செல்வந்தர்களின், ‘காத்திருத்தல்’ ரகசியம்
RICH MEN’S DELAYED GRATIFICATION
செல்வம் சேர்ப்பது அப்படி ஒன்றும் கடினமான வேலை இல்லை; அதனை தக்க வைத்து கொள்வதோ (அ) மென்மேலும் பெருக்குவதோ எல்லோரும் அறிந்த ரகசியம் 🙂 எல்லோரும் அறிந்த ரகசியம், ஆனால் எல்லோராலும் கடைபிடிக்கப்படுவதில்லை 🙂
அந்த எளிமையான ரகசியம்: ‘ காத்திருத்தல்‘(Wait for Sometime – Delayed Gratification)
இது மிகவும் எளிமையான விஷயமாக தெரியும் எல்லோருக்கும் ! ஆனால் அதன் பலனை சில பேர் மட்டுமே கண்டறிவார்கள்; அனுபவிப்பார்கள் !
எத்தனை பேர் நம்மில்,
- கணிதத்தில் நல்ல மதிப்பெண் எடுத்து விட்டு, வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கும் போது கணிதத்தை பயன்படுத்தியிருப்போம் ?
- காத்திருந்து காதலில் வெற்றியடைந்திருப்போம் ?
- பத்து மாதம் காத்திருந்து ஒரு உயிரை வரவேற்றியிருப்போம் ?
- நமது நீண்ட கால பள்ளி வாழக்கையை / கல்லூரி படிப்பை முடித்திருப்போம் ?
- நீண்டகாலம் காத்திருந்து நல்ல வேலைக்கு சென்றிருப்போம் ?
- நமக்கு பிடித்த விஷயங்களை / இலக்குகளை காத்திருந்து அடைந்திருப்போம் ?
- பஸ் நிறுத்தத்தில் / டிராபிக் சிகனலில் / ரேஷன் கடையில் / திரையரங்குகளில் காத்திருந்து வெற்றியடைந்து இருப்போம் ?
இது போன்ற அனுபவமே ‘காத்திருத்தலின்’ ரகசியம். பலனை நேர்மறையாக அடைந்திருக்கும் போது உங்கள் உள்ளம் எப்படியிருக்கும் ?
அது தான், பணக்காரர்களின் பணம் பண்ணும் ரகசியத்தில் ‘காத்திருத்தலே’ மிகவும் அடிப்படையான ஒன்று.
நீங்கள் உங்கள் இலக்குகளை நிர்ணயித்து, காத்திருந்து வெற்றி பெறலாம்.
உங்கள் இலக்கு குறுகிய மற்றும் நீண்ட காலமாக இருக்கலாம்; ஆனால் ‘காத்திருத்தல்’ மிகவும் முக்கியம்; அப்போது தான் உங்கள் இலக்குகள் எட்டப்படும்.
உங்கள் இலக்கு:
- நீண்ட நாள் மற்றும் வெகுதூர சுற்றுலா பயணமாக இருக்கலாம்;
- நான்கு சக்கர வாகனம் வாங்குவதாக;
- ஒரு புது வீடு காட்டுவதாக (அ) வாங்குவதாக;
- குழந்தைகளின் படிப்பு மற்றும் திருமணம்;
- உங்கள் மற்றும் உங்கள் மனைவியின் ஓய்வு காலம் குறித்து;
- சமூக உதவி / சேவை செய்வதன் சார்பாக மற்றும் பிற…
உங்கள் இலக்குகளை நிர்ணயித்த பிறகு எவ்வளவு காலத்தில் நாம் அடைய வேண்டும் (அ) எப்போது இலக்குகள் அடையப்பட வேண்டும் என்பதை குறித்து கொள்ளுங்கள்;
நமது இலக்கு மற்றும் அடைய வேண்டிய காலம் முடிவு செய்யப்பட்ட பின், எவ்வாறு அந்த பணத்தை / திட்டத்தை முதலீடு செய்வது என்பதனை பற்றிய சிந்தனையும் வேண்டும்.
