பங்கு சந்தை பகுப்பாய்வு 7.0 – Interest Coverage Ratio
- வட்டி எல்லை விகிதம் (Interest Coverage Ratio): ஒரு நிறுவனம் நிலுவையிலுள்ள வட்டி கடனை எவ்வாறு செலுத்த முடியும் (அ)
வட்டி கடன் சுமையை குறைப்பதற்கு எவ்வாறு செயல்படுகிறது என்பதை
தீர்மானிக்கும் ஒரு விகிதம் தான் வட்டி எல்லை விகிதம்(Interest Coverage
Ratio).
- Interest Coverage Ratio(ICR):
EBIT / Interest Expenses
( வட்டி மற்றும் வரிக்கு முந்தைய வருவாய் / வட்டிச்செலவுகள் )*EBIT: Earnings Before Interest and Taxes
- பொதுவாக, வட்டி எல்லை விகிதம் ஒரு நிறுவனத்திற்கு, 1.5 க்கு மேல்
இருந்தால் நல்லது. இதற்கு மேல் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அந்த
நிறுவனம் தனது கடன் சுமையை குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
வட்டி எல்லை விகிதம் 1.5 க்கு குறைவாக இருக்கும் பட்சத்தில், அந்த
நிறுவனத்தை தவிர்ப்பது நல்லது. விகிதம் 1.0 க்கு குறைவான நிறுவனம் ,
Bankruptcy எனப்படும் திவாலாகும் சூழ்நிலையும் உள்ளது.
வட்டி எல்லை விகிதத்தை, ஒரு நிறுவனத்தின் கடந்த 5 (அ) 10 ஆண்டுகள்
அடிப்படையில் ஆராய்வது சிறந்தது.
Debt – Equity Ratio போன்று இதுவும் ஒரு மிக முக்கியமான கடன் விகிதம்.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !
நன்றி, வர்த்தக மதுரை