4 GB Data Offer ! – வரவு செலவு கணக்கு
இந்த தலைப்பை பார்த்தவுடனே, எத்தனை பேர் Offer ஐ பெறுவதற்கு ரெடியா இருக்கீங்களோ ! அட, இது என்னோட 4GB Data ரகசிய வரவு – செலவு கணக்கு Offer ங்க ! உங்களுக்கும் அந்த ரகசியத்தை சொல்றேன்; இனி அப்புறம் என்ன ரகசியம் 🙂
பொதுவாக நாம் Offer மற்றும் Free என்ற ஆங்கில வார்த்தையை அடிக்கடி விளம்பரத்தில் பார்ப்பதும், நாம் எதிர்ப்பாகவும் பழகிவிட்டோம். பெரும்பாலும் நாம் நம் வாழ்கையில் பல சந்தர்ப்பங்களில் சலுகையை தேடியே அலைகிறோம்; ஆனால் நம்மிடம் உள்ளே உள்ள மாபெரும் சலுகையை பெற மறந்து விடுகிறோம்.
4GB Data Offer என்றவுடன், கண்ணை மூடி கொண்டு அதற்கு தயாரானவர்கள் 100 ல் 40 % பேர்; 30 % பேர் தங்களுக்கு தேவையோ, இல்லையோ எதிர்காலத்தில் இது போன்ற Offer ஐ மிஸ் பண்ணகூடாது என்று, இப்போதே முயற்சித்து பார்ப்பர். 20 % பேர் இந்த சலுகையில் எதோ விஷமம் உள்ளது என்று ஒதுங்கி விடுவர்; 10 % பேர் மட்டுமே, Offer ஐ பற்றிய விவரங்களை அறிந்து, தங்கள் தேவையின் நிலை அறிந்து அதை பெறுவார்கள் (அ) விலக்கி விடுவார்கள். இதே நிலை தான் நமது வரவு – செலவு கணக்கும்… மாத சம்பளக்காரர்கள் பெரும்பாலும் தங்களது வரவு – செலவு கணக்கினை பேணி காக்க தவறுவதாலே, ஒவ்வொரு மாதத்தின் 10 ம் தேதியிலும், மாத இறுதியிலும் புலம்புகின்றனர்.
4GB Offer ஐ பெறுவது எப்படி ? (ரகசிய வரவு – செலவு கணக்கு)
- கால அளவு முடியும் (Validity) வரை நான் எந்த சிரமும் இல்லாமல் பயன்படுத்த வேண்டும்.
- இணைய சேவையை, (Reduce to use of Unwanted) பொழுதுபோக்குக்கு அதிகம் செலவழிக்க கூடாது.
- தேவையறிந்து (Use for What you need) பயன்படுத்த வேண்டும்.
- அவசரத்திற்கு (Emergency) எப்போதும் எனக்கு பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும்; அதாவது, மாத இறுதியில் எனது மாதந்திர கட்டணங்களை (Monthly Bill Payments) இணையம் மூலம் செலுத்துவதற்கு போதுமான அளவு இருக்க வேண்டும்.
- ஒவ்வொரு மாதத்திற்கான, முன் கூட்டிய வரவு – செலவை கணக்கிடுவேன் மற்றும் தினமும் ஆகும் செலவை குறித்து வைத்து கொள்வேன்(Calculate Income & Expense).
- தேவையற்ற மற்றும் அவசியமில்லாத செலவுகளை முடிந்தவரை தவிர்ப்பேன்(Avoid Unwanted Expenses).
- ஒவ்வொரு மாதத்திற்கான தேவையறிந்து, அதற்கான பணத்தை ஒதுக்குவேன்(Income-Savings=Expenses).
- முடிந்தவரை, அவசர தேவைக்கு ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் உபரியை சேமிப்பேன் மற்றும் முதலீடு செய்வேன்(Savings and Investment for Emergency).
உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களுக்காகவும், மற்றவர்களை நீங்கள் திருப்தி படுத்துவதற்காகவும் செலவு செய்யும் பணம், உங்களை அவசர காலத்தில் பாதுகாக்க போவதில்லை… அவர்களும் வரப்போவதில்லை…
நீங்கள் செய்யும் பற்றற்ற சேவையும், உங்கள் நன்னடத்தையுமே உங்களை பேணிக்காக்கும்.
இப்போதே Offer க்கு தயாராகுங்கள்…
- உங்கள் வரவு – செலவு கணக்கு தான், உங்களை ஒவ்வொரு மாத புலம்பல்களிடம் இருந்து விடுவிக்க போகிறது. அதனால், ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து கொள்ளுங்கள் (அ) ஒரு (Income/Expenses App) வரவு – செலவு கணக்கு செயலியை உங்கள் கைபேசியில் பதிவிறக்குங்கள்.
- உங்கள் ஒவ்வொரு நாள் வருமானம் மற்றும் செலவுகளை குறித்து வைத்து கொள்ளுங்கள்.
- மாதத்திற்கு ஒரு முறை, உங்கள் தேவை அறிந்து செலவழியுங்கள் மற்றும் செயல்படுங்கள்.
- இதனை ஒரு அவசியமான பழக்கமாக மாற்றுங்கள்.
- உபரியாக வரும் பணத்தை சேமியுங்கள் மற்றும் பணவீக்கத்தை தாண்டிய வருமானம் வருமாறு முதலீடு செய்யுங்கள் (Savings and Investment).