Kotak Mahindra Bank

கோடக் மஹிந்திரா வங்கியின் காலாண்டு நிகர லாபம் ரூ. 1291 கோடி

கோடக் மஹிந்திரா வங்கியின் காலாண்டு நிகர லாபம் ரூ. 1291 கோடி

Kotak Mahindra Bank Q3 FY19 net profit rises to Rs.1291 Crore

 

தனியார் வங்கியான கோடக் மஹிந்திரா வங்கி (Kotak Mahindra Bank) தனது மூன்றாம் காலாண்டு முடிவுகளை திங்கட்கிழமை அன்று (21-01-2019) வெளியிட்டது. 2018-19 ம் நிதியாண்டுக்கான மூன்றாம் காலாண்டில் (Q3FY19 – அக்டோபர்-டிசம்பர்) நிகர லாபமாக ரூ.1,290.93 கோடியை ஈட்டியுள்ளது. சொல்லப்பட்ட காலத்தில் வங்கியின் வருவாய் 6,250 கோடி ரூபாயாக உள்ளது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இதற்கு முந்தைய காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) வங்கியின் வருவாய்(Revenue) ரூ. 5,810 கோடியாகவும், நிகர லாபம் ரூ.1,141.65 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. தற்போது வெளியிடப்பட்ட காலாண்டு முடிவுகளை கடந்த 2017-18 ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், நிகர லாபம் அதிகமாக  உள்ளது. 2017-18 ம் மூன்றாம் காலாண்டில் வங்கியின் வருவாய் ரூ.5,009 கோடியாகவும், நிகர லாபம்(Net Profit) ரூ.1,053 கோடியாகவும் இருந்தது.

 

முந்தைய மூன்றாம் காலாண்டுடன் ஒப்பிடும் போது, தற்போதைய நிகர லாபம் 23 சதவீத வளர்ச்சியை கொண்டுள்ளது. வங்கியின் வருவாயும் 25 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மொத்த வாராக்கடன் விகிதம்(GNPA) 2.15 சதவீதத்திலிருந்து 2.07 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, மோசமான கடன் விகிதமும் (Bad loans) 0.81 சதவீதத்திலிருந்து 0.71 சதவீதமாக குறைந்துள்ளது.

 

நடப்பு மற்றும் சேமிப்பு கணக்குக்கான காசா (CASA Ratio) விகிதமும் 51 சதவீதத்தை எட்டியுள்ளது. இது கடந்த 2017-18 ம் நிதியாண்டு காலத்தில் 47 சதவீதமாக இருந்தது. சேமிப்பு கணக்கில் உள்ள வைப்பு தொகை 34 சதவீதம் அதிகரித்து 73,958 கோடி ரூபாயாக உள்ளது. நடப்பு கணக்கிற்கான வைப்புத்தொகை 19 சதவீதம் அதிகரித்து ரூ.29,607 கோடியாக உள்ளது. இதுவே 2017-18 ம் வருடத்தில் அக்டோபர்-டிசம்பர் காலத்தில் சேமிப்பு கணக்கிற்கான வைப்புத்தொகை ரூ. 55,397 கோடியாகவும், நடப்பு கணக்கில் 24,776 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது.

 

டிசம்பர் 31, 2018 தேதியின் படி, வங்கியின் மொத்த வாராக்கடன்(Non Performing Asset) 2.07 சதவீதம் மற்றும் நிகர வாராக்கடன்(NNPA) 0.71 சதவீதமாகும். கடந்த வருட முடிவில் கோடக் மஹிந்திரா வங்கிக்கு 1,453 கிளைகளும், 2,270 ஏ.டி.எம்.(ATM) மையங்களும் செயல்பாட்டில் இருக்கிறது. போதுமான மூலதன விகிதம் 18.1 சதவீதமாக உள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

 

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s