நீங்கள் ஏழையா , பணக்காரனா ? Know your Networth

 

நீங்கள் ஏழையா , பணக்காரனா ?  

Liabilities and Assets – Networth

 

நீங்கள்  ஏழையா, பணக்காரனா  என்று உங்களிடம்  யாராவது  கேட்டால், நீங்கள் என்ன சொல்வதென்று முடிவெடுப்பீர்கள் ?

🙂

ஏறக்குறைய நாம் நாம் ஏழை என்றோ, ஏழைக்கும் பணக்காரனுக்கும் நடுவே என சொல்வதுண்டு 🙂

சரி, ஏழைக்கும் பணக்காரனுக்கும் உள்ள வித்தியாசம் என்னவென்று கேட்டால் ?

நமது சிந்தனை நிறைய சினிமா படங்களுக்கும், அரசியல் வாசகத்துக்கும் போகும் ;  பேசவும் செய்யும்…

இங்கேயும் நாம் சரியான ஒரு முடிவை எடுக்க முடிவதில்லை; ஏன் அவ்வாறு ?

பொருளாதார அறிவை நாம் முழுமையாக கற்று கொள்ளாததும், மற்றவர்கள் ஊடகங்களில் என்ன மாதிரியான விஷயங்களை  பேசினார்கள் என்ற மனப்பதிவையும் வைத்தே நாம் முடிவெடுக்கிறோம் .

 

சில சமயங்களில் நமது தற்காப்புக்காகவும் (பொருளாதார காப்பு) பண விஷயம் சம்மந்தமான பதில்களை நாம் பதிவு செய்யாமல் இருப்பதுண்டு 🙂 சரி அதை விடுவோம்; நம்மிடம் நாமே இந்த கேள்விகளை கேட்க முடிந்தால், சற்று ஆராய்ந்து தான் பதில் வரும். ஏழையா பணக்காரனா என்ற தத்துவம், உலகெங்கும் எல்லா சமயங்களிலும் ஒரு மாபெரும் விமர்சனத்தையே கொண்டுள்ளன; இரண்டும் மனித பிறவிகள் போன்றும், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எதிரியாக இருப்பது போன்றும் கற்பிப்பதுண்டு; உண்மையில், நிதி சார்ந்த விஷயத்தில் ஏழையும்,பணக்காரனும்  என்பது வரவு, செலவை போன்றது !

 

கடனும், சொத்தும் போல… (Liabilities and Assets – Networth)

 

பணத்தை கொடுத்தவன் ஏழை, பெற்றவன் பணக்காரன் என்றால்…

Swiss Bank ல் பணத்தை போட்டவன் ஏழையா ? பணத்தை பெற்ற  Switzerland நாடு ஒரு பணக்காரனா ?  நாம் எப்படி முடிவு செய்வது ???

தனிமனித பொருளாதாரத்தை நாம் அணுகும் போது, அவனது நிதி சார்ந்த பழக்க வழக்கங்களே அவன் ஏழையா, பணக்காரனா என்பதை முடிவு செய்கிறது.

 

உங்களை ஏழையாக்குவது எது, பணக்காரனாக்குவது எது என்பதனை கீழே உள்ள அட்டவணையை கவனியுங்கள்:

Liabilities (கடன் / செலவுகள்) Assets (வருமானம் / வரவுகள்)
  • வீடு,வாகனம் மற்றும் கல்வி கடன்கள்
  • வரிகள்
  • தேவையற்ற காப்பீடு திட்டங்கள்
  • மற்றவர்களுக்காக செய்யும் ஆடம்பர செலவுகள்
  • உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனிக்காமை
  • வாடகை வருமானம் தரும் நிலம் மற்றும் வீடு
  • நியாயமான வட்டி வருமானம்
  • பங்குகள் மற்றும் டிவிடெண்டுகள்
  • நீண்ட கால வியாபார வருமானம்
  • அறிவுசார் வருமானம்

 

RICH DAD, POOR DAD ன் ராபர்ட் கியோஸகி(Robert Kiyosaki) அவர்கள் சொல்வதை போல,

உங்கள் வீடும் ஒரு கடன் தான், அது சொத்து அல்ல

 

நமது அடிப்படை தேவை மற்றும் சிறு வசதிக்காக நாம் ஒரு வீட்டினை வைத்து கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டை வைத்து கொண்டு, அந்த வீடு நமக்கு வருமானம் ஏதும் தரவில்லையென்றால், அது ஒரு சொத்து அல்ல; மாறாக அதற்கு நாம் ஒவ்வொரு வருடமும் செலுத்தும் வரிகளும், பராமரிப்பு செலவு மற்றும் காப்பீடு செலவுகளும் ஒரு கடனே !

 

பணக்காரன்,ஏழை என்ற இரு வார்த்தைகளில் பெரிய வேறுபாடு ஒன்றுமில்லை; நீங்கள் சம்பாதித்த பணத்தை கொண்டு, இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது முக்கியம். பணக்காரனாக இருப்பதற்கு சுய கட்டுப்பாடு மிகவும் முக்கியம்; ஏழையாக இருக்க நீங்கள் எந்த முயற்சியும் செய்ய வேண்டியது இல்லை.

” குறுகிய தூரம் செல்பவர்கள் வேகமாக செல்வதும், நெடுந்தூரம் பயணிப்பவர்கள் நிதானமாக செல்வதும் சாலைகளின் ரகசியங்கள்…”

அது தான் ஏழை – பணக்காரனின் ரகசியமும்

 

இதோ நீங்கள் இப்போதே பணக்காரனா, ஏழையா என்பதனை அடையாளம் காண: (Know your Networth & Rich-worth Value )

 

Networth =  Total Assets – Total Liabilities

R-worth = Total Assets / Total Liabilites

If  your R-worth > 1.0, then you will be ‘No Need to Fear’… Just Plan for  Financially Free !

If it’s  =< 1.0, then you have to be careful on your Debt…. “Don’t Bankrupt yourself”

 

நிகரமதிப்பு = மொத்த சொத்துக்கள் (அ) வருமானங்கள்  – மொத்த கடன்கள் / செலவுகள்  

உங்களின் நிகரமதிப்பினை, உங்கள் ஆண்டு வருமானத்தை போல, 15 முதல் 20 மடங்கு அதிகரிக்க (அ) பெருக்க முயலுங்கள்.

[ *Conditions Apply – 15-20 மடங்கு,  50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே 🙂  ]

 

பணக்காரமதிப்பு = மொத்த சொத்துக்கள் / மொத்த கடன்கள்

 

உங்களின் பணக்கார மதிப்பு ஒன்றுக்கு(1) மேற்பட்டு இருந்தால் சந்தோசப்பட்டு கொள்ளுங்கள் (அ) இன்னும் உயர்த்த தயாராகுங்கள்.

சமமாக ஒன்று(1)   அல்லது ஒன்றுக்கு குறைவாக இருந்தால், நிதி விஷயத்தில் திருத்தி கொள்ளுங்கள் (கடனை குறையுங்கள்).

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

(Image Courtesy /Slide: www.3rdtour.com )

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s