உதாரணம்:
உங்கள் இலக்கு: ரூ. 1,00,000 /- ( குழந்தையின் படிப்பு)
காலம்: 10 வருடங்கள்
‘காத்திருத்தல்’ இலக்கிற்கு எவ்வளவு முக்கியமோ, அதே போன்று “ காலமும், வட்டி விகிதமும்’”அவசியம்.
“The 36th Chamber of Shaolin” என்ற திரைப்படத்தை நீங்கள் பார்த்திருந்தால் உங்களுக்கு தெரிந்திருக்கும், இலக்கினை அடைய நீங்கள் எவ்வளவு நிதானமாக செயல்பட வேண்டுமென்று ! அப்புறம் என்ன, இப்போதே உங்களின் இலக்கு மற்றும் காலத்தை நிர்ணயுங்கள்;
காத்திருங்கள்; பலனை அடையுங்கள் !
“If you Born Poor, it’s not your Mistake; But if you Die Poor, it’s Your Mistake”
— Bill Gates, Microsoft
D-G (Delayed Gratification) என்பது உங்களது மன வலிமையை(பலம்) அதிகரிக்கும் வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பதாகும்.
ஒரு ஒலிம்பிக் வெற்றியாளரை போல…!!!
நீங்கள் மாதாமாதம் ரூ. 1000/- ஐ ஒரு வங்கியில் 10 % வட்டி விகிதத்தில் ஒரு வருடத்திற்கு சேமிப்பு / முதலீடு செய்வதாக வைத்து கொள்வோம்.(Recurring Deposit)
நீங்கள் ஒரு வருடம் சேமிக்கும் போது முடிவில், ரூ. 12,665/- கிடைக்கும்.
அதாவது, உங்கள் முதலீட்டுக்கு (1000 X 12 = 12000/-) வட்டி வருமானமாக ரூ.665/- கிடைத்துள்ளது.
நீங்கள் உங்கள் முடிவில் சிறு மாற்றம் செய்கிறீர்கள்; அதாவது ஒரு வருடத்திற்கு பதிலாக, இரண்டு வருடம் முதலீடு செய்யலாம் என்று; உங்கள் தேவையை தள்ளி போடுகிறீர்கள் (அ) அந்த பணம் இரண்டு வருடத்திற்கு தேவையில்லை என கொள்வோம்.
இரண்டு வருட முடிவில், உங்களுக்கு கிடைப்பது ரூ.26,645/-
அதாவது, உங்கள் முதலீட்டுக்கு (1000 X 24 = 24000/-) வட்டி வருமானமாக ரூ.2645/- கிடைத்துள்ளது !
முதல் வருட முடிவில் உங்கள் வட்டி வருமானமோ, ரூ.665/- மட்டுமே; ஆனால் இப்போது, நீங்கள் இன்னும் ஒரு வருடம் காத்திருந்ததால் உங்களுக்கு கிடைத்ததோ, 4 (நான்கு) மடங்கு வருமானம் (ரூ.2645/-).
நீங்கள் காத்திருந்தால், இன்னும் செல்வதை பெருக்கலாம்…
- 1 வருட முடிவில், ரூ. 12665/-
- 2 வருட முடிவில், ரூ. 26645/-
- 5 வருட முடிவில், ரூ. 77910/-
- 10 வருட முடிவில்,ரூ.2,05,570 /-
ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பத்தினர் எப்போதும், எந்த பொருளையும் உடனடியாக வாங்கும் முயற்சியில் /உணர்ச்சியில் உள்ளனர்; பணக்காரனோ எப்போதும் தங்களது தேவையறிந்து, காத்திருந்தே முடிவில் அனுபவிக்கிறார்கள்; அதனால் தான் அவர்கள் எப்போதும் பணக்காரர்கள் !
EMI வேணுமா (அ) SIP எடுக்கலாமா ?
சேமிக்கலாமா (அ) செலவழிக்கலாமா என்பதை முடிவு செய்யுங்கள்.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !