நான் வெளியேறுவதற்கான நேரம் வந்து விட்டது – முதலீட்டு ஜாம்பவான் வாரன் பப்பெட்
Berkshire is 100 Percent prepared for our Departure – Warren Buffett
உலகின் மிகப்பெரிய முதலீட்டு ஜாம்பவான் என்றால் அது திரு. வாரன் பப்பெட் என்று சொல்வதில் மிகையல்ல. உலகின் நான்காவது கோடீஸ்வரர் ஒருவர் தனது மொத்த சொத்தில் 99 சதவீத தொகையை தானமாக கொடுத்துள்ளார் என்றால் அது வாரன் பப்பெட் அவர்களை தான் சாரும். 90 வயதாகும் வாரன் பப்பெட்டின் தற்போதைய சொத்து மதிப்பு 89.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 6.35 லட்சம் கோடி) !
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பள்ளிக்காலத்தில் துவங்கிய இவரது முதலீட்டு திறன் இன்று வரை பல முதலீட்டாளர்களுக்கு கற்றலை தந்து கொண்டிருக்கிறது. ஒரு முறை வாரன் பப்பெட், ‘ நான் என் வாழ்வில் 11 வருடங்களை வீணடித்து விட்டேன். எனது 11வது வயதில் தான் நான் பங்குச்சந்தைக்கு சென்று பங்குகளை வாங்க நேரிட்டது ‘ என வேடிக்கையாக சொன்னார். மதிப்புமிக்க முதலீட்டின் தந்தை(Father of Value Investing – The Intelligent Investor) என அழைக்கப்படும் திரு. பெஞ்சமின் கிரகாம் அவர்கள் தான் வாரனின் ஆசிரியர்.
‘ பங்கு முதலீட்டை ஒரு தொழிலாக பாருங்கள். சந்தையின் ஏற்ற-இறக்கத்தை கண்டு கொள்ளாமல், அதனை உங்களது வாய்ப்பாக மாற்றுங்கள். தொழிலின் தன்மையை அறிந்து பங்குகளை அதன் உண்மையான விலையில் வாங்குங்கள். இது தான் எனது ஆசிரியர் கற்று கொடுத்தது ‘ என வாரன் கூறியுள்ளார். கடந்த 55 வருடங்களில் அமெரிக்காவின் பங்குச்சந்தையில் எஸ் & பி 500 குறியீடு 10 சதவீத வருமானத்தை (ஆண்டு கூட்டு வட்டி) தந்துள்ளது. அதே வேளையில், வாரன் பப்பெட்டின் பெர்க்சயர் ஹாத்வே நிறுவனம் 20.30 சதவீத வருவாயை அளித்துள்ளது.
மொத்த லாப அடிப்படையில் கடந்த 55 வருடங்களில் எஸ் & பி500 குறியீடு 19,784 சதவீதம் ஏற்றம் பெற்றுள்ளது. ஆனால், பெர்க்சயர் நிறுவனமோ 27,44,062 சதவீத வருவாயை ஈட்டியுள்ளது. 1839ம் ஆண்டு துவங்கப்பட்ட வேலி பால்ஸ்(Valley Falls) நிறுவனம் தான் பின்னாளில் பெர்க்சயர் ஹாத்வே(Berkshire Hathaway) நிறுவனமாக மாறியது. வாரன் பப்பெட்டும் அந்த நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரானார். பெர்க்சயர் ஹாத்வே ஒரு அமெரிக்க பன்னாட்டு குழும நிறுவனமாகும். இந்நிறுவனம் உலகின் மிக முக்கியமான நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.
இந்த நிறுவனத்தில் வாரன் பப்பெட் அவர்களுக்கு 30 சதவீத வாக்களிக்கும் உரிமை உள்ளது கவனிக்கத்தக்கது. இவரது தொழில் கூட்டாளியான சார்லி முங்கரும்(Charlie Munger) முதலீட்டு திறனில் சகலகலா வித்தைகளை அறிந்தவர். திரு. சார்லி முங்கர் அவர்களின் வயது தற்போது 96. பெர்க்சயர் நிறுவனத்தின் 2018-19ம் ஆண்டின் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
அந்த அறிக்கையில் வாரன் குறிப்பிட்டதாவது, ‘ நானும், முங்கரும் வெகு காலத்திற்கு முன்பே வயது சார்ந்த அவசர நிலைக்கு வந்து விட்டோம். இது எங்களுக்கு ஒரு நல்ல செய்தியாக இருக்காது. அதே வேளையில், பெர்க்சயர் பங்குதாரர்கள் அதனை பற்றி கவலைப்பட தேவையில்லை. நாங்கள் புறப்படுவதற்கு உங்கள் நிறுவனம் நூறு சதவீதம் தயாராக உள்ளது.’ என்றார்.
அடுத்த தலைமை யார் என்பதை பற்றி குறிப்பிடப்படவில்லை. வாரனின் பெர்க்சயர் நிறுவனர் தனது முதலீட்டாளர்களுக்கு சில காலத்தில் நல்ல வருவாயை கொடுக்காமல் இருந்தாலும், நீண்ட காலத்தில் அந்த நிறுவனம் பல முதலீட்டாளர்களை கோடீஸ்வரர்களாக மாற்றியுள்ளது. இந்த நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு(Annual General Meeting) செல்ல இந்தியாவிலிருந்து பலர் கனவாக கொண்டு சென்று வருகின்றனர்.
கடந்தாண்டு நடைபெற்ற கூட்டத்தில் வாரன் மற்றும் சார்லி இருவரும், முதலீட்டாளர்களின் கேள்விகளுக்கு சுமார் ஆறு மணிநேரம் பதிலளித்துள்ளனர். பங்குகளை வாங்கியிருக்கும் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்திற்கு சென்று வருவது அவசியமாகும் – ஏன் ?
“ நீங்கள் தூங்கும் போதும் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியை கண்டுபிடிக்கவில்லை எனில், நீங்கள் இறக்கும் வரை வேலை செய்தாக வேண்டும் ‘ – வாரன் பப்பெட்
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை