Category Archives: Paisa News

Paisa News – News about Business and Finance

புதிய சிப் வசதியுடன் வருகிறது இ-பாஸ்போர்ட்

புதிய சிப் வசதியுடன் வருகிறது இ-பாஸ்போர்ட்

New Chip based e-passport for the Public in India

 

நம் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரித்து கொண்டே செல்கிறது. 1997ம் ஆண்டு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின்(Foreign Tourists) எண்ணிக்கை 24 லட்சமாக இருந்தது. இதுவே கடந்த 2017 ம் வருடத்தில் ஒரு கோடி எண்ணிக்கையை தாண்டியது. சுற்றுலா பயணிகளின் மூலம் பெறும் வருமானமும் நம் அரசுக்கு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொடுத்துள்ளன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

1997ம் ஆண்டில் 10,500 கோடி ரூபாயாக இருந்த வருமானம், கடந்த 2017ம் ஆண்டில் ரூ.1,77,874 கோடியை தாண்டியுள்ளது. சுற்றுலா துறை நமது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீத பங்கினை கொண்டுள்ளது. நமது நாட்டில் சுற்றுலா மேற்கொள்ளும் அன்னிய நாட்டினரின் எண்ணிக்கையில் முதல் மூன்று இடத்தில் வங்கதேசம், அமெரிக்கா, மற்றும் இங்கிலாந்து நாடுகள் உள்ளன. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகையை கொண்டிருக்கும் மாநிலமாக தமிழகம் முதலிடத்தில் (புள்ளிவிவரம்-2015) உள்ளது. இந்த துறையில் தமிழகத்தின் பங்கு சுமார் 20 சதவீதமாகும்.

 

இது போல நம் நாட்டிலிருந்து மற்ற நாடுகளுக்கு செல்லும் குடிமக்களின் எண்ணிக்கையும் ஒவ்வொரு வருடமும் அதிகமாக உள்ளது. வேலை, தொழில் மற்றும் சுற்றுலா போன்ற வெவ்வேறு வகைகளில் இந்தியர்கள் வெளிநாட்டிற்கு தொடர்ச்சியாக செல்கின்றனர். கடந்த 2018 ம் வருடம் மட்டும் இஸ்ரேல்(Indian Tourists in Israel) நாட்டிற்கு சென்ற இந்திய சுற்றுலாதாரர்களின் எண்ணிக்கை 70,800 ஆகும்.

 

எல்லோருக்கும் வெளிநாட்டிற்கு செல்லும் ஆர்வம் இருந்தாலும் பெரும்பாலோர் பாஸ்போர்ட் மற்றும் விசா நடைமுறைகளில் தங்களுக்கு ஏற்படும் சிக்கலால் வெளிநாட்டு பயணம் என்ற எண்ணத்தை மறந்து விடுகின்றனர். ஆனால் கடந்த சில வருடங்களாக இ-சேவா முறை மூலம் பாஸ்போர்ட் விநியோகம் எளிதாக அமைந்ததுடன், பாஸ்போர்ட் பெறுவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கடந்த 2018 ம் வருடம் மதுரை மாவட்டத்தில் மட்டும் 2.7 லட்சம் பாஸ்போர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.

 

புதிய சிப் வசதியுடன் இ-பாஸ்போர்ட்(New Chip based E-passport) அளிக்கும் நடைமுறையையும் அரசு கடந்த 2017 ம் ஆண்டு முதல் செய்து வருகிறது. முதலில் அரசு அலுவல்கள் சார்ந்தே அளிக்கப்பட்டு வந்த இ-பாஸ்போர்ட் இனி பொதுமக்களுக்கும் விரைவில் வர உள்ளது. பாஸ்போர்ட் பெறுவோரின் அனைத்து விவரங்களும் சிப் வடிவில்(Chip) சேமிக்கப்படும் எனவும், முன்னும்-பின்னும் தடிமனான அட்டைகளை கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

குடியேற்ற நுழைவுகளில் (Immigration Counters), இ-பாஸ்போர்ட் சில நொடிகளில் தேவைப்படும் விவரங்களை செயல்படுத்தும். 64 கிலோ பைட்டு(64 KB) நினைவகம் கொண்டுள்ள இந்த சிப் வடிவிலான இ-பாஸ்போர்ட் சுமார் 30 வருகைகள் வரையிலான தகவல்களை சேமித்து வைத்திருக்கும். இது பாஸ்போர்ட் வைத்திருப்போரின் புகைப்படத்தையும், கைரேகைகளையும் பாதுகாக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

 

முதல் முறையாக அமெரிக்க நாட்டின் ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்ட இந்த இ-பாஸ்போர்ட், அதற்கான மென்பொருளை ஐ.ஐ.டி கான்பூரில் (IIT Kanpur) உருவாக்கப்பட்டது. இதன் உருவாக்கத்தில் எந்த வணிக நிறுவனமும் ஈடுபடவில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

கோடக் மஹிந்திரா வங்கியின் காலாண்டு நிகர லாபம் ரூ. 1291 கோடி

கோடக் மஹிந்திரா வங்கியின் காலாண்டு நிகர லாபம் ரூ. 1291 கோடி

Kotak Mahindra Bank Q3 FY19 net profit rises to Rs.1291 Crore

 

தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) தனது மூன்றாம் காலாண்டு முடிவுகளை திங்கட்கிழமை அன்று (21-01-2019) வெளியிட்டது. 2018-19 ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டில் (Q3FY19 – அக்டோபர்-டிசம்பர்) நிகர லாபமாக ரூ.1,290.93 கோடியை ஈட்டியுள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் வங்கியின் வருவாய் 6,250 கோடி ரூபாயாக உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இதற்கு முந்தைய காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) வங்கியின் வருவாய்(Revenue) ரூ. 5,810 கோடியாகவும், நிகர லாபம் ரூ.1,141.65 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. தற்போது வெளியிடப்பட்ட காலாண்டு முடிவுகளை கடந்த 2017-18 ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், நிகர லாபம் அதிகமாக  உள்ளது. 2017-18 ம் மூன்றாம் காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ.5,009 கோடியாகவும், நிகர லாபம்(Net Profit) ரூ.1,053 கோடியாகவும் இருந்தது.

 

முந்தைய மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போதைய நிகர லாபம் 23 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது. வங்கியின் வருவாயும் 25 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்த வாராக்கடன் விகிதம்(GNPA) 2.15 சதவீதத்திலிருந்து 2.07 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, மோசமான கடன் விகிதமும் (Bad loans) 0.81 சதவீதத்திலிருந்து 0.71 சதவீதமாக குறைந்துள்ளது.

 

நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குக்கான காசா (CASA Ratio) விகிதமும் 51 சதவீதத்தை எட்டியுள்ளது. இது கடந்த 2017-18 ம் நிதியாண்டு காலத்தில் 47 சதவீதமாக இருந்தது. சேமிப்பு கணக்கில் உள்ள வைப்பு தொகை 34 சதவீதம் அதிகரித்து 73,958 கோடி ரூபாயாக உள்ளது. நடப்பு கணக்கிற்கான வைப்புத்தொகை 19 சதவீதம் அதிகரித்து ரூ.29,607 கோடியாக உள்ளது. இதுவே 2017-18 ம் வருடத்தில் அக்டோபர்-டிசம்பர் காலத்தில் சேமிப்பு கணக்கிற்கான வைப்புத்தொகை ரூ. 55,397 கோடியாகவும், நடப்பு கணக்கில் 24,776 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

 

டிசம்பர் 31, 2018 தேதியின் படி, வங்கியின் மொத்த வாராக்கடன்(Non Performing Asset) 2.07 சதவீதம் மற்றும் நிகர வாராக்கடன்(NNPA) 0.71 சதவீதமாகும். கடந்த வருட முடிவில் கோடக் மஹிந்திரா வங்கிக்கு 1,453 கிளைகளும், 2,270 ஏ.டி.எம்.(ATM) மையங்களும் செயல்பாட்டில் இருக்கிறது. போதுமான மூலதன விகிதம் 18.1 சதவீதமாக உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

மீட்கப்படுமா ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ?

மீட்கப்படுமா ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ?

Will the Jet Airways be recover ?

நமது வர்த்தக மதுரை இணைய தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், நாட்டில் உள்ள விமான சேவை நிறுவனங்களின் நிதி நிலைமை மோசமாகியிருப்பதை விஜய் மல்லையாவின் தலைப்பில் ஒரு கட்டுரையின் மூலம் சொல்லியிருந்தோம். அவற்றில் ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) விமான சேவை நிறுவனமும் திவாலாகும் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

 

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று நிதியாண்டுகளில் மட்டுமே லாபத்தை கண்டுள்ளது. நிகர லாபத்தில் அதிகபட்சமாக கடந்த 2017ம் நிதி ஆண்டில் ரூ.1,483 கோடியையும், நஷ்ட காலத்தில், அதிகபட்ச நிகர நஷ்டமாக 2014ம் நிதி வருடத்தில் ரூ.3,668 கோடியை இழந்துள்ளது. நடப்பு 2018-19ம் வருடத்தில் முதல் இரண்டு காலாண்டுகளிலும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் நஷ்டத்தை (Net Loss on Quarterly) மட்டும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

மூன்றாம் (அக்டோபர்-டிசம்பர் 2018 Q3 Results) காலாண்டு முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், சேவையை தொடர்வதற்கான போதுமான நிதி ஆதாரம் இல்லை என ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கடன்(Debt) மட்டும் ரூ. 8,400 கோடி. ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த எதிஹாட் நிறுவனம் 24 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. எதிஹாட் நிறுவனம்(Etihad Airways) முதலீடு செய்திருந்தாலும், நமது நாட்டின் சட்ட விதிமுறைப்படி இந்த நிறுவனம் இயக்குனர் குழுவையோ அல்லது ஜெட் ஏர்வேஸின் நிர்வாகத்தையோ கட்டுப்படுத்த முடியாது.

 

தொடர்ச்சியாக கடந்த மூன்று காலாண்டுகளில் நஷ்டத்தை சந்தித்து வரும் ஜெட் ஏர்வேஸ், ஒரு வாரத்திற்கு பிறகான விமான சேவையை தொடர போதுமான பணமில்லை என கூறியுள்ளது. ஏற்கனவே வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கும் இந்நிறுவனம், விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சந்தித்த நிலையில் தற்போது உள்ளது.

 

நிறுவனர் பங்குகளை அடுத்து அதிகபட்ச பங்குகளை கொண்டிருக்கும் எதிஹாட் விமான நிறுவனம் தனது பங்குகளை கொண்டு கூடுதல் கடன் தொகையை பெறாது என தெரிகிறது. இதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அவசர கால நிதியை முயற்சித்து கொண்டிருக்கிறது.

 

இந்நிலையில் விமான நிறுவனங்களை மறுசீரமைப்பது சார்ந்த நிகழ்வில், எதிஹாட் நிறுவனத்தின் சேர்மன் டோனி டக்ளஸ், பாரத ஸ்டேட் வங்கி (SBI) தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்ட விளக்கமானது, ‘ ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளை வைத்திருக்கும் தங்கள் நிறுவனம், அவசர கால நிதியாக  ஜெட் ஏர்வேஸுக்கு உதவ விரும்புகிறது. அதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் தங்கள் நிறுவனம் மேலும் சில பங்குகளை வாங்க முயற்சிக்கும். ஆனால் அதற்கான விலையாக சந்தை விலையில் பாதியான ரூ. 150 க்கு பங்கு ஒன்றுக்கு தரப்போவதாக அறிவித்துள்ளது. ‘

 

கடந்த 2012 ம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் படி, இந்திய விமான நிறுவனங்களில் அந்நிய நாட்டு விமான நிறுவனங்கள் அதிகபட்சமாக 49 சதவீத பங்குகள் வரை முதலீடு செய்து கொள்ளலாம் என அறிவித்திருந்தது. இதனை சார்ந்தே தற்போது எதிஹாட் நிறுவனம்(Etihad Airways) பங்குகளை வாங்குவது பற்றி கூறியிருந்தது. அதே வேளையில், நிறுவனத்தின் பங்குகளை விற்பது என்பது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முடிவை பொறுத்தே அமையும். ஆனால் எதிஹாட் நிறுவனம் வாங்கப்போகும் விலை பங்கு ஒன்றுக்கு ரூ.150 என்பது தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

 

தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்கு விலை ரூ. 270 ஆக சந்தையில் வர்த்தகமாகியுள்ளது. புதன் கிழமை (16-01-2019) அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 8 சதவீத இறக்கத்தை கண்டுள்ளது. எதிஹாட் நிறுவனத்தின் குறைந்த விலையிலான மதிப்பீடு தான் ஜெட் ஏர்வேஸ் பங்கு விலை சரிவிற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

2017-18 ம் ஆண்டில் எல்.ஐ.சி. இந்தியாவின் வளர்ச்சி மந்தமானது

2017-18 ம் ஆண்டில் எல்.ஐ.சி. இந்தியாவின் வளர்ச்சி மந்தமானது

LIC India’s growth Sluggish in the year 2017-18

 

சமீபத்தில் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDAI)  2017-18 ம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. தனிநபருக்கான கிளைம் (Individual Insurance Claim Settlement) கோருவதில் எல்.ஐ.சி. நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ஆயுள் காப்பீட்டு பிரிவில் உள்ள ஒரே பொது நிறுவனமான எல்.ஐ.சி. நிறுவனம் 2017-18 ம் ஆண்டில் 98.04 சதவீத கிளைம் விகிதத்தை பெற்றுள்ளது.

 

தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் கிளைம் விகித பங்கு 95.24 சதவீத அளவில் இருந்தது. அனைத்து காப்பீட்டு நிறுவனங்களின் காப்பீட்டை கோரும் கிளைம் விகிதத்தில் 97.68 சதவீதத்தை கொண்டுள்ளது. 2017-18 ம் ஆண்டுக்கான அறிக்கையில் எல்.ஐ.சி. இந்தியாவின்(LIC India) நிகர லாபம் ரூ. 2446 கோடியாக உள்ளது. இதுவே கடந்த 2016-17 ம் காலத்தில் நிகர லாபம் ரூ. 2231 கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

எல்.ஐ.சி. நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து இருந்தாலும், மொத்த ப்ரீமியத்துக்கான வருவாயில் அதன் பங்கு பின்னடைவை சந்தித்துள்ளது. 2016-17 ம் ஆண்டில் 71.81 சதவீதத்தை கொண்டிருந்த இந்த நிறுவனம் கடந்த 2017-18 ம் வருடத்தில் 69.36 சதவீத பங்கினை மட்டுமே கொண்டிருந்தது.

 

கடந்த வருடத்தில் எல்.ஐ.சி. நிறுவனம் தனிநபருக்கான காப்பீடு(Individual Death Claim Settlement Ratio) கோருதலில் 8.28 லட்சம் கிளைம்களை வெற்றிகரமாக முடித்துள்ளது. இதன் மதிப்பு சுமார் 14,623 கோடி ரூபாய். அதே நேரத்தில் 9,286 காப்பீடுதாரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட மனுக்களின் மொத்த மதிப்பு ரூ. 532 கோடி.

 

2017-18 ம் வருடத்தில் புதிய பாலிசிக்கான எண்ணிக்கையில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் பங்கு குறைந்துள்ளது. தனியார் நிறுவனங்களின் புதிய காப்பீடு எண்ணிக்கை 8.5 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த வருடத்தில் மொத்தம் விற்கப்பட்ட புதிய பாலிசிகளின் எண்ணிக்கை 282 லட்சம் ஆகும். இவற்றில் எல்.ஐ.சி. பங்கு 75 சதவீதமும், மற்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு 25 சதவீதமும் இருந்தது. இருப்பினும் 2016-17 ம் ஆண்டினை ஒப்பிடும் போது, எல்.ஐ.சி. நிறுவனம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறவில்லை.

 

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 2017-18 ம் நிதியாண்டில் எல்.ஐ.சி. நிறுவனத்தின் காப்பீடுகளின் பங்கு 70 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. அதே வேலையில் தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் (Private Insurance) பங்கு 27.69 சதவீதத்திலிருந்து 30.65 சதவீதமாக அதிகரித்துள்ளது. உலகளவில் காப்பீடு  வளர்ச்சியில் இந்தியா 10வது இடத்தில் உள்ளது. உலகளாவிய காப்பீட்டு சந்தையில் நமது நாட்டின் பங்கு 2.76 சதவீதமாகும். வேகமாக வளர்ந்து வரும் நாடுகளின் வரிசையில் இந்தியாவில் தான் காப்பீடுகளின் தேவையும் அதிகரித்துள்ளது கவனிக்கத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

நாட்டின் மிகப்பெரிய பங்குச்சந்தை தரகு நிறுவனம் – ஜிரோதா

நாட்டின் மிகப்பெரிய பங்குச்சந்தை தரகு நிறுவனம் – ஜிரோதா

Largest Stock Broker in India – Zerodha

 

சுமார் 8.47 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட பங்குச்சந்தை தரகராக தற்போது ஜிரோதா நிறுவனம்(Zerodha) உள்ளது. இதற்கு அடுத்தாற் போல் ஐ.சி.ஐ.சி.ஐ. செக்கியூரிட்டிஸ் (ICICI Securities) நிறுவனம் 8.44 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜிரோதா நிறுவனத்தில் இணைந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் செயலில் உள்ளவர்கள் (Active Clients) என்பது கவனிக்கத்தக்கது.

 

கடந்த 2010 ம் வருடம் நிதின் காமத் (Nithin Kamath) மற்றும் நிகில் காமத் (Nikhil) ஆகிய இருவரால் துவங்கப்பட்ட பங்குச்சந்தை தரகு நிறுவனம் தான் ஜிரோதா (Zerodha). பெங்களூரு நகரத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் இந்திய பங்குச்சந்தை உலகில் ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது எனலாம். பெரிய தரகு நிறுவனங்கள் பிரமாண்டமான அலுவலக கிளைகளை ஏற்படுத்தியும், வாடிக்கையாளர்களிடம் குறிப்பிட்ட தரகு கட்டணத்தையும் (Brokerage Charges) வசூலித்து வந்த நிலையில், ஜிரோதா நிறுவனம் இணையம் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தரகு கட்டணத்திலும் சலுகையை கொண்டு வந்தது.

 

நாளொன்றுக்கு 20 லட்சம் வர்த்தக பரிவர்த்தனைகளையும், சராசரி தினசரி வர்த்தக மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியும் நடைபெற்று கொண்டிருப்பதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரகு கட்டணத்தில் சலுகை (Discount Broking) காட்டிய இந்நிறுவனம், டெலிவரி(Delivery Shares) என்று சொல்லப்படும், பங்குகளை இன்று வாங்கி மற்றொரு நாளில் விற்கும் பரிவர்தனைகளுக்கு எந்தவொரு தரகு கட்டணத்தையும் பெறுவதில்லை (Zero Brokerage). இது மற்ற தரகு நிறுவனங்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Clients Stock Brokers wise 2018

400 கோடி ரூபாய் மூலதனத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜிரோதா நிறுவனத்தில் 1000 க்கும் மேற்பட்ட பணியாளர்களும், 8.47 லட்சம் வாடிக்கையாளர்களும் உள்ளனர். பல சவால்களை சந்தித்த இந்த நிறுவனம் கடந்த வருடத்தின் சிறந்த தரகு நிறுவனமாகவும் பங்குச்சந்தை அமைப்பிடம் இருந்து விருதை பெற்றது. இதை விட மற்றொரு சிறப்பம்சம் ஜிரோதா நிறுவனத்திற்கு எந்த கடனும் இல்லை என்பது தான்.

 

தொழிலில் புதுமை, தொழில்நுட்பத்தை சாமர்த்தியமாக பயன்படுத்துதல் மற்றும் கடனில்லாமல் நிறுவனத்தை நடத்துவது போன்ற்வை ஜிரோதா நிறுவனத்தை தற்போது நாட்டின் மிகப்பெரிய தரகு நிறுவனமாக (Largest Stock Broker) மாற்றியுள்ளது. இதற்கு பின்னர் பல சவால்களும், நம்பிக்கைகளும் இருந்ததாக நிறுவனர் நிதின் காமத் கூறியுள்ளார். பல கோடி ரூபாய் முதலீடுகளை செய்து விட்டு, பங்குச்சந்தை தரகு நிறுவனமாக உருவெடுக்கும் ஒரு நிறுவனம் பெரும்பாலும் அதன் வாடிக்கையாளரையே சார்ந்துள்ளது. இதனால் தரகு கட்டணங்களும் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள் – 2019

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள் – 2019

Interest Rates for Small Savings Scheme – Effect from Jan 2019

 

கடந்த சில காலங்களாக அஞ்சலக சேமிப்பு(Postal Savings) மற்றும் வங்கிகளுக்கான சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள் குறைவாகவே காணப்படுகிறது. அதே நேரத்தில் நிதி நிறுவனங்களுக்கான கடன் பத்திரங்களின் (Debentures) வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 9.5 சதவீதம் வரை தரப்படுகிறது. இருப்பினும், சிறு சேமிப்பு வட்டி விகிதங்களை பொறுத்தவரை அஞ்சலக மற்றும் வங்கிகளின் பாதுகாப்பு போன்று மற்ற நிறுவனங்களின் கடன் பத்திர வெளியீட்டில் கிடைப்பதில்லை.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பம் இல்லாதவர்கள், ஆனால் சிறிது ரிஸ்க் எடுக்க நினைப்பவர்களுக்கு கடன் பத்திரங்கள் உதவலாம். நடுத்தர வருமானம் கொண்டவர்கள் மற்றும் பாதுகாப்பான வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு சிறு சேமிப்பு திட்டங்கள் ஒரு வரப்பிரசாதமே.

 

சமீபத்தில் நிதி அமைச்சகத்தால் (Ministry of Finance) வெளியிடப்பட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் நடப்பு மாதம் ஜனவரி முதல் வரும் மார்ச் மாதம் வரையிலான (Jan-Mar 2019) காலத்திற்கு பொருந்தும். சிறு சேமிப்புக்கான வட்டி விகித முறையை அரசு மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றியமைத்து வெளியீட்டு வருகிறது நினைவிருக்கலாம்.

 

புதிய வட்டி விகிதங்கள் – ஜனவரி 1, 2019 முதல்,

 

பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund -PPF) திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதம் 8 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபர்-டிசம்பர் காலத்திலும் 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ. 500 மற்றும் திட்டத்திற்கான கூட்டு வட்டி வருட காலத்தில் (Annually) செயல்படும்.

 

பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு (Sukanya Samriddhi) திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லாமல் வட்டி விகிதம் 8.5 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் செய்ய வேண்டிய குறைந்தபட்ச முதலீட்டு தொகை (Minimum Investment) ரூ. 1000 ஆகும். வட்டி விகிதம் வருட காலத்தில் செயல்பட ஆரம்பிக்கும்.

Small Savings Scheme Interest 2019

 

மூத்த குடிமக்களுக்கான (Senior Citizen) 5 வருட சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 8.7 சதவீதமாக தொடரும். வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும். இந்த திட்டத்தில் 1000 ரூபாயை குறைந்தபட்ச தொகையாக செலுத்த வேண்டும். அதிகபட்ச முதலீட்டு தொகை ரூ. 15 லட்சம் வரை இருக்கலாம்.

 

அடிப்படை சேமிப்பு திட்டத்திற்கான (Basic Savings Account) வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை. ஏற்கனவே இருந்த 4 சதவீத வட்டியே இம்முறையும் தொடரும். அஞ்சலகத்தில் ரூ. 20 ம், வங்கிகளில் அதற்கு சொல்லப்பட்ட குறைந்தபட்ச பராமரிப்பு தொகையும், அடிப்படை சேமிப்பு திட்டத்தின் குறைந்த முதலீடு ஆகும். இத்திட்டத்தில் அதிகபட்ச தொகைக்கு வரம்பு ஏதும் கிடையாது.

 

ஒரு வருட, இரண்டு வருட மற்றும் மூன்று வருட காலத்திற்கான வைப்பு (Term Deposit) திட்டத்தில் 7 சதவீதமும், ஐந்து வருட காலத்திற்கு (5 Years Term Deposit)  7.8 சதவீதமும் வழங்கப்படுகிறது. கடந்த முறை ஒரு வருட காலத்திற்கு 6.9 சதவீத வட்டி விகிதமும், மூன்று வருடத்திற்கு 7.2 சதவீதமும் இருந்தது கவனிக்கத்தக்கது.

 

ஐந்து வருட தொடர் வைப்பு (Recurring Deposit -RD) திட்டத்தில் கடந்த முறை சொல்லப்பட்ட 7.3 சதவீத வட்டி விகிதம் இம்முறையும் தொடரும். அதே போல மாதாந்திர வருமான திட்டத்தில் (MIS) பழைய 7.7 சதவீத வட்டி விகிதம் தொடரும். மாதாந்திர வருமான திட்டம் 5 வருட காலத்திற்குரியது. இவற்றுக்கான குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ. 1500 ம், அதிகபட்சமாக தனிநபர் கணக்கிற்கு (Single Account) ரூ. 4.5 லட்சமும், கூட்டு கணக்கிற்கு (Jointly Account) ரூ. 9 லட்சமும் ஆகும்.

 

ஐந்து வருட தேசிய சேமிப்பு பத்திரத்திற்கான (NSC) வட்டி விகிதம் 8 சதவீதம். இவற்றில் குறைந்தபட்சம் ரூ. 100 மற்றும் அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. கிசான் விகாஸ் பத்திரத்தின் (KVP) வட்டி 7.7 சதவீதமாக (Interest Rate) தொடரும் என சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பத்திரத்தில் குறைந்த தொகையாக ரூ. 1000 முதலீடு செய்யலாம். இதன் முதிர்வு காலம் 9 வருடங்கள் மற்றும் நான்கு மாதங்களில் (9.4 Years) முடிவடையும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

இந்தியாவின் முதல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளி – விஜய் மல்லையா

இந்தியாவின் முதல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளி – விஜய் மல்லையா

Vijay Mallya – A Fugitive Economic Offender

 

நாட்டின் முதல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையா நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளார். யுனைடெட் ஸ்பிரிட்ஸ் (United Spirits) நிறுவனத்தின் முன்னாள் சேர்மனும், கிங்பிஷர் விமான சேவையின் (Kingfisher Airlines) நிறுவனருமான விஜய் மல்லையா கடந்த சில வருடங்களுக்கு முன்பு, பல்வேறு வங்கிகளில் கடனை வாங்கி விட்டு, அதனை திரும்ப செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்று விட்டார்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

விஜய் மல்லையா வங்கிகளில் வாங்கிய கடன் வட்டியுடன் சேர்த்து ரூ. 9000 கோடியாகும். இவர் பெற்ற கடனை திரும்ப செலுத்தாமல் நாட்டில் சுமார் 17 வங்கிகள் வாராக்கடனில் சிக்கியுள்ளன. கடந்த 2016 ம் ஆண்டு லண்டனுக்கு தப்பிச்சென்ற மல்லையா (Vijay Mallya) இதுவரை நாட்டிற்கு திரும்பவும் இல்லை. வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் வருமான வரித்துறையால் பல வழக்குகள் தொடரப்பட்டது கவனிக்கத்தக்கது. இது சம்மந்தமாக பணமோசடி நடவடிக்கை தடுப்பு நீதிமன்றத்தில் (Prevention of Money Laundering Act – PMLA Court) வழக்கொன்று இருந்தது.

சனிக்கிழமை (05-01-2019) அன்று இந்த நீதிமன்றத்தில் சொல்லப்பட்டதாவது, விஜய் மல்லையா நாட்டிலிருந்து தப்பியோடிய பொருளாதார குற்றவாளி (Fugitive Economic Offender). இவரே நாட்டின் முதல் தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் மல்லையா ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அனைத்து மனுக்களையும் நிராகரிப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2005 ம் ஆண்டு தொடங்கப்பட்ட கிங்பிஷர் விமான சேவை நிறுவனம், 2009 ம் வருடத்தில் ரூ. 7000 கோடி கடனை (Debt) கொண்டிருந்தது. 2012 ம் வருடத்தில் தான் பெற்ற கடனை திரும்ப செலுத்துவதாக உத்தரவாதம் கொடுத்தும், பின் அதனை செலுத்தவில்லை. 2015 ம் வருடம் மதுபானங்களை தயாரிக்கும் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்திலிருந்து விலக்கப்பட்டார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் சரணடையும் படி லண்டன் நீதிமன்றத்தால் கேட்டு கொள்ளப்பட்டது.

தற்போது நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட பொருளாதார குற்றவாளியாக விஜய் மல்லையா இருப்பதால், இனி இவருடைய சொத்துக்கள் உள்நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலிருக்கும் சொத்துக்களும் முடக்கப்படும் என தெரிகிறது. முன்னர் ஒரு முறை, தான் ஒரு ரூபாய் கூட வங்கியில் கடன் வாங்கவில்லை எனவும், கிங்பிஷர் நிறுவனம் தான் கடன் வாங்கியுள்ளதாக விஜய் மல்லையா கூறியிருந்தார். மேலும் அவர் கூறுகையில், ‘ தொழிலில் தோல்வியை தழுவியதால் தான் கிங்பிஷர் நிறுவனம் கடன் அடைந்ததாகவும், நிறுவனம் பெற்ற கடனுக்கு தான் ஒரு ஜாமீன்தாரர் மட்டுமே ‘ எனவும் கூறியுள்ளார்.

நாட்டில் உள்ள விமான சேவை நிறுவனங்கள் பெரும்பாலும் கடனில் தத்தளித்து கொண்டு தான் உள்ளன. சமீபத்தில் ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) நிறுவனமும் திவாலாகும் நிலையில் உள்ளது கவனிக்கத்தக்கது.

 

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை

www.varthagamadurai.com

ஆட்டோமொபைல் துறை விற்பனை வளர்ச்சி குறைகிறதா ?

ஆட்டோமொபைல் துறை விற்பனை வளர்ச்சி குறைகிறதா ?

Does Automobile Sector Sales growth declining ?

 

2019ம் வருடத்தின் இரண்டாவது நாளான (02-01-2019) புதன் கிழமை அன்று  பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஐஷர் மோட்டார்ஸ் (Eicher Motors) நிறுவன பங்கு விலை 9 சதவீத அளவிற்கு வீழ்ச்சி கண்டது. கடந்த டிசம்பர் மாத காலத்தில் இந்த நிறுவனத்தின் ராயல் என்பீல்ட் (Royal Enfield) வாகன விற்பனை அளவு குறைந்ததால், அதன் தாக்கம் பங்குகளின் விலையிலும் தெரிந்தது. புதன் கிழமை வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் துறை மட்டும் 3 சதவீத இறக்கத்தில் முடிந்தது.

 

கடந்த சில காலங்களாக ஆட்டோமொபைல் நிறுவனங்களின் (Automobile Sector) வாகன விற்பனை வெகுவாக குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா (Mahindra & Mahindra), ஐஷர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டார் ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை சந்தை எதிர்பார்ப்பை விட குறைந்த அளவிலே விற்பனையாகி உள்ளது. மும்பை பங்குசந்தையில் ஆட்டோ குறியீடு (BSE Auto) கடந்த ஒரு வருடத்தில் 24 சதவீதம் இறங்கியுள்ளது.

 

வாகனங்களுக்கான அரசின் புதிய வரைமுறைகள், நிறுவனங்களிடையே உள்ள போட்டி, கடந்த கால கச்சா எண்ணெய் மாற்றம் மற்றும் வரி போன்றவை வாகன விற்பனை வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இரு சக்கர வாகனங்களின் பிரியமான ராயல் என்பீல்ட் விற்பனை வளர்ச்சி கடந்த சில காலாண்டுகளாக பின்னடைவை சந்தித்துள்ளன. இதற்கு காரணமாக சொல்லப்படுவது ஜாவாவின் (Jawa Motor Cycle) வருகை தான்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஐஷர் மோட்டார்ஸ் (Eicher Motors) நிறுவனத்தின் ராயல் என்பீல்ட் விற்பனை கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 14 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது. ஐஷர் நிறுவனத்தின் மற்ற வாகனங்கள் 21 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ள போதும், ராயல் என்பீல்ட் பிராண்டின் மதிப்பு குறைய உள்ளதா என்ற ஐயமும் சந்தையில் நிலவுகிறது. 350 சி.சி. க்கு மேற்பட்ட வகைகளில் ராயல் என்பீல்ட் விற்பனை வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. ஆனால் 350 சி.சி. க்கு கீழ் உள்ள வாகனங்களில் ஜாவா (Jawa – Mahindra) சவாலாக உள்ளது. இன்சூரன்ஸ் மற்றும் வாகனத்தில் புகுத்தப்பட்ட அம்சங்கள் ஆகியவை ராயல் என்பீல்ட் விலையை சற்று அதிகரித்தது. அதே நேரத்தில் ராயல் என்பீல்ட் வாகனத்திற்கு மாற்றாக தற்போது ஜாவா இரு சக்கர வாகனம் பார்க்கப்படுகிறது.

 

ராயல் என்பீல்ட் வாகன விற்பனை கடந்த டிசம்பர் மாதத்தில் 56,000 வாகனங்களாக இருந்தது. இதே காலத்தில் இதற்கு முந்தைய (2017) வருடத்தில் 65,300 வாகனங்களாக விற்பனையானது கவனிக்கத்தக்கது. இதே போன்று மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டர்(Tractors) விற்பனை வளர்ச்சியும் குறைந்துள்ளது. டிசம்பர் மாத காலத்தில் 16,510 டிராக்டர்கள் விற்பனையாக இருப்பினும், இதே காலத்தில் முந்தைய வருடத்தில் 16,855 வாகனங்களாக இருந்தது.

 

ஜாகுவார் (JLR) வருகைக்கு பின் டாடா மோட்டார்ஸின் வருவாய் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. உலகின் மிகப்பெரிய வாகன சந்தையை கொண்டிருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த இரண்டு காலாண்டு முடிவுகளில் நஷ்டத்தை கண்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் போன்ற புதுமையான விஷயங்கள் வாகனங்களில் வந்து கொண்டிருக்கும் காலம் இது. வாகன துறைகளின் வளர்ச்சியும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முன்னிறுத்தும் காரணியாகும். தற்போது ஏற்பட்டுள்ள இந்த சுணக்கம் வருங்காலத்தில் களையப்படலாம் என நாம் எதிர்பார்க்கலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

சேனல்களை தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு

சேனல்களை தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு

The deadline for selection of TV Channels is extended to January 31, 2019

 

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI – Telecom Regulatory Authority of India) ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான புதிய கட்டமைப்பு முறையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. டி.டி.ஹெச் (DTH) ஆபரேட்டர்கள் மற்றும் பிற ஒளிபரப்பாளர்கள் புதிய நடைமுறையை பின்பற்றுமாறும், சந்தாதாரர்களின் விருப்பங்களை கொண்டு அவர்களே சேனல்களை தேர்வு செய்யும் முறையை நடைமுறைப்படுத்தும் படி டிராய் தனது அறிக்கையில் கூறியிருந்தது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சந்தாதாரர்கள் (Subscribers) தாங்களே கேபிள் டிவி சேனல்களை தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் 28ம் தேதியாக அறிவித்தது டிராய். அதன் பின்னர் புதிய கட்டமைப்பின் கீழ் அனைத்து சேனல்களும் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தது. தற்போது இந்த அறிவிப்பில் மாற்றத்தை கொண்டு வந்து, சந்தாதாரர்கள் சேனல்களை தேர்வு செய்வதற்கான கடைசி தேதியை வரும் ஜனவரி 31, 2019 ஆக வெளியிட்டுள்ளது.

 

புதிய முறையின் கீழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் தங்களின் ஒவ்வொரு சேனல்களுக்கான சில்லறை விலையை அறிவிக்க வேண்டுமெனவும், வாடிக்கையாளர்களை (சந்தாதாரர்கள்) அனைத்து சேனல்களையும் பார்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

சந்தாதாரர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் அடிப்படை திட்டத்திற்கு ரூ. 130 உடன் ஜி.எஸ்.டி. (18% GST) கட்டணம் உட்பட மாதம் ரூ. 153 /- செலுத்த வேண்டும். இந்த அடிப்படை திட்டத்தில் 26 தூர்தர்சன்(Doordarshan) சேனல்களும், 500 பொது சேனல்களிலிருந்து 100 இலவச சேனல்களும் வழங்கப்படும். அதற்கு பிறகான சேனல் தேர்வுகளுக்கு சந்தாதார்கள் பணம் (Pay TV Channel) செலுத்த வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமில்லாத சேனல்களை தவிர்க்கலாம்.

 

புதிய கட்டமைப்பு முறையின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள கட்டண சேனல்களும், அதன் விலைப்பட்டியலும் கீழே உள்ள இணைப்பில் தரப்பட்டுள்ளது.

 

Tariff (Rates) under New Regulatory Framework (2018)

 

FAQs on New Regulatory Framework for Broadcasting and Cable TV Services

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

IBC திவால் சட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 80,000 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது

IBC திவால் சட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 80,000 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது  

80,000 Crore Rupees have been recovered through IBC – NCLT

 

நமது நாட்டில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பொருளாதார வளர்ச்சியை ஒரு புறம் பாதிக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் பல கடன்களில் தத்தளித்து திவாலாகும் நிலை கடந்த சில வருடங்களாகவே அதிகரித்துள்ளது. நிறுவனங்களின் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனை அடைக்காமல், வெளிநாட்டிற்கு தப்பி செல்வதும், இதனால் வங்கிகள் பாதிக்கப்படுவதும் மக்களின் வங்கிகள் மீதான நம்பிக்கையை குறைத்து விட்டது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிறுவனங்கள் திவாலாகும் நிலையை தவிர்க்கவும், வாங்கிய கடனை மீட்டெடுக்கவும் அரசு சில கொள்கைகளை வரையறுத்தது. இவற்றில் ஒன்று தான் திவால் சட்டம் – IBC (Insolvency and Bankruptcy Code). கடந்த 2016 ல் அறிமுகப்படுத்தப்பட்ட திவால் சட்டம் மூலம் இன்று பல்வேறு நிறுவனங்கள் திவாலாகாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் மூலம் திரும்ப பெற வேண்டிய கடன் தொகையையும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

 

தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் மூலம் (NCLT – National Company Tribunal) கடந்த 2017 ம் ஆண்டு முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு சினெர்ஜிஸ் (Synergies – Dooray Automotive) நிறுவனத்திடம் திவால் சட்ட முறையை பயன்படுத்தியது. நடப்பு வருடத்தில் கடனில் தத்தளித்து வரும் எஸ்ஸார் ஸ்டீல், பூஷன் (Bhushan) பவர் மற்றும் ஸ்டீல், மோனெட் இஸ்பாட் (Monnet Ispat), ஆம்டெக் ஆட்டோ (Amtek Auto), வீடியோகான், லாங்கோ இன்ப்ரா, ருச்சி சோயா (Ruchi Soya) ஆகிய நிறுவனங்கள் திவால் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.

 

இவற்றில் பூஷன் நிறுவனம் 45,000 கோடி ரூபாய் கடனையும், எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் சுமார் 80,000 கோடி ரூபாய் கடனையும் கொண்டுள்ளது. சொல்லப்பட்ட நிறுவனங்களின் வழக்கு தற்போது முடிவுறும் நிலையில், கடன் நிறுவனங்களை வாங்குவதற்காக மற்ற பெரிய நிறுவனங்களும் காத்திருக்கின்றன.

 

திவால் சட்டத்தின் மூலம் இந்த வருடத்தில் மட்டும் கடன் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து சுமார் 80,000 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திவால் நிலையில் தத்தளித்த நிறுவனங்களை கையகப்படுத்த டாட்டா ஸ்டீல், ரிலையன்ஸ், வேதாந்தா, அல்ட்ரா டெக் ஆகிய பெரு நிறுவனங்கள் தயாராக உள்ளன. வரும் ஆண்டுகளிலும் திவால் சட்டத்தின் மூலம் கடன் நிறுவனங்களை மீட்டெடுப்பதும், வங்கிகளின் கடனும் குறையலாம் என அரசு எதிர்பார்க்கிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com