பங்கு-சந்தை-பகுப்பாய்வு-10.2 – DISCOUNTED CASH FLOW
Fundamental Analysis – Discounted Cash Flow
DISCOUNTED CASH FLOW METHOD:
- நாம் வாங்க போகும் ஒரு நிறுவனத்தின் எதிர்கால வருமானத்தை கணக்கிட்டு (அ) கணித்து, அதனை தற்போதைய சந்தை விலையுடன் ஒப்பிட்டு நாம் நிர்ணயிக்கும் விலை (சலுகை விலை) தான் நாம் உண்மையாகவே வாங்க கூடிய விலை. இதனை தான் இம்முறையில் நாம் கண்டுபிடிக்கிறோம்.
- சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நாம் வாங்க போகும் பங்கினை சலுகை விலையில் வாங்கினால், நமக்கு தானே லாபம் !
- DISCOUNTED CASH FLOW முறை சம்பந்தமாக ஏராளமான புத்தகங்கள் தமிழில் உள்ளன. ( உதாரணம்: ஷேர் மார்க்கெட் A to Z – சொக்கலிங்கம் பழனியப்பன்)
MARGIN OF SAFETY:
- ஒரு பங்கின் உண்மையான விலையை கண்டறிய, நாம் இரு முறைகளை பின்பற்றினோம். ஆனால் இந்த உண்மையான விலையிலே வாங்க வேண்டுமென்று அவசியமில்லை. இதை விட குறைவான விலைக்கு கிடைத்தால் அது நமக்கு தான் லாபம். நஷ்டத்தையும் தவிர்க்கலாம். அது தான் “MARGIN OF SAFETY”
- உண்மையான விலையிலிருந்து எத்தனை சதவிகிதம் குறைவாக கிடைக்கிறது என்பதே “MARGIN OF SAFETY”
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !
நன்றி, வர்த்தக மதுரை