PPF ல் முதலீடு செய்வது சரியா ?

Is it better to invest in PPF ?

PPF ல் முதலீடு செய்வது சரியா ?

PPF (Public Provident Fund) ஐ பற்றி…

  • PPF என்பது ஒரு பொது வருங்கால வைப்பு நிதி; ஓய்வு காலத்திற்கான ஒரு சிறந்த முதலீட்டு திட்டம்.
  • VPF, EPF ல் பயனடைய முடியாதவர்கள் PPF Account ஐ, மிக எளிதாக பெறலாம்.
  • இது ஒரு வரி சேமிப்புடன் வரும் ஓய்வு காலத்திற்கான நிதி திட்டம்; ஆகையால் வருமான வரி வரம்புக்கு மேல் உள்ளவர்கள், இதன் மூலம் வரி சலுகை பெறலாம்.
  • PPF ல் வருமான வரி சலுகை பெற, அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ. 1,50,000 /- வரை முதலீடு செய்யலாம். (IT Rebate Under Section 80C of Income Tax Act, FY 2014-15 On wards)
  • PPF ல் தற்போதைய வைப்பு வட்டி விகிதம்:   ஆண்டுக்கு  8.0 % ( Jan-Mar 2019)
  • PPF கணக்கில் நாம் கடனும் பெற்று கொள்ளலாம். (நாம் கணக்கு தொடங்கிய 3 ம் நிதியாண்டிலிருந்து, 5 ம் நிதியாண்டு வரை கடன் பெறலாம்)
  • கணக்கில் உள்ள பணத்தை எடுக்க, 6 ம் நிதியாண்டிலிருந்து அனுமதிக்கப்படும்.
  • இத்திட்டத்தில் NRI, On behalf of a HUF, Association of Persons ஆகியோர் முதலீடு செய்ய முடியாது.
முதலீடு…
  • குறைந்த முதலீடு:   ரூ. 500 /-
  • அதிகபட்ச முதலீடு:  ரூ. 1,50,000 /- (வருமான வரிச்சட்டம் 2014-15 ன் படி)
எப்போது முதலீடு செய்யலாம் ?
  • பொதுவாக, நாம் PPF கணக்கை, எந்த தபால் அலுவலகத்திலும் (அ) வங்கியிலும் எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். (நடப்பில், SBI, ICICI வங்கிகள்  வழங்குகிறது)
  • PPF கணக்கில் வைப்பு  வட்டி விகிதமானது, ஒரு மாதத்தின் 5 ம் தேதியிலிருந்து அம்மாதத்தின் 30/31 ம் தேதிக்குள் இருக்கும் குறைந்த பட்ச இருப்பு பணத்திற்கு கணக்கிடப்படுகிறது.  ஆகையால், மாதத்தின் முதல் தேதியிலிருந்து 5 ம் தேதிக்கு முன் நாம் முதலீடு செய்தால், நீண்ட காலத்தில் நல்ல பலனை பெறலாம்.
பொது வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்) ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் – 2019
நினைவில் கொள்க:
  • PPF என்பது ஒரு நீண்ட கால முதலீட்டு சாதனம், குறுகிய காலத்தில் உங்களுக்கு பணம் தேவைப்படாத பட்சத்தில், கணக்கில் உள்ள பணத்தை எடுக்க வேண்டாம்.
  • PPF கணக்கை நாம் இணையதளத்திலும் (PPF Account Online) தொடங்கலாம், பணம் செலுத்தலாம் மற்றும் பெறலாம்.
  • உங்களுடைய முதலீடு பங்குசந்தையில், பரஸ்பர நிதியில் இருக்கும் பட்சத்தில் நீங்கள் PPF Account ல் முதலீடு செய்யலாம்; இது ஒரு பாதுகாப்பு திட்டமும் கூட…
  • வருமான வரிசலுகை பெற நினைப்பவர்கள், காப்பீடு திட்டத்தில் அதிக பணத்தை போட்டு வைப்பதற்கு பதில், PPF கணக்கில் வரிசலுகை பெறலாம்.
நன்றி – வர்த்தக மதுரை 

விதி எண்: 72 (Rule No. 72)

 

What is Rule No. 72

 

நிதி ஆய்வுகளில் விதி எண்: 72 (Rule No. 72) உள்ள அதிசயம் என்ன ?

 

பொதுவாக நாம் அனைவருக்கும், நமது கையில் இருக்கும் பணத்தை எப்படி இரு மடங்காக (அ) இரட்டிப்பாக மாற்ற வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக நாம் எடுக்கும் முயற்சிகள்… போன்சி திட்டங்கள் (Ponzi Schemes – Pyramid, Chain Level Marketing) முடிவில், நமது முதலீட்டு பணம் திரும்பி வராது 🙂

 

சரி அது போகட்டும், நாம் விதி எண்: 72 க்கு வருவோம். நாம் செய்த முதலீடு(Bank Deposits,Postal Savings,Mutual Funds,Stock Markets,Chit Funds) இரு மடங்காக எப்போது வ(ள)ரும் என்று கணித ரீதியாக கணக்கிடுவதே, இந்த Rule No. 72.

 

எப்படி கணக்கிடுவது ?

 

Rule No.72 = 72 / Expected Interest (எதிர்பார்க்கும் வட்டி விகிதம்)
நீங்கள் ஒரு வங்கியில் ரூ.1,00,000 /- முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். வங்கியின் வைப்பு வட்டி விகிதம் ஆண்டுக்கு 8 % கூட்டு வட்டியில் தருகின்றனர். இப்போது நமது ஒரு லட்சம் எப்போது இரட்டிப்பாகும்…

 

விதி எண்:72,  

 

72 / 8 (வங்கியின் வட்டி விகிதம்)
ஒன்பது ஆண்டுகளில் (9 Years) !
இனி, நீங்கள் தைரியமாக உங்கள் பணத்தை இரட்டிப்பாகும் நடைமுறையை தெரிந்து கொள்ளலாம். போன்சி திட்டத்தில் அல்ல 🙂

 

நினைவில் கொள்க:

 

  • விதி எண். 72, கூட்டு வட்டியில் மட்டுமே கணக்கிடப்படுகிறது; தனி வட்டியில் அல்ல !

 

  • விதி எண். 72, உங்களுக்கு ஒரு நிச்சயமான வருடங்களை கணக்கிட்டு கொடுக்கும், நாட்களை அல்ல ! (தோராயமாக)

 

 

நன்றி – வர்த்தக மதுரை 

4 Steps to understanding about 50:30:20 Budget

 

4 Steps to understanding about 50:30:20 Budget:

 

அறிவோம் 50:30:20 Budget பற்றி…

 

1. Calculate your Income/Salary after Tax:

 

உங்கள் வருமானத்திலிருந்து வருமான வரி, NPS, SSS, மற்றும் பிற வரிகள் கழித்து போக மீதம் உள்ள தொகையை கணக்கில் எடுத்து கொள்ளுங்கள். அதாவது உங்கள் கையில் கிடைக்கும் வருமானம் (Take Home Pay).

 

2. Limit your Needs – Up to 50 %

 

உங்களுடைய அத்தியாவசிய தேவைகளை, கையில் கிடைக்கும் வருமானத்தில் 50 % க்குள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

 

3. Limit your Wants – Up to 30 %

உங்களுடைய விருப்பங்களை, கனவுகளுக்கான செலவுகளை, கையில் கிடைக்கும் வருமானத்தில் 30 % க்குள் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள்.

 

4. Spend atleast 20 % on Savings / Investing / Debt Repayments – 20 %

 

  • உங்களுடைய சேமிப்பு மற்றும் முதலீட்டை, கையில் கிடைக்கும் வருமானத்தில் 20 % இருக்குமாறு கணக்கிட்டு கொள்ளுங்கள்.

 

  • உங்களுக்கு ஏதேனும் கடன் இருந்தால், அவற்றிற்கான தவணைகளை 20 % மேல் செலுத்தாமல் பார்த்து கொள்ளுங்கள்.

 

  • கடன் இருந்தாலும், இல்லையென்றாலும் முடிந்தவரை சேமிக்க மற்றும் முதலீடு செய்ய பழகுங்கள்.

 

50:30:20 Budget கடைபிடித்தால், நீங்களும் Warren Buffet தான் !

 

முயற்சி திருவினையாக்கும்… முதலீடும் திருவினையாக்கும் !

 

நன்றி – வர்த்தக மதுரை

யார் இந்த ராகுல் யாதவ் (Rahul Yadav) ? Housing.com

 

யார் இந்த ராகுல் யாதவ் ?  (Who is  this Rahul Yadav ?)

 

  • ராஜஸ்தான் மாநிலம், அல்வார் நகரத்தின் 25 வயது இளைஞன்.
  • பள்ளி படிப்புகளில், அவ்வளவு ஈடுபாடில்லை; சுமாரான பள்ளி மாணவனாக வலம் வந்தவன்.
  • IIT-Bombay ல் கல்லுரி படிப்பை தொடங்கி, இறுதி ஆண்டில் படிப்பினை கை விட்டவர்.
  • இணையதளங்களில் (Online Space), செயலிகள் (Apps) உருவாக்குவதில் ஈடுபாடு கொண்டவர்.

 

 

இன்று….

 

  • ஹவுசிங்.காம் ன் நிறுவனர்.  ( CEO of Housing.com)
  • ரூ. 200 கோடி மதிப்புள்ள தனது பங்குகளை, நிறுவனத்தின் பணியாளர்களுக்கு
    கொடை அளித்தவர்.
  • சிறிய வயதில் இவ்வளவு தொகை தனக்கு தேவைப்படாது என்று அதிரடியாக தனது பணியாளர்களுக்கு பகிர்ந்தளித்தவர்.

 

 

Housing.com  பற்றி…

 

  • ஹவுசிங்.காம் நிறுவனம்,  ஜூன் 2012 ல் IIT-Bombay ல் படித்த 12
    இளைஞர்களால் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டது.
  • ஹவுசிங்.காம் நிறுவனம், வீடு வாடகைக்கு விடுவது, விற்பது, வாங்குவதற்கு
    வசதியாக இந்த தளம் உள்ளது.
  •  தற்போது, நிறுவனத்தில் 2250 ஊழியர்கள் உள்ளனர்.
  • Softbank, Nexus Venture Partners போன்ற நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்துள்ளன.

 

 

ஏன் Housing.com…

 

  • சர்வதேச அளவில் வீடு தேடும் பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளதாகவும்,
    அதற்கு தீர்வு தரும் சேவை தனக்கு சவால் மிகுந்ததாகவும் உள்ளதாக ராகுல்
    யாதவ் தெரிவித்துள்ளார்.

 

  • தற்போது, இது போன்ற நிறுவனங்கள் ஒவ்வொரு நாட்டிலும் 5 மட்டுமே உள்ளன.
    உலகம் முழுவதும் சுமார் 500 நிறுவனங்கள் மட்டுமே இதில் ஈடுபட்டுள்ளன.

 

 

Quotes of Rahul Yadav  (CEO of Housing.com, Entrepreneur)

 

”  If things aren’t working, I can write them off,” Rahul Yaadav says

 

“The problem with Indian start-ups is that people spend years on the
same ideas that just don’t work!”

 

 

இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்கள் மற்றும்
உறவினர்களுக்கு, Share செய்து கொள்ளலாம்.

நன்றி – வர்த்தக மதுரை

Pradhan Mantri Suraksha Bima Yojana – Accidental Death Insurance

 

Pradhan Mantri Suraksha Bima Yojana – Accidental Death Insurance

  • இது ஒரு விபத்து காப்பீடு; இந்த காப்பீடு இந்திய அரசாங்கத்தால்
    ஊக்குவிக்கப்பட்டு, Life Insurance Corporation(LIC) மூலம்
    நடத்தப்படுகிறது.
  • காப்பீடு ரிஸ்க் அளவு:  ரூ. 2,00,000 /-  (2 லட்சம்) –  விபத்தினால்
    இறப்பு மற்றும் நிரந்தர இயலாமை / ( ரூ. 1 லட்சம் – ஏதேனும் ஒரு பகுதி
    சார்ந்த இயலாமை)
  • நுழைவு வயது:   18 – 70 (Age)
  • பிரீமியம் தொகை:    ரூ. 12 /- (ஒரு வருடத்திற்கு)

 

  • குறிப்பு:

 

  • பிற காப்பீடு நிறுவனங்களும், இந்த திட்டத்தில் தங்களை இணைத்து கொள்ளலாம்.
  • ஆதார் அட்டையினை வங்கியுடன் இணைத்தவர்களாக இருக்க வேண்டும்; பிரீமியம்
    தொகை, ஒவ்வொரு வருடமும் உங்கள் வங்கி கணக்கிலிருந்து எடுத்து
    கொள்ளப்படும்.
  • மற்ற விபத்து காப்பீடு திட்டத்தை காட்டிலும், இதன் பிரீமியம் தொகை மிக
    குறைவு மற்றும் மருத்துவ பரிசோதனை தேவையில்லை.
  • இந்த திட்டத்தினை உங்கள் வங்கியின் மூலமோ (அ) LIC யிலோ பெறலாம்.
  • வருமான வரிச்சட்டம்  80 C ன் கீழ் வரி சலுகை உண்டு.

 

இந்த திட்டத்தினை பற்றிய சந்தேகங்களுக்கு, மின்னஞ்சல் அனுப்ப:
varthagamadurai@sidzz.com

இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்கள் மற்றும்
உறவினர்களுக்கு, Share செய்து கொள்ளலாம்.

நன்றி – வர்த்தக மதுரை

Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana – Life Insurance

 

நமக்கு கடந்த சில நாட்களாக, நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலிருந்து,
“Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (Rs.330 p.a) & Pradhan Mantri
Suraksha Bima Yojana (Rs.12 p.a) – 2.0 Lacs” என்ற குறுந்தகவல் நமக்கு
கைபேசியில் கிடைத்திருக்கும். இந்த இரண்டு காப்பீட்டு திட்டம் பற்றி
நமக்கு தெரியுமோ (அ) தெரியவில்லையோ, ஆனால் அத்திட்டத்தின் மீது நமக்கு
ஒரு ஆர்வம் ஏற்பட்டிருக்கும். காரணம், இரண்டு லட்சம் காப்பீடு இந்த
விலையிலா…! ?

Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana – Life Insurance

  • இது ஒரு ஆயுள் காப்பீடு, பொதுவாக அடிப்படை Risk Coverage (Normal Risk) உள்ளது.
  • அதிகபட்ச காப்பீடு அளவு:  ரூ. 2,00,000 /-  (2 லட்சம்) – இறப்பு ஏற்பட்டால்.
  • நுழைவு வயது:   18 – 50 (Age)
  • பிரீமியம் தொகை:    ரூ. 330 /- (ஒரு வருடத்திற்கு)

 

  • குறிப்பு:

 

  •  இந்த காப்பீடு இந்திய அரசாங்கத்தால் ஊக்குவிக்கப்பட்டு, Life Insurance
    Corporation(LIC) மூலம் நடத்தப்படுகிறது.
  • பிற காப்பீடு நிறுவனங்களும், இந்த திட்டத்தில் தங்களை  இணைத்து கொள்ளலாம்.
  • ஆதார் அட்டையினை வங்கியுடன் இணைத்தவர்களாக இருக்க வேண்டும்; பிரீமியம்
    தொகை, ஒவ்வொரு வருடமும் உங்கள் வங்கி கணக்கிலிருந்து எடுத்து
    கொள்ளப்படும்.
  • மற்ற Term Insurance திட்டத்தை காட்டிலும், இதன் பிரீமியம் தொகை மிக
    குறைவு மற்றும் மருத்துவ பரிசோதனை தேவையில்லை.
  • இந்த திட்டத்தினை உங்கள் வங்கியின் மூலமோ (அ) LIC யிலோ பெறலாம்.
  • வருமான வரிச்சட்டம்  80 C ன் கீழ் வரி சலுகை உண்டு.

 

இந்த திட்டத்தினை பற்றிய சந்தேகங்களுக்கு, மின்னஞ்சல் அனுப்ப:
varthagamadurai@sidzz.com

இந்த தகவல் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்கள் மற்றும்
உறவினர்களுக்கு, Share செய்து கொள்ளலாம்.

நன்றி – வர்த்தக மதுரை

ரத்து செய்யப்பட்ட காசோலை (Cancelled Cheque) ஏன்..? எதற்கு..?

 

ரத்து செய்யப்பட்ட காசோலை (Cancelled Cheque) ஏன்…? எதற்கு ?

 

பொதுவாக, நமது பணபரிவர்த்தனையில் ரத்து செய்யப்பட்ட காசோலை தேவைப்படுவதை கவனித்திருப்போம். இது எதற்கு, எங்கே தேவைப்படுகிறது….

 

  • வங்கி கணக்கு துவங்கும் போது
  • KYC (Know your customer) என்று சொல்லப்படும் வாடிக்கையாளரை அறிதல் – தகவல்களை பெறும் போது
  • ECS, EMI முறையில் நாம் தவணையை (அ) முதலீட்டை செலுத்தும் போது
  • EPF (Employee Provident Fund) இல் பணம் பெறும் போது
  • Insurance Policy எடுக்கும் போது
  • Demat கணக்கை ஆரம்பிக்கும் போது…. இவ்வாறாக ரத்து செய்யப்பட்ட காசோலையை நாம் பயன்படுத்துவோம்.

எவ்வாறு பயன்படுத்துவது:

 

உங்களது செல்லுபடியாகும் காசோலையின் குறுக்கே இரு கோடிட்டு(crossed), “CANCELLED” என்று எழுதினால் அந்த காசோலை ரத்து செய்யப்பட்டதாக அர்த்தம். அது தான், CANCELLED CHEQUE.

 

 

cancelled_cheque_vm
எதற்காக பயன்படுகிறது:

 

பொதுவாக, ரத்து செய்யப்பட்ட காசோலையை, யாரும் தவறாக பயன்படுத்த முடியாது. பின்பு எதற்காக.. ?

