சிறு சேமிப்பு திட்டங்களுக்கான சமீபத்திய வட்டி விகிதங்கள் – 2019
Interest Rates for Small Savings Scheme – Effect from Jan 2019
கடந்த சில காலங்களாக அஞ்சலக சேமிப்பு(Postal Savings) மற்றும் வங்கிகளுக்கான சிறு சேமிப்பு வட்டி விகிதங்கள் குறைவாகவே காணப்படுகிறது. அதே நேரத்தில் நிதி நிறுவனங்களுக்கான கடன் பத்திரங்களின் (Debentures) வட்டி விகிதம் 8 சதவீதத்திலிருந்து 9.5 சதவீதம் வரை தரப்படுகிறது. இருப்பினும், சிறு சேமிப்பு வட்டி விகிதங்களை பொறுத்தவரை அஞ்சலக மற்றும் வங்கிகளின் பாதுகாப்பு போன்று மற்ற நிறுவனங்களின் கடன் பத்திர வெளியீட்டில் கிடைப்பதில்லை.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்ய விருப்பம் இல்லாதவர்கள், ஆனால் சிறிது ரிஸ்க் எடுக்க நினைப்பவர்களுக்கு கடன் பத்திரங்கள் உதவலாம். நடுத்தர வருமானம் கொண்டவர்கள் மற்றும் பாதுகாப்பான வருமானத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு சிறு சேமிப்பு திட்டங்கள் ஒரு வரப்பிரசாதமே.
சமீபத்தில் நிதி அமைச்சகத்தால் (Ministry of Finance) வெளியிடப்பட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் நடப்பு மாதம் ஜனவரி முதல் வரும் மார்ச் மாதம் வரையிலான (Jan-Mar 2019) காலத்திற்கு பொருந்தும். சிறு சேமிப்புக்கான வட்டி விகித முறையை அரசு மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றியமைத்து வெளியீட்டு வருகிறது நினைவிருக்கலாம்.
புதிய வட்டி விகிதங்கள் – ஜனவரி 1, 2019 முதல்,
பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund -PPF) திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதம் 8 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபர்-டிசம்பர் காலத்திலும் 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ. 500 மற்றும் திட்டத்திற்கான கூட்டு வட்டி வருட காலத்தில் (Annually) செயல்படும்.
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு (Sukanya Samriddhi) திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லாமல் வட்டி விகிதம் 8.5 சதவீதமாக சொல்லப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் செய்ய வேண்டிய குறைந்தபட்ச முதலீட்டு தொகை (Minimum Investment) ரூ. 1000 ஆகும். வட்டி விகிதம் வருட காலத்தில் செயல்பட ஆரம்பிக்கும்.
மூத்த குடிமக்களுக்கான (Senior Citizen) 5 வருட சேமிப்பு திட்டத்தின் வட்டி விகிதம் 8.7 சதவீதமாக தொடரும். வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும். இந்த திட்டத்தில் 1000 ரூபாயை குறைந்தபட்ச தொகையாக செலுத்த வேண்டும். அதிகபட்ச முதலீட்டு தொகை ரூ. 15 லட்சம் வரை இருக்கலாம்.
அடிப்படை சேமிப்பு திட்டத்திற்கான (Basic Savings Account) வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை. ஏற்கனவே இருந்த 4 சதவீத வட்டியே இம்முறையும் தொடரும். அஞ்சலகத்தில் ரூ. 20 ம், வங்கிகளில் அதற்கு சொல்லப்பட்ட குறைந்தபட்ச பராமரிப்பு தொகையும், அடிப்படை சேமிப்பு திட்டத்தின் குறைந்த முதலீடு ஆகும். இத்திட்டத்தில் அதிகபட்ச தொகைக்கு வரம்பு ஏதும் கிடையாது.
ஒரு வருட, இரண்டு வருட மற்றும் மூன்று வருட காலத்திற்கான வைப்பு (Term Deposit) திட்டத்தில் 7 சதவீதமும், ஐந்து வருட காலத்திற்கு (5 Years Term Deposit) 7.8 சதவீதமும் வழங்கப்படுகிறது. கடந்த முறை ஒரு வருட காலத்திற்கு 6.9 சதவீத வட்டி விகிதமும், மூன்று வருடத்திற்கு 7.2 சதவீதமும் இருந்தது கவனிக்கத்தக்கது.
ஐந்து வருட தொடர் வைப்பு (Recurring Deposit -RD) திட்டத்தில் கடந்த முறை சொல்லப்பட்ட 7.3 சதவீத வட்டி விகிதம் இம்முறையும் தொடரும். அதே போல மாதாந்திர வருமான திட்டத்தில் (MIS) பழைய 7.7 சதவீத வட்டி விகிதம் தொடரும். மாதாந்திர வருமான திட்டம் 5 வருட காலத்திற்குரியது. இவற்றுக்கான குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ. 1500 ம், அதிகபட்சமாக தனிநபர் கணக்கிற்கு (Single Account) ரூ. 4.5 லட்சமும், கூட்டு கணக்கிற்கு (Jointly Account) ரூ. 9 லட்சமும் ஆகும்.
ஐந்து வருட தேசிய சேமிப்பு பத்திரத்திற்கான (NSC) வட்டி விகிதம் 8 சதவீதம். இவற்றில் குறைந்தபட்சம் ரூ. 100 மற்றும் அதிகபட்ச வரம்பு எதுவும் இல்லை. கிசான் விகாஸ் பத்திரத்தின் (KVP) வட்டி 7.7 சதவீதமாக (Interest Rate) தொடரும் என சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பத்திரத்தில் குறைந்த தொகையாக ரூ. 1000 முதலீடு செய்யலாம். இதன் முதிர்வு காலம் 9 வருடங்கள் மற்றும் நான்கு மாதங்களில் (9.4 Years) முடிவடையும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை