பங்கு சந்தை பகுப்பாய்வு 5.0 – Debt to Equity
Debt to Equity Ratio (D/E):
பொதுவாக, பங்கு சந்தையில் ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் போது, கடன் தன்மை குறைவாக உள்ள நிறுவனத்தை பார்ப்பது நல்லது.
முற்றிலும் கடன் இல்லாத (அ) கடன் மிக குறைவாக உள்ள நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது நல்லது. (Debt Free Stocks/Companies)
ஒரு நிறுவனத்தின் கடன் விகிதத்தை நாம் அறிந்து கொள்ள, அந்நிறுவனத்தின் கடன் தொகையை, அதன் பங்குகளுடன் ஒப்பிட வேண்டும்.
D/E = Debt / Equity (கடன் / பங்கு முதலீடு நிதி )
கடன் – பங்கு விகிதம் ஒன்றுக்கு குறைவாக(Below 1.0 is Good) இருந்தால், அந்த பங்கினை தேர்ந்தெடுக்கலாம். ஒன்றுக்கு மேல் இருந்தால் நாம் அந்த நிறுவனத்தின் மற்ற அடிப்படை பகுப்பாய்வுகளை ஆராய வேண்டும் அல்லது அந்த பங்கினை தவிர்ப்பது நல்லது.
நினைவில் கொள்க:
- கடன்-பங்கு விகிதத்தை நாம் நீண்ட கால நோக்கில் பார்க்க வேண்டும். ஆதலால் கடந்த 3,5,10 வருட கால கடன் தன்மையை நாம் அலசி பார்க்க வேண்டும்.
- கடன் விவரங்களை நாம் எளிதாக ஆராய, அந்த நிறுவனத்தின் Balance Sheet ஐ பார்க்கலாம்.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !
நன்றி, வர்த்தக மதுரை