Tag Archives: you cant produce a baby in one month

நீண்ட காலத்திற்கு தயாராகுங்கள்:Creating Long term Wealth

நீண்ட காலத்திற்கு தயாராகுங்கள்: பொறுமை கடலினும் பெரிது 

 Creating Long Term Wealth

 

பொறுத்தார் பூமி ஆள்வார்…
பொறுமை கடலினும் பெரிது…
மிகவும் அற்புதமான குறளும் கூட ! ஆனால், நாம் நமது வாழ்நாளில் அதிகம் பயன்படுத்தப்படாத சிந்தனையும் கூட !
நாம் செல்வத்தை சேர்ப்பதிலும்(Long Term Wealth) இவ்வாறு தான் கடமையாற்ற வேண்டும். நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று தான் இதுவும், “ஒரு மரத்தை வளர்த்து(Tree Plantation) அதன் பயனை அனுபவிக்க வேண்டுமென்றால்… விதை விதைத்து, நீரூற்றி, இலை,தண்டு, பூக்கள் விட்டு காத்திருக்க வேண்டும்; காத்திருத்தல் மிகவும் அவசியம்; நாம் அனுபவிக்க முடியாவிட்டாலும், நமது வாரிசுகள் (சந்ததியினர்) உறுதியாக அனுபவிக்கலாம்” இது தான் நீண்ட கால பயனுக்கான அடிப்படை விதி; காத்திருத்தலே அவசியம், செல்வம் சேர்ப்பதிலும் !
நீங்கள் மரத்தை  விஷயங்களை எல்லாம் இப்போது மறந்திருப்பீர்கள். ஏனென்றால் நமக்கு அது ஒரு வேற்று கிரக வாசி போல ஆகி விட்டதல்லவா 🙂  அதனால் நமக்கு பழக்கப்பட்ட ஒரு விஷயத்தை கொண்டு ஆராய்வோம். அது தாங்க, நமது குழந்தைகள், வாரிசுகள் !!! மிகவும் புத்திசாலித்தனமாக நாம் யோசித்தவை 🙂 அதாவது நமது வாரிசுகள், நாம் கண்ட எண்ணத்தை, நிறைவேற்ற இந்த மண்ணில் ஜனித்ததாக நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அதனால் நாம்  அந்த உயிர் கருவிலிருந்து உருவாகும் போது என்ன என்னவோ செய்கிறோம். அந்த உயிருக்கு நல்ல சத்தை கொடுக்கிறோம்; நேர்மறை / எதிர்மறை எண்ணங்களை செலுத்துகிறோம் (ஊசி மூலம் இல்லாமலே ; நீங்கள் எதிர்பார்க்கிற எண்ணம், அந்த உயிரோட்டம் பிரதிபலிக்க எத்தனை காலம் ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா ?
18 வருடங்கள் ?  23 வருடங்கள் ?  25 வருடங்கள் ?
என் குழந்தை ஒரு டாக்டர், என்ஜினீயர்,  அரசு வேலை, வெளிநாடு, தொழிலதிபர், பென்ஷன் திட்டம்,,,…. ஆவதற்கு !
நமது எண்ணம் நிறைவேற, அந்த உயிருக்கு இவ்வளவு காலம் தேவைப்படுகிறது என்றால், செல்வம் சேர்ப்பதிலும் அந்த காத்திருப்பு தன்மை தேவை(Patience).

You can’t produce a baby in one month by getting nine women pregnant  ― Warren Buffett

இதை விட, காத்திருத்தலுக்கு(Patience) ஒரு எளிய விளக்கம்(இன்றைய காலத்தில்) இருக்க முடியாது  🙂
நீண்ட காலத்திற்கு நீங்கள் தயாரானால்…
 • மரம் –  காய் கனிகள், பறவைகளுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் உணவளிக்கும் வகை, சுற்றுப்புறத்திலுள்ள கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கி, பலன் தரும் ஆக்சிஜனை வெளியிடுகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவை தடுக்கிறது; சுற்றுப்புற மாசுபடுத்தலை கட்டுப்படுத்துகிறது.

 

 • மண் – நல்ல சத்தான உணவினை அளிக்க பயன்படுகிறது, சுத்தமான காற்று மற்றும் நீர்நிலை ஆதாரங்களை அதிகப்படுத்துகிறது; சுற்றுப்புற மாசு மற்றும் கரியமில வாயுவை கட்டுப்படுத்துகிறது.

 

 • மனம் – நல்ல உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க உதவுகிறது. பிரபஞ்ச ரகசியம் மற்றும் அறிவியல் வாயிலாக அறிய மேம்படுகிறது.  திட்டமிட்டு செயல்படுகிறது,எண்ணியவை கைகூடுகிறது; நல்ல மனம் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குகிறது.
நீண்ட கால செல்வத்திற்கான வழி…  கற்றுக்கொள்ளுங்கள் 
 • பணவீக்கத்தை (Inflation)
 • வட்டி விகிதத்தை (Interest Rates)
 • வீட்டு மனை விற்பனையை (Real Estate)
 • வாடகை வருமானம் (Rental Income)
 • அரசு மற்றும் தனியார் வரியில்லா பத்திரங்கள் (Tax Free Bonds)
 • பங்குச்சந்தை  (Share/Stock Market)
 • இணைய வழி வருமானம் (Internet / Online Income)
 • பிற வருமானம் கொடுக்கும் அறிவை (நேர்மையான முறை)
மற்றும்  பொறுமையை(Patience)…
மேலே சொன்ன வழியில் நாம் நீண்ட கால நோக்கத்தில் மட்டுமே செல்லவும். வீட்டுமனை மற்றும் பங்குச்சந்தையை நாம் குறுகிய கால நோக்கில் பார்த்தால் பலன் கிட்டாது. பங்குச்சந்தை பற்றி நம்மில் நிறைய பேருக்கு விழிப்புணர்வு இல்லை என்று சொல்லலாம். அது ஒரு சூதாட்டம் என்ற சிந்தனையும் பலருக்கு இருக்கலாம்; ஆனால் நீங்கள் வேலை செய்யும் அரசோ (அ) நிறுவனமோ உங்கள் பணத்தை ஏன் பங்குசந்தையில் முதலீடு(NPS,EPF,LIC,Insurance,Bank Deposits) செய்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவும். அதற்கு முன், நீங்களே கற்று கொண்டு உங்கள் செல்வத்தை சேருங்கள்.
 காலையில் பல்துலக்குதல் முதல்…  இரவு படுக்கைக்கு போகும் வரை(Brush to Bed) நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருளும்(Household Products) பங்குசந்தையே !  உங்களின் தேவைக்கும் உற்பத்திக்கும்(Demand-Supply) உள்ள இடைவெளியே நீங்கள் எதிர்பார்க்கும் விலைவாசி ! உங்கள் வரிப்பணமே, உங்களுக்கு வழங்கப்படும் சலுகை மற்றும் இலவசங்கள் ! (Taxes to Free Things)
செல்வம் சேர்க்க, நீண்ட காலத்திற்கு தயாராகுங்கள்.  வாழ்த்துக்கள் 🙂
Creating a Long term Wealth  – Patience with Plan