இந்திய காப்பீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்ய தயாராகும் வாரன் பப்பெட்
Warren Buffet’s Next Investment for the Public listed Company in India – Berkshire Hathaway
2001ம் நிதியாண்டில் துவங்கப்பட்ட நிறுவனம் தான் ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ காப்பீட்டு நிறுவனம்(ICICI Prudential Life Insurance). சந்தையில் பட்டியலிடப்பட்ட பொது நிறுவனமான ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி(ICICI Bank) மற்றும் புரூ கார்ப்பரேஷன் ஹோல்டிங்க்ஸ்(Prudential Corporation Holdings) ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தனிநபர் மற்றும் கூட்டாக பொது காப்பீடு, மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டம் போன்ற சேவைகளை அளித்து வருகிறது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 55,600 கோடி ரூபாய். இதன் ஒரு பங்கின் மீதான வருமானம் 10 ரூபாயாக உள்ளது.
பங்கின் மீதான வருவாய்(ROE) 24 சதவீதமாகவும், மொத்த மூலதனத்தின் வருவாய்(ROCE) 28 சதவீதமாகவும் உள்ளது. நிறுவனத்திற்கு கடன்கள் எதுவுமில்லை என்பது முதலீட்டாளர்களுக்கு சாதகமான விஷயம்.
மார்ச் 2019ம் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் 15,900 கோடி ரூபாயாகவும், நிகர லாபம் ரூ.261 கோடியாகவும் உள்ளது. இதர வருமானமாக 398 கோடி ரூபாய் சொல்லப்பட்டுள்ளது. கடந்த ஐந்து வருட விற்பனை வளர்ச்சி 14 சதவீதமாகவும், ஐந்து வருட லாப வளர்ச்சி ஒரு சதவீதமாகவும் உள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ காப்பீடு நிறுவனத்தின் சொத்து மதிப்பு(Assets) ரூ.1,63,080 கோடியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான ஜீ வணிக தொலைக்காட்சி(Zee Business Television) தகவலின் படி, இந்நிறுவனத்தில் பெர்க்சயர் ஹாத்தவே நிறுவனத்தின் தலைவரும், உலக பெரும் பணக்காரருமான வாரன் பப்பெட் முதலீடு செய்ய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
வாரன் பப்பெட் ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ நிறுவனத்தின் 14 சதவீத பங்குகளை வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 9000 கோடி ரூபாயாக இருக்கலாம். கடந்த வருடம் பெர்க்சயர் ஹாத்தவே(Bershire Hathaway) நிறுவனம் பே.டி.எம்.(Paytm) நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை