All posts by skatzsaravana

Value Investor, Entrepreneur and Founder of Varthaga Madurai, Rich Investing iDEAS

எட்டுத்திக்கும் எட்டாம் அதிசயம் – Power of Compounding

எட்டுத்திக்கும் எட்டாம் அதிசயம் – கூட்டு வட்டி (Power Of Compounding)

கூடி வாழ்ந்தால் தான் கோடி நன்மை;
கூட்டு வட்டியினால் தான் கோடிகள் (கோடி ரூபாய்) சாத்தியம் !
“Compound interest is the eighth wonder of the world. He who understands it, earns it … he who doesn’t, pays it….”
உலகத்தின் எட்டாம் அதிசயம் “கூட்டு வட்டி – Compound Interest” என்றார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein).
கூட்டு வட்டியின் பலனை பற்றி, நாம் நமது பள்ளிக்காலங்களில் படித்திருப்போம். நமது பள்ளிக்கல்வியில் கணித பாடத்தில் வட்டி விகிதம், கூட்டு வட்டி மற்றும் தனி வட்டி என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருப்போம். அதன் பலனை நாம் அறியவே, நமது பள்ளிகளில் (1990 களில்) அஞ்சலக சேமிப்பான “Sanchayika” திட்டம் மிகவும் பிரபலம். அது கூட்டு வட்டியின் மகிமையையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறு நமது பள்ளியிலும், கல்லூரியிலும் மற்றும் வேலை பார்க்கும் அலுவலகத்திலும் கூட இந்த கூட்டு வட்டி பற்றிய விஷயங்களை பயன்படுத்தியிருப்போம்; ஆனால் அது எழுத்து பூர்வமாகவே ! அந்த கூட்டு வட்டியின் தன்மை நம்மை எவ்விதத்திலும் மாற்றவில்லையே ! நாம் சற்று ஆழமாக சிந்தித்தால், இந்த கூட்டு வட்டியின் ரகசியத்தை அறியலாம்; அனுபவிக்கவும் செய்யலாம். இதை தான் ஒவ்வொரு வங்கிகளும் செய்கின்றன. பெருத்த முதலாளிகளை(RD, FD, Stocks) உருவாக்குவதும், கடன்கார ஏழைகளை(EMI, Loan) உருவாக்குவதும் இந்த கூட்டு வட்டியின் ரகசியம் !
கூட்டு வட்டி அப்படி என்ன சாதித்து விட போகிறது ?
நீங்கள் ஒரு வங்கியிலோ (அ) அஞ்சலக சேமிப்பிலோ, மாதம் ரூ.100 ஆக ஒரு வருடத்திற்கு சேமிக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். உங்களுக்கான வட்டி 8 % (மாத கூட்டு வட்டியில்)
ஒரு வருட முடிவில், உங்களுக்கு கிடைப்பது ரூ. 1253 /- (கூட்டு வட்டி)
நீங்கள் சேமித்த / முதலீடு செய்த மொத்த தொகை: ரூ. 1200 /-
நீங்கள் பெற்ற வருமானம் :   (1253-1200) = ரூ. 53 /-
அதாவது உங்களின் ஒவ்வொரு மாத 100 ரூபாயும், தங்களுக்கென்று, ரூ. 4.40 /- வருமானத்தை தந்துள்ளன.
இதை போல நீங்கள் 5 வருடங்கள் சேமிக்க முடிவு செய்தால், உங்களுக்கு கிடைக்க கூடிய மொத்த தொகை ரூ. 7397 /-  10 வருடங்களில் மொத்த தொகை ரூ. 18417 /-
5 வருடங்களில் வருமானம் ரூ. 1397 /-  அதாவது உங்களின் ஒவ்வொரு மாத 100 ரூபாயும்,  5 வருட முடிவில் ரூ. 23.30 /- ஐ உங்களுக்காக சம்பாதித்து கொடுத்துள்ளன.
10 வருடங்களில் உங்களின் வருமானம் ரூ. 6417 /- உங்களின் ஒவ்வொரு 100 ரூபாயும், முடிவில் ரூ. 53.50 /- சம்பாதித்து கொடுத்துள்ளன.
ஆக, கூட்டு வட்டியின் மூலம் உங்களின் ஒவ்வொரு ரூபாயும் உங்களுக்காக வேலை பார்த்து கணிசமான வருமானத்தை தந்துள்ளன. இதற்காக நீங்கள் எந்த மெனக்கெடுத்தும் வேலை செய்யவில்லை.
இதனையே, நீங்கள் ஒரு முறை மட்டும் (முதல் மாதம் மட்டும்) ரூ. 100 ஐ சேமித்து விட்டு போகிறீர்கள். உங்களுக்கு ஒரு வருடத்திற்கு பிறகு கிடைக்கும் மொத்த தொகை ரூ. 108,  5 வருடங்களில் ரூ. 149 /- 10 வருடங்களில் ரூ. 222 /-
இதனை நீங்கள் உங்கள் வீட்டில், ஏதேனும் ஒரு மூலையில்  ஒவ்வொரு மாதமும், 100 ரூ. வைத்திருந்தால், ஒரு வருட / 5 / 10 வருட முடிவில் உங்களுக்கு கிடைப்பதோ பழைய 100 ரூ. நோட்டுக்களும், சிறிது கறை படிந்த அழுக்குகளும் ! ஆகவே, கூட்டு வட்டியை பயன்படுத்துங்கள். உங்கள் மாத தவணைகளும்(EMI, Loan) இதன் மூலமே கணக்கிடப்படுகிறது என்பதனை மறக்க வேண்டாம்.
100 ரூபாயின் உழைப்பு :
100-rs.-compounding
இது தான் பணம், பணம் பண்ணும் ரகசியம். இதன் மூலமே பணக்காரர்களும், முதலாளிகளும் உருவாகிறார்கள்; விழிப்புணர்வு இல்லதாவர்களே ஏழைகளாகவும், கடனாளிகளாகவும் மாறுகிறார்கள். இந்த பூமியில் படைக்கப்பட்ட எல்லா மனிதர்களும், பொருளார ரீதியாக சமமாகவே படைக்கபட்டார்கள்; மனித இனத்தின் சிந்தனை  தான் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்துகிறது.
பத்து பேரை ஒருங்கிணைத்து, ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதன் வளர்ச்சியையும், கிடைக்கும் பலனையும் அனுபவிப்பது கூடி வாழ்ந்தால் தான் ! இதனை நமக்கு யாரும் சொல்லி கொடுக்க வேண்டியதில்லை. அதே போல தான் கூட்டு வட்டியும் !

இப்போதே நகருங்கள்… கூட்டு வட்டியின் Formula ஐ தேடி… பதிவிறக்கம் செய்யுங்கள் ஒரு வட்டி(Bank Interest App) விகித செயலியை…

சேமியுங்கள் / முதலீடு செய்யுங்கள் ஒரு 100 ரூபாயை…

உங்களுடைய பகிர்வுகளுக்கு:
 contact@varthagamadurai.com
–  நன்றி, வர்த்தக மதுரை

 

 

 

 

4 GB Data Offer ! – வரவு செலவு கணக்கு

4 GB Data Offer ! – வரவு செலவு கணக்கு

இந்த தலைப்பை பார்த்தவுடனே, எத்தனை பேர் Offer ஐ பெறுவதற்கு ரெடியா இருக்கீங்களோ ! அட, இது என்னோட 4GB Data ரகசிய வரவு – செலவு கணக்கு Offer ங்க ! உங்களுக்கும் அந்த ரகசியத்தை சொல்றேன்; இனி அப்புறம் என்ன ரகசியம் 🙂

 

பொதுவாக நாம் Offer மற்றும் Free என்ற ஆங்கில வார்த்தையை அடிக்கடி விளம்பரத்தில் பார்ப்பதும், நாம் எதிர்ப்பாகவும் பழகிவிட்டோம். பெரும்பாலும் நாம் நம் வாழ்கையில் பல சந்தர்ப்பங்களில் சலுகையை தேடியே அலைகிறோம்; ஆனால் நம்மிடம் உள்ளே உள்ள மாபெரும் சலுகையை பெற மறந்து விடுகிறோம்.

 

4GB Data Offer என்றவுடன், கண்ணை மூடி கொண்டு அதற்கு தயாரானவர்கள் 100 ல் 40 % பேர்; 30 % பேர் தங்களுக்கு தேவையோ, இல்லையோ எதிர்காலத்தில் இது போன்ற Offer ஐ மிஸ் பண்ணகூடாது என்று, இப்போதே முயற்சித்து பார்ப்பர். 20 % பேர் இந்த சலுகையில் எதோ விஷமம் உள்ளது என்று ஒதுங்கி விடுவர்; 10 % பேர் மட்டுமே, Offer ஐ பற்றிய விவரங்களை அறிந்து, தங்கள் தேவையின் நிலை அறிந்து அதை பெறுவார்கள் (அ) விலக்கி விடுவார்கள். இதே நிலை தான் நமது வரவு – செலவு கணக்கும்…  மாத சம்பளக்காரர்கள் பெரும்பாலும் தங்களது வரவு – செலவு கணக்கினை பேணி காக்க தவறுவதாலே, ஒவ்வொரு மாதத்தின் 10 ம் தேதியிலும், மாத இறுதியிலும் புலம்புகின்றனர்.

4GB Offer ஐ பெறுவது எப்படி ? (ரகசிய வரவு – செலவு கணக்கு)

பொதுவாக இணைய சேவையை (Internet / Data) பயன்படுத்துவதில் என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது. அதாவது, என்னிடம் உள்ள Huawei Data Card ஐ கொண்டு, நான் எனது டேட்டா (Data) செலவுக்கு ரூ. 499 க்கு 4 GB (3G /Validity – 28 Days) ரீசார்ஜ் செய்வேன்; எனது 3G Data உள்ள சலுகை என்னவெனில், எனது ப்ரீமியம் காலம் முடியும் தருவாயில், மீதம் ஏதேனும் டேட்டா இருப்பின், நான் அடுத்த ரீசார்ஜ் செய்யும் போது எனது பழைய இருப்பும், தற்போது வரவு வைக்கப்படும் (Carry Forward). இதனால், நான் எனது தேவை அறிந்து மட்டும் இணையத்தை பயன்படுத்துவேன். பெரும்பாலும், பொழுதுபோக்கு அம்சங்களுக்கு குறைவான அளவை மட்டுமே பயன்படுத்துவேன். அதற்கு மாறாக, நான் குடும்பத்தினரிடமும், வார இறுதியில் எனது நண்பர்களுடனும் பொழுதுபோக்கை மேற்கொள்வேன். (இது எனது ஆரோக்கியமான உறவும் கூட… )
எனது இணைய Data செலவழிப்பதில் நான் மிகவும் கவனமாக இருந்தேன். ஏனென்றால், என்னுடைய Data கொள்கை:
  • கால அளவு முடியும் (Validity) வரை நான் எந்த சிரமும் இல்லாமல் பயன்படுத்த வேண்டும்.
  • இணைய சேவையை, (Reduce to use of Unwanted) பொழுதுபோக்குக்கு அதிகம் செலவழிக்க கூடாது.
  • தேவையறிந்து (Use for What you need) பயன்படுத்த வேண்டும்.
  • அவசரத்திற்கு (Emergency) எப்போதும் எனக்கு பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும்; அதாவது, மாத இறுதியில் எனது மாதந்திர கட்டணங்களை (Monthly Bill Payments) இணையம் மூலம் செலுத்துவதற்கு போதுமான அளவு இருக்க வேண்டும்.
இதனை நான் கடந்த இரண்டு வருடங்களாக பின்பற்றி வருகிறேன். எனக்கு எந்த செல்போன் கம்பெனியின் சலுகையும் தற்போது தேவைப்படுவது இல்லை. நான் எனக்கான DATA Plan ஐ கொண்டிருந்தேன். செல்போன் கம்பெனி, டேட்டா அளவில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அது என் பிளானை பாதிக்காத வகையில் நான் பார்த்துக்கொண்டேன்.
இதனால், கடந்த 3 மாதங்களுக்கு முன் எனது Data Balance ல் 4 GB உபரியாக சேர்ந்தது ! இது போக அந்தந்த மாதத்திற்கு நான் ரீசார்ஜும் செய்து கொண்டிருந்தேன். இதே போல தான் எனது வரவு – செலவு கணக்கும் !
எனது மாத சம்பளத்திற்கான வரவு – செலவு கொள்கை:
  • ஒவ்வொரு மாதத்திற்கான, முன் கூட்டிய வரவு – செலவை கணக்கிடுவேன் மற்றும் தினமும்  ஆகும் செலவை குறித்து வைத்து கொள்வேன்(Calculate Income & Expense).
  • தேவையற்ற மற்றும் அவசியமில்லாத செலவுகளை முடிந்தவரை தவிர்ப்பேன்(Avoid Unwanted Expenses).
  • ஒவ்வொரு மாதத்திற்கான தேவையறிந்து, அதற்கான பணத்தை ஒதுக்குவேன்(Income-Savings=Expenses).
  • முடிந்தவரை, அவசர தேவைக்கு ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் உபரியை சேமிப்பேன் மற்றும் முதலீடு செய்வேன்(Savings and Investment for Emergency).
உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களுக்காகவும், மற்றவர்களை நீங்கள் திருப்தி படுத்துவதற்காகவும் செலவு செய்யும் பணம், உங்களை அவசர காலத்தில் பாதுகாக்க போவதில்லை… அவர்களும் வரப்போவதில்லை…
நீங்கள் செய்யும் பற்றற்ற சேவையும், உங்கள் நன்னடத்தையுமே உங்களை பேணிக்காக்கும்.

இப்போதே Offer க்கு தயாராகுங்கள்…

  • உங்கள் வரவு – செலவு கணக்கு தான், உங்களை ஒவ்வொரு மாத புலம்பல்களிடம் இருந்து விடுவிக்க போகிறது. அதனால், ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து கொள்ளுங்கள் (அ) ஒரு (Income/Expenses  App) வரவு – செலவு கணக்கு செயலியை உங்கள் கைபேசியில் பதிவிறக்குங்கள்.
  • உங்கள் ஒவ்வொரு நாள் வருமானம் மற்றும் செலவுகளை குறித்து வைத்து கொள்ளுங்கள்.
  • மாதத்திற்கு ஒரு முறை, உங்கள் தேவை அறிந்து செலவழியுங்கள் மற்றும் செயல்படுங்கள்.
  • இதனை ஒரு அவசியமான பழக்கமாக மாற்றுங்கள்.
  • உபரியாக வரும் பணத்தை சேமியுங்கள் மற்றும் பணவீக்கத்தை தாண்டிய வருமானம் வருமாறு முதலீடு செய்யுங்கள் (Savings and Investment).
உங்கள் வரவு – செலவு கணக்கு பழக்கம் நிச்சயம் உங்களுக்கு  இக்கட்டான சூழ்நிலையில் கை கொடுக்கும். அது தான் உங்கள் கை கொடுக்கும் கை !
உடனே, உங்களுக்குள் இருக்கும் அந்த மாபெரும் 4 GB Offer ஐ வெல்லுங்கள் !
வாழ்த்துக்கள் 🙂
உங்களுடைய பகிர்வுகளுக்கு:
–  நன்றி, வர்த்தக மதுரை

4 Things to Know about Housing Loan

வீட்டுக்கடன்: கவனிக்க வேண்டிய நான்கு [4] விஷயங்கள்:

4 Things to know about Housing Loan:

பொதுவாக, நாம் வீட்டுக்கடன் வாங்க வங்கியிடம் செல்லும் போது, வட்டி விகிதம் மற்றும் கால அளவை மட்டுமே கருத்தில் கொள்கிறோம். இது போக நாம் சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  1. உங்கள் தகுதியை அறியுங்கள் (Know your Eligibility):
  • வீட்டுக்கடன் வாங்க செல்லும் முன், உங்கள் வருமானம் மற்றும் முந்தைய கடன் எவ்வளவு இருக்கிறது என்பதை குறித்து கொள்ளுங்கள்.

 

  • நீங்கள் வாங்க போகும் சொத்து / கடன் எவ்வளவு மதிப்பு என்பதையும் அறியுங்கள்.

 

  • உங்கள் கடனுக்கான சிபில் ஸ்கோரையும் (CIBIL Score) அறிந்து வைத்திருப்பது நல்லது.
  2. உங்கள் கடன் கட்டும் கால அளவை அறியுங்கள் (Know your Loan Tenure):
  • பெரும்பாலும், நாம் வீட்டுக்கடன் வாங்கிய பிறகு அதனை திரும்ப செலுத்தும் காலம் 15 முதல் 20 வருடங்களாக இருக்கலாம். அதனால் நமது மற்ற அடிப்படை தேவைகளுக்கு கவனம் கொள்ள வேண்டும்.

 

  • நாம் நீண்ட கால நோக்கில் கடனை திரும்பி செலுத்துவதால், நமக்கு சௌகரியமான மற்றும் சிறந்த கடனை வழங்கும் வங்கியை தேர்ந்தெடுக்கலாம்.

 

  • தவணை முறையில் கட்டுவதில் உள்ள தன்மை, நாம் வருடத்திற்கு ஒரு  முறை தவணை முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் போது நமது கால அளவும் குறையும். இதன் மூலம் நாம் விரைவாக கடனையும் அடைக்கலாம்.

 

  • வீட்டுக்கடனை திரும்ப செலுத்தும் போது, உங்கள் வீட்டுக்கான வரி செலவு, பராமரிப்பு செலவு மற்றும் இதர கூடுதல் செலவுகள் ஏதேனும் இருந்தாலும் அவற்றையும் உங்கள் கடனுடன் கணக்கிட்டு கொள்ளவும்.

3. வட்டி விகிதத்தை அறியுங்கள் (Know your Interest Rate %):

  • வீட்டுக்கடன் வாங்கும் போது, வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும். பெரும்பாலும் அதன் வித்தியாசம் 0.1 – 0.25 – 0.50 % ஆக இருக்கலாம்.

 

  • நமது கடன் நீண்ட கால என்பதால், நாம் வங்கி நிர்ணயிக்கும் வட்டி விகிதத்திலே கட்ட வேண்டும் என்ற அவசியமில்லை; மாறாக, நாம் வங்கி அதிகாரிகளிடம் நமது தேவைகளை பேசி, வட்டி விகிதத்தை குறைக்கவும் செய்யலாம்.

 

  • வட்டி விகித மாறுபாட்டை சில வங்கிகளில் விசாரித்த பிறகு, கடன் பெறுவதற்கான வங்கியை தேர்ந்தெடுக்கலாம்.

 

  • ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் வங்கிகளுக்கு ஏதேனும் சலுகை அறிவித்தாலும், அதனையும் நாம் கருத்தில் கொண்டு வங்கிகளிடம் நாம் பெறும் கடனுக்கான வட்டியை குறைக்கலாம்.

 

4. காப்பீடும், வரி சலுகையும் (Benefits of Insurance and Taxes):

  • நமது வீட்டுக்கடனுக்கான தொகைக்கு வரிச்சலுகை எவ்வாறு மதிப்பிடப்பட்டுள்ளது என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

  • வீட்டுக்கான காப்பீடு பெற்றுள்ளோமா என்பதனையும் சரிபார்க்க வேண்டியது அவசியம்.
  • கடைசியாக:  நாம் பெற போகும் ஒவ்வொரு கடனுக்கும், நமது தேவைகளை அறிந்து, அதற்கு மேல் எந்த அவசரமும் இல்லாமல் நாம் வங்கிகளையோ, முகவர்களையோ (அ) ஆலோசகரையோ நாட வேண்டும்.
    —-
    உங்களுடைய பகிர்வுகளுக்கு:
    –  நன்றி, வர்த்தக மதுரை

How to Start an Emergency Fund – காபியும், எனது பயணமும்

காபியும், எனது பயணமும்…

How to Start an Emergency Fund ?

 

எனக்கு நண்பர்களும் அதிகம், அவர்களுக்கு கொடுக்கும் ட்ரீட்களுக்கும்(Treat) குறைவல்ல…அடிக்கடி நண்பர்களுடனும், மற்றும் குடும்பத்தினருடனும் சுற்றுலா போவதும் வழக்கம். வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்பதே எனது கொள்கை; அது தானே எல்லோருக்கும் !

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஆனால் ஏனோ சில நேரங்களில் எனது மகிழ்ச்சிக்கு தடையாக இருப்பது, இந்த பாழாய் போன மாதாந்திர பில்களும்(EMI, Phone, Internet, Electricity, etc), வரிகளும்(Taxes) ! நான் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்; அதே சமயம் எனது பில்களும், வரிகளும் என்னை தொல்லை பண்ண கூடாது என்று விழிப்புடன் இருந்தேன். திடீரென்று வரும் செலவுகளும் (Family Celebrations, Festivals, Relative Commitments) என்னை மேலும் விழிப்படைய செய்தன. இதனை நான் சமாளித்தாக வேண்டும். எனது சந்தோசத்திற்கும் பங்கம் வரக்கூடாது; இதற்காக நான் என்னை வருத்திக்கொள்ள போவதில்லை. மாறாக நான் எனது பழக்க வழக்கங்கள் சிலவற்றை சரி செய்ய முயற்சித்தேன்; அதாவது எனது Favorite பழக்கமான, தினமும் 5 முறை காபி அருந்துவதும், அலுவலகத்துக்கு எனது சொகுசு Yamaha FZ ல் செல்வதும் ! இவற்றில் நான் தினமும் 2 முறை(காலை, மாலை) மட்டுமே ரசித்து/ருசித்து அருந்துவது என்றும், எனது Yamaha FZ ல் அலுவலகத்துக்கு வாரம் 3 நாட்கள் மட்டும் செல்வதென்றும் முடிவெடுத்தேன். இந்த முயற்சியின் மூலம் எனக்கு மிச்சமாகும் பணத்தை சேமிக்க (முதலீடும்) ஆரம்பித்தேன்.

 

எனது முதலீடும், சுற்றுலா பயணமும் உல்லாசமாக சென்றன; எனது பில்களும், வரிகளும் எனக்கு தடையாக இல்லை; எல்லாம் நன்றாக தான் போய் கொண்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக, நான் எனது சொந்த காரணங்களுக்காக, வேலையிலிருந்து விடுபட வேண்டியதாயிற்று. எனது அடுத்த வேலையை தேட, எனக்கு 6 மாதமும் தேவைப்பட்டது. இந்த சூழ்நிலையில் எனது கனவு சுற்றுலாவையும் தள்ளி போட வேண்டியதானது. ஆனால் எனது மாதாந்திர பில்களும், வரிகளும் ??? நான் வேலைக்கு போகாத சமயத்தில், எனது பழக்க வழக்கங்களில் இன்னும் சில மாற்றங்களை செய்தாலும், சில அடிப்படை செலவுகளையும், வரிகளையும் தவிர்க்க முடியவில்லை ! கவலை என்னை ஆட்கொண்ட நேரமது ! எனது மூளைக்கு, எனது காபியும், FZ பயணமும் தைரியமூட்டின 🙂  ஆம், நான் மாற்றம் செய்த பழக்க வழக்கங்கள், எனது அடிப்படை செலவுகளையும், மற்ற பில்கள் மற்றும் வரிகளை சமாளித்து கொண்டன; அது தான் என்னை இக்கட்டான நேரத்தில் இருந்து(அவசர காலத்தில்) பொருளாதார ரீதியாக பாதுகாத்தன. இப்படித்தான் எனது அவசரகால நிதி ஆரம்பமானது !

 

 

How to Start an Emergency Fund(E-Fund) ?

அவசரகால நிதியை உருவாக்குவது எப்படி ?

  • வங்கியில் புதிய சேமிப்பு கணக்கு ஒன்றை துவங்குங்கள். உங்களுக்கு வங்கியில் ஏற்கனவே கணக்கு எண் இருந்தாலும், அதனை பயன்படுத்த முயலாதீர்கள்.

 

  • உங்கள் மாத வருமானத்தில் 5-10 சதவீதம் வரை உள்ள தொகையை, சொல்லப்பட்ட புதிய சேமிப்பு கணக்கில் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்க தொடங்குங்கள்.

 

  • சேமிக்கப்பட்டு வரும் தொகையை எக்காரணத்திற்காகவும் இடையே எடுக்காதீர்கள் (அவசரக்காலத்தை தவிர்த்து).

 

  • புதிய சேமிப்பு கணக்கில் உள்ள தொகை, உங்கள் மாத வருமானத்தை போல 6-12 மடங்கு உள்ளவரை சேமியுங்கள். உங்கள் திட்டம் முடிவடைந்தவுடன், பின்பு உங்களால் முடிந்த தொகையை இந்த கணக்கில் செலுத்த ஆரம்பியுங்கள். இந்த தொகை உங்களின் தற்காலிக வேலை இழப்பு, பணி மாறுதல் அல்லது உடல்நல குறைவு போன்ற சமயங்களில் உதவும்.

 

உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள…

 

– நன்றி, வர்த்தக மதுரை

Why Fixed Deposits are not a best Investment ?

பணப்பாதுகாப்பும் , பணவீக்கமும்…

Why Fixed Deposits(FDs) are not a best Investment ?

 

பிக்ஸட் டெபாசிட் எவ்வளவு தான் பாதுக்காப்பான முதலீடாக இருந்தாலும், அவற்றை ஒரு சிறந்த முதலீடாக எடுத்த கொள்ள முடியாது; அதை தவிர்ப்பதற்கு இரண்டு காரணங்கள்:

 

  •  பிக்ஸட் டெபாசிட் கொடுக்கும் வருமானம், என்றுமே பணவீக்கத்தை(Inflation) தாண்டிய சிறந்த வருமானமாக இருக்க முடியாது. நமது நாட்டில் கடந்த சில வருடங்களாக, பணவீக்கம் 7-8 % என்ற அளவில் உள்ளது. அதனை ஒப்பிடுகையில், பிக்ஸட் டெபாசிட் வருமானம் அவ்வளவு சிறந்ததல்ல, பாதுக்காப்பாக இருந்தாலும் !

 

  • பிக்ஸட் டெபாசிட் வருமானம், வரிகளுக்கு(Taxes) உட்பட்டவை; அதனை நீங்கள் ஒரு சிறந்த நீண்ட கால முதலீடாக கருதமுடியாது. பிற முதலீடான PPF, Equity based Mutual Funds, Tax Saving Schemes க்கு வரி சலுகைகள் உள்ளன.

மேலுள்ள 2 விஷயங்களை கருத்தில் கொண்டு, பிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யவும்; குறுகிய காலத்திற்கான தேவைகளை இதன் மூலம் உருவாக்கி கொள்ளலாம்.

நாம் செய்யப்போகும் ஒவ்வொரு முதலீட்டிற்கும் பாதுக்காப்பையும், பணவீக்கத்தையும் கவனம் கொள்ள வேண்டும்.

 

PPF ல் முதலீடு செய்வது சரியா ?


– நன்றி, வர்த்தக மதுரை 

Why your dreams never come true ?

Why your dreams never come true ?

உங்கள் கனவுகள் ஏன் பெரும்பாலும் பலிப்பதில்லை(நிறைவேறுவதில்லை) ?

நம்மில் பெரும்பாலோருக்கு, ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடனோ, பதவி உயர்வு/ஊதிய உயர்வு  (அ) போனஸ் ஏதும் கிடைத்ததும் நமக்கு பலவித கற்பனை கனவுகள் வரும்; வளரும்.
எனது கனவு கார்(Car) வாங்குவது, ஒரு அபார்ட்மெண்ட்(Apartment) வாங்குவது, வெளிநாடு சுற்றுலா(Foreign Trip) செல்வது (அ) குறைந்தபட்சமாக நண்பர்களுக்கு விருந்து வைப்பது(Treat) என்று கனவுகள் நீண்டு கொண்டே போகும். ஆனால் நமக்கு கிடைப்பதோ ஒரே ஒரு சம்பளம், வருடத்திற்கு ஒரு ஊதிய உயர்வு, சில சமயம் போனஸ், அத்திபூத்தாற்போல் பதவி உயர்வு. உண்மையில் நாம் நமக்கு கிடைத்த பணத்தையும், கண்ட கனவையும் கொண்டு என்ன செய்வதென்றே புலப்படுவதில்லை.
ஒரு நிறுவனத்தில் நமக்கு கொடுக்கப்படும் பணம் அந்நிறுவனத்தின் வளர்ச்சி (அ) நமது திறமையான செயல்பாடு காரணமாக இருந்தாலும், நிதர்சன உண்மை அது விலைவாசியின் (பணவீக்கம் – Inflation) அடிப்படையிலே நிர்ணயிக்கப்படுகிறது.
தற்சமயத்தில் நம் அடிப்படை வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ளவே அந்த பணம் போதுமானதாக இருக்கும். நமது கனவுகளுக்காக அல்ல 🙂
அதனால் தான் நாம் பெரும்பாலும் நமக்கு தேவையற்ற ஒரு பொருளை வாங்கும் போது பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படுகிறோம்.
நாம் கனவு எதுவும் காணக்கூடாதா என்ன ?  தாராளமாக கனவு காணலாம்; அத்தனைக்கும் ஆசைப்படலாம் ! அதற்கு முன் நமக்கு எது தடையாக உள்ளது என்று பார்த்தால் அது விலைவாசி (பணவீக்கம்) தான்.
பணவீக்கத்தை நாம் புரிந்துகொண்டு செயல்படுவது தான் நமது கனவு நிறைவேறுவதற்கான பாதை !
பணவீக்கம்:
நாம் இன்று வாங்கும் பொருளும், நாளை வாங்க போகும் பொருளும் ஒரே விலையில் கிடைப்பதில்லை. காரணம், தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள வேறுபாடு தான். அது தான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விலையை நிர்ணயிக்கின்றன.
நாம் பல மாதமாக சிறுகச்சிறுக சேர்த்து வைத்த பணத்தை கொண்டு ஒரு இரு சக்கர வாகனம் வாங்கவேண்டுமென்று சென்றால், அதன் விலை ஏறிவிட்டதே, இன்னும் கொஞ்சம் பணம் தேவைப்படுமோ என்று யோசிப்போம்; வீடு கட்ட பக்காவாக பிளான் எஸ்டிமேட் போட்டு வைத்து வீடு கட்டி கொண்டிருக்கும் போது, தீடீரென்று மணல், சிமெண்ட்  விலை உயர்ந்து விடும். இப்படித்தான் நம் பெரும்பாலான கனவுகள் நாம் நினைத்த படியே நடப்பதற்கு சாத்தியமில்லை, இந்த விலைவாசியால்(பணவீக்கம்) !

inflation

வருமானத்தின் /பணத்தின் எதிரியை கையாள்வது எப்படி ?
நமது வருமானதிற்கோ (அ) பணத்திற்கோ வரிகள் எதுவும் எதிரி அல்ல; மாறாக இந்த பணவீக்கம் தான் ! ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ஆண்டும் இந்த விலைவாசி பொதுவாக புள்ளியியல் நிபுணர்களால் விவாதிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. அவற்றிள்ளுல உண்மை என்னவோ நமக்கு தெரியவில்லை என்றாலும், நாம் பணவீக்கத்தை சமாளித்தாக வேண்டும். நமது கனவுக்கான வருமானம்/சேமிப்பு பணவீக்கத்தை தாண்டியதாக இருக்க வேண்டும். அதாவது கடந்த 5 வருடத்திற்கான சராசரி ஆண்டு பணவீக்கம் 8% என்றால், நீங்கள் உங்கள் கனவுக்காக குறைந்தபட்சம் 8% கூடுதலாக வருமானம் கிடைக்குமாறு சேமியுங்கள்; முதலீடு செய்யுங்கள்.
கனவும் மெய்ப்படும் !
– நன்றி, வர்த்தக மதுரை.   

Interest Rate Cut on Small Savings Scheme 2016

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி குறைப்பு:

Interest Rate Cut on Small Savings Scheme 

 

சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில், மத்திய அரசு நேற்று(March18,2016) சில மாற்றங்களை அறிவித்துள்ளது. சேமிப்பு திட்டங்களுக்கு வழங்கப்படும் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

இந்த மாற்றியமைக்கப்பட்ட வட்டி விகிதம் வரும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது.

 

வட்டி விகித மாற்றம் செய்யப்பட்ட திட்டங்கள்:

Savings Interest Rate – From April 1, 2016:

 

  • PPF (Public Provident Fund): 8.1 %  (முன்னர் – 8.7 %)
  • KVP ( கிஸான் விகாஸ் பத்திரம்): 7.8% (முன்னர் – 8.7%)
  • 5 வருட தேசிய சேமிப்பு பத்திரம் (NSC): 8.1 % (முன்னர் – 8.5 %)
  • 5 வருட கால வைப்பு திட்டம் (Time Deposits): 7.9 % (முன்னர் – 8.5%)
  • 1 – 3 வருட கால வைப்பு திட்டம் (Time Deposits): 7.1/7.2/7.4 % (முன்னர் – 8.4 %)
  • சேமிப்பு கணக்கு: 4 % (மாற்றம் இல்லை)
  • 5 வருட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: 8.6 % (முன்னர் – 9.3 %)
  • சுகன்யா சம்ரிதி கணக்கு திட்டம்: 8.6 % (முன்னர் – 9.2%) [Sukanya Samriddhi Yojana Account]

 

See Previous Small Savings Scheme

 

– வர்த்தக மதுரை

RAILWAY BUDGET 2016-17 HIGHLIGHTS

ரயில்வே பட்ஜெட் 2016-17 ( RAILWAY BUDGET 2016-17 )

 

ரயில்வே பட்ஜெட்டை அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று(25-02-2016) பகல் 12 மணியளவில் தாக்கல் செய்தார். அவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட சில தகவல்கள்:

 

  • பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணம் எதுவும் உயர்த்தப்படவில்லை; புதிய ரயில்கள் அறிவிப்பும் இல்லை.
  • பயணிகள் நெரிசல் அதிகமிருக்கும் மார்க்கங்களில் முற்றிலும் முன்பதிவு அற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்படும்.
  • முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டை ரத்து செய்ய 139 ஹெல்ப்லைன் சேவை அறிமுகம்.
  • வர்த்தக மையங்களை இணைக்கும் பாதைகளில் இரவு நேரத்தில் மட்டும் டபுள் டக்கர் ரயில்கள் இயக்கப்படும்.
  • டிக்கெட் முன்பதிவின்போது காப்பீட்டுக்கான வாய்ப்பு வழங்கப்படும்.
  • வெளிநாட்டு கிரெடிட், டெபிட் கார்டு மூலமும் இ-டிக்கெட் சேவையைப் பெறலாம்.
  • இ கேட்டரிங் சேவை 408 ரெயில்நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
  •  பயணிகள் விருப்பத்திற்கு ஏற்ப உள்ளூர் உணவுகள் வழங்கப்படும்.
  • ரயில்களில் பெண் பயணிகள், மூத்த குடிமக்களுக்கான இருக்கை ஒதுக்கீடு அதிகரிப்பு. மூத்த குடிமக்களுக்கு 50% இருக்கை ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ரயிலிலும் 120 கீழ் படுக்கைகள் முதியோருக்கென ஒதுக்கப்படும்.
  • டிக்கெட் முன்பதிவில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு பின்பற்றப்படும்.
  •  குழந்தைகளுக்கு ஏற்ற உணவு ரயில்வே கேட்டரிங்கில் வழங்கப்படும். அதேபோல், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களும் வழங்கப்படும்.
  •  ரயில் நிலையங்களில் பால், மருந்துப் பொருட்களை விற்பனை செய்யும் அங்காடிகள் அமைக்கப்படும்.
  • மூத்த குடிமக்கள் வசதிக்காக கொங்கன் ரயில்வேயில் சாரதி சேவா என்ற திட்டம் தொடங்கப்படுகிறது. விரைவில் இது அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
  • ரயில் பயணிகளின் பொழுது போக்குக்காக பெட்டிகளில் பண்பலை வானொலி வசதி ஏற்படுத்தப்படும்.
  • ரயில் நிலைய ஓய்வறைகளை ஆன்லைனிலேயே புக் செய்யும் வசதி ஏற்படுத்தப்படும்.
  • துறைமுகங்களை ரயில் போக்குவரத்து மூலம் இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
  • இ-டிக்கெட்டிங் சேவை மூலம் நிமிடத்துக்கு 7200 பயணச்சீட்டுகள் விநியோகிக்கப்படுகிறது.
  • அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்.
  • அடுத்து வரும் ரயில் நிலையம் குறித்த விவரம் பயணிகளுக்கு ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் டிஜிட்டல் போர்டு மூலம் தெரிவிக்கும் சேவை விரைவில் தொடங்கப்படும்.
  • சரக்குகளை இருப்புவைக்க ரயில்வே சார்பில் இரண்டு பிரத்யேக கிடங்குகள் உருவாக்கப்படும்.
  • ரயில்வே துறையில் ஸ்டார் அப் நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க ரூ. 50 கோடி ஒதுக்கப்படும்.
  • ரயில்வே துறையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்ய எல்.ஐ.சி. முன்வந்துள்ளது.
  • 2016 -17-ல் ரயில்வே துறையில் ரூ.1.21 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்.
  • 2016- 17 நிதியாண்டில் ரூ.1,84,820 கோடி வருவாய் ஈட்ட ரயில்வே திட்டம். இது கடந்த ஆண்டைவிட 10.1% அதிகமாகும்.

 

 

 

(தி இந்து (தமிழ்) இணையம் மூலம் தகவல் தொகுக்கப்பட்டது)

This budget announcement is Railway Minister Suresh Prabhu’s 2nd Budget.

Download the Budget Highlights(PDF) from Indian Railway Official website

 

 

Provident Fund interest rate hiked to 8.8%

Provident Fund interest rate hiked to 8.8%

பி.எப் வட்டி விகிதம் 8.8 % ஆக உயர்வு

 

  • 2015-2016 ம் நிதி ஆண்டுக்கான பி.எப் (வருங்கால வைப்பு நிதி) வட்டி விகிதம் 8.8 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

 

  • இதற்கு முன்னர் பி.எப் வட்டி(Provident Fund) விகிதம் 8.75 % இருந்தது.

 

  • EPFO ன் கமிட்டி [ EPFO Finance Audit and Investment committee (FAIC) ] வட்டி விகிதத்தை 8.95 % ஆக உயர்த்த பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது

 

Provident Fund(PF) interest rate hiked to 8.8% for the financial year 2015-2016.

Read more on:  வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்

 

நன்றி, வர்த்தக மதுரை 

உங்களுடைய பகிர்வுகளுக்கு:

 

https://www.facebook.com/varthagamadurai/

https://www.twitter.com/varthagamadurai/

contact@varthagamadurai.com