ஏறிவிட்டதே, இன்னும் கொஞ்சம் பணம் தேவைப்படுமோ என்று யோசிப்போம்; வீடு கட்ட பக்காவாக பிளான் எஸ்டிமேட் போட்டு வைத்து வீடு கட்டி கொண்டிருக்கும் போது, தீடீரென்று மணல், சிமெண்ட்  விலை உயர்ந்து விடும். இப்படித்தான் நம் பெரும்பாலான கனவுகள் நாம் நினைத்த படியே நடப்பதற்கு சாத்தியமில்லை, இந்த விலைவாசியால்(பணவீக்கம்) !

inflation

வருமானத்தின் /பணத்தின் எதிரியை கையாள்வது எப்படி ?
நமது வருமானதிற்கோ (அ) பணத்திற்கோ வரிகள் எதுவும் எதிரி அல்ல; மாறாக இந்த பணவீக்கம் தான் ! ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ஆண்டும் இந்த விலைவாசி பொதுவாக புள்ளியியல் நிபுணர்களால் விவாதிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. அவற்றிள்ளுல உண்மை என்னவோ நமக்கு தெரியவில்லை என்றாலும், நாம் பணவீக்கத்தை சமாளித்தாக வேண்டும். நமது கனவுக்கான வருமானம்/சேமிப்பு பணவீக்கத்தை தாண்டியதாக இருக்க வேண்டும். அதாவது கடந்த 5 வருடத்திற்கான சராசரி ஆண்டு பணவீக்கம் 8% என்றால், நீங்கள் உங்கள் கனவுக்காக குறைந்தபட்சம் 8% கூடுதலாக வருமானம் கிடைக்குமாறு சேமியுங்கள்; முதலீடு செய்யுங்கள்.
கனவும் மெய்ப்படும் !
– நன்றி, வர்த்தக மதுரை.   

Interest Rate Cut on Small Savings Scheme 2016

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு:

Interest Rate Cut on Small Savings Scheme 

 

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில், மத்திய அரசு நேற்று(March18,2016) சில மாற்றங்களை அறிவித்துள்ளது. சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

இந்த மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதம் வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

 

வட்டி விகித மாற்றம் செய்யப்பட்ட திட்டங்கள்:

Savings Interest Rate – From April 1, 2016:

 

  • PPF (Public Provident Fund): 8.1 %  (முன்னர் – 8.7 %)
  • KVP ( கிஸான் விகாஸ் பத்திரம்): 7.8% (முன்னர் – 8.7%)
  • 5 வருட தேசிய சேமிப்பு பத்திரம் (NSC): 8.1 % (முன்னர் – 8.5 %)
  • 5 வருட கால வைப்பு திட்டம் (Time Deposits): 7.9 % (முன்னர் – 8.5%)
  • 1 – 3 வருட கால வைப்பு திட்டம் (Time Deposits): 7.1/7.2/7.4 % (முன்னர் – 8.4 %)
  • சேமிப்பு கணக்கு: 4 % (மாற்றம் இல்லை)
  • 5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: 8.6 % (முன்னர் – 9.3 %)
  • சுகன்யா சம்ரிதி கணக்கு திட்டம்: 8.6 % (முன்னர் – 9.2%) [Sukanya Samriddhi Yojana Account]

 

See Previous Small Savings Scheme

 

– வர்த்தக மதுரை

RAILWAY BUDGET 2016-17 HIGHLIGHTS

ரயில்வே பட்ஜெட் 2016-17 ( RAILWAY BUDGET 2016-17 )

 

ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று(25-02-2016) பகல் 12 மணியளவில் தாக்கல் செய்தார். அவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட சில தகவல்கள்:

 

  • பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை; புதிய ரயில்கள் அறிவிப்பும் இல்லை.
  • பயணிகள் நெரிசல் அதிகமிருக்கும் மார்க்கங்களில் முற்றிலும் முன்பதிவு அற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்.
  • முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்ய 139 ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்.
  • வர்த்தக மையங்களை இணைக்கும் பாதைகளில் இரவு நேரத்தில் மட்டும் டபுள் டக்கர் ரயில்கள் இயக்கப்படும்.
  • டிக்கெட் முன்பதிவின்போது காப்பீட்டுக்கான வாய்ப்பு வழங்கப்படும்.
  • வெளிநாட்டு கிரெடிட், டெபிட் கார்டு மூலமும் இ-டிக்கெட் சேவையைப் பெறலாம்.
  • இ கேட்டரிங் சேவை 408 ரெயில்நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
  •  பயணிகள் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளூர் உணவுகள் வழங்கப்படும்.
  • ரயில்களில் பெண் பயணிகள், மூத்த குடிமக்களுக்கான இருக்கை ஒதுக்கீடு அதிகரிப்பு. மூத்த குடிமக்களுக்கு 50% இருக்கை ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ரயிலிலும் 120 கீழ் படுக்கைகள் முதியோருக்கென ஒதுக்கப்படும்.
  • டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு பின்பற்றப்படும்.
  •  குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ரயில்வே கேட்டரிங்கில் வழங்கப்படும். அதேபோல், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களும் வழங்கப்படும்.
  •  ரயில் நிலையங்களில் பால், மருந்துப் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகள் அமைக்கப்படும்.
  • மூத்த குடிமக்கள் வசதிக்காக கொங்கன் ரயில்வேயில் சாரதி சேவா என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. விரைவில் இது அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
  • ரயில் பயணிகளின் பொழுது போக்குக்காக பெட்டிகளில் பண்பலை வானொலி வசதி ஏற்படுத்தப்படும்.
  • ரயில் நிலைய ஓய்வறைகளை ஆன்லைனிலேயே புக் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.
  • துறைமுகங்களை ரயில் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
  • இ-டிக்கெட்டிங் சேவை மூலம் நிமிடத்துக்கு 7200 பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகிறது.
  • அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.
  • அடுத்து வரும் ரயில் நிலையம் குறித்த விவரம் பயணிகளுக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் போர்டு மூலம் தெரிவிக்கும் சேவை விரைவில் தொடங்கப்படும்.
  • சரக்குகளை இருப்புவைக்க ரயில்வே சார்பில் இரண்டு பிரத்யேக கிடங்குகள் உருவாக்கப்படும்.
  • ரயில்வே துறையில் ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க ரூ. 50 கோடி ஒதுக்கப்படும்.
  • ரயில்வே துறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்ய எல்.ஐ.சி. முன்வந்துள்ளது.
  • 2016 -17-ல் ரயில்வே துறையில் ரூ.1.21 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.
  • 2016- 17 நிதியாண்டில் ரூ.1,84,820 கோடி வருவாய் ஈட்ட ரயில்வே திட்டம். இது கடந்த ஆண்டைவிட 10.1% அதிகமாகும்.

 

 

 

(தி இந்து (தமிழ்) இணையம் மூலம் தகவல் தொகுக்கப்பட்டது)

This budget announcement is Railway Minister Suresh Prabhu’s 2nd Budget.

Download the Budget Highlights(PDF) from Indian Railway Official website

 

 

Provident Fund interest rate hiked to 8.8%

Provident Fund interest rate hiked to 8.8%

பி.எப் வட்டி விகிதம் 8.8 % ஆக உயர்வு

 

  • 2015-2016 ம் நிதி ஆண்டுக்கான பி.எப் (வருங்கால வைப்பு நிதி) வட்டி விகிதம் 8.8 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

  • இதற்கு முன்னர் பி.எப் வட்டி(Provident Fund) விகிதம் 8.75 % இருந்தது.

 

  • EPFO ன் கமிட்டி [ EPFO Finance Audit and Investment committee (FAIC) ] வட்டி விகிதத்தை 8.95 % ஆக உயர்த்த பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

 

Provident Fund(PF) interest rate hiked to 8.8% for the financial year 2015-2016.

Read more on:  வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்

 

நன்றி, வர்த்தக மதுரை 

உங்களுடைய பகிர்வுகளுக்கு:

 

https://www.facebook.com/varthagamadurai/

https://www.twitter.com/varthagamadurai/

contact@varthagamadurai.com          

 

E-VAHAN BIMA (ELECTRONIC MOTOR INSURANCE POLICY)

E-VAHAN BIMA (ELECTRONIC MOTOR INSURANCE POLICY)

மின்னணு மோட்டார் வாகன காப்பீடு

 

  • இது ஒரு மின்னணு /டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட மோட்டார் வாகன காப்பீடு. (அனைத்து வாகனங்களுக்கும்)
  • இது இந்திய அரசின் IRDA(INSURANCE REGULATORY AND DEVELOPMENT AUTHORITY OF INDIA) மூலம் துவக்கப்பட்ட திட்டம்.
  • நாம் வாங்கும் மோட்டார் வாகன காப்பீடுக்கு காகித வடிவிலான (நடைமுறையில் உள்ள) சான்று நமது முகவரிக்கும் , டிஜிட்டல் வடிவிலான சான்று E-MAIL க்கும் அனுப்பப்படும்.
  • மின்னணு மோட்டார் காப்பீடு (E-MOTOR INSURANCE POLICY) ஒரு QR (QUICK RESPONSE) CODE ஐ கொண்டிருக்கும்.
  • அந்த CODE ஐ நீங்கள் உங்கள் கைபேசியில் வைத்து கொள்ளலாம்; இல்லையெனில் நகலை பிரிண்ட் செய்து வைக்கலாம்.

 

  • போக்குவரத்து போலீசார், உங்களிடம் வாகன பாலிசி பற்றி கேட்கும் போது, நீங்கள் QR CODE யோ (அ) அதன் பிரிண்ட் செய்த நகலையோ அவரிடம் காண்பிக்கலாம். அவர் QR CODE ஐ ஸ்கேன் செய்து, காப்பீடு சம்பந்தமான தகவல்களை IIB (INSURANCE INFORMARTION BUREAU OF INDIA) யிடம் இருந்து பெற்று கொள்வார்.
  • E-VAHAN BIMA கைபேசி செயலியும் விரைவில் வெளிவர உள்ளது.

 

நினைவில் கொள்க:

 

  • தற்போது, மின்னணு மோட்டார் காப்பீடு திட்டம் ஜனவரி 2, 2016 முதல் தெலுங்கானா மாநிலத்தில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது; அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் அமல்படுத்தபடலாம்.
  • இதனை பெறுவதற்கு, எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை; அரசாங்கத்தால் வழங்கப்படும் இத்திட்டம் ஒரு இலவச சேவையே.

மேலும் தகவல்களுக்கு IRDA ன் தகவல் புத்தகத்தை பதிவிறக்கி கொள்ளவும்…

Hand Book-E VAHAN BIMA

ஆரோக்கியமான நிதி திட்டமிடல்/Healthy Financial Planning

ஆரோக்கியமான நிதி திட்டமிடல்:

Prepare for Healthy Financial Planning

 

1. வரவு-செலவு மற்றும் சேமிப்பு அறிக்கையை உருவாக்குங்கள்
2. பணவீக்கத்தை தாண்டிய உண்மையான வருமானத்தை தேடுங்கள்; முதலீடு செய்யுங்கள்
3. முதலீட்டை பகிர்ந்து கொள்ளுங்கள் (Bank Deposits, Mutual Funds, Stocks,Realty, Gold, Knowledge)
4. காப்பீடு செய்து கொள்ளுங்கள் (Health and Life-Term)
5. பிளாஸ்டிக் பணத்தை பயன்படுத்துங்கள் (E-Payments, Save Tax); பிளாஸ்டிக்கை ஊக்குவிக்காதீர்கள்
6. ஓய்வை (Retirement plan) பற்றி சிந்தியுங்கள்
7. கடனை குறையுங்கள்/கடனில்லா (Debt Free) வாழ்க்கையை வாழுங்கள்
8. அவசர நிதியை (Emergency Fund) அவசரப்படுத்துங்கள்
9. மாடி தோட்டம் அமையுங்கள் /முடிந்தால் மரம் வளருங்கள்
10. உதவி செய்யுங்கள் /உங்கள் அறிவை பரிமாறுங்கள்

 

நன்றி – வர்த்தக மதுரை

எதற்கு பான் எண் சமர்ப்பிப்பது அவசியம் ? Where quoting PAN Mandatory ?

 

Where quoting PAN Mandatory ? (From 1st January, 2016)
எதற்கு பான் எண் சமர்ப்பிப்பது அவசியம் ? [2016, ஜனவரி 1 ம் தேதி முதல் ]
1. வங்கியில் கணக்கு தொடங்குவதற்கு (Bank Account Opening).
2. வங்கியில் ஒரே பரிமாற்றத்தில்/ஒரு நாளில் ரூ. 50,000/- க்கு மேல் பண வரவு வைக்கும் போது.
3. தங்க நகை, வீட்டு உபயோக பொருட்கள் ஏதேனும் வாங்கும் போது, ஒரே பரிமாற்றத்தில் வாங்கும் மதிப்பு ரூ. 2,00,000 க்கு அதிகமாக இருந்தால்.
4. வாங்கும் சொத்தின் மதிப்பு ரூ. 10,00,000 (லட்சம்) க்கு மேல் இருந்தால்.
5. Hotel/Restaurant ல் செலவு ரொக்கமாக ரூ. 50,000/- க்கு அதிகமாக இருப்பின்.
6. DEMAT கணக்கு தொடங்குவதற்கு.
7. வெளிநாட்டு சுற்றுலா செலவு(Fare,Payment to travel agent)  ரூ. 50,000/- க்கு மேல் இருந்தால் (அ) வெளிநாட்டு நாணயத்தை வாங்கும் மதிப்பு ஒரு பரிமாற்றத்தில் ரூ. 50,000/- க்கு மேல் இருப்பின்.
8. காப்பீட்டுக்கு(Life Insurance) ஒரு வருடத்திற்கு செலுத்தும் பணம் ரூ. 50,000 /- க்கு அதிகமாக இருந்தால், பான் எண் சமர்ப்பிப்பது கட்டாயம்.

 

மேலும் தகவலுக்கு, கீழே உள்ள Income Tax India ன் அட்டவணையை பாருங்கள்.

PAN-mandatory

 

வாசகர்கள் அனைவருக்கும் 2016 ன் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

Happy New Year 2016  🙂

நலமும், வளமும் பெருகட்டும்..

முதலீடும் திருவினையாக்கும் !
வர்த்தக மதுரை

தங்க பத்திர திட்டத்தில் (Gold Bond Scheme) முதலீடு செய்யலாமா ?

 

தங்க பத்திர திட்டத்தில் (Gold Bond Scheme) முதலீடு செய்யலாமா ?

 

Should we invest in Gold Bond Scheme ?

 

  • மத்திய அரசினால் தொடங்கப்பட்ட திட்டம் தான் “தங்க பத்திர திட்டம்” (Gold Bond Scheme)
  • அரசின் நிதி பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்காகவும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் தங்கத்தின் அளவினை குறைக்கவும், அதனால் இந்திய ரூபாயின் மதிப்பு குறையாமல் தடுக்கவும் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இதுவாகும்.

 

எவ்வளவு முதலீடு செய்யலாம் ?

 

  • இந்த திட்டத்தில் தங்கம் யூனிட்களாக தரப்படும்.
  • குறைந்த பட்சமாக:    2 கிராம்,  (முறையே 2, 5, 10, 50, 100 கிராம்களில்)
  • அதிகபட்சமாக:     500 கிராம் வரை
  • முதிர்வு காலம்:   8 வருடங்கள்.  (5 வருடங்களுக்கு பிறகும் இந்த திட்டத்திலிருந்து வெளியேறலாம்)

 

வட்டி விகிதம் எவ்வளவு ?

 

  • வட்டி:    2.75 % ( ஆறு (6) மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்)
  • வாங்கப்படும் யூனிட்கள் தங்கத்தின் விலையில் தான் கிடைக்கும்.
  • யூனிட்கள் வாங்கும் போது இருந்த தங்கத்தின் விலைக்கு தான் வட்டி கணக்கிடப்படும் / கிடைக்கும்.
  • வாங்கப்படும் தங்க பத்திரங்கள், காகித வடிவம் மற்றும் டீமேட் வடிவத்திலும் கிடைக்கும்.
  • ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி, (Gold Bond Scheme) பத்திரங்களை அடமானம் வைத்து கடனும் பெறலாம்.

 

யார் முதலீடு செய்யலாம் ?

 

  • இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமே முதலீடு செய்ய முடியும்

 

நினைவில் கொள்க:

 

  • முதிர்வு காலம் முடிந்தவுடன், பணமாக மட்டுமே (அன்றைய தங்கத்தின் விலையில் ) பெற முடியும்; தங்கமாக கிடைக்காது 🙂
  • தங்க பத்திரங்களை, வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் அஞ்சலகங்களிலும் வாங்கலாம்.
  • தங்க பத்திரங்களை நிதி சந்தையிலும்(Cash Market) வாங்கலாம் மற்றும் விற்கலாம்.
  • முதலீடுக்கு மூலதன ஆதாய வரி (தங்கத்தினை போல) விதிப்பு உண்டு; கிடைக்கும் வட்டி வருமானத்திற்கும் வரி விதிப்பு உண்டு.
  • முதலீடு முதிர்வு அடையும் போது, லாபமோ (அ) நஷ்டமெனில் அது முதலீட்டாளர்களையே சாரும்.
  • முதிர்வு தொகை முதலீட்டை விட குறைவாக இருக்கும் பட்சத்தில், முதலீட்டை அடுத்த மூன்று (3) வருடங்கள் வரை நீட்டிக்கலாம்.

 

கடந்த காலத்தில், தங்கத்தினை மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடும் அட்டவணை:

 

investment-returns-2015

(Comparison Chart – Data: Morgan Stanley)

 

முதலீடும் திருவினையாக்கும்… !!

நன்றி, வர்த்தக மதுரை

World Savings Day | Save Tax – Make Money

 

உலக சேமிப்பு தினம் – World Savings Day – October 31 

 

எளிய முறையில் சேமியுங்கள்… வரிச்சலுகையை பெறுங்கள்… செல்வத்தினை பெருக்குங்கள்…

(World Savings Day – October 31) உலக சேமிப்பு தினத்தையொட்டி ஒரு எளிய முறையில் சேமிக்க மற்றும் வரிச்சலுகையை பெற…

 

சேமிப்பு மற்றும் முதலீடு என்பது நம் எல்லோர் வாழ்விலும் மிகவும் முக்கியமான ஒன்று. ஒரு நாட்டின் வளர்ச்சியானது பெரும்பாலும் பொருளாதாரத்தினை சார்ந்தே இருக்கிறது. அதை போல, நமது தனி நபர் மற்றும் குடும்பத்தின்  பொருளாதார வளர்ச்சி, நமது சேமிப்பு மற்றும் முதலீட்டை சார்ந்தே உள்ளது.  நமது வருமானம் பெரும்பாலும் அரசுக்கு செலுத்தும் வரியாகவே செலவு செய்யப்படுகிறது. நாம் நமது சேமிப்பின் மூலம், நேர்மையான முறையில் அரசுக்கு வரி செலுத்துவதும் மற்றும் நமது பணத்தினை பெருக்குவது எப்படி என்பதை சில எளிய திட்டத்தின் மூலம் பார்ப்போம்.

 

 

1. PPF (Public Provident Fund) பொது வருங்கால வைப்பு நிதி:

 

நாம் ஏற்கனவே நமது இணைய பக்கத்தில்  PPF ல் முதலீடு செய்வது பற்றி விவரித்திருந்தோம்.

( How to invest in PPF  )

  • இது ஒரு வரி சேமிப்புடன் வரும் ஓய்வு காலத்திற்கான நிதி திட்டம்; ஆகையால் வருமான வரி வரம்புக்கு மேல் உள்ளவர்கள், இதன் மூலம் வரி சலுகை பெறலாம்.
  • PPF ல் வருமான வரி சலுகை பெற, அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 1,50,000 /- வரை முதலீடு செய்யலாம். (IT Rebate Under Section 80C of Income Tax Act, FY 2014-15 Onwards)
  • PPF ல் தற்போதைய வைப்பு வட்டி விகிதம்:   ஆண்டுக்கு  8.7 %
  • குறைந்த முதலீடு:   ரூ. 500 /-
  • அதிகபட்ச முதலீடு:  ரூ. 1,50,000 /- (வருமான வரிச்சட்டம் 2014-15 ன் படி)

 

ELSS (Equity Linked Savings Scheme) இ.எல்.எஸ்.எஸ் :

 

  • இது பரஸ்பர நிதி நிறுவனங்களால் வழங்கப்படும் ஒரு திறந்த-முனைய திட்டம்.
  • இதன் மூலம் நாம் வரிச்சலுகை (Section 80C of Income Tax Act) பெறமுடியும் மற்றும் நம் முதலீட்டின் மீதான வருமானத்தையும், வங்கிகளை காட்டிலும் சற்று அதிகமாக பெற முடியும்.
  • குறைந்த பட்ச முதலீடாக சில நிறுவனங்கள் 500 ரூ. முதல் அனுமதிகின்றன.
  • குறைந்த பட்ச Lock-in-period – 3 வருடங்கள்.

 

 

RGESS (Rajiv Gandhi Equity Savings Scheme):

 

  • 2012-13 ம் ஆண்டின் பட்ஜெட்டில், அன்றைய நிதி அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களால் அறிவிக்கப்பட்ட திட்டம்.
  • இத்திட்டம் முதல் முறை முதலீடாளர்களுக்காக உருவாக்கப்பட்டது.
  • ஏற்கனவே மற்ற வரிச்சலுகை திட்டத்தில் ரூ.1,50,000 வரை சலுகை பெற்றவர்கள், இந்த திட்டத்தில் மேலும் ரூ. 50,000 /- அதிகபட்ச முதலீடாக (முதல் முறை முதலீட்டாளருக்கு மட்டும்) மேற்கொள்ளலாம்.

 

அனைவருக்கும் உலக சேமிப்பு தின நல்வாழ்த்துக்கள்…

முதலீடும் திருவினையாக்கும்… !!

நன்றி – வர்த்தக மதுரை 

 

 

Financial Blog in Tamil