மீட்கப்படுமா ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் ?
Will the Jet Airways be recover ?
நமது வர்த்தக மதுரை இணைய தளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், நாட்டில் உள்ள விமான சேவை நிறுவனங்களின் நிதி நிலைமை மோசமாகியிருப்பதை விஜய் மல்லையாவின் தலைப்பில் ஒரு கட்டுரையின் மூலம் சொல்லியிருந்தோம். அவற்றில் ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) விமான சேவை நிறுவனமும் திவாலாகும் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளில் மூன்று நிதியாண்டுகளில் மட்டுமே லாபத்தை கண்டுள்ளது. நிகர லாபத்தில் அதிகபட்சமாக கடந்த 2017ம் நிதி ஆண்டில் ரூ.1,483 கோடியையும், நஷ்ட காலத்தில், அதிகபட்ச நிகர நஷ்டமாக 2014ம் நிதி வருடத்தில் ரூ.3,668 கோடியை இழந்துள்ளது. நடப்பு 2018-19ம் வருடத்தில் முதல் இரண்டு காலாண்டுகளிலும் ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் நஷ்டத்தை (Net Loss on Quarterly) மட்டும் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
மூன்றாம் (அக்டோபர்-டிசம்பர் 2018 Q3 Results) காலாண்டு முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், சேவையை தொடர்வதற்கான போதுமான நிதி ஆதாரம் இல்லை என ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சார்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கடன்(Debt) மட்டும் ரூ. 8,400 கோடி. ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த எதிஹாட் நிறுவனம் 24 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. எதிஹாட் நிறுவனம்(Etihad Airways) முதலீடு செய்திருந்தாலும், நமது நாட்டின் சட்ட விதிமுறைப்படி இந்த நிறுவனம் இயக்குனர் குழுவையோ அல்லது ஜெட் ஏர்வேஸின் நிர்வாகத்தையோ கட்டுப்படுத்த முடியாது.
தொடர்ச்சியாக கடந்த மூன்று காலாண்டுகளில் நஷ்டத்தை சந்தித்து வரும் ஜெட் ஏர்வேஸ், ஒரு வாரத்திற்கு பிறகான விமான சேவையை தொடர போதுமான பணமில்லை என கூறியுள்ளது. ஏற்கனவே வங்கிகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கும் இந்நிறுவனம், விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் சந்தித்த நிலையில் தற்போது உள்ளது.
நிறுவனர் பங்குகளை அடுத்து அதிகபட்ச பங்குகளை கொண்டிருக்கும் எதிஹாட் விமான நிறுவனம் தனது பங்குகளை கொண்டு கூடுதல் கடன் தொகையை பெறாது என தெரிகிறது. இதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அவசர கால நிதியை முயற்சித்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் விமான நிறுவனங்களை மறுசீரமைப்பது சார்ந்த நிகழ்வில், எதிஹாட் நிறுவனத்தின் சேர்மன் டோனி டக்ளஸ், பாரத ஸ்டேட் வங்கி (SBI) தலைவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்ட விளக்கமானது, ‘ ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தில் 24 சதவீத பங்குகளை வைத்திருக்கும் தங்கள் நிறுவனம், அவசர கால நிதியாக ஜெட் ஏர்வேஸுக்கு உதவ விரும்புகிறது. அதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் தங்கள் நிறுவனம் மேலும் சில பங்குகளை வாங்க முயற்சிக்கும். ஆனால் அதற்கான விலையாக சந்தை விலையில் பாதியான ரூ. 150 க்கு பங்கு ஒன்றுக்கு தரப்போவதாக அறிவித்துள்ளது. ‘
கடந்த 2012 ம் ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட விதிமுறைகளின் படி, இந்திய விமான நிறுவனங்களில் அந்நிய நாட்டு விமான நிறுவனங்கள் அதிகபட்சமாக 49 சதவீத பங்குகள் வரை முதலீடு செய்து கொள்ளலாம் என அறிவித்திருந்தது. இதனை சார்ந்தே தற்போது எதிஹாட் நிறுவனம்(Etihad Airways) பங்குகளை வாங்குவது பற்றி கூறியிருந்தது. அதே வேளையில், நிறுவனத்தின் பங்குகளை விற்பது என்பது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முடிவை பொறுத்தே அமையும். ஆனால் எதிஹாட் நிறுவனம் வாங்கப்போகும் விலை பங்கு ஒன்றுக்கு ரூ.150 என்பது தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவன பங்கு விலை ரூ. 270 ஆக சந்தையில் வர்த்தகமாகியுள்ளது. புதன் கிழமை (16-01-2019) அன்று இந்த நிறுவனத்தின் பங்கு விலை 8 சதவீத இறக்கத்தை கண்டுள்ளது. எதிஹாட் நிறுவனத்தின் குறைந்த விலையிலான மதிப்பீடு தான் ஜெட் ஏர்வேஸ் பங்கு விலை சரிவிற்கு காரணம் என சொல்லப்படுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை