பங்கு-சந்தை-பகுப்பாய்வு-10.2 – DISCOUNTED CASH FLOW

 

பங்கு-சந்தை-பகுப்பாய்வு-10.2 – DISCOUNTED CASH FLOW

 

Fundamental Analysis – Discounted Cash Flow

 

DISCOUNTED CASH FLOW METHOD:

 

  • நாம் வாங்க போகும் ஒரு நிறுவனத்தின் எதிர்கால வருமானத்தை கணக்கிட்டு (அ) கணித்து, அதனை தற்போதைய சந்தை விலையுடன் ஒப்பிட்டு நாம் நிர்ணயிக்கும் விலை (சலுகை விலை) தான் நாம் உண்மையாகவே வாங்க கூடிய விலை. இதனை தான் இம்முறையில் நாம் கண்டுபிடிக்கிறோம்.

 

  • சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நாம் வாங்க போகும் பங்கினை சலுகை விலையில் வாங்கினால், நமக்கு தானே லாபம் !

 

  • DISCOUNTED CASH FLOW முறை சம்பந்தமாக ஏராளமான புத்தகங்கள் தமிழில் உள்ளன. ( உதாரணம்: ஷேர் மார்க்கெட் A to Z – சொக்கலிங்கம் பழனியப்பன்)

 

MARGIN OF SAFETY:

 

  • ஒரு பங்கின் உண்மையான விலையை கண்டறிய, நாம் இரு முறைகளை பின்பற்றினோம். ஆனால் இந்த உண்மையான விலையிலே வாங்க வேண்டுமென்று அவசியமில்லை. இதை விட குறைவான விலைக்கு கிடைத்தால் அது நமக்கு தான் லாபம். நஷ்டத்தையும் தவிர்க்கலாம். அது தான் “MARGIN OF SAFETY”

 

  • உண்மையான விலையிலிருந்து எத்தனை சதவிகிதம் குறைவாக கிடைக்கிறது என்பதே “MARGIN OF SAFETY”

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

EPS வளர்ச்சியை கணக்கிட சுலப வழிமுறை

 

EPS (Calculate Earning per share) வளர்ச்சியை கணக்கிட சுலப வழிமுறை:

 

( 5 வருட அடிப்படையில்… )

2006 – 2.10, 2007 – 2.80, 2008 – 3.45, 2009 – 3.90, 2010 – 4.20, 2011 – 4.50

 

Step 1. Current EPS / 1st EPS = 4.50 / 2.10 = 2.14
Step 2.  Growth Multiple of (2.14) to the 1/5th Power (5 years)
(2.14) X Power of (1/5) = 1.164
Step 3.            Value – 1 =   1.164 – 1 =   0.164

 

then, 0.164 *100 = 16.40 %
So, Earning per share (EPS) Growth for the last 5 years = 16.40 %

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு 10.1 – Intrinsic Value

 

பங்கு சந்தை பகுப்பாய்வு 10.1 – Intrinsic Value

 

 

பங்கின் வளர்ச்சி முறை (Ben Graham’s EPSG – Intrinsic Value)

 

பெஞ்சமின் கிராஹாமின் “The Intelligent Investor” புத்தகத்தில், நாம் சொன்ன உள்ளார்ந்த மதிப்பை (Intrinsic Value) கண்டறிய அவர் ஒரு சூத்திரத்தை வகுத்துள்ளார்.

 

V = EPS X ( 8.5 + 2 g ) X 4.4 / Y  (Benjamin Graham)

 

V = Intrinsic Value
EPS = Average EPS for the last 12 months (or) One Financial Year
8.5 = Assumed P/E Ratio of Stock
g = Assumed growth rate for the forthcoming years ( 7 to 10 years )
4.4 = Interest Rate of AAA Corporate Bond in year 1965 (Model Introduced year)
Y = Interest Rate of AAA Corporate Bond as on Today.

 

குறிப்பு:

  • EPS = ஒரு பங்கின் வருமானத்தை நாம் கடந்த 12 மாதங்களுக்கு கணக்கிட வேண்டும். (சராசரி வருமானம்)
  • 8.5 = பங்கின் உத்தேச P/E விகிதம்
  • g = பங்கின் சராசரி உத்தேச வருமான வளர்ச்சி – அடுத்த 7 முதல் 10 வருடங்களுக்கு கணக்கிடவும்
  • 4.4 = அரசாங்கத்தின் 10 வருட பத்திரங்களின் நிலையான (அ) பாதுகாப்பான வருவாய் வட்டி விகிதம் (இந்த சூத்திர முறை 1965 ல் அறிமுகபடுத்தபட்ட போது – 4.4 )
  • Y = பத்திரங்களின் இன்றைய வட்டி (10-year Government of India bonds ) – இந்தியாவில் 8 %

மேலே உள்ள இந்த முறையின் மூலம், நாம் ஒரு பங்கின் உண்மையான மதிப்பை கண்டறியலாம்.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு 10.0 – True Value

பங்கு சந்தை பகுப்பாய்வு 10.0 – True Value

 

உண்மையான விலையை கொடுங்கள்; உங்கள் விலையை கொடுங்கள்

(Give the True Value for your Stocks)

 

நாம் இது வரை பல அடிப்படை பகுப்பாய்வு காரணிகளை பார்த்தோம். இதன் அடிப்படையில் நாம் ஒரு நிறுவனத்தின் பங்கினை வாங்குவதற்கு தயாராக உள்ளோம். ஆனால் சந்தையில் அந்த பங்கின் விலை பல விலைகளில் வர்த்தகமாகிறது. நாம் எந்த விலையினை பார்க்க ?

இதற்கு தான், பங்கின் / நிறுவனத்தின் உண்மையான மதிப்பை கண்டறிய வேண்டும். உண்மையான மதிப்பை அறிவதற்கு பல வழிகள் இருந்தாலும், நாம் இங்கே இரண்டு முறையினை மட்டும் ஆராயலாம்.

 

  • பங்கின் வளர்ச்சி முறை (Ben Graham’s EPSG – Intrinsic Value)

 

  • தள்ளுபடி விலை முறை (Discounted Cash Flow)

 

இந்த இரு முறைகளையும் நாம் பின்வரும் பகுதியில் அறிவோம்.
சந்தையில் நாம் ஒரு பங்கினை வாங்கும் முன், அதன் உண்மையான விலையினை கண்டறிந்து, (Margin of Safety) பேரம் பேசுவதற்கு தயாராக வேண்டும்.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

 

பங்கு சந்தை பகுப்பாய்வு 9.0 – Understanding Business

 

பங்கு சந்தை பகுப்பாய்வு 9.0 – Understanding Business

 

ஒரு தொழிலை தொடங்கும் முன், அதை பற்றிய சாதக – பாதகங்களையும், வாய்ப்புகளையும் தெரிந்து கொள்வதுண்டு. அதே போல் தான், நாம் ஒரு நிறுவனத்தின் பங்கினை வாங்கும் போதும் செயல்பட வேண்டும்.  ( Understanding the Business of a stock )

 

  • நிறுவனத்தின் தொழில் எனக்கு புரிகிறதா ?

 

  • நிறுவனத்தின் தொழில் எனக்கு புரியவில்லை என்றால், அதனை அறிந்து கொள்வதற்கான வழிகள் என்ன ?

 

  • நிறுவனத்தின் தொழில் அனுபவம் மற்றும் நிறுவனத்தின் பிற தொழில்கள் ?

 

  • நிறுவனத்தின் நேர்மை, தொழிலாளர்கள் மேல் உள்ள அக்கறை, முதலீட்டாளர் நலன் எப்படி ?

 

  • நிறுவனத்தின் கடந்த 10 வருட கால லாப – நட்ட(Profit -Loss) மற்றும் இருப்பு நிலை(Balance Sheet) அறிக்கை எவ்வாறு உள்ளது ?

 

  • நிறுவனத்தின் எதிர்கால தொழில் வாய்ப்புகள் எப்படி ?

 

  • நிறுவனத்தின் மற்ற தொழில் போட்டியாளர்கள் எப்படி ?

 

மேலுள்ள அனைத்து கேள்விகளுக்கும் நாம் விடையை தெரிந்து கொள்வது அவசியம். அதன் பிறகே, நாம் முதலீட்டை மேற்கொள்வது நல்லது.

 

Think like a Biz-Bee !

 

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு 8.0 – CASH FLOW

பங்கு சந்தை பகுப்பாய்வு 8.0 – CASH FLOW

 

பண ஓட்டம் (அ) வரத்து:

 

  • ஒரு நிறுவனத்திற்கு தான் செய்யும் தொழிலில், பணம் எவ்வாறு வருகிறது மற்றும் பணம் எவ்வாறு செலவளிக்கபடுகிறது என்பதை ஆராய்வது தான் – CASH FLOW

 

  • நிறுவனத்தின் விற்பனை அதிகமாதல், சொத்துக்களை விற்கும் போது, முதலீட்டுக்காக கடன் பெறுதல், நிறுவனத்தின் செலவுகளை குறைத்தல், முதலீட்டாளர்களிடம் அதிகமான முதலீடு பெறுதல், கடனுக்கான வட்டியினை தாமதமாக செலுத்துதல் என பண வரத்து மாறுபடும்.

 

  • ஒரு முதலீட்டாளரின் பார்வையில், cash flow என்பது மிகவும் முக்கியமான ஒன்று. தான் முதலீடு செய்த பணம் எவ்வாறு செயல்படுகிறது (அ) சம்பாதிக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்.

 

நினைவில் கொள்க:

 

  • CASH FLOW ஐ ஒரு நிறுவனத்தின் cash flow statement வெளியீட்டின் போது தெரிந்து கொள்ளலாம். இது காலாண்டு (அ) ஒரு ஆண்டு அடிப்படையிலோ வெளியிடப்படும்.

 

  • CASH FLOW STATEMENT மூன்று வகை செயல்பாடுகளுடன் அமையும் (cash from operations,investing,financing)

 

  • பொதுவாக ஒரு நிறுவனத்தின் தற்போதைய மதிப்பை(Present Value) கண்டறிவதற்கு, cash flow ஐ பயன்படுத்தலாம்.

 

  • ஒரு நிறுவனத்தின் Cash flow from operations/Net Income விகிதம் ஒன்றுக்கு மேல் இருக்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தால் தனது நிதி நிலையை சுலபமாக கையாளலாம். ஒன்றுக்கு குறைவாக இருந்தால் நிதி நிலைமை மோசமாக செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு 7.0 – Interest Coverage Ratio

பங்கு சந்தை பகுப்பாய்வு 7.0 – Interest Coverage Ratio

 

  • வட்டி எல்லை விகிதம் (Interest Coverage Ratio): ஒரு நிறுவனம் நிலுவையிலுள்ள வட்டி கடனை எவ்வாறு செலுத்த முடியும் (அ)
    வட்டி கடன் சுமையை குறைப்பதற்கு எவ்வாறு செயல்படுகிறது என்பதை
    தீர்மானிக்கும் ஒரு விகிதம் தான் வட்டி எல்லை விகிதம்(Interest Coverage
    Ratio).

 

  • Interest Coverage Ratio(ICR): 

    EBIT / Interest Expenses
    ( வட்டி மற்றும் வரிக்கு முந்தைய வருவாய் / வட்டிச்செலவுகள் )

    *EBIT:    Earnings Before Interest and Taxes

 

  • பொதுவாக, வட்டி எல்லை விகிதம் ஒரு நிறுவனத்திற்கு, 1.5 க்கு மேல்
    இருந்தால் நல்லது. இதற்கு மேல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த
    நிறுவனம் தனது கடன் சுமையை குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
    வட்டி எல்லை விகிதம் 1.5 க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில், அந்த
    நிறுவனத்தை தவிர்ப்பது நல்லது. விகிதம் 1.0 க்கு குறைவான நிறுவனம் ,
    Bankruptcy எனப்படும் திவாலாகும் சூழ்நிலையும் உள்ளது.
    வட்டி எல்லை விகிதத்தை, ஒரு நிறுவனத்தின் கடந்த 5 (அ) 10 ஆண்டுகள்
    அடிப்படையில் ஆராய்வது சிறந்தது.
    Debt – Equity Ratio போன்று இதுவும் ஒரு மிக முக்கியமான கடன் விகிதம்.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு 6.0 – Dividend Yield

 பங்கு சந்தை பகுப்பாய்வு 6.0 – Dividend Yield

 

Dividend Yield: ஈவு தொகை ஈட்டம் / விளைச்சல்
ஈவு தொகை (Dividend):
  • ஒரு நிறுவனம் தான் சம்பாதிக்கின்ற லாபத்தின் ஒரு பகுதியை, பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிப்பதை ஈவு தொகை (Dividend) என்கிறோம்.
  • பங்குதாரர்களுக்கு  ஈவு தொகையை கொடுக்கும் தீர்மானம், அந்த நிறுவனத்தின் பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வாரிய இயக்குனர்களுக்கு(Board of Directors – BOD) உண்டு.
  • ஈவு தொகை பற்றி நாம் பேசும் பொழுது, Ex-Date & Record Date என்று இரு தேதிகள் உள்ளன.
  • ஒரு பங்கினை அதன் Ex-date தேதி அன்றோ (அ) முன்னரோ வாங்கியிருக்கும் பட்சத்தில், உங்களுக்கு ஈவு தொகை பெறுவதற்கு உரிமை உண்டு.  Record Date அன்று யார் பெயரெல்லாம் பங்குதாரர் பட்டியலில் சேர்க்கபட்டுள்ளதோ, அவர்கள் ஈவு தொகை பெற உரிமை உண்டு.
ஈவு தொகை அளிக்கும் விகிதம் (Dividend Payout Ratio ):
  • பொதுவாக ஈவு தொகையை அறிவிக்கும் ஒரு நிறுவனம், அந்த தொகையினை எவ்வளவு ரூபாய் என்று சொல்லாமல், ஈவு தொகை சதவிகிதமாக அறிவிக்கும்.
உதாரணம்:
SKYTECH நிறுவனம், 2012-13 ம் ஆண்டில், ஈவு தொகையாக தனது 10 ரூபாய் முக மதிப்பின் அடிப்படையில், 50 % என்று அறிவிக்கிறது.
முக மதிப்பு = 10 ரூ.          ஈவு தொகை = 50 % (2012-13 வருடம்)
ஒரு பங்கிற்கு நாம் பெரும் ஈவு தொகை =  (50% X 10)  = 5 ரூ / பங்கு
இதையே நாம் அந்த நிறுவனத்தின் 2012-13 வருட EPS உடன் ஒப்பிட்டால், அதை ஈவு தொகை அளிக்கும் விகிதம் (Dividend Payout Ratio) என்கிறோம்.
ஒரு பங்கின் ஈவு தொகை = 5 ரூ.       EPS = 20 ரூ (2012-13 வருடம்)
ஈவு தொகை அளிக்கும் விகிதம்:   Annual Dividend Per Share /  EPS on year
                                                              5 / 20 = 0.25 X 100 = 25 %
Div. Payout Ratio:   25 %
ஈவு தொகை ஈட்டம் (Dividend Yield):
முன்னர், ஈவு தொகையை நாம் அதன் முக மதிப்பின் அடிப்படையில் கணக்கிட்டோம். இது போன்று, அந்த பங்கின் தற்போதைய சந்தை விலைக்கு, ஈவு தொகை எவ்வளவு சதவிகிதம் என்று கணக்கிட்டால், அதற்கு ஈவு தொகை ஈட்டம் (Div. Yield) என்று பெயர்.
உதாரணம்:
“SKYTECH”  பங்கின் சந்தை விலை = 95 ரூபாய், ஈவு தொகை = 5 ரூ /பங்கு.
Div. Yield:     Annual Dividend Per Share / Current Market Price
          5 / 95  = 0.0526 X 100 =  5.26 %
ஈவு தொகை ஈட்டம்:  5.26 %
ஆக, SKYTECH நிறுவனத்தில் நாம் முதலீடு செய்யும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 5.26 % வட்டி போன்று, ஈவு தொகை கிடைக்கும்.
நினைவில் கொள்க:
  • ஈவு தொகை பற்றி பேசும் போது, Cum Dividend & Ex-Dividend என்று சொல்வதுண்டு. ஈவு தொகை கொடுக்கும் முன்னரும், கொடுத்த பின்னரும் உள்ள நிறுவனத்தின் நிதி அறிக்கையை விவரிப்பதற்கு இவை உதவும்.
  • நிறுவனத்தின் லாபம் என்று சொல்லப்படும், EPS ஐ ஒரு நிறுவனம் இரு வழிகளில் பயன்படுத்தலாம். ஒன்று அந்த நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு(Re-investment) பயன்படுத்துவது (அ) பங்குதாரர்களுக்கு ஈவு தொகையாக(Dividend) கொடுப்பது.
  • ஈவு தொகை என்பது ஒரு நிறுவனம் கட்டாயம் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. அந்த நிறுவனம் நன்கு வளர்ச்சியடைந்து மீதி இருக்கும் லாபத்தை, பங்குதாரர்களுக்கு நியாயமாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் செய்யலாம்.
  • நாம் பெரும் ஈவு தொகைக்கு எந்த விதமான வரியும் (No Brokerage/ Tax) இல்லை. ஆகையால், அந்த தொகை நேரிடையாக நமது வங்கி கணக்கில், அந்நிறுவனத்தால் வரவு வைக்கப்படும்.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு 5.0 – Debt to Equity

பங்கு சந்தை பகுப்பாய்வு 5.0 – Debt to Equity

 

Debt to Equity Ratio (D/E):

 

பொதுவாக, பங்கு சந்தையில் ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் போது, கடன் தன்மை குறைவாக உள்ள நிறுவனத்தை பார்ப்பது நல்லது.

முற்றிலும் கடன் இல்லாத (அ) கடன் மிக குறைவாக உள்ள நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. (Debt Free Stocks/Companies)

ஒரு நிறுவனத்தின் கடன் விகிதத்தை நாம் அறிந்து கொள்ள, அந்நிறுவனத்தின் கடன் தொகையை, அதன் பங்குகளுடன் ஒப்பிட வேண்டும்.

 

D/E = Debt / Equity        (கடன் / பங்கு முதலீடு நிதி )

 

கடன் – பங்கு விகிதம் ஒன்றுக்கு குறைவாக(Below 1.0 is Good) இருந்தால், அந்த பங்கினை தேர்ந்தெடுக்கலாம். ஒன்றுக்கு மேல் இருந்தால் நாம் அந்த நிறுவனத்தின் மற்ற அடிப்படை பகுப்பாய்வுகளை ஆராய வேண்டும் அல்லது அந்த பங்கினை தவிர்ப்பது நல்லது.

 

 

நினைவில் கொள்க:

 

  • கடன்-பங்கு விகிதத்தை நாம் நீண்ட கால நோக்கில் பார்க்க வேண்டும். ஆதலால் கடந்த 3,5,10 வருட கால கடன் தன்மையை நாம் அலசி பார்க்க வேண்டும்.
  • கடன் விவரங்களை நாம் எளிதாக ஆராய, அந்த நிறுவனத்தின் Balance Sheet ஐ பார்க்கலாம்.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

பங்கு சந்தை பகுப்பாய்வு 4.0 – Return on Equity

 பங்கு சந்தை பகுப்பாய்வு 4.0 – Return on Equity

 

Return on Equity (ROE):

 

ஒரு நிறுவனத்தின் பங்கு முதலீடு மீதான வருமானத்தை தான் “Return on Equity” என்கிறோம்.

 

ROE = Net Income / Share Holder’s Equity

( நிகர லாபம் / பங்குதாரர்களின் முதலீடு)

 

நினைவில் கொள்க:

 

  • பொதுவாக, நமது முதலீடுக்கு கிடைக்கும் வருமானம் ஆதலால், ROE அதிகமாக இருக்கும் பங்குகள் சிறந்தது.
  • ROE கடந்த ஒரு, மூன்று, ஐந்து மற்றும் பத்து ஆண்டுகளில் எத்தனை சதவிகிதம் தந்துள்ளது என்பதை பார்த்தும் பங்கினை தேர்ந்தெடுக்கலாம்.
  • சில பங்குகளுக்கு, ROE குறைவாகவோ (அ) எதிர்மறையாகவோ (Negative) இருக்கலாம். அந்த சமயத்தில் அதன் பண வரத்து அறிக்கையை (Cash Flow statement) சரி பார்த்து தேர்ந்தெடுக்கலாம்.
  • ROE விகிதம் நமது நாட்டின் பண வீக்கத்திற்கு அதிகமாக(More than Inflation Rate) இருக்கும் பங்குகளை கவனிக்கலாம்.
  • ROE ஐ  Return on Networth (RONW) என்றும் அழைப்பார்கள்.

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

 

www.varthagamadurai.com

 

நன்றி, வர்த்தக மதுரை

Financial Blog in Tamil