பங்கு சந்தை பகுப்பாய்வு – 1.2 – Price to Book Value
Price / Book Value (P/Bv) : Price to Book Value
Price / Book Value பார்ப்பதற்கு முன், Book Value (புத்தக மதிப்பு), Face Value (முக மதிப்பு) பற்றி தெரிந்து கொள்வோம்.
Face Value (Fv):
முக மதிப்பு என்பது, SKYTECH நிறுவனம் தனது தொழிலுக்கான முதலீட்டை பொது மக்களிடம் இருந்து பெரும் நோக்கில், 50 லட்சம் நிதி திரட்டுகிறது. இந்த 50 லட்சங்களை, 10 ரூபாய் மதிப்பு கொண்ட 5,00,000 பங்குகளாக திரட்ட முடிவு செய்யப்படுகிறது.
அதாவது, 5,00,000 பங்குகள் X 10 ரூபாய் = 50,00,000 ரூபாய்.
இந்த 10 ரூபாய் விகிதத்தை தான் நாம் முக மதிப்பு (Face Value) என்கிறோம்.
பொதுவாக, சந்தையில் ஒரு நிறுவனம் முக மதிப்பினை மற்றும் சந்தை முதலீடு கொண்டே பட்டியலிடப்படிகிறது. நீங்கள் ஒரு பங்கினை வாங்குகிறீர்கள் என்றால் 10 ரூபாய் பங்கினை தான் வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். சில நிறுவனங்கள் 10 ரூபாய் மதிப்பினை 50 ரூபாயாக சந்தையில் பட்டியலிட்டிருக்கும். இவ்வாறு 40 ரூபாய் அதிகமாக பட்டியலிட்டிருப்பதால், அதனை ப்ரீமியம் (Premium) என்கிறோம். இந்த ப்ரீமியம் தொகை கொண்ட முக மதிப்பு, அந்த நிறுவனத்தின் வளர்ச்சியை (அ) வளர போகும் நிலையை பொருத்து, நிறுவனமே நிர்ணயிக்கும். சந்தை முதலீடும் (50 லட்சம்) இந்த முக மதிப்பை கொண்டிருக்கும்.