கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு – RBI
RBI hikes Repo rate and Banks already hiked Interest Rate
கடந்த 4-6 ம் தேதி காலத்தில், பாரத ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவுகள் சில:
கடந்த சில காலங்களாக மாற்றம் பெறாத ரெப்போ வட்டி விகிதத்தில் இப்போது ரிசர்வ் வங்கி வட்டி விகித மாற்றத்தை அறிவித்துள்ளது. கடந்த காலத்தில் இருந்த ரெப்போ வட்டி விகிதமான 6 சதவீதத்திலிருந்து 0.25 % அதிகரித்து 6.25 % ஆக வெளியிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக வங்கிகள் வழங்கும் கடன்கள் மற்றும் டெபாசிட் போன்றவைகளுக்கு வட்டி விகிதங்கள் அதிகரிக்க கூடும். ஆனால் சில வங்கிகள் ரிசர்வ் வங்கி நிதி கொள்கை முடிவு வருவதற்கு முன்னரே வட்டி விகித அதிகரிப்பை ஏற்படுத்தி விட்டன.
ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 6 சதவீதத்தில் தொடரும் எனவும், 2018-19 ம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 7.4 % ஆக இருக்கும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
வரும் காலத்தில் (ஏப்ரல்- செப்டம்பர் 2018) நாட்டின் சில்லரை பணவீக்கம் 4.8 – 4.9 % ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் பணவீக்கத்தை அதிகரிக்க கூடும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
வங்கி வட்டி விகிதங்கள் ஏன் மாறுகிறது ?
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திவால் சட்டத்தின் மூலம் விரைவான தீர்வுகளை எட்டும்பட்சத்தில் பெறப்படும் முதலீடுகளை அதிகரிக்க முனைவதாக மத்திய வங்கி சொல்லியுள்ளது. அடுத்த நிதி கொள்கை குழு(Monetary Policy Committee) வரும் ஜூலை மாதம் 31 ம் தேதியில் கூடுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை