Category Archives: Think Invest

குப்பன், சுப்பன், கப்பன் – How the Bank Works

 

 

குப்பன், சுப்பன், கப்பன் – How the Bank Works

 

குப்பன், சுப்பன், கப்பன் மூவரும் பள்ளிக்கால நண்பர்கள்; அவர்களுக்குள் எப்போதும் ஒரு ஒற்றுமை உண்டு; தங்கள் அலுவலக விடுமுறை நாட்களில் சந்தித்து அரசியல் மற்றும் சினிமா விமர்சனம் செய்வதுண்டு. தினசரி நாளிதழளையும், தொலைக்காட்சி பெட்டியையும் அவர்கள் பொழுதுபோக்காக கொண்டிருந்தனர். குப்பன் ஒரு அறிவாளி; ஆனால் ஒரு செலவாளியும் கூட… எப்போதும் தன்னை மற்றவர்கள் அறிவாளியாக, புகழும்படியாக இருக்க ஆடம்பரமாக செலவும் செய்வான். சுப்பன் ஒரு மடச்சோம்பேறி. ஆனால் (பொருளாதாரம்) பண விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருப்பான். அவ்வளவு எளிதாக யாரும் அவனிடம் அவசர தேவைக்காக கூட பண உதவி பெற முடியாது. மற்றவர்களின் நிதி ஒழுக்கத்தை பார்த்தே பண உதவி செய்பவன். கப்பன் ஒரு சிறந்த சேவை மனப்பான்மை கொண்டவன்; குப்பன்,சுப்பனை விட அதிகம் படிக்காவிட்டாலும், நண்பர்களிடையே நல்ல உறவை காப்பவன்.

 

ஒரு சமயத்தில், குப்பனுக்கு தனது தொழிலுக்கான பணத்தை திரட்டுவதில் மிகுந்த நெருக்கடி; ஆதலால் தான் எங்கேனும் கடன் வாங்க முடிவு  செய்தான்;நண்பர்களிடமும், உறவுகளிடமும் பண உதவி கேட்டான். சில நேரங்களில் அவனது அறிவாளித்தனமும் கடன் கேட்க முழுவதுமாக முயற்சிக்கவில்லை. அதனால், தனது நெருங்கிய நண்பர்களான சுப்பன், கப்பனிடம் கேட்டான். சுப்பனோ இவனை நம்பி பணம் தர தயாராக இல்லை. கப்பனிடமோ குப்பன் கேட்கும் அளவுக்கு பணமில்லை. இருந்தாலும் பண விஷயத்தில் சுப்பனுக்கும், குப்பனுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டு பேரும் நிதிக்கொள்கையில் சரியான ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவர்கள்.  அதனால், கப்பன் சுப்பனிடம் தனக்கு பண உதவி செய்யுமாறும், அதற்கு வட்டியும் வழங்குவதாக தெரிவித்தான். சுப்பனுக்கும் சந்தோசம் தான்.

 

அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது; அதாவது ரூ. 1,00,000 /- க்கு   7 % வட்டியில் கடன் பெற்றதாக !  கப்பனை பொறுத்தமட்டில், ரூ. 1,00,000 /- என்பது ஒரு வைப்பு  தொகையை போல !

தான் பெற்றுக்கொண்ட இந்த தொகையை குப்பனுக்கு, 10 % வட்டியில் கடனாக கொடுத்தான். தான் சுப்பனிடம் எவ்வாறு இந்த தொகையை வாங்கியதன் நிலையையும் சொன்னான்; எனவே கடனை நியாயமான முறையில் செலுத்தவும் அறிவுறுத்தினான். குப்பனும் ஏற்றுக்கொண்டான்; இதற்கும் ஒரு ஒப்பந்தம் முடிவு செய்யப்பட்டது.
இப்போது, நம்மை பொறுத்தவரை குப்பன் ரூ. 1,00,000 /- ஐ 10 % வட்டியில்  கடனாக பெற்றவன்; சுப்பன் ரூ. 1,00,000 /- ஐ 7 % வட்டிக்கு கடன் கொடுத்தவன். இடையில் உள்ள கப்பன் ஒரு இடைத்தரகராக செயல்பட்டுள்ளான். இதற்காக அவன் பெறும் சன்மானம் 3 % வட்டி வருமானம் (ரூ. 1,00,000 /- க்கு)   !!! இந்த 3 % வருமானத்தை கப்பன் தனது சேவைக்காக பயன்படுத்தி கொள்வான்… சேவை கட்டணமோ 🙂

இவ்வாறாக தான் ஒவ்வொரு வங்கியும் செயல்படுகிறது; கடனாக கொடுக்க ஒருவரும், கடனாக பெற மற்றொருவரும் இருந்தால், அந்த இரண்டு பேரையும்  இணைக்கும் பாலமாக வங்கி செயல்படும்; வட்டியில் ஏற்படும் வித்தியாசமே வங்கியின் வருமானமாகும் !

 


 

 

bank-works

 


 

ஒரு நபர் ரூ. 100 /- ஐ  வங்கிக்கு கடன் கொடுப்பதாகவோ  (அ) வைப்பு  தொகையாக கொண்டுள்ளார்(Lender) என்றால், அந்த வங்கி அவரின் 100 ரூபாயை மற்றொரு நபருக்கு சில வட்டி விகிதத்தில் (உதாரணம்: 10 %) கடனாக கொடுக்கும்; கடன் பெறுபவர்(Borrower) வட்டியுடன் தனது  கடனை (ரூ. 100 + 10 = 110 /- )  வங்கிக்கு செலுத்துவார்;  வங்கி அதனை பெற்று, கடன் கொடுத்தவர் / வைப்பு தொகை கொண்டவருக்கு சில வட்டி விகிதத்துடன் (ரூ. 100 + 7 = 107 /- ) திரும்ப கொடுக்கும்; மீதமிருக்கும் வட்டி வருமானம் (Interest Income)(ரூ. 10 – 7 = 3 /- ), வங்கியின் வருமானமாகும்….

 

இந்த வங்கியின் செயல்பாட்டை ஒழுங்குமுறைப்படுத்த, அண்ணாத்த “ பாரத ரிசர்வ் வங்கி “(RBI – Reserve Bank of India) உள்ளது.
ஆக, நாம் கடன் கொடுப்பவரா (அ) கடன் பெறுவாரா என்பது நம்மை பொறுத்த விஷயம்; ஆனால்,  நமது தேவைக்காக ‘கப்பன்’ (Bank) என்பவன் எப்போதும் தயாராக உள்ளான்…

 

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

    

                                           

                                                                                                                        

முதலீட்டினை திரட்டுவதற்கான வாய்ப்புகள் – Mobilize Investment Opportunities

முதலீட்டினை திரட்டுவதற்கான வாய்ப்புகள்:

How to Mobilize Investment Opportunities

சேமிப்பு மற்றும் முதலீட்டை பற்றி நாம் பேசும் போது, நம்மில் பெரும்பாலோருக்கு வரவும் – செலவும் சரியாக உள்ளது; அப்புறம் எங்கே சேமிப்பும், முதலீடும் என்று கேள்வி கேட்பதுண்டு. அதுவும் சரி தான். இது ஒரு நிறுவனம் வரவும், செலவும் சமமாக உள்ளது என்று ஒரு அட்டவணையில் (Income Statement) கணக்கு காண்பிப்பது போல தான் (லாபமீட்டினாலும்) !
உண்மையான நிலையில் நமக்கு வரவும் – செலவும் சரியாக இருக்கிற பட்சத்திலும், நாம் நமது சேமிப்பு (அ) முதலீட்டிற்கான நிதியை தேடுவதற்கான வாய்ப்புகளை அறியலாம். உங்களை போன்றே, (வரவு-செலவு) நிதிச்சுமையில் மாட்டிக்கொண்டிருக்கிறேன் என்று எண்ணுகையில், நான் கண்டறிந்த சில வாய்ப்புகள்…
சேமிப்பை / முதலீட்டிற்கான நிதியை திரட்டுவதற்கான வாய்ப்புகள் இதோ:
  • பழைய நாளிதழ்கள், மாத இதழ்கள் (எடைக்கு)விற்பதன் மூலம் (Old Newspapers, Magazines Selling)
  • பயன்படுத்தப்பட்ட பால் பாக்கெட்கள் (Used Milk Packets)
  • பயன்படுத்தப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் (Used Water Bottles)
  • வீட்டிலுள்ள பழைய பொருட்கள் விற்பனை  மற்றும் தேவையற்றதை வாங்காமல் இருப்பதன் மூலம் (Selling Unused Old things and Not buying unnecessary household things)
  • வரிச்சலுகையில் கிடைக்கும் பணத்தொகை (Tax Exemption / Refund Amount)
  • சம்பளம் / பதவி உயர்வு மூலம் கிடைக்கும் தொகை (Increment / Promotion / Bonus)
  • ஷாப்பிங் செய்யும் போது கிடைக்கும் சலுகை தொகை (Discounts on Shopping)
  • இணையதள  வருமானம் (Internet Income)
  • உங்கள் அறிவு / திறமையின் மூலம் கிடைக்கும் பகுதி நேர வருவாய் (Part Time Income through Knowledge / Skills)
இன்னும் பல…. உங்கள் சிந்தனைகளிலிருந்து 🙂 
மேலுள்ள வாய்ப்புகளை கண்டறிந்து சேமிப்பதற்கு நீங்கள் எந்த மெனக்கெடவும் தேவையில்லை; சுயமாக நமக்கு சுற்றியுள்ள வாய்ப்புகளை நாம் சிந்திக்க தொடங்கினாலே போதும்; நான் கண்டறிந்த வாய்ப்புகளின் மூலம், எனது பழைய நாளிதழ்கள் மற்றும் பால் பாக்கெட்கள் எனக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 50 ஐ வருவாயாக கொடுத்தன. இதனை நான் அஞ்சலக சேமிப்பில் 5 வருட சேமிப்பு திட்டத்தில்(Recurring Deposit – RD)  7 % வட்டி விகிதத்தில் வருவாயாக, முடிவில் ரூ. 3600 /- ஐ சம்பாதித்தேன். இது என்னுடைய வாய்ப்புகள் சம்பாதித்து கொடுத்தவையே என்று தான் சொல்ல வேண்டும்; என்னுடைய இந்த அஞ்சலக சேமிப்பு வருமானம் என்பது ஒரு சிறு தொகை மட்டுமே; இதற்கு மேலும், நல்ல வருமானம் தருகின்ற நிரந்தர மற்றும் நம்பகமான வாய்ப்புகளை நான் மற்ற அத்தியாயத்தில் சொல்லியிருக்கிறேன்.  நீங்களும் உங்களது சிந்தனையின் ஓரமாக உள்ள ஒரு சேமிப்பு / முதலீடு திரட்டுவதற்கான வாய்ப்புகளை கண்டறியலாம். இதற்கு நமக்கு வேறு எந்த அந்நிய முதலீடும் (Friends’ Debt Instrument – FDI / கடன்) தேவையில்லை !
வாழ்த்துக்கள், உங்கள் வாய்ப்புகளுக்கு… 
சிறு துளி பெரு வெள்ளம் !

கற்று கொள்வதற்காக மட்டுமே வேலை செய்யுங்கள்: Work Money For you

கற்று கொள்வதற்காக மட்டுமே வேலை செய்யுங்கள்; பணத்திற்காக வேலை செய்ய உங்கள் வாழ்நாள் முழுவதையும் அனுமதிக்காதீர்கள்

Don’t work for Money; Make it work for You…

பத்திரிக்கைகளில், வேலை வாய்ப்பின்மை என்ற செய்தியை நாம் பரவலாக பார்த்திருப்போம்; இந்த பரவல் அரசியல் காரணமாக இருந்தாலும் அது ஒரு புறம் இருக்கட்டும். உண்மை என்னவெனில், கடந்த 20 வருடங்களில் அதற்கு முன்பிருந்ததை விட, இன்று நாம் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். படித்த படிப்புக்கு வேலை அமையா விட்டாலும், நாம் இன்று ஏதோ ஒரு வேலையை செய்வதற்கு தயாராக உள்ளோம்; உந்தப்பட்டும் உள்ளோம். முன்பு ஒரு குடும்பத்தில் உள்ள ஒருவரே வேலை பார்த்து வந்த நிலை இன்று அப்படி இல்லை. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பெரும்பாலானோர் இன்று காத்திருக்கவும் தயாராக இல்லை. தொழில்களும் பெருகி விட்டன; நுகர்வோர்களும் அதிகரித்து விட்டனர்
அதனால், இன்றைய தொழில்நுட்ப உலகில் வேலை என்பது ஒரு கடினமான காரியம் அல்ல !  ஆனால்…
நாம் எல்லோரும் பணத்திற்காக மட்டுமே வேலை செய்ய பழகிவிட்டோம்; பணத்தேவைக்காகவே வேலைக்கும் செல்கிறோம். இன்று பணம் தான் நமது உடல் நலத்தை விட பிரதான விஷயமாக உள்ளது. நமது அடுத்த உந்துதலுக்கு அது தான்  துணையாக உள்ளது என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் அது தான் இல்லை ! பணம் ஒரு கருவி போல… அதனை முழுமையாக இயக்குவது நாம் தான். பணத்திற்காக நாம் ஒவ்வொரு விஷயத்தையும் அணுக ஆரம்பித்து விட்டதால், நல்ல உறவுகளை பேணுவதை கூட மறந்து விட்டோம். நாம் பணத்திற்காக வேலை செய்ய ஆரம்பித்து விட்டோம்; எதற்கு ?
அன்றாட அடிப்படை வசதிகளுக்கு, வருங்கால சந்ததியினருக்கு, சொத்து சேர்ப்பதற்கு, ஓய்வு காலத்திற்கு, மற்றவர்களை போல தோன்றுவதற்கு… சரி, இதற்காக நாம் எத்தனை காலம் உழைக்கப்போகிறோம் ??
நம் ஆயுள் முழுவதும் ?? இங்கு தான் நமது குறிக்கோள் மழுங்கி போய் (பொய்) விட்டது. மறுபடியும் இதே குறிக்கோளை தானே நமது சந்ததியினருக்கும் ஆயுள் முழுவதும் சொல்லி கொடுக்கிறோம். நாம் ஒன்றும் சூப்பர் ஸ்டாரின், “அருணாச்சலம்” (Rajini kanth’s Arunachalam Tamil Movie) படத்தினை போல “பணம்” எப்படி கையாள வேண்டும் கற்று கொடுக்கவில்லையே !  பணத்தினை கற்று கொடுக்க, கோடிகள் தேவையில்லை; சில பத்து, நூறுகள் போதும் 🙂
நீங்கள் உங்களது இளமையில் ஒரு வேலை தேடி, உழைத்து பணம் பண்ணுகிறீர்கள்; திருமணமாயிற்று; குழந்தைகள் வந்தன; அவர்களின் படிப்பு, வேலை, திருமணம்… இப்போது உங்களது ஓய்வு காலம் வந்து விட்டது !  உங்களது பொருளாதார தேவைக்காக(பாசத்திற்காக மட்டுமல்ல) உங்களது குழந்தைகளை நாடுவீர்கள். இல்லையென்றால், ஓய்வுக்கு பின்னும் பணத்தினை(வேலையை) தேடுவீர்கள்; இது முற்றிலும் ஒரு தவறான வாழ்க்கை முறையாகவே நான் கருதுகிறேன்.
எந்த தன்னலமில்லாமல் நமது தேச நலனுக்காக பாடுபட்ட ஆத்மாக்களை விடவும், நாம் சற்று சுயநலத்துடன் தான் திட்டம் போட்டோம். திட்டம் போட்டு பணத்திற்காக மட்டுமே உழைக்கவும் தயாரானோம். அதனால் தான் மீண்டும் சொல்கிறேன்…
 கற்று கொள்வதற்காக மட்டுமே வேலை செய்யுங்கள்; பணத்திற்காக வேலை செய்ய உங்கள் வாழ்நாள் முழுவதையும் அனுமதிக்காதீர்கள் !
தொழில்களை உருவாக்குங்கள்.
 
பணத்திற்காக உங்கள் வாழ்நாள் முழுவதையும் செலவழிக்காமல், பணம் உங்களுக்காக உழைக்குமாறு கற்று கொள்ளுங்கள்
உங்கள் பணம் உங்களுக்காக உழைப்பதற்கான குறிக்கோள் மற்றும் வாய்ப்புகள்:
  • உங்கள் குறுகிய மற்றும் மத்திம கால தேவைக்காக சேமிக்க துவங்குங்கள். அது எப்போதும் உங்களுக்கு ஒரு பொருளாதார சுதந்திரத்தை தரும். (Savings for Goals)

 

  • அவசர கால நிதி என்பதை ஒரு கடமையாக்கி கொள்ளுங்கள். (Create Emergency Fund)

 

  • உங்களது ஓய்வு கால வாழ்க்கையை (நிதியை) குறித்து முன் கூட்டியே திட்டமிடுங்கள். (Plan for the Retirement Earlier)

 

  • முடிந்தவரை உங்கள் கடன் சுமையை குறைத்து கொள்ளுங்கள் மற்றும் கடனில்லா வாழ்க்கை முறையை கவுரவியுங்கள். (Be on Low-Debt /Debt Free)

 

  • உங்களது அறிவை பணம் திரட்டும் செயலாக மாற்றுங்கள்; உங்களது  நண்பர்கள் குழு அமைத்து, ஒரு நேர்மையான மற்றும் புதுமையான தொழிலை செய்ய பழகுங்கள்; வேலை வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.(Entrepreneurship)
  • நல்ல ஆரோக்கியமான உறவுமுறைகளை உங்கள் வட்டாரத்தில் உருவாக்குங்கள்; மற்றவர்களுக்கு உதவி செய்ய எப்போதும் தயாராகுங்கள். (Build Healthy and Wealthy  Relationship – Help Others)
வாய்ப்புகள் (Passive Income):
  • பங்குகள் மூலம் வருமானம் (Dividend Income)
  • வட்டி வருமானம் (Interest Income)
  • வீட்டு வாடகை மற்றும் விற்பனை வருமானம் (Realty and Rental Income)
  • இணைய தள பொருட்கள் விற்பனை வருமானம் (Online Product Selling)
  • இணைய பிளாக்கிங் (Internet Blogging)
  • மற்றும் பிற அறிவு சொத்து சார்ந்த வருமானம். (Income through What you know)
பணத்திற்காக வேலை செய்யாமல் இருக்க சில பேரால் மட்டுமே முடியும் என்றாலும், உங்கள் பணம் உங்களுக்காக உழைப்பதற்கான வாய்ப்புகள் எல்லோருக்கும் சாத்தியமே !
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !

நீண்ட காலத்திற்கு தயாராகுங்கள்:Creating Long term Wealth

நீண்ட காலத்திற்கு தயாராகுங்கள்: பொறுமை கடலினும் பெரிது 

 Creating Long Term Wealth

 

பொறுத்தார் பூமி ஆள்வார்…
பொறுமை கடலினும் பெரிது…
மிகவும் அற்புதமான குறளும் கூட ! ஆனால், நாம் நமது வாழ்நாளில் அதிகம் பயன்படுத்தப்படாத சிந்தனையும் கூட !
நாம் செல்வத்தை சேர்ப்பதிலும்(Long Term Wealth) இவ்வாறு தான் கடமையாற்ற வேண்டும். நமக்கு ஏற்கனவே தெரிந்த ஒன்று தான் இதுவும், “ஒரு மரத்தை வளர்த்து(Tree Plantation) அதன் பயனை அனுபவிக்க வேண்டுமென்றால்… விதை விதைத்து, நீரூற்றி, இலை,தண்டு, பூக்கள் விட்டு காத்திருக்க வேண்டும்; காத்திருத்தல் மிகவும் அவசியம்; நாம் அனுபவிக்க முடியாவிட்டாலும், நமது வாரிசுகள் (சந்ததியினர்) உறுதியாக அனுபவிக்கலாம்” இது தான் நீண்ட கால பயனுக்கான அடிப்படை விதி; காத்திருத்தலே அவசியம், செல்வம் சேர்ப்பதிலும் !
நீங்கள் மரத்தை  விஷயங்களை எல்லாம் இப்போது மறந்திருப்பீர்கள். ஏனென்றால் நமக்கு அது ஒரு வேற்று கிரக வாசி போல ஆகி விட்டதல்லவா 🙂  அதனால் நமக்கு பழக்கப்பட்ட ஒரு விஷயத்தை கொண்டு ஆராய்வோம். அது தாங்க, நமது குழந்தைகள், வாரிசுகள் !!! மிகவும் புத்திசாலித்தனமாக நாம் யோசித்தவை 🙂 அதாவது நமது வாரிசுகள், நாம் கண்ட எண்ணத்தை, நிறைவேற்ற இந்த மண்ணில் ஜனித்ததாக நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு. அதனால் நாம்  அந்த உயிர் கருவிலிருந்து உருவாகும் போது என்ன என்னவோ செய்கிறோம். அந்த உயிருக்கு நல்ல சத்தை கொடுக்கிறோம்; நேர்மறை / எதிர்மறை எண்ணங்களை செலுத்துகிறோம் (ஊசி மூலம் இல்லாமலே ; நீங்கள் எதிர்பார்க்கிற எண்ணம், அந்த உயிரோட்டம் பிரதிபலிக்க எத்தனை காலம் ஆகும் என்று உங்களுக்கு தெரியுமா ?
18 வருடங்கள் ?  23 வருடங்கள் ?  25 வருடங்கள் ?
என் குழந்தை ஒரு டாக்டர், என்ஜினீயர்,  அரசு வேலை, வெளிநாடு, தொழிலதிபர், பென்ஷன் திட்டம்,,,…. ஆவதற்கு !
நமது எண்ணம் நிறைவேற, அந்த உயிருக்கு இவ்வளவு காலம் தேவைப்படுகிறது என்றால், செல்வம் சேர்ப்பதிலும் அந்த காத்திருப்பு தன்மை தேவை(Patience).

You can’t produce a baby in one month by getting nine women pregnant  ― Warren Buffett

இதை விட, காத்திருத்தலுக்கு(Patience) ஒரு எளிய விளக்கம்(இன்றைய காலத்தில்) இருக்க முடியாது  🙂
நீண்ட காலத்திற்கு நீங்கள் தயாரானால்…
  • மரம் –  காய் கனிகள், பறவைகளுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் உணவளிக்கும் வகை, சுற்றுப்புறத்திலுள்ள கார்பன் டை ஆக்ஸைடை உள்வாங்கி, பலன் தரும் ஆக்சிஜனை வெளியிடுகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவை தடுக்கிறது; சுற்றுப்புற மாசுபடுத்தலை கட்டுப்படுத்துகிறது.

 

  • மண் – நல்ல சத்தான உணவினை அளிக்க பயன்படுகிறது, சுத்தமான காற்று மற்றும் நீர்நிலை ஆதாரங்களை அதிகப்படுத்துகிறது; சுற்றுப்புற மாசு மற்றும் கரியமில வாயுவை கட்டுப்படுத்துகிறது.

 

  • மனம் – நல்ல உடல் ஆரோக்கியத்தை பேணிக்காக்க உதவுகிறது. பிரபஞ்ச ரகசியம் மற்றும் அறிவியல் வாயிலாக அறிய மேம்படுகிறது.  திட்டமிட்டு செயல்படுகிறது,எண்ணியவை கைகூடுகிறது; நல்ல மனம் ஆரோக்கியமான சந்ததிகளை உருவாக்குகிறது.
நீண்ட கால செல்வத்திற்கான வழி…  கற்றுக்கொள்ளுங்கள் 
  • பணவீக்கத்தை (Inflation)
  • வட்டி விகிதத்தை (Interest Rates)
  • வீட்டு மனை விற்பனையை (Real Estate)
  • வாடகை வருமானம் (Rental Income)
  • அரசு மற்றும் தனியார் வரியில்லா பத்திரங்கள் (Tax Free Bonds)
  • பங்குச்சந்தை  (Share/Stock Market)
  • இணைய வழி வருமானம் (Internet / Online Income)
  • பிற வருமானம் கொடுக்கும் அறிவை (நேர்மையான முறை)
மற்றும்  பொறுமையை(Patience)…
மேலே சொன்ன வழியில் நாம் நீண்ட கால நோக்கத்தில் மட்டுமே செல்லவும். வீட்டுமனை மற்றும் பங்குச்சந்தையை நாம் குறுகிய கால நோக்கில் பார்த்தால் பலன் கிட்டாது. பங்குச்சந்தை பற்றி நம்மில் நிறைய பேருக்கு விழிப்புணர்வு இல்லை என்று சொல்லலாம். அது ஒரு சூதாட்டம் என்ற சிந்தனையும் பலருக்கு இருக்கலாம்; ஆனால் நீங்கள் வேலை செய்யும் அரசோ (அ) நிறுவனமோ உங்கள் பணத்தை ஏன் பங்குசந்தையில் முதலீடு(NPS,EPF,LIC,Insurance,Bank Deposits) செய்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளவும். அதற்கு முன், நீங்களே கற்று கொண்டு உங்கள் செல்வத்தை சேருங்கள்.
 காலையில் பல்துலக்குதல் முதல்…  இரவு படுக்கைக்கு போகும் வரை(Brush to Bed) நீங்கள் பயன்படுத்தும் அனைத்து பொருளும்(Household Products) பங்குசந்தையே !  உங்களின் தேவைக்கும் உற்பத்திக்கும்(Demand-Supply) உள்ள இடைவெளியே நீங்கள் எதிர்பார்க்கும் விலைவாசி ! உங்கள் வரிப்பணமே, உங்களுக்கு வழங்கப்படும் சலுகை மற்றும் இலவசங்கள் ! (Taxes to Free Things)
செல்வம் சேர்க்க, நீண்ட காலத்திற்கு தயாராகுங்கள்.  வாழ்த்துக்கள் 🙂
Creating a Long term Wealth  – Patience with Plan

Your Parents are not your Emergency Fund, Your Children are not your Retirement Fund

Your Parents are not your Emergency Fund
Your Children are not your Retirement Fund

சொத்துக்களை குவியுங்கள்; எதிர்பார்ப்புகளை அல்ல !

முன்பெல்லாம், நமக்கு கூட்டு குடும்பத்தின் மீது அதிக நம்பிக்கை இருந்தது; குடும்பத்தில் உள்ள பெரியவர் ஒருவரின் வார்த்தைக்கு கட்டுப்பட்டும், உடன்பட்டும் நாம் வாழ்ந்ததால் குடும்ப ஒற்றுமை தலைமுறை தலைமுறையாக நிமிர்ந்தும், செழித்தும் நின்றது. நமக்கு சில விஷயங்கள் கசப்பானதாக இருந்தாலும், நமது சகிப்புத்தன்மையே ஓங்கியது. குடும்பத்தலைவர்கள் ஒரு நல்வழிகாட்டியாகவே விளங்கினார்கள்; இதை தான் இன்றும் சில பெரும் பணக்காரர்களும், தொழில் அதிபர்களும் அந்த நல்வழிகாட்டி நம்பிக்கையில் முன்னேறுகின்றனர். ஆனால், நம்மில் பெரும்பாலோருக்கு தலைமுறை இடைவெளி காரணமாக அந்த நம்பிக்கையில் நம்பிக்கை இல்லை 🙂
நம்பிக்கையின்மையின் விளைவு, பல தனி குடும்பங்கள், தனி மனித சமுதாயமும் உருவாயின ! தொழில்நுட்ப ரீதியாக நாம் நாகரிகம் அடைந்தாலும், மனித சமுதாயமாக பக்குவப்பட்ட  ஒரு நாகரிகத்தை நாம் இன்னும் அடையவில்லை என்றே சொல்லலாம். இவ்வாறாக கால மாற்றம் மனித சமுதாயத்தில் இருந்தாலும் இன்னும் நாம் ஒரு சில பழக்க வழக்கங்களால் கண்மூடித்தனமான நம்பிக்கையையே கொண்டிருக்கிறோம். இது ஒரு அறியாமையும் கூட…
“ஆயிரம் பேரிடம் போய் சொல்லி…”  என்பதற்கு மாறாக, “ஆயிரம் பொய் சொல்லி…”  என்பதனை போல !!
அந்த அறியாமை, பொருளாதாரத்திலும், மற்றும் நம் வாழ்வாதரத்திலும் கூட…  ஆம், நாம் பணத்திற்காக பலவருடங்கள் உழைத்தாலும், பொருளாதார ரீதியாக நாம் மற்றவர்களை சார்ந்து இருக்கிறோம்… இதுவும் ஒரு அறியாமையே !
உண்மையில் நாம் தனி மனித சுதந்திரம் என்று சொன்னால், பொருளாதரத்தில் (நம்மில்) முன்னேறி இருக்க வேண்டுமே…
 Your Parents are not your Emergency Fund
Your Children are not your Retirement Fund   – Stable Investor
உண்மையில் ஒரு சரியான வாசகமும் கூட ; அன்று நாம் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்த நாம் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை கொண்டிருந்தோம். அது மிகச்சரியே… ஆனால் இப்போதும் நாம், ஒவ்வொரும் தனி குடும்பமாக, தனி நபராக நமது வருமானம் அதிகரிக்கும் போது, நாம் ஏன் இன்னும் பொருளாதரத்திற்கு போராட வேண்டும். இன்னும் நம்மில் பல குடும்பங்கள், தங்கள் பிள்ளைகளுக்கு எது தேவை என்பதை அறியாமலும்,தேவையற்றதை செய்வதாலும், செலவழிப்பதாலும் தங்கள்  ஓய்வு காலத்திற்கு தங்கள் வாரிசுகளை எதிர்பார்த்து கொண்டிருகின்றனர்; இன்னும் சிலரோ தங்களுக்கான தகுதி இருந்தும், வாய்ப்புகளை உருவாக்காமல் பெற்றோர்களை பொருளாதார ரீதியாக எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
உங்களுக்குள்ளே நீங்கள் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி:
(உங்களுக்காக மட்டுமே 🙂 )
  • உங்கள் துணைவன்/துணைவி மீது நீங்கள் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள் ?
  • ஆண் பிள்ளை தான் உங்கள் வாரிசாக முடியும்; ஆண் பிள்ளை மட்டுமே உங்களை வயதான காலத்தில் பார்த்துக்கொள்ளும்; பெண் பிள்ளை அல்ல… நீங்கள் இந்த கருத்தை ஏற்று கொள்கிறீர்களா ?

 

  • உங்கள் குழந்தையின் படிப்பு, உங்களின் ஓய்வு காலத்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பதை விட முக்கியமா ?

 

  • உங்களுக்கு பிடித்தவர் உங்களுடன் இல்லாத போது / நீங்கள் உங்களுக்கு பிடித்தவர்களுடன் இல்லாத போது… தங்கள் தனிமை காலத்தை தங்களால் கொண்டாட எப்போதாவது திட்டமிட்டு இருக்கிறீர்களா ?
மேலுள்ள எல்லா கேள்விகளும் உங்களுக்காக மட்டுமே என்று சொல்லியிருக்கிறேன்; அதனால் சற்று சூடாக இருக்கலாம். ஆனால் இது மிகவும் அவசியமான ஒன்று. ஒரு சுய பரிசோதனையும் கூட…
ஒரு குடும்ப நிர்வாகத்துக்கும், ஒரு நாட்டை நிர்வகிப்பதற்கும் ஒன்றும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. உங்களால் ஒரு குடும்பத்தை 50 % நிர்வகிக்க தெரிந்தாலே, நீங்கள் ஒரு நாட்டின் நிர்வாகத்தையும், கடமையும் புரிந்து கொள்ள முடியும்; நூறு சதவீதம் நிர்வாகம் அல்ல !

உங்கள் ஓய்வு காலத்தை விட, உங்கள் வாரிசுகளின் கல்வி ஒன்றும் முக்கியமில்லை. நாம் சினிமாவில் பார்ப்பது போன்று பெற்றோர் சுமை தூக்கு வேலை செய்து, கஷ்டப்பட்டு தன் பிள்ளையை மேல் படிப்பிற்கு படிக்க வைப்பார்; முடிவில் அவர்களது பிள்ளையான நமது ஹீரோ, வெளிநாட்டில் படித்து ஒரு நல்ல டாக்டராகவோ, இன்ஜினீராகவோ நம் நாட்டிற்கு வந்து சேவை புரிவார். இது திரையில் மட்டுமே 🙂

அப்படி நடந்து விட்டால் தான், நம் பள்ளி, கல்லூரியில் முதல் மதிப்பெண் பெற்ற எல்லாருமே அவ்வாறு உருவாகி இருக்க வேண்டுமே ??? ஆனால் எதார்த்த வாழ்க்கை அப்படி இல்லை.

நீங்கள் உங்கள் வாரிசுகளுக்கு அறிவு சார்ந்த விஷயங்கள், தன்னம்பிக்கை மற்றும் புதுமையை சொல்லி கொடுங்கள்; பள்ளி மற்றும் கல்லூரிகளில் லட்சங்களை கொட்டி, உங்கள் ஓய்வு காலத்திற்கு அவர்களை எதிர்பார்க்க வேண்டாம். சுயநலமான சமுதாயத்தையும், முதியோர் இல்லத்தையும் நீங்களே உருவாக்க வேண்டாமே !

உங்களை விட, உங்கள் வீடு, வாரிசுகள், மண், பொன் ஒரு பெரிய சொத்து அல்ல. நீங்கள் தான் சிறந்த ஒரு சொத்து. ஆதலால் உண்மையான சொத்துக்களை குவியுங்கள்…
உண்மையான சொத்து:
நீங்களோ (அ) உங்களை சுற்றியுள்ள உறவுகளோ யாரையும், எதையும் எதிர்பார்க்காமல், எந்த நிபந்தனையும் இல்லாமல் தனிக்காட்டு ராஜாவாக மகிழ்ச்சியாக வாழ தேவைப்படும் ஒரு தன்மை.
சொத்துக்களை குவியுங்கள்; “Rich Dad,Poor Dad” ன் ராபட் கியோஸகி(Robert Kiyosaki) சொல்வதை போல ‘உங்கள் வீடு ஒரு சொத்து அல்ல… ஒரு புதிய வீட்டை நீங்கள் வீட்டுக்கடன் மூலமோ (அ) கையில் வைத்திருக்கும் பணத்தை செலவழித்தோ அதனை கட்ட முயற்சிக்கிறீர்கள்; அந்த வீட்டிற்காக தங்கள் ஒவ்வொரு வருடமும் வரி கட்டுவதற்கும், பராமரிப்பு செலவுக்கும் உட்படுகிறீர்கள்; எந்த வருமானத்தையும் பெற்று தராமல் வெறும் செலவு செய்து கொண்டிருப்பதன் பயன் ? தனது அடிப்படை வசதிக்கு ஒரு வீடு போதுமே, ஆடம்பரமாக வீடுகள் தேவை இல்லையே !(ஆயிரக்கணக்கானோர் வீடுகளின்றி இருக்கும் போது)
எனவே, உங்களுடைய சொத்து என்று எதை நீங்கள்  நினைக்கிறீர்களோ , அது உங்களுக்கு வருமானத்தை பெற்று தர வேண்டும். அரசாங்கம் கூட  பழங்கால சிற்பங்கள், மன்னர் கால மாளிகைகளை பாதுகாப்பதற்கு, பராமரிப்பதற்கு மக்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கின்றன. நீங்கள் கற்கும் கல்வி கூட உங்களை மகிழ்ச்சியாக வாழ வைக்க முடியவில்லை என்றால் என்ன பயன்… அதனால் தான் கல்வி மற்றும் அறிவு சார்ந்த விஷயங்கள் ஒரு நீண்ட கால சொத்தாக கவனிக்கப்படுகிறது; நமது பள்ளி, கல்லூரி படிப்பு அல்ல 🙂
மீண்டும் நமது கவனத்திற்கு… சொத்துக்களை குவியுங்கள்; எதிர்பார்ப்புகளை அல்ல !
உங்களுக்கு நீண்ட வருமானம் தரும், வாழ்வளிக்கும்…(Passive Income)
  • அறிவு சார்ந்த விஷயங்கள் (Knowledge and Creativity Skills)
  • பங்குகள் (Stocks and Dividends)
  • வங்கி வட்டிகள் (Interest Income)
  • வாடகை வருமானங்கள்  (Rental Income)
  • தொழில்கள்  (Business)
  • அன்பு மற்றும் நன்னடத்தை (Love and Behavior)
யாரையும் நாம் எதிர்பார்த்து வாழ வேண்டாம்; எதிர்பார்ப்புகள்  ஏமாற்றத்தையும், கவலையும் தரலாம்.
சொத்துக்களை குவிக்க உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுங்கள்.
உங்களுடைய பகிர்வுகளுக்கு:
–  நன்றி, வர்த்தக மதுரை
 (Image Courtesy: Stable Investor )

எட்டுத்திக்கும் எட்டாம் அதிசயம் – Power of Compounding

எட்டுத்திக்கும் எட்டாம் அதிசயம் – கூட்டு வட்டி (Power Of Compounding)

கூடி வாழ்ந்தால் தான் கோடி நன்மை;
கூட்டு வட்டியினால் தான் கோடிகள் (கோடி ரூபாய்) சாத்தியம் !
“Compound interest is the eighth wonder of the world. He who understands it, earns it … he who doesn’t, pays it….”
உலகத்தின் எட்டாம் அதிசயம் “கூட்டு வட்டி – Compound Interest” என்றார் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein).
கூட்டு வட்டியின் பலனை பற்றி, நாம் நமது பள்ளிக்காலங்களில் படித்திருப்போம். நமது பள்ளிக்கல்வியில் கணித பாடத்தில் வட்டி விகிதம், கூட்டு வட்டி மற்றும் தனி வட்டி என்பது போன்ற வார்த்தைகளை பயன்படுத்தியிருப்போம். அதன் பலனை நாம் அறியவே, நமது பள்ளிகளில் (1990 களில்) அஞ்சலக சேமிப்பான “Sanchayika” திட்டம் மிகவும் பிரபலம். அது கூட்டு வட்டியின் மகிமையையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறு நமது பள்ளியிலும், கல்லூரியிலும் மற்றும் வேலை பார்க்கும் அலுவலகத்திலும் கூட இந்த கூட்டு வட்டி பற்றிய விஷயங்களை பயன்படுத்தியிருப்போம்; ஆனால் அது எழுத்து பூர்வமாகவே ! அந்த கூட்டு வட்டியின் தன்மை நம்மை எவ்விதத்திலும் மாற்றவில்லையே ! நாம் சற்று ஆழமாக சிந்தித்தால், இந்த கூட்டு வட்டியின் ரகசியத்தை அறியலாம்; அனுபவிக்கவும் செய்யலாம். இதை தான் ஒவ்வொரு வங்கிகளும் செய்கின்றன. பெருத்த முதலாளிகளை(RD, FD, Stocks) உருவாக்குவதும், கடன்கார ஏழைகளை(EMI, Loan) உருவாக்குவதும் இந்த கூட்டு வட்டியின் ரகசியம் !
கூட்டு வட்டி அப்படி என்ன சாதித்து விட போகிறது ?
நீங்கள் ஒரு வங்கியிலோ (அ) அஞ்சலக சேமிப்பிலோ, மாதம் ரூ.100 ஆக ஒரு வருடத்திற்கு சேமிக்கிறீர்கள் என்று வைத்து கொள்வோம். உங்களுக்கான வட்டி 8 % (மாத கூட்டு வட்டியில்)
ஒரு வருட முடிவில், உங்களுக்கு கிடைப்பது ரூ. 1253 /- (கூட்டு வட்டி)
நீங்கள் சேமித்த / முதலீடு செய்த மொத்த தொகை: ரூ. 1200 /-
நீங்கள் பெற்ற வருமானம் :   (1253-1200) = ரூ. 53 /-
அதாவது உங்களின் ஒவ்வொரு மாத 100 ரூபாயும், தங்களுக்கென்று, ரூ. 4.40 /- வருமானத்தை தந்துள்ளன.
இதை போல நீங்கள் 5 வருடங்கள் சேமிக்க முடிவு செய்தால், உங்களுக்கு கிடைக்க கூடிய மொத்த தொகை ரூ. 7397 /-  10 வருடங்களில் மொத்த தொகை ரூ. 18417 /-
5 வருடங்களில் வருமானம் ரூ. 1397 /-  அதாவது உங்களின் ஒவ்வொரு மாத 100 ரூபாயும்,  5 வருட முடிவில் ரூ. 23.30 /- ஐ உங்களுக்காக சம்பாதித்து கொடுத்துள்ளன.
10 வருடங்களில் உங்களின் வருமானம் ரூ. 6417 /- உங்களின் ஒவ்வொரு 100 ரூபாயும், முடிவில் ரூ. 53.50 /- சம்பாதித்து கொடுத்துள்ளன.
ஆக, கூட்டு வட்டியின் மூலம் உங்களின் ஒவ்வொரு ரூபாயும் உங்களுக்காக வேலை பார்த்து கணிசமான வருமானத்தை தந்துள்ளன. இதற்காக நீங்கள் எந்த மெனக்கெடுத்தும் வேலை செய்யவில்லை.
இதனையே, நீங்கள் ஒரு முறை மட்டும் (முதல் மாதம் மட்டும்) ரூ. 100 ஐ சேமித்து விட்டு போகிறீர்கள். உங்களுக்கு ஒரு வருடத்திற்கு பிறகு கிடைக்கும் மொத்த தொகை ரூ. 108,  5 வருடங்களில் ரூ. 149 /- 10 வருடங்களில் ரூ. 222 /-
இதனை நீங்கள் உங்கள் வீட்டில், ஏதேனும் ஒரு மூலையில்  ஒவ்வொரு மாதமும், 100 ரூ. வைத்திருந்தால், ஒரு வருட / 5 / 10 வருட முடிவில் உங்களுக்கு கிடைப்பதோ பழைய 100 ரூ. நோட்டுக்களும், சிறிது கறை படிந்த அழுக்குகளும் ! ஆகவே, கூட்டு வட்டியை பயன்படுத்துங்கள். உங்கள் மாத தவணைகளும்(EMI, Loan) இதன் மூலமே கணக்கிடப்படுகிறது என்பதனை மறக்க வேண்டாம்.
100 ரூபாயின் உழைப்பு :
100-rs.-compounding
இது தான் பணம், பணம் பண்ணும் ரகசியம். இதன் மூலமே பணக்காரர்களும், முதலாளிகளும் உருவாகிறார்கள்; விழிப்புணர்வு இல்லதாவர்களே ஏழைகளாகவும், கடனாளிகளாகவும் மாறுகிறார்கள். இந்த பூமியில் படைக்கப்பட்ட எல்லா மனிதர்களும், பொருளார ரீதியாக சமமாகவே படைக்கபட்டார்கள்; மனித இனத்தின் சிந்தனை  தான் ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்துகிறது.
பத்து பேரை ஒருங்கிணைத்து, ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதன் வளர்ச்சியையும், கிடைக்கும் பலனையும் அனுபவிப்பது கூடி வாழ்ந்தால் தான் ! இதனை நமக்கு யாரும் சொல்லி கொடுக்க வேண்டியதில்லை. அதே போல தான் கூட்டு வட்டியும் !

இப்போதே நகருங்கள்… கூட்டு வட்டியின் Formula ஐ தேடி… பதிவிறக்கம் செய்யுங்கள் ஒரு வட்டி(Bank Interest App) விகித செயலியை…

சேமியுங்கள் / முதலீடு செய்யுங்கள் ஒரு 100 ரூபாயை…

உங்களுடைய பகிர்வுகளுக்கு:
 contact@varthagamadurai.com
–  நன்றி, வர்த்தக மதுரை

 

 

 

 

4 GB Data Offer ! – வரவு செலவு கணக்கு

4 GB Data Offer ! – வரவு செலவு கணக்கு

இந்த தலைப்பை பார்த்தவுடனே, எத்தனை பேர் Offer ஐ பெறுவதற்கு ரெடியா இருக்கீங்களோ ! அட, இது என்னோட 4GB Data ரகசிய வரவு – செலவு கணக்கு Offer ங்க ! உங்களுக்கும் அந்த ரகசியத்தை சொல்றேன்; இனி அப்புறம் என்ன ரகசியம் 🙂

 

பொதுவாக நாம் Offer மற்றும் Free என்ற ஆங்கில வார்த்தையை அடிக்கடி விளம்பரத்தில் பார்ப்பதும், நாம் எதிர்ப்பாகவும் பழகிவிட்டோம். பெரும்பாலும் நாம் நம் வாழ்கையில் பல சந்தர்ப்பங்களில் சலுகையை தேடியே அலைகிறோம்; ஆனால் நம்மிடம் உள்ளே உள்ள மாபெரும் சலுகையை பெற மறந்து விடுகிறோம்.

 

4GB Data Offer என்றவுடன், கண்ணை மூடி கொண்டு அதற்கு தயாரானவர்கள் 100 ல் 40 % பேர்; 30 % பேர் தங்களுக்கு தேவையோ, இல்லையோ எதிர்காலத்தில் இது போன்ற Offer ஐ மிஸ் பண்ணகூடாது என்று, இப்போதே முயற்சித்து பார்ப்பர். 20 % பேர் இந்த சலுகையில் எதோ விஷமம் உள்ளது என்று ஒதுங்கி விடுவர்; 10 % பேர் மட்டுமே, Offer ஐ பற்றிய விவரங்களை அறிந்து, தங்கள் தேவையின் நிலை அறிந்து அதை பெறுவார்கள் (அ) விலக்கி விடுவார்கள். இதே நிலை தான் நமது வரவு – செலவு கணக்கும்…  மாத சம்பளக்காரர்கள் பெரும்பாலும் தங்களது வரவு – செலவு கணக்கினை பேணி காக்க தவறுவதாலே, ஒவ்வொரு மாதத்தின் 10 ம் தேதியிலும், மாத இறுதியிலும் புலம்புகின்றனர்.

4GB Offer ஐ பெறுவது எப்படி ? (ரகசிய வரவு – செலவு கணக்கு)

பொதுவாக இணைய சேவையை (Internet / Data) பயன்படுத்துவதில் என்னிடம் ஒரு பழக்கம் உள்ளது. அதாவது, என்னிடம் உள்ள Huawei Data Card ஐ கொண்டு, நான் எனது டேட்டா (Data) செலவுக்கு ரூ. 499 க்கு 4 GB (3G /Validity – 28 Days) ரீசார்ஜ் செய்வேன்; எனது 3G Data உள்ள சலுகை என்னவெனில், எனது ப்ரீமியம் காலம் முடியும் தருவாயில், மீதம் ஏதேனும் டேட்டா இருப்பின், நான் அடுத்த ரீசார்ஜ் செய்யும் போது எனது பழைய இருப்பும், தற்போது வரவு வைக்கப்படும் (Carry Forward). இதனால், நான் எனது தேவை அறிந்து மட்டும் இணையத்தை பயன்படுத்துவேன். பெரும்பாலும், பொழுதுபோக்கு அம்சங்களுக்கு குறைவான அளவை மட்டுமே பயன்படுத்துவேன். அதற்கு மாறாக, நான் குடும்பத்தினரிடமும், வார இறுதியில் எனது நண்பர்களுடனும் பொழுதுபோக்கை மேற்கொள்வேன். (இது எனது ஆரோக்கியமான உறவும் கூட… )
எனது இணைய Data செலவழிப்பதில் நான் மிகவும் கவனமாக இருந்தேன். ஏனென்றால், என்னுடைய Data கொள்கை:
  • கால அளவு முடியும் (Validity) வரை நான் எந்த சிரமும் இல்லாமல் பயன்படுத்த வேண்டும்.
  • இணைய சேவையை, (Reduce to use of Unwanted) பொழுதுபோக்குக்கு அதிகம் செலவழிக்க கூடாது.
  • தேவையறிந்து (Use for What you need) பயன்படுத்த வேண்டும்.
  • அவசரத்திற்கு (Emergency) எப்போதும் எனக்கு பயன்படக்கூடியதாக இருக்க வேண்டும்; அதாவது, மாத இறுதியில் எனது மாதந்திர கட்டணங்களை (Monthly Bill Payments) இணையம் மூலம் செலுத்துவதற்கு போதுமான அளவு இருக்க வேண்டும்.
இதனை நான் கடந்த இரண்டு வருடங்களாக பின்பற்றி வருகிறேன். எனக்கு எந்த செல்போன் கம்பெனியின் சலுகையும் தற்போது தேவைப்படுவது இல்லை. நான் எனக்கான DATA Plan ஐ கொண்டிருந்தேன். செல்போன் கம்பெனி, டேட்டா அளவில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தாலும், அது என் பிளானை பாதிக்காத வகையில் நான் பார்த்துக்கொண்டேன்.
இதனால், கடந்த 3 மாதங்களுக்கு முன் எனது Data Balance ல் 4 GB உபரியாக சேர்ந்தது ! இது போக அந்தந்த மாதத்திற்கு நான் ரீசார்ஜும் செய்து கொண்டிருந்தேன். இதே போல தான் எனது வரவு – செலவு கணக்கும் !
எனது மாத சம்பளத்திற்கான வரவு – செலவு கொள்கை:
  • ஒவ்வொரு மாதத்திற்கான, முன் கூட்டிய வரவு – செலவை கணக்கிடுவேன் மற்றும் தினமும்  ஆகும் செலவை குறித்து வைத்து கொள்வேன்(Calculate Income & Expense).
  • தேவையற்ற மற்றும் அவசியமில்லாத செலவுகளை முடிந்தவரை தவிர்ப்பேன்(Avoid Unwanted Expenses).
  • ஒவ்வொரு மாதத்திற்கான தேவையறிந்து, அதற்கான பணத்தை ஒதுக்குவேன்(Income-Savings=Expenses).
  • முடிந்தவரை, அவசர தேவைக்கு ஒவ்வொரு மாதமும் கிடைக்கும் உபரியை சேமிப்பேன் மற்றும் முதலீடு செய்வேன்(Savings and Investment for Emergency).
உங்களுக்கு தேவையில்லாத விஷயங்களுக்காகவும், மற்றவர்களை நீங்கள் திருப்தி படுத்துவதற்காகவும் செலவு செய்யும் பணம், உங்களை அவசர காலத்தில் பாதுகாக்க போவதில்லை… அவர்களும் வரப்போவதில்லை…
நீங்கள் செய்யும் பற்றற்ற சேவையும், உங்கள் நன்னடத்தையுமே உங்களை பேணிக்காக்கும்.

இப்போதே Offer க்கு தயாராகுங்கள்…

  • உங்கள் வரவு – செலவு கணக்கு தான், உங்களை ஒவ்வொரு மாத புலம்பல்களிடம் இருந்து விடுவிக்க போகிறது. அதனால், ஒரு நோட்டு புத்தகத்தை எடுத்து கொள்ளுங்கள் (அ) ஒரு (Income/Expenses  App) வரவு – செலவு கணக்கு செயலியை உங்கள் கைபேசியில் பதிவிறக்குங்கள்.
  • உங்கள் ஒவ்வொரு நாள் வருமானம் மற்றும் செலவுகளை குறித்து வைத்து கொள்ளுங்கள்.
  • மாதத்திற்கு ஒரு முறை, உங்கள் தேவை அறிந்து செலவழியுங்கள் மற்றும் செயல்படுங்கள்.
  • இதனை ஒரு அவசியமான பழக்கமாக மாற்றுங்கள்.
  • உபரியாக வரும் பணத்தை சேமியுங்கள் மற்றும் பணவீக்கத்தை தாண்டிய வருமானம் வருமாறு முதலீடு செய்யுங்கள் (Savings and Investment).
உங்கள் வரவு – செலவு கணக்கு பழக்கம் நிச்சயம் உங்களுக்கு  இக்கட்டான சூழ்நிலையில் கை கொடுக்கும். அது தான் உங்கள் கை கொடுக்கும் கை !
உடனே, உங்களுக்குள் இருக்கும் அந்த மாபெரும் 4 GB Offer ஐ வெல்லுங்கள் !
வாழ்த்துக்கள் 🙂
உங்களுடைய பகிர்வுகளுக்கு:
–  நன்றி, வர்த்தக மதுரை

How to Start an Emergency Fund – காபியும், எனது பயணமும்

காபியும், எனது பயணமும்…

How to Start an Emergency Fund ?

 

எனக்கு நண்பர்களும் அதிகம், அவர்களுக்கு கொடுக்கும் ட்ரீட்களுக்கும்(Treat) குறைவல்ல…அடிக்கடி நண்பர்களுடனும், மற்றும் குடும்பத்தினருடனும் சுற்றுலா போவதும் வழக்கம். வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்பதே எனது கொள்கை; அது தானே எல்லோருக்கும் !

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஆனால் ஏனோ சில நேரங்களில் எனது மகிழ்ச்சிக்கு தடையாக இருப்பது, இந்த பாழாய் போன மாதாந்திர பில்களும்(EMI, Phone, Internet, Electricity, etc), வரிகளும்(Taxes) ! நான் மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும்; அதே சமயம் எனது பில்களும், வரிகளும் என்னை தொல்லை பண்ண கூடாது என்று விழிப்புடன் இருந்தேன். திடீரென்று வரும் செலவுகளும் (Family Celebrations, Festivals, Relative Commitments) என்னை மேலும் விழிப்படைய செய்தன. இதனை நான் சமாளித்தாக வேண்டும். எனது சந்தோசத்திற்கும் பங்கம் வரக்கூடாது; இதற்காக நான் என்னை வருத்திக்கொள்ள போவதில்லை. மாறாக நான் எனது பழக்க வழக்கங்கள் சிலவற்றை சரி செய்ய முயற்சித்தேன்; அதாவது எனது Favorite பழக்கமான, தினமும் 5 முறை காபி அருந்துவதும், அலுவலகத்துக்கு எனது சொகுசு Yamaha FZ ல் செல்வதும் ! இவற்றில் நான் தினமும் 2 முறை(காலை, மாலை) மட்டுமே ரசித்து/ருசித்து அருந்துவது என்றும், எனது Yamaha FZ ல் அலுவலகத்துக்கு வாரம் 3 நாட்கள் மட்டும் செல்வதென்றும் முடிவெடுத்தேன். இந்த முயற்சியின் மூலம் எனக்கு மிச்சமாகும் பணத்தை சேமிக்க (முதலீடும்) ஆரம்பித்தேன்.

 

எனது முதலீடும், சுற்றுலா பயணமும் உல்லாசமாக சென்றன; எனது பில்களும், வரிகளும் எனக்கு தடையாக இல்லை; எல்லாம் நன்றாக தான் போய் கொண்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக, நான் எனது சொந்த காரணங்களுக்காக, வேலையிலிருந்து விடுபட வேண்டியதாயிற்று. எனது அடுத்த வேலையை தேட, எனக்கு 6 மாதமும் தேவைப்பட்டது. இந்த சூழ்நிலையில் எனது கனவு சுற்றுலாவையும் தள்ளி போட வேண்டியதானது. ஆனால் எனது மாதாந்திர பில்களும், வரிகளும் ??? நான் வேலைக்கு போகாத சமயத்தில், எனது பழக்க வழக்கங்களில் இன்னும் சில மாற்றங்களை செய்தாலும், சில அடிப்படை செலவுகளையும், வரிகளையும் தவிர்க்க முடியவில்லை ! கவலை என்னை ஆட்கொண்ட நேரமது ! எனது மூளைக்கு, எனது காபியும், FZ பயணமும் தைரியமூட்டின 🙂  ஆம், நான் மாற்றம் செய்த பழக்க வழக்கங்கள், எனது அடிப்படை செலவுகளையும், மற்ற பில்கள் மற்றும் வரிகளை சமாளித்து கொண்டன; அது தான் என்னை இக்கட்டான நேரத்தில் இருந்து(அவசர காலத்தில்) பொருளாதார ரீதியாக பாதுகாத்தன. இப்படித்தான் எனது அவசரகால நிதி ஆரம்பமானது !

 

 

How to Start an Emergency Fund(E-Fund) ?

அவசரகால நிதியை உருவாக்குவது எப்படி ?

  • வங்கியில் புதிய சேமிப்பு கணக்கு ஒன்றை துவங்குங்கள். உங்களுக்கு வங்கியில் ஏற்கனவே கணக்கு எண் இருந்தாலும், அதனை பயன்படுத்த முயலாதீர்கள்.

 

  • உங்கள் மாத வருமானத்தில் 5-10 சதவீதம் வரை உள்ள தொகையை, சொல்லப்பட்ட புதிய சேமிப்பு கணக்கில் ஒவ்வொரு மாதமும் வரவு வைக்க தொடங்குங்கள்.

 

  • சேமிக்கப்பட்டு வரும் தொகையை எக்காரணத்திற்காகவும் இடையே எடுக்காதீர்கள் (அவசரக்காலத்தை தவிர்த்து).

 

  • புதிய சேமிப்பு கணக்கில் உள்ள தொகை, உங்கள் மாத வருமானத்தை போல 6-12 மடங்கு உள்ளவரை சேமியுங்கள். உங்கள் திட்டம் முடிவடைந்தவுடன், பின்பு உங்களால் முடிந்த தொகையை இந்த கணக்கில் செலுத்த ஆரம்பியுங்கள். இந்த தொகை உங்களின் தற்காலிக வேலை இழப்பு, பணி மாறுதல் அல்லது உடல்நல குறைவு போன்ற சமயங்களில் உதவும்.

 

உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள…

 

– நன்றி, வர்த்தக மதுரை

Why Fixed Deposits are not a best Investment ?

பணப்பாதுகாப்பும் , பணவீக்கமும்…

Why Fixed Deposits(FDs) are not a best Investment ?

 

பிக்ஸட் டெபாசிட் எவ்வளவு தான் பாதுக்காப்பான முதலீடாக இருந்தாலும், அவற்றை ஒரு சிறந்த முதலீடாக எடுத்த கொள்ள முடியாது; அதை தவிர்ப்பதற்கு இரண்டு காரணங்கள்:

 

  •  பிக்ஸட் டெபாசிட் கொடுக்கும் வருமானம், என்றுமே பணவீக்கத்தை(Inflation) தாண்டிய சிறந்த வருமானமாக இருக்க முடியாது. நமது நாட்டில் கடந்த சில வருடங்களாக, பணவீக்கம் 7-8 % என்ற அளவில் உள்ளது. அதனை ஒப்பிடுகையில், பிக்ஸட் டெபாசிட் வருமானம் அவ்வளவு சிறந்ததல்ல, பாதுக்காப்பாக இருந்தாலும் !

 

  • பிக்ஸட் டெபாசிட் வருமானம், வரிகளுக்கு(Taxes) உட்பட்டவை; அதனை நீங்கள் ஒரு சிறந்த நீண்ட கால முதலீடாக கருதமுடியாது. பிற முதலீடான PPF, Equity based Mutual Funds, Tax Saving Schemes க்கு வரி சலுகைகள் உள்ளன.

மேலுள்ள 2 விஷயங்களை கருத்தில் கொண்டு, பிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்யவும்; குறுகிய காலத்திற்கான தேவைகளை இதன் மூலம் உருவாக்கி கொள்ளலாம்.

நாம் செய்யப்போகும் ஒவ்வொரு முதலீட்டிற்கும் பாதுக்காப்பையும், பணவீக்கத்தையும் கவனம் கொள்ள வேண்டும்.

 

PPF ல் முதலீடு செய்வது சரியா ?


– நன்றி, வர்த்தக மதுரை 

Why your dreams never come true ?

Why your dreams never come true ?

உங்கள் கனவுகள் ஏன் பெரும்பாலும் பலிப்பதில்லை(நிறைவேறுவதில்லை) ?

நம்மில் பெரும்பாலோருக்கு, ஒரு நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடனோ, பதவி உயர்வு/ஊதிய உயர்வு  (அ) போனஸ் ஏதும் கிடைத்ததும் நமக்கு பலவித கற்பனை கனவுகள் வரும்; வளரும்.
எனது கனவு கார்(Car) வாங்குவது, ஒரு அபார்ட்மெண்ட்(Apartment) வாங்குவது, வெளிநாடு சுற்றுலா(Foreign Trip) செல்வது (அ) குறைந்தபட்சமாக நண்பர்களுக்கு விருந்து வைப்பது(Treat) என்று கனவுகள் நீண்டு கொண்டே போகும். ஆனால் நமக்கு கிடைப்பதோ ஒரே ஒரு சம்பளம், வருடத்திற்கு ஒரு ஊதிய உயர்வு, சில சமயம் போனஸ், அத்திபூத்தாற்போல் பதவி உயர்வு. உண்மையில் நாம் நமக்கு கிடைத்த பணத்தையும், கண்ட கனவையும் கொண்டு என்ன செய்வதென்றே புலப்படுவதில்லை.
ஒரு நிறுவனத்தில் நமக்கு கொடுக்கப்படும் பணம் அந்நிறுவனத்தின் வளர்ச்சி (அ) நமது திறமையான செயல்பாடு காரணமாக இருந்தாலும், நிதர்சன உண்மை அது விலைவாசியின் (பணவீக்கம் – Inflation) அடிப்படையிலே நிர்ணயிக்கப்படுகிறது.
தற்சமயத்தில் நம் அடிப்படை வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ளவே அந்த பணம் போதுமானதாக இருக்கும். நமது கனவுகளுக்காக அல்ல 🙂
அதனால் தான் நாம் பெரும்பாலும் நமக்கு தேவையற்ற ஒரு பொருளை வாங்கும் போது பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்படுகிறோம்.
நாம் கனவு எதுவும் காணக்கூடாதா என்ன ?  தாராளமாக கனவு காணலாம்; அத்தனைக்கும் ஆசைப்படலாம் ! அதற்கு முன் நமக்கு எது தடையாக உள்ளது என்று பார்த்தால் அது விலைவாசி (பணவீக்கம்) தான்.
பணவீக்கத்தை நாம் புரிந்துகொண்டு செயல்படுவது தான் நமது கனவு நிறைவேறுவதற்கான பாதை !
பணவீக்கம்:
நாம் இன்று வாங்கும் பொருளும், நாளை வாங்க போகும் பொருளும் ஒரே விலையில் கிடைப்பதில்லை. காரணம், தேவைக்கும் உற்பத்திக்கும் உள்ள வேறுபாடு தான். அது தான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விலையை நிர்ணயிக்கின்றன.
நாம் பல மாதமாக சிறுகச்சிறுக சேர்த்து வைத்த பணத்தை கொண்டு ஒரு இரு சக்கர வாகனம் வாங்கவேண்டுமென்று சென்றால், அதன் விலை ஏறிவிட்டதே, இன்னும் கொஞ்சம் பணம் தேவைப்படுமோ என்று யோசிப்போம்; வீடு கட்ட பக்காவாக பிளான் எஸ்டிமேட் போட்டு வைத்து வீடு கட்டி கொண்டிருக்கும் போது, தீடீரென்று மணல், சிமெண்ட்  விலை உயர்ந்து விடும். இப்படித்தான் நம் பெரும்பாலான கனவுகள் நாம் நினைத்த படியே நடப்பதற்கு சாத்தியமில்லை, இந்த விலைவாசியால்(பணவீக்கம்) !

inflation

வருமானத்தின் /பணத்தின் எதிரியை கையாள்வது எப்படி ?
நமது வருமானதிற்கோ (அ) பணத்திற்கோ வரிகள் எதுவும் எதிரி அல்ல; மாறாக இந்த பணவீக்கம் தான் ! ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ஆண்டும் இந்த விலைவாசி பொதுவாக புள்ளியியல் நிபுணர்களால் விவாதிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது. அவற்றிள்ளுல உண்மை என்னவோ நமக்கு தெரியவில்லை என்றாலும், நாம் பணவீக்கத்தை சமாளித்தாக வேண்டும். நமது கனவுக்கான வருமானம்/சேமிப்பு பணவீக்கத்தை தாண்டியதாக இருக்க வேண்டும். அதாவது கடந்த 5 வருடத்திற்கான சராசரி ஆண்டு பணவீக்கம் 8% என்றால், நீங்கள் உங்கள் கனவுக்காக குறைந்தபட்சம் 8% கூடுதலாக வருமானம் கிடைக்குமாறு சேமியுங்கள்; முதலீடு செய்யுங்கள்.
கனவும் மெய்ப்படும் !
– நன்றி, வர்த்தக மதுரை.