ஐந்து வருட குறைவாக பி.எப். வட்டி விகிதம் – 8.55 %
5 Years Low on EPF Interest Rate – Cuts to 8.55 %
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை 8.55 சதவீதமாக வழங்க EPFO(Employees’ Provident Fund Organization) முடிவெடுத்துள்ளது. 2017-18 ம் நிதியாண்டுக்கான வட்டி விகிதமாக 8.55 சதவீதத்தை ஏற்கனவே தனது மத்திய குழு கூட்டத்தில் EPF அமைப்பு அறிவித்தது.
2016-17 ம் நிதியாண்டுக்கான வட்டி விகிதம் 8.65 % ஆகவும், 2015-16 ம் ஆண்டுக்கு 8.8 சதவீதமாகவும், 2014-15 ல் 8.75 % ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது சொல்லப்பட்டுள்ள 8.55 சதவீதம் கடந்த ஐந்து வருட குறைவாக உள்ளது என்பது கவனிக்கத்தக்கது. 2012-13 ம் நிதி வருடத்தில் EPF வட்டி விகிதம் 8.5 சதவீதமாக இருந்தது.
இந்த ஐந்து வருட வட்டி குறைப்பு, சுமார் ஆறு கோடி பி.எப். சந்தாதாரர்களை பாதிக்கும் என ஏற்கனவே பொருளாதார நிபுணர்களால் சொல்லப்பட்டிருந்தது. கடந்த பிப்ரவரி மாதத்திலேயே அறிவிக்கப்பட்ட இந்த 8.55 % வட்டி, கர்நாடக தேர்தலை மேற்கோள் காட்டி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது இதனை நடைமுறைப்படுத்த கூறியுள்ளது.
கடந்த மார்ச் 2018 ன் படி, 8.4 கோடி சந்தாதாரர்கள் தங்களின் பிறப்பு தேதியை சமிர்ப்பிக்கவில்லை என்றும், 11 கோடி பி.எப். கணக்கில் சந்தாதாரர்களின் தந்தை பெயர் குறிப்பிடப்படவில்லை எனவும் அமைச்சரவையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தொழிலாளர்களுக்கான பி.எப். கணக்கு நடைமுறை தற்போது எளிமையாக்கப்பட்டுள்ளது. UAN (Universal Account Number) என்ற பொது கணக்கு எண் ஒவ்வொரு சந்தாதார்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் எந்த நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் ஒரே கணக்கு எண்ணை கொண்டு நிர்வகிக்கலாம். தங்கள் விவரங்கள் மற்றும் பி.எப். பணத்தை கையாளும் முறையும் எளிதாக உள்ளது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை