7000 கோடி ரூபாய்க்கு அதிகமான ஜி.எஸ்.டி. ரீபண்ட் – CBIC
GST Refund Over 7000 Crore Rupees from CBIC
மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வரி வாரியம் (Central Board of Indirect Taxes and Customs) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கடந்த சில நாட்களில் மட்டும் 7000 கோடி ரூபாய்க்கும் அதிகமான ஜி.எஸ்.டி. ரீபண்ட் ஏற்றுமதியாளர்களுக்கு திரும்ப வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி. நிலுவை சம்மந்தமான ஏற்றுமதியாளர்களின் புகார்கள் மற்றும் ரீபண்ட் களுக்கு கடந்த மே மாதம் 31 ம் தேதி முதல் இந்த மாதம் ஜூன் 14 ம் தேதி வரை, ஜி.எஸ்.டி. ரீபண்ட் சிறப்பு திட்டம் அதன் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு ஏற்றுமதியாளர்கள் பயன் பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
சரக்கு போக்குவரத்து ரசீது மற்றும் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கலில் வேறுபாடு இருந்தாலும் ரீபண்ட் வழங்கும் முறையும் கொண்டுவரப்பட்டுள்ளது எனவும், கடந்த எட்டு தினங்களில் மட்டும் டெல்லி வட்டாரத்தில், 12,000 சரக்கு போக்குவரத்து ரசீதுகளுக்கு 290 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. ரீபண்ட் (GST Refund) வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தாங்கள் செலுத்திய வரிகளை திரும்ப பெறும் நடைமுறை விரைவில் விமான நிலையங்களிலே ஏற்படுத்தப்படும் என்றும், ஆரம்பகட்டத்தில் பெரிய சில்லரை விற்பனையாளர்களிடம் இருந்து வாங்கப்படும் பொருட்களுக்கு மட்டும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு வரி செலுத்தியதை திரும்ப பெறும் நடைமுறை கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் செலுத்திய வரிகளை திரும்ப பெறுவதில் ஒற்றை சாளர முறை கடைபிடிக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை