பங்கு சந்தை பகுப்பாய்வு 9.0 – Understanding Business
ஒரு தொழிலை தொடங்கும் முன், அதை பற்றிய சாதக – பாதகங்களையும், வாய்ப்புகளையும் தெரிந்து கொள்வதுண்டு. அதே போல் தான், நாம் ஒரு நிறுவனத்தின் பங்கினை வாங்கும் போதும் செயல்பட வேண்டும். ( Understanding the Business of a stock )
- நிறுவனத்தின் தொழில் எனக்கு புரிகிறதா ?
- நிறுவனத்தின் தொழில் எனக்கு புரியவில்லை என்றால், அதனை அறிந்து கொள்வதற்கான வழிகள் என்ன ?
- நிறுவனத்தின் தொழில் அனுபவம் மற்றும் நிறுவனத்தின் பிற தொழில்கள் ?
- நிறுவனத்தின் நேர்மை, தொழிலாளர்கள் மேல் உள்ள அக்கறை, முதலீட்டாளர் நலன் எப்படி ?
- நிறுவனத்தின் கடந்த 10 வருட கால லாப – நட்ட(Profit -Loss) மற்றும் இருப்பு நிலை(Balance Sheet) அறிக்கை எவ்வாறு உள்ளது ?
- நிறுவனத்தின் எதிர்கால தொழில் வாய்ப்புகள் எப்படி ?
- நிறுவனத்தின் மற்ற தொழில் போட்டியாளர்கள் எப்படி ?
மேலுள்ள அனைத்து கேள்விகளுக்கும் நாம் விடையை தெரிந்து கொள்வது அவசியம். அதன் பிறகே, நாம் முதலீட்டை மேற்கொள்வது நல்லது.
Think like a Biz-Bee !
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !
நன்றி, வர்த்தக மதுரை