உலக பணக்காரர்கள் வரிசையில் ஐந்தில் ஒரு பங்கு 80 வயதை கடந்தவர்கள்
A Fifth of the World’s Richest people are over 80 years old
ப்ளூம்பெர்க்(Bloomberg) பத்திரிகை வெளியீட்டின் படி, உலக கோடீஸ்வரர்கள் வரிசையில் உள்ள முதல் 500 நபர்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 80 வயதை கடந்தவர்கள். முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பேஜோஸ்(Jeff Bezos) உள்ளார். இரண்டாம் இடத்தில் பில்கேட்ஸ் மற்றும் மூன்றாம் இடத்தில் பழுத்த முதலீட்டாளர் வாரன் பப்பெட் உள்ளனர்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
அமேசான் நிறுவனர் ஜெப் பேஜோஸ் 132 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொண்டுள்ளார். இந்தியாவின் முகேஷ் அம்பானி(Mukesh Ambani) உலகத்தர வரிசையில் 12ம் இடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து 47 பில்லியன் அமெரிக்க டாலர்கள். முதல் 500 இடங்களில் பெரும்பாலானோர் அமெரிக்க நாட்டை சேர்ந்தவர்களாகவே உள்ளனர். இந்த பட்டியலில் 19 இந்தியர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக பணக்காரர்கள்(Billionaire) வரிசையில் ஐந்தில் ஒரு பங்கு 80 வயதை கடந்தவர்களாக உள்ளனர். இவற்றில் 21 பணக்காரர்கள் 90 வயதிலிருந்து 100 வயதுக்கு உட்பட்டவர்கள், இதில் 8 நபர்கள் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர். மலேசிய நாட்டை சேர்ந்த ராபர்ட் கோக் அவரின் வயது 90. இவருடைய சொத்துக்களின் மதிப்பு 17.27 பில்லியன் அமெரிக்க டாலர்கள். வாரன் பப்பெட்(Warren Buffet) தற்போது தன்னுடைய 88வது வயதில் உள்ளார்.
90 வயதை கடந்த எட்டு ஆசிய பணக்கார்களின் மொத்த சொத்து மதிப்பு 125 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது. இந்தியாவின் 90 வயதான பலோன்ஜி மிஸ்ட்ரியின்(Palonji Mistry) சொத்து மதிப்பு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இது நமது நாட்டின் மதிப்பில் சுமார் 1,42,710 கோடி ரூபாயாகும். 90 வயதுக்கு மேற்பட்டவர்களில் அதிக சொத்து மதிப்பை கொண்டுள்ளவர் ஹாங்காங் நாட்டை சேர்ந்த லை காசிங்(Li Ka-Ching), 30 பில்லியன் அமெரிக்க டாலர்களை நிர்வகித்து வருகிறார்.
உலகின் பணக்காரர்கள் வரிசையில் மூத்த வயதுடைய இருவர்(Oldest and Richest), நடப்பு வருடத்தின் துவக்கத்தில் காலமாகி உள்ளனர். இந்தோனேசிய நாட்டினை சேர்ந்த எக்கா(Eka) தனது 15 வயதில் தேங்காய் மற்றும் பாமாயில் எண்ணெய் வர்த்தகத்தை தொடங்கியவர் பின்னர் உலகின் மாபெரும் பணக்காரராக உருவெடுத்தார். இவர் தனது 98வது வயதில், இம்மாதத்தின் ஆரம்பத்தில் காலமானார்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஹென்றி தனது இளமை காலத்தில் காலணிகள்(Shoe) விற்பனையாளராக ஆரம்பித்த இவர், பின்னாளில் அந்நாட்டின் முக்கியமான நபர்களில் ஒருவரானார். ஹென்றி கடந்த வாரம் தனது 94 வயதில் காலமானார். மூத்த வயதுடைய இந்த இருவரின் சொத்துக்கள் மட்டும் 1700 கோடி அமெரிக்க டாலர்கள் – இந்திய ரூபாயில் 1,21,300 கோடி.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை