பழுத்த இலை விழக்கண்டு பச்சையிலை சிரித்தாற் போல – Secret of Young Investing

 

பழுத்த இலை விழக்கண்டு பச்சையிலை சிரித்தாற் போல…

SECRET OF YOUNG (EARLY) INVESTING

 

 

உங்களுக்கான மூன்று கேள்விகள் :

 

  • நீங்கள் எந்த பகுதியை அதிகமாக நேசிக்கிறீர்கள் மற்றும் எப்போதும் அனுபவிக்க விரும்புகிறீர்கள்… இளமையில் / முதுமையில்  ?
  • நீங்கள் எப்போது அதிகமாக கற்று கொள்ள மற்றும் உற்சாகமாக வேலை செய்ய விரும்புகிறீர்கள்… இளமையில் / முதுமையில்  ?
  • உங்களுக்கு நீச்சல் பயிற்சி பயில ஆசை… அதன் தொடக்க பயிற்சியை எப்போதும் ஆரம்பிக்க விரும்புகிறீர்கள்… 10-20 வயது / 50-60 வயது ?

 

 

எல்லாமே உங்கள் விருப்ப தேர்வு தான்; இந்த மூன்று கேள்விகளுக்கு உங்களுடைய விருப்பங்கள் (விடைகள்) 1. இளமையில்  2. இளமையில் 3.  10-20 வயது என்றால், நீங்கள் மேற்கொண்டு இந்த கட்டுரையை படிக்க அவசியமில்லை; தலைப்பை மட்டும் ஞாபகத்தில் கொள்ளுங்கள்… எனக்காக 🙂

 

இனி மற்றவர்களுக்கான கட்டுரை இதோ…

 

என் அலுவலக நண்பருடன் நான் ஒரு முறை பரஸ்பர நிதி நிறுவனம் நடத்தும் முதலீட்டாளர் விழிப்புணர்வு  நிகழ்ச்சி ஒன்றிற்கு புதுச்சேரி சென்றிருந்தேன்; நிகழ்ச்சியின் முடிவில் நான் என் நண்பரிடம் சொன்னேன், “ 25 வயதிலே நாம் மாதா மாதம் ரூ. 5000 /- (SIP) முதலீடு செய்தால் 50 வயதிலே நமக்கு ரூ. 93, 00,000 /- (93 லட்சம்) [12 % வட்டியில் ] கிடைக்குமென்று” நண்பரும், ஆமோதித்தார். மேலும் அவர் சொன்னார், “ 25 வருடத்திற்கு மாதாமாதம் ரூ. 5000 /- முதலீடு செய்தால் 12 % வட்டியில் முதிர்வில் ரூ. 93 லட்சம் கிடைக்கும்; அது தான் கணக்கு. ஆனால் இந்த பரஸ்பர நிதி நிறுவனங்கள் சும்மா 25 வயதிலே முதலீடு செய்தால் என்று படம் காண்பிக்கின்றன; நாம் வேண்டுமானாலும் முதலீடு செய்தால், முடிவில் இந்த கணக்கு தானே”  என்று தனது புத்திசாலித்தனத்தை சொன்னார்.  

 

அவர் சொல்லும் கணக்கு சரி தான்;

 

நான் சொன்னேன், “ 25 வயதிலே முதலீடு செய்வது நல்லதா (அல்லது) 50 வயதிலே நல்லதா ?” என்று கேட்டேன்; அதற்கு அவர் அதை அப்புறம் பார்த்து கொள்ளலாம்; காபி சாப்பிட போவோம் என்கிறார் 🙂

 

வேண்டுமானால் அவர் வீட்டில் போய் யோசித்திருக்கலாம் 🙂

இதை தான் நம்மில் பெரும்பாலோர் செய்கிறோம், “அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் !”

 

முதலீட்டு மற்றும் பரஸ்பர நிதி நிறுவனங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டு போகட்டும்; ஆனால் அவை சொல்லும், ‘எண்களும், பாதுகாப்புத்தன்மையும்’ நமக்கு அவசியம். அதை நாம் அலட்சியப்படுத்த தேவையில்லை; இன்று நாம் இளமையில் முதலீடு / சேமிக்கும் வாய்ப்பு முதுமை காலத்தில் உறுதியாக மற்றும் நம்பகமாக கிடைக்க போவதில்லை. இளமையில் இருக்கும் நமது உழைப்பு மற்றும் நம்பிக்கை, முதுமையில் எதிர்பார்க்க முடியாது; அது தான் இயற்கை…

 

அதனால் இளமையில் கல் !

இளமையில் நாம் முதலீடு செய்யாமல் இருப்பதற்கான மனத்தடைகள்:

 

  • இளமை காலத்தை அனுபவித்து கொள்ளலாம் மற்றும் பிற்பகுதியில் சேமித்து / முதலீட்டை மேற்கொள்ளலாம் என்ற எண்ணம். [ உங்கள் இளமை காலத்தை அனுபவிப்பதற்கும், சேமிப்பதற்கான காலத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை; இளமை நமக்கு தேவையானது போல, சேமிப்பதற்கும் இளமை வேண்டுமல்லவா ! ]

 

  • எப்போதும் நம் கையில் நிரந்தர தொழில் / வேலை இருக்கும் போது, இளமையில் சேமிப்பு / முதலீடு எதற்கு என எண்ணுவது.        [ தாராளமயமாக்கல் மற்றும் உலக பொருளாதார சந்தை போட்டியில் நீங்கள் இப்போது பார்க்கும் வேலையும், தொழிலும் நிரந்தரமல்ல ! ]

 

  • சேமிப்பு / முதலீடு பற்றிய கல்வி இல்லாமை மற்றும் மண்ணும்,பொன்னும் தான் சொத்து என்று நம்புவது. [ விவசாயத்தை திறம்பட செய்பவர்களுக்கு தான் மண்ணும், நகை வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு தான் பொன்னும் சொத்து ! ]

 

  • முதலீடு பற்றிய அறிவு இருந்தும் காலத்தே முதலீடு செய்யாமல் இருப்பது. [ வெறும் கல்வியினால் பயனொன்றும் இருப்பதில்லை; செயல்பட்டு பயனை அடைவது தான் அவசியம். ]

 

இளமை கால முதலீட்டின் வாய்ப்புகள் மற்றும் நன்மைகள்:

 

  • காலம் / நேரம் உங்கள் கையில்… உங்களுக்கு நீண்ட காலம் முதலீடு செய்ய வாய்ப்பு இருப்பதால், நீங்கள் செய்யும் முதலீட்டு தவறுகளையும், பாதுகாப்பு தன்மையினையும் மாற்றுவதற்கு நேரமுண்டு.

 

  • இளமை கால கற்றல்… உங்களுக்கு ஒரு நிதி சார்ந்த அனுபவத்தை நீண்ட காலத்திற்கு கொடுக்கும்; உங்களுக்கான தரமான பிற்கால வாழ்க்கையை திட்டமிட உதவும்; தேவையறிந்து செலவு செய்யும் பழக்க வழக்கத்தை தரும்.

 

  • எட்டாம் அதிசயமான ‘கூட்டு வட்டி’ – Power of Compounding பலனை பெறலாம்;  உங்களுக்கு தேவையான இலக்கினில் வெற்றியும் பெறலாம்.

 

  • பரபரப்பான வாழ்க்கை நிலையிலிருந்து சற்று தள்ளி நிற்கலாம்; நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்கலாம்; ஓய்வு காலமும் சுகமாகும்.

 

நீங்கள் தினமும் டீ, காபி அருந்தினாலும் சரி, புகைபிடிப்பவராக இருந்தாலும் சரி உங்கள் பழக்க வழக்கத்திலிருந்து தினசரி ஒரு சிறிய தொகையை இளமையிலே சேமிக்க / முதலீடை தொடங்குங்கள்; முதுமையில்  டீ / காபி / புகை உங்களோடு இல்லாவிட்டாலும் , உங்கள் இளமை கால சேமிப்பு நிச்சயம் உங்களுடைய நண்பனாக இருக்கும்.

 

இளமையில் கற்றவரும், செல்வம் சேர்த்தவருமே முதுமையிலும் இளமை காலத்தை அனுபவிக்கின்றனர் என்பதே நிதர்சன உண்மை; நீங்கள் 25 வயதில் தோற்றால் பரவாயில்லை, கற்று கொள்ளலாம், முயற்சிக்கலாம், முன்னேறலாம் !

 

60 வயதில்  ????

 

வெல்வதற்கான வாய்ப்புகள் குறைவு;  நம்மை பொருளாதாரத்தில் பலவீனப்படுத்தும் !

 

25 வயதில் முயற்சிக்கவில்லையா ? கடந்து விட்டீர்களா ?

 

கவலையை விடுங்கள்; உங்கள் வயதுக்கேற்ற முதலீட்டினை செய்யுங்கள்.

 

வாழ்த்துக்கள்; வாழ்க வளமுடன்

நான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் ? Financial Goal Planning

 

நான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் ?

Financial Goal Planning – நிதித்திட்டமிடல்

 

“A GOAL WITHOUT A PLAN IS JUST A DREAM”

 

“ நான் எப்படி என் இலக்குகளில் வெற்றி பெற்றேன் ? “ – இந்த வாக்கியம் எனக்கானது மட்டுமல்ல…

 

உங்களுக்கானதும் தான் !

 

சிறுவயதிலிருந்தே நாம் இலக்குகளின் பழமொழிகளை வாசிப்பதும், சில சமயங்களில் ஞாபகப்படுத்தி கொள்வதும் நமக்கு பழக்கமாக மட்டுமே உள்ளது; பிறப்பிலிருந்து இறப்பு வரை நமக்கான இலக்குகள் பெரும்பாலும் மற்றவர்களாலே தோற்றுவிக்கப்படுகிறது; ஆனால் நாம் தோற்றுவிடுகிறோம் ! எதேச்சையாக சமயங்களில் நிறைவேற்றப்படுகின்றன 🙂

[ நான் வாசித்த, யாரோ ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த வரிகள்… நமது பிறப்பும், பெயரும், கல்வியும், வருமானமும், புகழும் மற்றும் இறுதி சடங்கும் மற்றவர்களாலே கொடுக்கப்படுகிறது என்று 🙂 ]

ஆனால் நிதி வாழ்க்கையில் நாம் தான் நமது இலக்குகளை நிர்ணயித்து வெற்றி பெற வேண்டும்; யாரும் நமக்காக வெல்வதற்கான வாய்ப்புமில்லை…

எனது உறவினருள் ஒருவர் தனது திருமண விழாவில், தன் நண்பர்களுக்கு விருந்து வைப்பதற்காக மட்டுமே வங்கியிலிருந்து ரூ. 3,00,000 /- தனி நபர் கடன் பெற்றுள்ளார்;  அந்த திருமண விருந்துக்கான கடன் அவரது குடும்ப வாழ்க்கையிலும் பொருளாதாரரீதியாக சுமார் 5 வருடங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன 😦

அதற்குள், அவருக்கு ஒரு குழந்தை செல்வமும் பிறந்தன 😦

குழந்தை செல்வமா (அ) செலவா என்பது வேறு விஷயம் 🙂

சில சமயங்களில் அவர் என்னை சந்திக்கும் போது, நண்பர்களுக்கு விருந்து வைத்து பட்டுக்கொண்டதையும், இன்று தன் எல்லா நண்பர்களும் நல்ல நிலையில் இருப்பதாகவும் குறைப்பட்டு கொள்வார்; இது நண்பர்களுடைய தவறு அல்ல…

அவருடைய தவறும் அல்ல… அவரிடம் நிதித்திட்டமிடல் சம்மந்தமான விழிப்புணர்வு இல்லாததே  !

உங்களுக்கான நிதித்திட்டமிடல் / இலக்குகளை இப்போதே எழுதுங்கள்; ஆராயுங்கள் மற்றும் செயல்படுத்துங்கள்.

SMART (Specific, Measurable, Attainable, Realistic and Timely) வும் உங்கள் இலக்குகளை சிந்தியுங்கள்.

 

உங்கள் இலக்குகளுக்கான உறுதிமொழி படிவம் / ஒப்பந்தம்:

Goal-Planner's-Oath2

 

 

 

நிதித்திட்டமிடல் குறிப்பு ( Financial Goal Planning Sheet ):

financial-goal-planning-table

 

SMART:

  • SPECIFIC
Your Goal(s)
  • MEASURABLE
Total Amount / Value
  • ATTAINABLE
Where to Invest / Investment Product
  • REALISTIC
Monthly SIP
  • TIMELY
Term (No. of Years)

மேலே உள்ள இரண்டு படத்தையும் உங்களுக்கானதாக மாற்றி கொள்ளுங்கள்; உங்கள் இலக்குகளை பிரிண்ட் செய்து கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

நீங்கள் ஏன் தொடுதிரை கைபேசியை பயன்படுத்த வேண்டும் ? FD vs Debt Fund

Fixed Deposit(FD) vs Debt Funds…

நீங்கள் ஏன் தொடுதிரை கைபேசியை பயன்படுத்த வேண்டும் ?

 

காலத்திற்கேற்றாற் போல் செயல்படு; காலத்திற்கேற்றாற் பயன் பெறு!

 

என் நண்பர் ஒருவர் அடிக்கடி என்னிடம் சொல்வார், “ அந்த காலத்தில் உள்ளவர்கள் போல இன்று யாருமில்லை;  OLD IS GOLD என்பார். அப்போதைக்கு இருந்தது போல, இன்று எதுவும் அப்படி இல்லையென்று…

உண்மை தான், சில சமயங்களில் அந்த கால வாழ்க்கை முறை, உறவுகளை பேணுதல், உணவு முறைகள்; இன்றும் நாம் அதை பின்பற்றலாம்; ஆனால் நாம், தொழில்நுட்ப விஷயங்களில் அவ்வாறு இருந்து விட முடியாது; அவ்வாறு பின்தங்கி விடுவதும் நல்லதல்ல.

ஒரு முறை நான் அந்த நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கையில், தொடுதிரை கைபேசியின் (Touch / Smartphone) வசதிகளையும், அதன் சாதகங்களையும் பற்றி விவாதிக்கும் போது ( 2006 ம் ஆண்டுவாக்கில் ),

அவரின் பதில், “ தொடுதிரை கைபேசியெல்லாம் விலை போகாதப்பா; பட்டன் போன் போன்ற வசதி வராதப்பா, தொடுதிரை போனும் அடிக்கடி இயங்காமல் போவதுண்டு” என்று சொன்னார். இத்தனைக்கும், அவர் அப்போது, அந்த கைபேசியை பார்த்தது கூட இல்லை 🙂

எனக்கும் தான் பட்டன் போனில் பயன்படுத்திய கால்குலேட்டரும், பாம்பு விளையாட்டும் (Calculator and Snake Game) மறக்க முடியாதவை !  

ஆனால் இன்றோ, தொடுதிரை தொழில்நுட்ப வளர்ச்சி (Gestures Technology) வேறு ஒரு பரிணாமத்தை எடுத்து கொண்டு செல்கிறது; நமது நேரமும்,வேலையும் சுலபமாக்கப்பட்டன.

(அந்த என் நண்பர் இன்று SAMSUNG J7  உடன் 🙂 )

பழசை நாம் மறக்க தேவையில்லை; அது நமது கடந்த கால பதிவு, ஆனால் நாம் இன்று தொழில்நுட்பத்திலும், பொருளாதாரத்திலும் வளர்ந்ததாக வேண்டும்;

 

பொருளாதாரத்திலும் கூட !

 

இந்த வளர்ச்சி மாற்றத்தினை தான் நான் அடிக்கடி என்னிடம் கேட்பதுண்டு; என் நண்பர்களையும் கேட்டதுண்டு…

நம் வருமானத்தில் நாம் சேமிக்க பழகும் போது, ஏன் நாம் இன்னும் பழைய விஷயங்களையே ஏற்று கொள்ள வேண்டும் ?

நம்பிக்கை கொள்ள வேண்டும் ?

நாம் ஏன் இன்னும் காலங்காலமாக, நமது வங்கி வைப்பு திட்டத்தின் (Bank Fixed Deposit)மீது அவ்வளவு நம்பிக்கை வைக்க வேண்டும் ? (நமது வருமானமும், வரிகளும் மற்றும் விலைவாசியும்  ஏறிக்கொண்டிருக்கும் போது )

அந்த நம்பிக்கைக்கு, பாதுகாப்பு தான் காரணம் என்றால், நாம் அந்த பாதுகாப்பை எத்தனை தடவை முயற்சி செய்து பார்த்திருப்போம்; பயன் பெற்றிருப்போம் ???

நாம் ஏன், Fixed Deposit தவிர, மற்ற வளர்ச்சியை முயற்சித்து பார்க்கக்கூடாது, பாதுகாப்புடன் !

நம் வருமானம் அதிகரிக்கும் போது, நமது Fixed Deposit பெரும்பாலும், நம்மை முதிர்வில் அதிகபடியான வரிகளையும் (அ) TDS என்று சொல்லப்படுகிற Tax Deducted at Source ஐ செலுத்தவே முற்படுகிறது. வரிக்கழிவிற்கு பின், நாம் பெறும் தொகையோ பணவீக்கத்தை கூட சரிகட்ட முடிவதில்லை; என்ன பண்ணலாம் ?

Fixed Deposit ஐ முயற்சித்து பார்க்காதவர்கள் ஒரு தடவை முயற்சி செய்து பார்க்கலாம்; ஏற்கனவே பார்த்தவர்கள் கணக்கு போட்டு பார்த்து கொள்ளலாம்; முடிவில் நாம் ஒரு மாற்றத்தை தேடலாம்  🙂

Fixed Deposit உங்களுக்கு பலனளிக்கவில்லை என்றால், நமக்கு ஒரு மாற்றம் வேண்டுமே….  தொடுதிரை கைபேசியை போல !

 

தொடுதிரை கைபேசி…  Debt  Funds:

 

Debt Fund எவ்வாறு செயல்படுகிறது ?

 

Debt Fund (கடன் நிதித்திட்டம்) என்பது ஒரு பரஸ்பர நிதி திட்டமாகும்; நாம் முதலீடு செய்யும் பணம் கடன் திட்டத்தின் வாயிலாக, அரசு மற்றும் நிறுவன கடன் பத்திரங்கள், பணச்சந்தை, அரசு கருவூலம், மற்றும் வணிக ஆவணங்கள் ஆகியவற்றில் பரவலாக முதலீடு செய்யப்படும்; இவை யாவும், நிலையான வருமானம் தரும் கருவிகளாகும்.

 

Risk and Return எப்படி ?

 

  • ரிஸ்க் என்று பார்க்கும் போது, கடன் நிதித்திட்டத்தில்  மிகவும் குறைவே; முதிர்வு வருமானம் வேண்டுமானால், சிறிது ஏற்ற – இறக்கத்துடன் இருக்கலாம்; முதலும் பாதுகாப்பாக இருக்கும்.
  • வங்கி FD ஐ விட, வட்டி விகிதம் சற்று அதிகமாகவே கிடைக்கும்.
  • பாதுகாப்பு என்று நாம் வங்கியை அணுகும் போது, வங்கியும் நமக்கு ரூ.1,00,000 /- தொகை  வரை மட்டுமே உறுதியளிக்கும்; ஏதேனும் காரணத்தால், நாம் பணம் வைத்திருக்கும் வங்கி மூடப்பட்டால் நமக்கு அதிகபட்சமாக ரூ.1,00,000 /- வரை (1,00,000 /- க்கு அதிகமாக இருந்தாலும்)  மட்டுமே கிடைக்கும். (More than 1 Lakh of deposit @bank(s) is not a safety)

வங்கியில் நாம் சேமிக்கும் / முதலீடு செய்யும் பணத்துக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் காப்பீடு பற்றி அறிய…

https://www.rbi.org.in/Scripts/FAQView.aspx?Id=64

[ Deposit Insurance and Credit Guarantee Corporation – DICGC ]

 

பணவீக்க சரிக்கட்டல் சலுகை (Indexation Benefit):

 

  • கடன் நிதித்திட்டத்தில் நாம் செய்யும் முதலீட்டின் முதிர்வில், நமக்கு பணவீக்க சரிக்கட்டலுக்கான சலுகையும் உண்டு.
  • அதாவது, நாம் வைத்திருக்கும் Fund units  ஐ விற்கும் போது,

3 வருடத்திற்குள்ளாக விற்றால் – நமது வருமான வரம்பிற்கான வரி (குறுகிய கால மூலதன  ஆதாயம் ) – (As Per Tax Slab – 10 / 20 / 30 %)

3 வருடத்திற்கு மேற்பட்டு விற்றால் – பணவீக்க சரிக்கட்டலுக்கு பிறகு, 20 % வரி (நீண்ட கால மூலதன ஆதாயம்)

 

  • மற்றொரு கூடுதல் விஷயம், கடன் நிதித்திட்டத்தில் அவசரத்திற்கு உங்களுக்கு ஒரு சிறு தொகை வேண்டுமென்றால் நீங்கள் சில Unit ஐ விற்று  எடுத்துக்கொள்ளலாம்; ஆனால் FD ல் அவ்வாறு செய்திட முடியாது; நீங்கள் உங்கள் வைப்பு திட்டத்தை முழுமையாக முடித்து, முழு பணத்தையும் எடுக்க வேண்டும்.

 

புரிந்துணர்வுக்கு, அட்டவணையை பார்க்கவும்.

 

பட்டன் கைபேசி (FD)  vs தொடுதிரை கைபேசி (Debt Funds):

 

fd-vs-debt

 

முடிவு செய்யுங்கள்,

உங்கள் கடந்த கால நம்பிக்கையா (FD) (அ) வளர்ச்சியா (Debt Funds)  !!!!

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்…

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

நீங்கள் ஹீரோவா, ஜீரோவா ? EMI VS SIP

 

EMI – EQUATED MONTHLY INSTALLMENT

SIP – SYSTEMATIC INVESTMENT PLAN

 

 

உங்களுக்கு ஒரு ஆசை… ஒரு அழகான மற்றும் நல்ல சிறப்பம்சங்கள் கொண்ட செல்போன் (Mobile) வாங்க வேண்டுமென்று; சந்தையில் அதன் விலை ரூ. 15,000 /- மட்டுமே என வைத்து கொள்வோம். நல்ல Features உள்ள செல்போன் தான்; ஆனால் கையில் தான் பணம் சற்று குறைவாக உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் இருப்போ மிகவும் குறைவு. Minimum Balance ஐ பராமரிப்பது கூட, சில சமயம் சிரமமாக உள்ளது; யாரிடமாவது கைமாத்து வாங்கலாமா ? அவர்களுக்கு திரும்ப கொடுக்க வேண்டுமென்றாலும், அடுத்த மாத சம்பளம் தானே இருக்கு ! என்ன பண்ணலாம் ???

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நினைத்து கொண்டிருந்த அந்த நேரத்தில், உங்களுக்காக ஒரு அதிர்ஷ்ட விளம்பரம் அழைக்கிறது; ஆம், அதிர்ஷ்ட விளம்பரமே தான் !!!  நீங்கள் வாங்க நினைக்கும் மொபைல் போனின் விளம்பரத்துடன்…

என்ன ஒரு ஆச்சர்யம் ! நீங்கள் வாங்க நினைக்கும் மொபைல் போனுக்கு, நீங்கள் எந்த முன்பணமும் செலுத்தாமல் வீட்டிற்கு எடுத்து செல்லலாம்; நீங்கள் பதிவு செய்த அன்றைய தினமே ரூ.15,000 /- மதிப்புள்ள பொருள் உங்களுக்கு சொந்தம் 🙂

ஆமாங்க, அந்த அதிர்ஷ்ட  EMI (EQUATED MONTHLY INSTALLMENT)  🙂

பிளான் இது தான்; செலக்ட் பண்ணுங்க என்று அந்த விளம்பரம் சொல்கிறது. முன்பணம் எதுவும் இல்லை !

 

EMI(Equated Monthly Installment):

 

நீங்கள் வாங்க நினைக்கும் ஒரு பொருளுக்கு, எந்த முன்பணமும் செலுத்தாமல் (அ) சிறு தொகை ஏதேனும் செலுத்தி விட்டு, மீதத்தொகையை மாத தவணைகளில் வட்டியுடன்  செலுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது.

Loan  EMI:  For Rs. 15,000 /-                     Rate of Interest:   12 %
6 Months 12 Months 24 Months
2588/- Monthly 1333/- Monthly 706/- Monthly

 

சாதகங்கள்:

  • நாம் விருப்பப்பட்ட பொருளை உடனடியாக, நாம் நினைத்த நேரத்தில் வாங்கலாம்; முழுத்தொகையையும் செலுத்தாமல் !
  • குறுகிய கால (அ) அவசர கால தேவைகளுக்கு ஏற்றது(Short term/Immediate Needs)

 

பாதகங்கள்:

  • பொருளின் அசல் சந்தை (Actual Price) மதிப்பை விட நீங்கள் அதிக விலை கொடுத்து வாங்குகிறீர்கள்; அதாவது நீங்கள் செலுத்தும் வட்டி % (Paying more than the Actual market price )
  • ஒரு பொருளை நீங்கள் உடனடியாக பெற்றாலும், அதற்கு நீங்கள் முழு உரிமை பெற முடியாது (உங்கள் தவணை காலம் முடியும் வரை)
  • செலவழிக்கும் பழக்கம் அதிகரிக்கும்; எதையும் உடனே வாங்க வேண்டுமென்ற எண்ணம் (Impulsive Buying) ஏற்படலாம்; நீங்கள் எதிர்காலத்தில் கடன்காரராக மாறலாம்.

 

SIP(Systematic Investment Plan / Recurring):

 

இலக்குகளுக்காக (அ) எதிர்கால தேவைகளுக்காக, ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் (Monthly, Quarterly, Yearly – Frequency) உங்கள் பணத்தினை முதலீடு செய்வது / சேமிப்பது; முதலீட்டின் முதிர்வில், உங்கள் இலக்குகளில் (அ) தேவைகளை நிறைவேற்றுவது.

 

SIP என்றாலே, பரஸ்பர நிதி திட்டம்(Mutual Funds) தான் என்று நாம் முடிவு செய்து விட கூடாது. நீங்கள் சேமிக்கும் அஞ்சலக சேமிப்பு(Postal Savings), வங்கி RD, PF ம் SIP ஆகும்.

 

உங்கள் இலக்கு, ரூ. 15,000 /- மொபைல் போன் என்றால்,

SIP Goal:     Rs. 15,000 /-  (Mobile Phone)    Expected Return:   10 %
6 Months 12 Months 24 Months
2430 /- Monthly 1200 /- Monthly 565 /- Monthly

 

சாதகங்கள்:

  • சேமித்து வாங்கும் பழக்கம் ஏற்படுவதினால், நீங்கள் அவ்வளவு சீக்கிரமாக எந்த பொருளையும், பணத்தையும் விரயம் செய்யமாட்டீர்கள்.
  • நீங்கள் வாங்க நினைக்கும் பொருளுக்கு, முழு தொகையை செலுத்தி சொந்தம் கொண்டாடலாம்.
  • வாங்க நினைக்கும் பொருளின் மதிப்பை விட,  உங்கள் முதலீடு கொஞ்சம் வட்டி வருமானம் அதிகமாகவும் கொடுத்திருக்கலாம்.
  • நீண்ட கால இலக்குகளுக்கு நல்லது (Education, Marriage, Retirement).

 

பாதகங்கள்:

  • அவசர தேவைகளுக்கு(Medical Emergency, Unusal Happenings)  நீங்கள் இலக்குகளை நிர்ணயிக்க முடியாது (அ) காத்திருக்க முடியாது; எனவே முன் கூட்டிய இலக்குகள்/ சேமிப்பு வேண்டும்.

 

 

Climax:  தீர்வு

 

உணர்ச்சிவயப்பட்டு செலவழிக்க வேண்டுமா (அ) இலக்குகளை அடைய சேமிக்க / முதலீடு செய்ய வேண்டுமா என நீங்கள் உங்கள் சூழ்நிலை அறிந்து செயல்படுங்கள்;

அவசரத்திற்கு தவணை உதவலாம்;

வருமுன் காப்பது நல்லதா ?

வந்தபின் வருந்துவதா ?       மூளையை யோசிக்க விடுங்கள் 🙂

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

www.varthagamadurai.com

(Image Courtesy:  fpindia.in )

நீங்கள் ஏழையா , பணக்காரனா ? Know your Networth

 

நீங்கள் ஏழையா , பணக்காரனா ?  

Liabilities and Assets – Networth

 

நீங்கள்  ஏழையா, பணக்காரனா  என்று உங்களிடம்  யாராவது  கேட்டால், நீங்கள் என்ன சொல்வதென்று முடிவெடுப்பீர்கள் ?

🙂

ஏறக்குறைய நாம் நாம் ஏழை என்றோ, ஏழைக்கும் பணக்காரனுக்கும் நடுவே என சொல்வதுண்டு 🙂

சரி, ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டால் ?

நமது சிந்தனை நிறைய சினிமா படங்களுக்கும், அரசியல் வாசகத்துக்கும் போகும் ;  பேசவும் செய்யும்…

இங்கேயும் நாம் சரியான ஒரு முடிவை எடுக்க முடிவதில்லை; ஏன் அவ்வாறு ?

பொருளாதார அறிவை நாம் முழுமையாக கற்று கொள்ளாததும், மற்றவர்கள் ஊடகங்களில் என்ன மாதிரியான விஷயங்களை  பேசினார்கள் என்ற மனப்பதிவையும் வைத்தே நாம் முடிவெடுக்கிறோம் .

 

சில சமயங்களில் நமது தற்காப்புக்காகவும் (பொருளாதார காப்பு) பண விஷயம் சம்மந்தமான பதில்களை நாம் பதிவு செய்யாமல் இருப்பதுண்டு 🙂 சரி அதை விடுவோம்; நம்மிடம் நாமே இந்த கேள்விகளை கேட்க முடிந்தால், சற்று ஆராய்ந்து தான் பதில் வரும். ஏழையா பணக்காரனா என்ற தத்துவம், உலகெங்கும் எல்லா சமயங்களிலும் ஒரு மாபெரும் விமர்சனத்தையே கொண்டுள்ளன; இரண்டும் மனித பிறவிகள் போன்றும், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரியாக இருப்பது போன்றும் கற்பிப்பதுண்டு; உண்மையில், நிதி சார்ந்த விஷயத்தில் ஏழையும்,பணக்காரனும்  என்பது வரவு, செலவை போன்றது !

 

கடனும், சொத்தும் போல… (Liabilities and Assets – Networth)

 

பணத்தை கொடுத்தவன் ஏழை, பெற்றவன் பணக்காரன் என்றால்…

Swiss Bank ல் பணத்தை போட்டவன் ஏழையா ? பணத்தை பெற்ற  Switzerland நாடு ஒரு பணக்காரனா ?  நாம் எப்படி முடிவு செய்வது ???

தனிமனித பொருளாதாரத்தை நாம் அணுகும் போது, அவனது நிதி சார்ந்த பழக்க வழக்கங்களே அவன் ஏழையா, பணக்காரனா என்பதை முடிவு செய்கிறது.

 

உங்களை ஏழையாக்குவது எது, பணக்காரனாக்குவது எது என்பதனை கீழே உள்ள அட்டவணையை கவனியுங்கள்:

Liabilities (கடன் / செலவுகள்) Assets (வருமானம் / வரவுகள்)
  • வீடு,வாகனம் மற்றும் கல்வி கடன்கள்
  • வரிகள்
  • தேவையற்ற காப்பீடு திட்டங்கள்
  • மற்றவர்களுக்காக செய்யும் ஆடம்பர செலவுகள்
  • உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனிக்காமை
  • வாடகை வருமானம் தரும் நிலம் மற்றும் வீடு
  • நியாயமான வட்டி வருமானம்
  • பங்குகள் மற்றும் டிவிடெண்டுகள்
  • நீண்ட கால வியாபார வருமானம்
  • அறிவுசார் வருமானம்

 

RICH DAD, POOR DAD ன் ராபர்ட் கியோஸகி(Robert Kiyosaki) அவர்கள் சொல்வதை போல,

உங்கள் வீடும் ஒரு கடன் தான், அது சொத்து அல்ல

 

நமது அடிப்படை தேவை மற்றும் சிறு வசதிக்காக நாம் ஒரு வீட்டினை வைத்து கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டை வைத்து கொண்டு, அந்த வீடு நமக்கு வருமானம் ஏதும் தரவில்லையென்றால், அது ஒரு சொத்து அல்ல; மாறாக அதற்கு நாம் ஒவ்வொரு வருடமும் செலுத்தும் வரிகளும், பராமரிப்பு செலவு மற்றும் காப்பீடு செலவுகளும் ஒரு கடனே !

 

பணக்காரன்,ஏழை என்ற இரு வார்த்தைகளில் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை; நீங்கள் சம்பாதித்த பணத்தை கொண்டு, இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது முக்கியம். பணக்காரனாக இருப்பதற்கு சுய கட்டுப்பாடு மிகவும் முக்கியம்; ஏழையாக இருக்க நீங்கள் எந்த முயற்சியும் செய்ய வேண்டியது இல்லை.

” குறுகிய தூரம் செல்பவர்கள் வேகமாக செல்வதும், நெடுந்தூரம் பயணிப்பவர்கள் நிதானமாக செல்வதும் சாலைகளின் ரகசியங்கள்…”

அது தான் ஏழை – பணக்காரனின் ரகசியமும்

 

இதோ நீங்கள் இப்போதே பணக்காரனா, ஏழையா என்பதனை அடையாளம் காண: (Know your Networth & Rich-worth Value )

 

Networth =  Total Assets – Total Liabilities

R-worth = Total Assets / Total Liabilites

If  your R-worth > 1.0, then you will be ‘No Need to Fear’… Just Plan for  Financially Free !

If it’s  =< 1.0, then you have to be careful on your Debt…. “Don’t Bankrupt yourself”

 

நிகரமதிப்பு = மொத்த சொத்துக்கள் (அ) வருமானங்கள்  – மொத்த கடன்கள் / செலவுகள்  

உங்களின் நிகரமதிப்பினை, உங்கள் ஆண்டு வருமானத்தை போல, 15 முதல் 20 மடங்கு அதிகரிக்க (அ) பெருக்க முயலுங்கள்.

[ *Conditions Apply – 15-20 மடங்கு,  50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே 🙂  ]

 

பணக்காரமதிப்பு = மொத்த சொத்துக்கள் / மொத்த கடன்கள்

 

உங்களின் பணக்கார மதிப்பு ஒன்றுக்கு(1) மேற்பட்டு இருந்தால் சந்தோசப்பட்டு கொள்ளுங்கள் (அ) இன்னும் உயர்த்த தயாராகுங்கள்.

சமமாக ஒன்று(1)   அல்லது ஒன்றுக்கு குறைவாக இருந்தால், நிதி விஷயத்தில் திருத்தி கொள்ளுங்கள் (கடனை குறையுங்கள்).

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

(Image Courtesy /Slide: www.3rdtour.com )

செல்வந்தர்களின், ‘காத்திருத்தல்’ ரகசியம்: DELAYED GRATIFICATION

செல்வந்தர்களின், ‘காத்திருத்தல்’  ரகசியம்

RICH MEN’S DELAYED GRATIFICATION

 

செல்வம் சேர்ப்பது அப்படி ஒன்றும் கடினமான வேலை இல்லை; அதனை தக்க வைத்து   கொள்வதோ (அ) மென்மேலும் பெருக்குவதோ எல்லோரும் அறிந்த ரகசியம் 🙂  எல்லோரும் அறிந்த ரகசியம், ஆனால் எல்லோராலும் கடைபிடிக்கப்படுவதில்லை 🙂  

 

அந்த எளிமையான ரகசியம்:  ‘ காத்திருத்தல்‘(Wait for Sometime – Delayed Gratification)

 

இது மிகவும் எளிமையான விஷயமாக தெரியும் எல்லோருக்கும் ! ஆனால் அதன் பலனை சில பேர் மட்டுமே கண்டறிவார்கள்; அனுபவிப்பார்கள் !

 

எத்தனை பேர் நம்மில்,

 

  • கணிதத்தில் நல்ல மதிப்பெண் எடுத்து விட்டு, வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கும் போது  கணிதத்தை பயன்படுத்தியிருப்போம் ?
  • காத்திருந்து காதலில் வெற்றியடைந்திருப்போம் ?
  • பத்து மாதம் காத்திருந்து ஒரு உயிரை வரவேற்றியிருப்போம் ?
  • நமது நீண்ட கால பள்ளி வாழக்கையை / கல்லூரி படிப்பை  முடித்திருப்போம் ?
  • நீண்டகாலம் காத்திருந்து நல்ல வேலைக்கு சென்றிருப்போம் ?
  • நமக்கு பிடித்த விஷயங்களை / இலக்குகளை காத்திருந்து அடைந்திருப்போம் ?
  • பஸ் நிறுத்தத்தில் / டிராபிக் சிகனலில் / ரேஷன் கடையில் / திரையரங்குகளில் காத்திருந்து வெற்றியடைந்து இருப்போம் ?

இது போன்ற அனுபவமே ‘காத்திருத்தலின்’ ரகசியம். பலனை நேர்மறையாக  அடைந்திருக்கும் போது உங்கள் உள்ளம் எப்படியிருக்கும் ?

 

அது தான்,  பணக்காரர்களின் பணம் பண்ணும் ரகசியத்தில் ‘காத்திருத்தலே’ மிகவும் அடிப்படையான ஒன்று.

 

நீங்கள் உங்கள் இலக்குகளை நிர்ணயித்து, காத்திருந்து வெற்றி பெறலாம்.

 

உங்கள் இலக்கு குறுகிய மற்றும் நீண்ட காலமாக இருக்கலாம்; ஆனால் ‘காத்திருத்தல்’ மிகவும் முக்கியம்; அப்போது தான் உங்கள் இலக்குகள் எட்டப்படும்.

 

உங்கள் இலக்கு:

 

  • நீண்ட நாள் மற்றும் வெகுதூர சுற்றுலா பயணமாக இருக்கலாம்;
  • நான்கு சக்கர வாகனம் வாங்குவதாக;
  • ஒரு புது வீடு காட்டுவதாக (அ) வாங்குவதாக;
  • குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணம்;
  • உங்கள் மற்றும் உங்கள் மனைவியின் ஓய்வு காலம் குறித்து;
  • சமூக உதவி / சேவை செய்வதன் சார்பாக மற்றும் பிற…

 

உங்கள் இலக்குகளை நிர்ணயித்த பிறகு எவ்வளவு காலத்தில் நாம் அடைய வேண்டும் (அ) எப்போது இலக்குகள் அடையப்பட வேண்டும் என்பதை குறித்து கொள்ளுங்கள்;

 

நமது இலக்கு மற்றும் அடைய வேண்டிய காலம் முடிவு செய்யப்பட்ட பின், எவ்வாறு அந்த பணத்தை / திட்டத்தை முதலீடு செய்வது என்பதனை பற்றிய சிந்தனையும் வேண்டும்.

 

உதாரணம்:

 

உங்கள் இலக்கு:  ரூ. 1,00,000 /-  ( குழந்தையின் படிப்பு)

காலம்:   10 வருடங்கள்

 

investing-with-goals

 

 

‘காத்திருத்தல்’ இலக்கிற்கு எவ்வளவு முக்கியமோ, அதே போன்று “ காலமும், வட்டி விகிதமும்’”அவசியம்.

 

The 36th Chamber of Shaolin” என்ற திரைப்படத்தை நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும், இலக்கினை அடைய நீங்கள் எவ்வளவு நிதானமாக செயல்பட வேண்டுமென்று ! அப்புறம் என்ன, இப்போதே உங்களின் இலக்கு மற்றும் காலத்தை நிர்ணயுங்கள்;

 

காத்திருங்கள்; பலனை அடையுங்கள் !

 

“If you Born Poor, it’s not your Mistake;  But  if you Die Poor,  it’s Your Mistake”

 — Bill Gates, Microsoft

 

D-G (Delayed Gratification) என்பது உங்களது மன வலிமையை(பலம்) அதிகரிக்கும் வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதாகும்.

 

ஒரு ஒலிம்பிக் வெற்றியாளரை போல…!!!

 

நீங்கள் மாதாமாதம் ரூ. 1000/- ஐ ஒரு வங்கியில் 10 % வட்டி விகிதத்தில் ஒரு வருடத்திற்கு சேமிப்பு / முதலீடு செய்வதாக வைத்து கொள்வோம்.(Recurring Deposit)

 

நீங்கள் ஒரு வருடம் சேமிக்கும் போது முடிவில், ரூ. 12,665/- கிடைக்கும்.

 

அதாவது, உங்கள் முதலீட்டுக்கு (1000 X 12 = 12000/-) வட்டி வருமானமாக ரூ.665/- கிடைத்துள்ளது.

 

நீங்கள் உங்கள் முடிவில் சிறு மாற்றம் செய்கிறீர்கள்; அதாவது ஒரு வருடத்திற்கு பதிலாக, இரண்டு வருடம் முதலீடு செய்யலாம் என்று; உங்கள்  தேவையை தள்ளி போடுகிறீர்கள் (அ) அந்த பணம் இரண்டு வருடத்திற்கு தேவையில்லை என கொள்வோம்.

 

இரண்டு வருட முடிவில், உங்களுக்கு கிடைப்பது ரூ.26,645/-

 

அதாவது, உங்கள் முதலீட்டுக்கு (1000 X 24 = 24000/-) வட்டி  வருமானமாக ரூ.2645/- கிடைத்துள்ளது !

 

முதல் வருட முடிவில் உங்கள் வட்டி வருமானமோ, ரூ.665/- மட்டுமே; ஆனால் இப்போது, நீங்கள் இன்னும் ஒரு வருடம் காத்திருந்ததால் உங்களுக்கு கிடைத்ததோ, 4 (நான்கு) மடங்கு வருமானம் (ரூ.2645/-).

 

நீங்கள் காத்திருந்தால், இன்னும் செல்வதை பெருக்கலாம்…

 

  • 1 வருட முடிவில்,  ரூ. 12665/-
  • 2 வருட முடிவில்,  ரூ. 26645/-
  • 5 வருட முடிவில்,  ரூ. 77910/-
  • 10 வருட முடிவில்,ரூ.2,05,570 /-

 

ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் எப்போதும், எந்த பொருளையும் உடனடியாக வாங்கும் முயற்சியில் /உணர்ச்சியில் உள்ளனர்; பணக்காரனோ எப்போதும் தங்களது தேவையறிந்து, காத்திருந்தே முடிவில் அனுபவிக்கிறார்கள்; அதனால் தான் அவர்கள் எப்போதும் பணக்காரர்கள் !

 

EMI வேணுமா (அ) SIP எடுக்கலாமா  ?

 

சேமிக்கலாமா  (அ) செலவழிக்கலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

குப்பன், சுப்பன், கப்பன் – How the Bank Works

 

 

குப்பன், சுப்பன், கப்பன் – How the Bank Works

 

குப்பன், சுப்பன், கப்பன் மூவரும் பள்ளிக்கால நண்பர்கள்; அவர்களுக்குள் எப்போதும் ஒரு ஒற்றுமை உண்டு; தங்கள் அலுவலக விடுமுறை நாட்களில் சந்தித்து அரசியல் மற்றும் சினிமா விமர்சனம் செய்வதுண்டு. தினசரி நாளிதழளையும், தொலைக்காட்சி பெட்டியையும் அவர்கள் பொழுதுபோக்காக கொண்டிருந்தனர். குப்பன் ஒரு அறிவாளி; ஆனால் ஒரு செலவாளியும் கூட… எப்போதும் தன்னை மற்றவர்கள் அறிவாளியாக, புகழும்படியாக இருக்க ஆடம்பரமாக செலவும் செய்வான். சுப்பன் ஒரு மடச்சோம்பேறி. ஆனால் (பொருளாதாரம்) பண விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருப்பான். அவ்வளவு எளிதாக யாரும் அவனிடம் அவசர தேவைக்காக கூட பண உதவி பெற முடியாது. மற்றவர்களின் நிதி ஒழுக்கத்தை பார்த்தே பண உதவி செய்பவன். கப்பன் ஒரு சிறந்த சேவை மனப்பான்மை கொண்டவன்; குப்பன்,சுப்பனை விட அதிகம் படிக்காவிட்டாலும், நண்பர்களிடையே நல்ல உறவை காப்பவன்.

 

ஒரு சமயத்தில், குப்பனுக்கு தனது தொழிலுக்கான பணத்தை திரட்டுவதில் மிகுந்த நெருக்கடி; ஆதலால் தான் எங்கேனும் கடன் வாங்க முடிவு  செய்தான்;நண்பர்களிடமும், உறவுகளிடமும் பண உதவி கேட்டான். சில நேரங்களில் அவனது அறிவாளித்தனமும் கடன் கேட்க முழுவதுமாக முயற்சிக்கவில்லை. அதனால், தனது நெருங்கிய நண்பர்களான சுப்பன், கப்பனிடம் கேட்டான். சுப்பனோ இவனை நம்பி பணம் தர தயாராக இல்லை. கப்பனிடமோ குப்பன் கேட்கும் அளவுக்கு பணமில்லை. இருந்தாலும் பண விஷயத்தில் சுப்பனுக்கும், குப்பனுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டு பேரும் நிதிக்கொள்கையில் சரியான ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவர்கள்.  அதனால், கப்பன் சுப்பனிடம் தனக்கு பண உதவி செய்யுமாறும், அதற்கு வட்டியும் வழங்குவதாக தெரிவித்தான். சுப்பனுக்கும் சந்தோசம் தான்.

 

அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது; அதாவது ரூ. 1,00,000 /- க்கு   7 % வட்டியில் கடன் பெற்றதாக !  கப்பனை பொறுத்தமட்டில், ரூ. 1,00,000 /- என்பது ஒரு வைப்பு  தொகையை போல !

தான் பெற்றுக்கொண்ட இந்த தொகையை குப்பனுக்கு, 10 % வட்டியில் கடனாக கொடுத்தான். தான் சுப்பனிடம் எவ்வாறு இந்த தொகையை வாங்கியதன் நிலையையும் சொன்னான்; எனவே கடனை நியாயமான முறையில் செலுத்தவும் அறிவுறுத்தினான். குப்பனும் ஏற்றுக்கொண்டான்; இதற்கும் ஒரு ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது.
இப்போது, நம்மை பொறுத்தவரை குப்பன் ரூ. 1,00,000 /- ஐ 10 % வட்டியில்  கடனாக பெற்றவன்; சுப்பன் ரூ. 1,00,000 /- ஐ 7 % வட்டிக்கு கடன் கொடுத்தவன். இடையில் உள்ள கப்பன் ஒரு இடைத்தரகராக செயல்பட்டுள்ளான். இதற்காக அவன் பெறும் சன்மானம் 3 % வட்டி வருமானம் (ரூ. 1,00,000 /- க்கு)   !!! இந்த 3 % வருமானத்தை கப்பன் தனது சேவைக்காக பயன்படுத்தி கொள்வான்… சேவை கட்டணமோ 🙂

இவ்வாறாக தான் ஒவ்வொரு வங்கியும் செயல்படுகிறது; கடனாக கொடுக்க ஒருவரும், கடனாக பெற மற்றொருவரும் இருந்தால், அந்த இரண்டு பேரையும்  இணைக்கும் பாலமாக வங்கி செயல்படும்; வட்டியில் ஏற்படும் வித்தியாசமே வங்கியின் வருமானமாகும் !

 


 

 

bank-works

 


 

ஒரு நபர் ரூ. 100 /- ஐ  வங்கிக்கு கடன் கொடுப்பதாகவோ  (அ) வைப்பு  தொகையாக கொண்டுள்ளார்(Lender) என்றால், அந்த வங்கி அவரின் 100 ரூபாயை மற்றொரு நபருக்கு சில வட்டி விகிதத்தில் (உதாரணம்: 10 %) கடனாக கொடுக்கும்; கடன் பெறுபவர்(Borrower) வட்டியுடன் தனது  கடனை (ரூ. 100 + 10 = 110 /- )  வங்கிக்கு செலுத்துவார்;  வங்கி அதனை பெற்று, கடன் கொடுத்தவர் / வைப்பு தொகை கொண்டவருக்கு சில வட்டி விகிதத்துடன் (ரூ. 100 + 7 = 107 /- ) திரும்ப கொடுக்கும்; மீதமிருக்கும் வட்டி வருமானம் (Interest Income)(ரூ. 10 – 7 = 3 /- ), வங்கியின் வருமானமாகும்….

 

இந்த வங்கியின் செயல்பாட்டை ஒழுங்குமுறைப்படுத்த, அண்ணாத்த “ பாரத ரிசர்வ் வங்கி “(RBI – Reserve Bank of India) உள்ளது.
ஆக, நாம் கடன் கொடுப்பவரா (அ) கடன் பெறுவாரா என்பது நம்மை பொறுத்த விஷயம்; ஆனால்,  நமது தேவைக்காக ‘கப்பன்’ (Bank) என்பவன் எப்போதும் தயாராக உள்ளான்…

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

    

                                           

                                                                                                                        

முதலீட்டினை திரட்டுவதற்கான வாய்ப்புகள் – Mobilize Investment Opportunities

முதலீட்டினை திரட்டுவதற்கான வாய்ப்புகள்:

How to Mobilize Investment Opportunities

சேமிப்பு மற்றும் முதலீட்டை பற்றி நாம் பேசும் போது, நம்மில் பெரும்பாலோருக்கு வரவும் – செலவும் சரியாக உள்ளது; அப்புறம் எங்கே சேமிப்பும், முதலீடும் என்று கேள்வி கேட்பதுண்டு. அதுவும் சரி தான். இது ஒரு நிறுவனம் வரவும், செலவும் சமமாக உள்ளது என்று ஒரு அட்டவணையில் (Income Statement) கணக்கு காண்பிப்பது போல தான் (லாபமீட்டினாலும்) !
உண்மையான நிலையில் நமக்கு வரவும் – செலவும் சரியாக இருக்கிற பட்சத்திலும், நாம் நமது சேமிப்பு (அ) முதலீட்டிற்கான நிதியை தேடுவதற்கான வாய்ப்புகளை அறியலாம். உங்களை போன்றே, (வரவு-செலவு) நிதிச்சுமையில் மாட்டிக்கொண்டிருக்கிறேன் என்று எண்ணுகையில், நான் கண்டறிந்த சில வாய்ப்புகள்…
சேமிப்பை / முதலீட்டிற்கான நிதியை திரட்டுவதற்கான வாய்ப்புகள் இதோ:
  • பழைய நாளிதழ்கள், மாத இதழ்கள் (எடைக்கு)விற்பதன் மூலம் (Old Newspapers, Magazines Selling)
  • பயன்படுத்தப்பட்ட பால் பாக்கெட்கள் (Used Milk Packets)
  • பயன்படுத்தப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் (Used Water Bottles)
  • வீட்டிலுள்ள பழைய பொருட்கள் விற்பனை  மற்றும் தேவையற்றதை வாங்காமல் இருப்பதன் மூலம் (Selling Unused Old things and Not buying unnecessary household things)
  • வரிச்சலுகையில் கிடைக்கும் பணத்தொகை (Tax Exemption / Refund Amount)
  • சம்பளம் / பதவி உயர்வு மூலம் கிடைக்கும் தொகை (Increment / Promotion / Bonus)
  • ஷாப்பிங் செய்யும் போது கிடைக்கும் சலுகை தொகை (Discounts on Shopping)
  • இணையதள  வருமானம் (Internet Income)
  • உங்கள் அறிவு / திறமையின் மூலம் கிடைக்கும் பகுதி நேர வருவாய் (Part Time Income through Knowledge / Skills)
இன்னும் பல…. உங்கள் சிந்தனைகளிலிருந்து 🙂 
மேலுள்ள வாய்ப்புகளை கண்டறிந்து சேமிப்பதற்கு நீங்கள் எந்த மெனக்கெடவும் தேவையில்லை; சுயமாக நமக்கு சுற்றியுள்ள வாய்ப்புகளை நாம் சிந்திக்க தொடங்கினாலே போதும்; நான் கண்டறிந்த வாய்ப்புகளின் மூலம், எனது பழைய நாளிதழ்கள் மற்றும் பால் பாக்கெட்கள் எனக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 50 ஐ வருவாயாக கொடுத்தன. இதனை நான் அஞ்சலக சேமிப்பில் 5 வருட சேமிப்பு திட்டத்தில்(Recurring Deposit – RD)  7 % வட்டி விகிதத்தில் வருவாயாக, முடிவில் ரூ. 3600 /- ஐ சம்பாதித்தேன். இது என்னுடைய வாய்ப்புகள் சம்பாதித்து கொடுத்தவையே என்று தான் சொல்ல வேண்டும்; என்னுடைய இந்த அஞ்சலக சேமிப்பு வருமானம் என்பது ஒரு சிறு தொகை மட்டுமே; இதற்கு மேலும், நல்ல வருமானம் தருகின்ற நிரந்தர மற்றும் நம்பகமான வாய்ப்புகளை நான் மற்ற அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறேன்.  நீங்களும் உங்களது சிந்தனையின் ஓரமாக உள்ள ஒரு சேமிப்பு / முதலீடு திரட்டுவதற்கான வாய்ப்புகளை கண்டறியலாம். இதற்கு நமக்கு வேறு எந்த அந்நிய முதலீடும் (Friends’ Debt Instrument – FDI / கடன்) தேவையில்லை !
வாழ்த்துக்கள், உங்கள் வாய்ப்புகளுக்கு… 
சிறு துளி பெரு வெள்ளம் !

கற்று கொள்வதற்காக மட்டுமே வேலை செய்யுங்கள்: Work Money For you

கற்று கொள்வதற்காக மட்டுமே வேலை செய்யுங்கள்; பணத்திற்காக வேலை செய்ய உங்கள் வாழ்நாள் முழுவதையும் அனுமதிக்காதீர்கள்

Don’t work for Money; Make it work for You…

பத்திரிக்கைகளில், வேலை வாய்ப்பின்மை என்ற செய்தியை நாம் பரவலாக பார்த்திருப்போம்; இந்த பரவல் அரசியல் காரணமாக இருந்தாலும் அது ஒரு புறம் இருக்கட்டும். உண்மை என்னவெனில், கடந்த 20 வருடங்களில் அதற்கு முன்பிருந்ததை விட, இன்று நாம் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். படித்த படிப்புக்கு வேலை அமையா விட்டாலும், நாம் இன்று ஏதோ ஒரு வேலையை செய்வதற்கு தயாராக உள்ளோம்; உந்தப்பட்டும் உள்ளோம். முன்பு ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவரே வேலை பார்த்து வந்த நிலை இன்று அப்படி இல்லை. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெரும்பாலானோர் இன்று காத்திருக்கவும் தயாராக இல்லை. தொழில்களும் பெருகி விட்டன; நுகர்வோர்களும் அதிகரித்து விட்டனர்
அதனால், இன்றைய தொழில்நுட்ப உலகில் வேலை என்பது ஒரு கடினமான காரியம் அல்ல !  ஆனால்…
நாம் எல்லோரும் பணத்திற்காக மட்டுமே வேலை செய்ய பழகிவிட்டோம்; பணத்தேவைக்காகவே வேலைக்கும் செல்கிறோம். இன்று பணம் தான் நமது உடல் நலத்தை விட பிரதான விஷயமாக உள்ளது. நமது அடுத்த உந்துதலுக்கு அது தான்  துணையாக உள்ளது என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் அது தான் இல்லை ! பணம் ஒரு கருவி போல… அதனை முழுமையாக இயக்குவது நாம் தான். பணத்திற்காக நாம் ஒவ்வொரு விஷயத்தையும் அணுக ஆரம்பித்து விட்டதால், நல்ல உறவுகளை பேணுவதை கூட மறந்து விட்டோம். நாம் பணத்திற்காக வேலை செய்ய ஆரம்பித்து விட்டோம்; எதற்கு ?
அன்றாட அடிப்படை வசதிகளுக்கு, வருங்கால சந்ததியினருக்கு, சொத்து சேர்ப்பதற்கு, ஓய்வு காலத்திற்கு, மற்றவர்களை போல தோன்றுவதற்கு… சரி, இதற்காக நாம் எத்தனை காலம் உழைக்கப்போகிறோம் ??
நம் ஆயுள் முழுவதும் ?? இங்கு தான் நமது குறிக்கோள் மழுங்கி போய் (பொய்) விட்டது. மறுபடியும் இதே குறிக்கோளை தானே நமது சந்ததியினருக்கும் ஆயுள் முழுவதும் சொல்லி கொடுக்கிறோம். நாம் ஒன்றும் சூப்பர் ஸ்டாரின், “அருணாச்சலம்” (Rajini kanth’s Arunachalam Tamil Movie) படத்தினை போல “பணம்” எப்படி கையாள வேண்டும் கற்று கொடுக்கவில்லையே !  பணத்தினை கற்று கொடுக்க, கோடிகள் தேவையில்லை; சில பத்து, நூறுகள் போதும் 🙂
நீங்கள் உங்களது இளமையில் ஒரு வேலை தேடி, உழைத்து பணம் பண்ணுகிறீர்கள்; திருமணமாயிற்று; குழந்தைகள் வந்தன; அவர்களின் படிப்பு, வேலை, திருமணம்… இப்போது உங்களது ஓய்வு காலம் வந்து விட்டது !  உங்களது பொருளாதார தேவைக்காக(பாசத்திற்காக மட்டுமல்ல) உங்களது குழந்தைகளை நாடுவீர்கள். இல்லையென்றால், ஓய்வுக்கு பின்னும் பணத்தினை(வேலையை) தேடுவீர்கள்; இது முற்றிலும் ஒரு தவறான வாழ்க்கை முறையாகவே நான் கருதுகிறேன்.
எந்த தன்னலமில்லாமல் நமது தேச நலனுக்காக பாடுபட்ட ஆத்மாக்களை விடவும், நாம் சற்று சுயநலத்துடன் தான் திட்டம் போட்டோம். திட்டம் போட்டு பணத்திற்காக மட்டுமே உழைக்கவும் தயாரானோம். அதனால் தான் மீண்டும் சொல்கிறேன்…
 கற்று கொள்வதற்காக மட்டுமே வேலை செய்யுங்கள்; பணத்திற்காக வேலை செய்ய உங்கள் வாழ்நாள் முழுவதையும் அனுமதிக்காதீர்கள் !
தொழில்களை உருவாக்குங்கள்.
 
பணத்திற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்காமல், பணம் உங்களுக்காக உழைக்குமாறு கற்று கொள்ளுங்கள்
உங்கள் பணம் உங்களுக்காக உழைப்பதற்கான குறிக்கோள் மற்றும் வாய்ப்புகள்:
  • உங்கள் குறுகிய மற்றும் மத்திம கால தேவைக்காக சேமிக்க துவங்குங்கள். அது எப்போதும் உங்களுக்கு ஒரு பொருளாதார சுதந்திரத்தை தரும். (Savings for Goals)

 

  • அவசர கால நிதி என்பதை ஒரு கடமையாக்கி கொள்ளுங்கள். (Create Emergency Fund)

 

  • உங்களது ஓய்வு கால வாழ்க்கையை (நிதியை) குறித்து முன் கூட்டியே திட்டமிடுங்கள். (Plan for the Retirement Earlier)

 

  • முடிந்தவரை உங்கள் கடன் சுமையை குறைத்து கொள்ளுங்கள் மற்றும் கடனில்லா வாழ்க்கை முறையை கவுரவியுங்கள். (Be on Low-Debt /Debt Free)

 

  • உங்களது அறிவை பணம் திரட்டும் செயலாக மாற்றுங்கள்; உங்களது  நண்பர்கள் குழு அமைத்து, ஒரு நேர்மையான மற்றும் புதுமையான தொழிலை செய்ய பழகுங்கள்; வேலை வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.(Entrepreneurship)
  • நல்ல ஆரோக்கியமான உறவுமுறைகளை உங்கள் வட்டாரத்தில் உருவாக்குங்கள்; மற்றவர்களுக்கு உதவி செய்ய எப்போதும் தயாராகுங்கள். (Build Healthy and Wealthy  Relationship – Help Others)
வாய்ப்புகள் (Passive Income):
  • பங்குகள் மூலம் வருமானம் (Dividend Income)
  • வட்டி வருமானம் (Interest Income)
  • வீட்டு வாடகை மற்றும் விற்பனை வருமானம் (Realty and Rental Income)
  • இணைய தள பொருட்கள் விற்பனை வருமானம் (Online Product Selling)
  • இணைய பிளாக்கிங் (Internet Blogging)
  • மற்றும் பிற அறிவு சொத்து சார்ந்த வருமானம். (Income through What you know)
பணத்திற்காக வேலை செய்யாமல் இருக்க சில பேரால் மட்டுமே முடியும் என்றாலும், உங்கள் பணம் உங்களுக்காக உழைப்பதற்கான வாய்ப்புகள் எல்லோருக்கும் சாத்தியமே !
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

நீண்ட காலத்திற்கு தயாராகுங்கள்:Creating Long term Wealth

நீண்ட காலத்திற்கு தயாராகுங்கள்: பொறுமை கடலினும் பெரிது 

 Creating Long Term Wealth

 

பொறுத்தார் பூமி ஆள்வார்…
பொறுமை கடலினும் பெரிது…
மிகவும் அற்புதமான குறளும் கூட ! ஆனால், நாம் நமது வாழ்நாளில் அதிகம் பயன்படுத்தப்படாத சிந்தனையும் கூட !
நாம் செல்வத்தை சேர்ப்பதிலும்(Long Term Wealth) இவ்வாறு தான் கடமையாற்ற வேண்டும். நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று தான் இதுவும், “ஒரு மரத்தை வளர்த்து(Tree Plantation) அதன் பயனை அனுபவிக்க வேண்டுமென்றால்… விதை விதைத்து, நீரூற்றி, இலை,தண்டு, பூக்கள் விட்டு காத்திருக்க வேண்டும்; காத்திருத்தல் மிகவும் அவசியம்; நாம் அனுபவிக்க முடியாவிட்டாலும், நமது வாரிசுகள் (சந்ததியினர்) உறுதியாக அனுபவிக்கலாம்” இது தான் நீண்ட கால பயனுக்கான அடிப்படை விதி; காத்திருத்தலே அவசியம், செல்வம் சேர்ப்பதிலும் !
நீங்கள் மரத்தை  விஷயங்களை எல்லாம் இப்போது மறந்திருப்பீர்கள். ஏனென்றால் நமக்கு அது ஒரு வேற்று கிரக வாசி போல ஆகி விட்டதல்லவா 🙂  அதனால் நமக்கு பழக்கப்பட்ட ஒரு விஷயத்தை கொண்டு ஆராய்வோம். அது தாங்க, நமது குழந்தைகள், வாரிசுகள் !!! மிகவும் புத்திசாலித்தனமாக நாம் யோசித்தவை 🙂 அதாவது நமது வாரிசுகள், நாம் கண்ட எண்ணத்தை, நிறைவேற்ற இந்த மண்ணில் ஜனித்ததாக நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அதனால் நாம்  அந்த உயிர் கருவிலிருந்து உருவாகும் போது என்ன என்னவோ செய்கிறோம். அந்த உயிருக்கு நல்ல சத்தை கொடுக்கிறோம்; நேர்மறை / எதிர்மறை எண்ணங்களை செலுத்துகிறோம் (ஊசி மூலம் இல்லாமலே ; நீங்கள் எதிர்பார்க்கிற எண்ணம், அந்த உயிரோட்டம் பிரதிபலிக்க எத்தனை காலம் ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா ?
18 வருடங்கள் ?  23 வருடங்கள் ?  25 வருடங்கள் ?
என் குழந்தை ஒரு டாக்டர், என்ஜினீயர்,  அரசு வேலை, வெளிநாடு, தொழிலதிபர், பென்ஷன் திட்டம்,,,…. ஆவதற்கு !
நமது எண்ணம் நிறைவேற, அந்த உயிருக்கு இவ்வளவு காலம் தேவைப்படுகிறது என்றால், செல்வம் சேர்ப்பதிலும் அந்த காத்திருப்பு தன்மை தேவை(Patience).

You can’t produce a baby in one month by getting nine women pregnant  ― Warren Buffett

இதை விட, காத்திருத்தலுக்கு(Patience) ஒரு எளிய விளக்கம்(இன்றைய காலத்தில்) இருக்க முடியாது  🙂
நீண்ட காலத்திற்கு நீங்கள் தயாரானால்…
  • மரம் –  காய் கனிகள், பறவைகளுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் உணவளிக்கும் வகை, சுற்றுப்புறத்திலுள்ள கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கி, பலன் தரும் ஆக்சிஜனை வெளியிடுகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவை தடுக்கிறது; சுற்றுப்புற மாசுபடுத்தலை கட்டுப்படுத்துகிறது.

 

  • மண் – நல்ல சத்தான உணவினை அளிக்க பயன்படுகிறது, சுத்தமான காற்று மற்றும் நீர்நிலை ஆதாரங்களை அதிகப்படுத்துகிறது; சுற்றுப்புற மாசு மற்றும் கரியமில வாயுவை கட்டுப்படுத்துகிறது.

 

  • மனம் – நல்ல உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க உதவுகிறது. பிரபஞ்ச ரகசியம் மற்றும் அறிவியல் வாயிலாக அறிய மேம்படுகிறது.  திட்டமிட்டு செயல்படுகிறது,எண்ணியவை கைகூடுகிறது; நல்ல மனம் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குகிறது.
நீண்ட கால செல்வத்திற்கான வழி…  கற்றுக்கொள்ளுங்கள் 
  • பணவீக்கத்தை (Inflation)
  • வட்டி விகிதத்தை (Interest Rates)
  • வீட்டு மனை விற்பனையை (Real Estate)
  • வாடகை வருமானம் (Rental Income)
  • அரசு மற்றும் தனியார் வரியில்லா பத்திரங்கள் (Tax Free Bonds)
  • பங்குச்சந்தை  (Share/Stock Market)
  • இணைய வழி வருமானம் (Internet / Online Income)
  • பிற வருமானம் கொடுக்கும் அறிவை (நேர்மையான முறை)
மற்றும்  பொறுமையை(Patience)…
மேலே சொன்ன வழியில் நாம் நீண்ட கால நோக்கத்தில் மட்டுமே செல்லவும். வீட்டுமனை மற்றும் பங்குச்சந்தையை நாம் குறுகிய கால நோக்கில் பார்த்தால் பலன் கிட்டாது. பங்குச்சந்தை பற்றி நம்மில் நிறைய பேருக்கு விழிப்புணர்வு இல்லை என்று சொல்லலாம். அது ஒரு சூதாட்டம் என்ற சிந்தனையும் பலருக்கு இருக்கலாம்; ஆனால் நீங்கள் வேலை செய்யும் அரசோ (அ) நிறுவனமோ உங்கள் பணத்தை ஏன் பங்குசந்தையில் முதலீடு(NPS,EPF,LIC,Insurance,Bank Deposits) செய்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவும். அதற்கு முன், நீங்களே கற்று கொண்டு உங்கள் செல்வத்தை சேருங்கள்.
 காலையில் பல்துலக்குதல் முதல்…  இரவு படுக்கைக்கு போகும் வரை(Brush to Bed) நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருளும்(Household Products) பங்குசந்தையே !  உங்களின் தேவைக்கும் உற்பத்திக்கும்(Demand-Supply) உள்ள இடைவெளியே நீங்கள் எதிர்பார்க்கும் விலைவாசி ! உங்கள் வரிப்பணமே, உங்களுக்கு வழங்கப்படும் சலுகை மற்றும் இலவசங்கள் ! (Taxes to Free Things)
செல்வம் சேர்க்க, நீண்ட காலத்திற்கு தயாராகுங்கள்.  வாழ்த்துக்கள் 🙂
Creating a Long term Wealth  – Patience with Plan

Financial Blog in Tamil