ஒரே வருடத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்த வங்கிகள்
One Lakh Crore worth written off loans by the banks in a financial year 2017-18
வங்கிகளில் கடன் வாங்குவதும், வைப்பு நிதியில் முதலீடு செய்வதும் தினசரி நடைமுறையாக இருந்தாலும் இன்றைய நாட்களில் வங்கிகளுக்கு வாராக்கடன் என்ற கடன் நிலுவை விகிதமே அதிகரித்து கொண்டு செல்கிறது. வங்கி வட்டி விகிதமும் முதலீட்டிற்கு அதிகமான பலனை தரவில்லை. இருப்பினும் சமீபத்தில் சில தேசிய வங்கிகள் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன.
வாராக்கடன் சிக்கல் நாட்டில் உள்ள பெரும்பாலான வங்கிகளுக்கு உள்ளன. இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் படி சில வங்கிகள் தங்களிடம் உள்ள கடன் நிலுவைகளை தள்ளுபடி செய்வதும் சில வருடங்களாக அதிகமாக உள்ளது.
இந்நிலையில் கடந்த 2017-18 நிதியாண்டில் மட்டும் 10 வங்கிகள் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடன்களை தள்ளுபடி செய்துள்ளன. இந்த குறிப்பின் படி, பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India -SBI) ரூ. 40,100 கோடி கடனை, 2017-18 ம் நிதியாண்டில் தள்ளுபடி செய்துள்ளன.
பாரத ஸ்டேட் வங்கி 2016-17 ல் 20,500 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு வருடத்தில் இது மற்றைய வங்கிகளை காட்டிலும் அதிகமாகும். கடந்த 2016-17 ம் வருடத்தில் பொது துறை வங்கிகள் மட்டும் 80,000 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை தள்ளுபடி செய்துள்ளன.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
புதிய திவால் சட்டம் (Insolvency and Bankruptcy Code – IBC) மூலம் வங்கிகள் கடன் நிலுவையை திரும்ப பெறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளது. இதன் காரணமாகவே தங்களது கடனை வங்கிகள் பெரும்பாலும் தள்ளுபடி செய்து வருகின்றன.
சமீபத்தில் திவால் சட்டத்தின் வாயிலாக, பினானி சிமெண்ட் (BCL) நிறுவனத்தை அல்ட்ரா டெக் நிறுவனம் சுமார் 7200 கோடி ரூபாய்க்கு வாங்குவதும், எலெக்ட்ரோ ஸ்டீல்(Electrosteel) நிறுவனத்தை 5300 கோடி ரூபாய்க்கு வேதாந்தா நிறுவனம் (Vedanta) வாங்க முயன்றதும், வங்கிகளுக்கு கடன் தள்ளுபடி நிகழ்வை எளிதாகியுள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை