Tag Archives: dth

டி.டி.எச். சேவையில் நூறு சதவீத அன்னிய முதலீடு – அமைச்சகம் ஒப்புதல்

டி.டி.எச். சேவையில் நூறு சதவீத அன்னிய முதலீடு – அமைச்சகம் ஒப்புதல் 

100 Percent Foreign Direct Investment in DTH Service – Union Cabinet

டி.டி.எச்.(Direct to Home) என்பது செயற்கைக்கோள்களிலிருந்து பெறப்படும் சிக்னல்கள் மூலம் செயற்கைக்கோள் தொலைக்காட்சியைப் பெறும் ஒரு முறையாகும். இந்த நேரடி ஒளிபரப்பு முறை கடந்த 2000ம் ஆண்டு மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டது. நாட்டின் முதல் டி.டி.எச். தொலைக்காட்சி சேவை, ஜீ குழுமத்தை(Zee Group) சேர்ந்த டிஷ் டி.வி. நிறுவனத்தால் 2003ம் வருடம் அக்டோபர் மாதத்தில் கொண்டு வரப்பட்டது.

டி.டி.எச். சேவையில் உலகின் மிகப்பெரிய சந்தையாகவும் நம் நாடு விளங்குகிறது. கடந்த 2019ம் ஆண்டு முடிவின் படி, நாட்டில் 7 கோடி டி.டி.எச்.(DTH) சந்தாதாரர்கள் உள்ளனர். மார்ச் 2020 காலத்தின் அடிப்படையில் நான்கு கட்டண சேவையை அளிக்கும் நிறுவனங்களும், ஒரு இலவச சேவை வழங்குநரும் உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

7 கோடி சந்தாதாரர்களில், இலவச சந்தாதாரர்கள் சம்மந்தமாக குறிப்பிடப்படவில்லை. இலவச சேவையை மத்திய அரசின் பிரசார் பாரதி நிறுவனமும், கட்டண சேவையில் டாட்டா(Tata Sky), டிஷ் டி.வி., ஏர்டெல் மற்றும் சன் டைரக்ட் உள்ளன.

நாட்டின் மொத்த டி.டி.எச். சேவையில் டாட்டா நிறுவனம் 32 சதவீத பங்களிப்பையும், டிஷ் டி.வி.(Dish TV) 30 சதவீத பங்களிப்பையும், ஏர்டெல்  மற்றும் சன் டைரக்ட்(Sun Direct) முறையே 23 சதவீதம் மற்றும் 14 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளன. உள்நாட்டில் சுமார் 18 கோடி தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளது கவனிக்கத்தக்கது.

டி.டி.எச். சேவையில் துரிதமான வளர்ச்சிக்கும், கூடுதல் பாதுகாப்புக்கும் முதலீடு துணைபுரியும் என்பதால், இந்த துறையில் 100 சதவீத அன்னிய முதலீட்டை ஈர்க்க மத்திய அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் அரசுக்கும் கூடுதலாக வருவாய் கிடைக்கப்பெறுவது மட்டுமில்லாமல், மேம்பட்ட சேவையை பொது மக்களுக்கு அளிக்க முடியும் என அரசு எண்ணுகிறது.

உரிமையை புதுப்பித்தலுக்கான காலத்திலும்(License renewal) 10 வருடத்திலிருந்து 20 வருடமாக நீட்டித்துள்ளது. மேலும் சேவையை வழங்கும் நிறுவனங்களுக்கான உரிமக்கட்டணத்திலும் சலுகை வழங்க போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

சேனல்களை தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு

சேனல்களை தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு

The deadline for selection of TV Channels is extended to January 31, 2019

 

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI – Telecom Regulatory Authority of India) ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான புதிய கட்டமைப்பு முறையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. டி.டி.ஹெச் (DTH) ஆபரேட்டர்கள் மற்றும் பிற ஒளிபரப்பாளர்கள் புதிய நடைமுறையை பின்பற்றுமாறும், சந்தாதாரர்களின் விருப்பங்களை கொண்டு அவர்களே சேனல்களை தேர்வு செய்யும் முறையை நடைமுறைப்படுத்தும் படி டிராய் தனது அறிக்கையில் கூறியிருந்தது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சந்தாதாரர்கள் (Subscribers) தாங்களே கேபிள் டிவி சேனல்களை தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் 28ம் தேதியாக அறிவித்தது டிராய். அதன் பின்னர் புதிய கட்டமைப்பின் கீழ் அனைத்து சேனல்களும் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தது. தற்போது இந்த அறிவிப்பில் மாற்றத்தை கொண்டு வந்து, சந்தாதாரர்கள் சேனல்களை தேர்வு செய்வதற்கான கடைசி தேதியை வரும் ஜனவரி 31, 2019 ஆக வெளியிட்டுள்ளது.

 

புதிய முறையின் கீழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் தங்களின் ஒவ்வொரு சேனல்களுக்கான சில்லறை விலையை அறிவிக்க வேண்டுமெனவும், வாடிக்கையாளர்களை (சந்தாதாரர்கள்) அனைத்து சேனல்களையும் பார்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

சந்தாதாரர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் அடிப்படை திட்டத்திற்கு ரூ. 130 உடன் ஜி.எஸ்.டி. (18% GST) கட்டணம் உட்பட மாதம் ரூ. 153 /- செலுத்த வேண்டும். இந்த அடிப்படை திட்டத்தில் 26 தூர்தர்சன்(Doordarshan) சேனல்களும், 500 பொது சேனல்களிலிருந்து 100 இலவச சேனல்களும் வழங்கப்படும். அதற்கு பிறகான சேனல் தேர்வுகளுக்கு சந்தாதார்கள் பணம் (Pay TV Channel) செலுத்த வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமில்லாத சேனல்களை தவிர்க்கலாம்.

 

புதிய கட்டமைப்பு முறையின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள கட்டண சேனல்களும், அதன் விலைப்பட்டியலும் கீழே உள்ள இணைப்பில் தரப்பட்டுள்ளது.

 

Tariff (Rates) under New Regulatory Framework (2018)

 

FAQs on New Regulatory Framework for Broadcasting and Cable TV Services

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com