 

ஆனால் உங்களின் கணக்கு எண், காசோலை எண், வங்கி பெயர், MICR Code தகவல்களை பெறலாம்.

சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள் – Savings Interest Rate – Financial Year 2016

2016 ம் நிதியாண்டின் சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள்:

 

நமது அரசு, ஏப்ரல் 1 ம் தேதி முதல் அறிவித்துள்ள வட்டி விகிதங்கள்..

 

Savings Interest Rate – Financial Year 2016:

 

  • PPF (Public Provident Fund): 8.7 %
  • KVP ( கிஸான் விகாஸ் பத்திரம்): 8.7 %
  • 10 வருட தேசிய சேமிப்பு பத்திரம் (NSC): 8.8 %
  • 5 வருட தேசிய சேமிப்பு பத்திரம் (NSC): 8.5 %
  • 5 வருட மாத வருமான திட்டம் (Monthly income scheme): 8.4 %
  • 5 வருட கால வைப்பு திட்டம் (Time Deposits): 8.5 %
  • 5 வருட தொடர் வைப்பு (RD): 8.4 %
  • 1 – 3 வருட கால வைப்பு திட்டம் (Time Deposits): 8.4 %
  • சேமிப்பு கணக்கு: 4 %

 

மேலுள்ள அனைத்தும் கடந்த நிதி ஆண்டினை ஒப்பிடும் போது, மாற்றம் எதுவுமில்லை.
வட்டி விகித மாற்றம் செய்யப்பட்ட திட்டங்கள்:

 

  • 5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: 9.3 % (முன்னர் – 9.2 %)
  • சுகன்யா சம்ரிதி கணக்கு திட்டம்: 9.2 % (முன்னர் – 9.1 %)

– வர்த்தக மதுரை

பங்கு-சந்தை-பகுப்பாய்வு-10.2 – DISCOUNTED CASH FLOW

 

பங்கு-சந்தை-பகுப்பாய்வு-10.2 – DISCOUNTED CASH FLOW

 

Fundamental Analysis – Discounted Cash Flow

 

DISCOUNTED CASH FLOW METHOD:

 

  • நாம் வாங்க போகும் ஒரு நிறுவனத்தின் எதிர்கால வருமானத்தை கணக்கிட்டு (அ) கணித்து, அதனை தற்போதைய சந்தை விலையுடன் ஒப்பிட்டு நாம் நிர்ணயிக்கும் விலை (சலுகை விலை) தான் நாம் உண்மையாகவே வாங்க கூடிய விலை. இதனை தான் இம்முறையில் நாம் கண்டுபிடிக்கிறோம்.

 

  • சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நாம் வாங்க போகும் பங்கினை சலுகை விலையில் வாங்கினால், நமக்கு தானே லாபம் !

 

  • DISCOUNTED CASH FLOW முறை சம்பந்தமாக ஏராளமான புத்தகங்கள் தமிழில் உள்ளன. ( உதாரணம்: ஷேர் மார்க்கெட் A to Z – சொக்கலிங்கம் பழனியப்பன்)

 

MARGIN OF SAFETY:

 

  • ஒரு பங்கின் உண்மையான விலையை கண்டறிய, நாம் இரு முறைகளை பின்பற்றினோம். ஆனால் இந்த உண்மையான விலையிலே வாங்க வேண்டுமென்று அவசியமில்லை. இதை விட குறைவான விலைக்கு கிடைத்தால் அது நமக்கு தான் லாபம். நஷ்டத்தையும் தவிர்க்கலாம். அது தான் “MARGIN OF SAFETY”

 

  • உண்மையான விலையிலிருந்து எத்தனை சதவிகிதம் குறைவாக கிடைக்கிறது என்பதே “MARGIN OF SAFETY”

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

EPS வளர்ச்சியை கணக்கிட சுலப வழிமுறை

 

EPS (Calculate Earning per share) வளர்ச்சியை கணக்கிட சுலப வழிமுறை:

 

( 5 வருட அடிப்படையில்… )

2006 – 2.10, 2007 – 2.80, 2008 – 3.45, 2009 – 3.90, 2010 – 4.20, 2011 – 4.50

 

Step 1. Current EPS / 1st EPS = 4.50 / 2.10 = 2.14
Step 2.  Growth Multiple of (2.14) to the 1/5th Power (5 years)
(2.14) X Power of (1/5) = 1.164
Step 3.            Value – 1 =   1.164 – 1 =   0.164

 

then, 0.164 *100 = 16.40 %
So, Earning per share (EPS) Growth for the last 5 years = 16.40 %

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

Financial Blog in Tamil