SBI Loan Interest rate at 8.65 % – Cut rate by 30 basis points ( Jan 1, 2018) – State Bank of India
கடனுக்கான வட்டி குறைப்பு – 8.65 % – State Bank of India
- பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) வாடிக்கையாளர்களுக்கான கடன் வட்டி விகிதத்தை 0.30 % குறைத்து 8.65 % ஆக அறிவித்துள்ளது.
- புத்தாண்டு தின பரிசாக வங்கி வாடிக்கையாளருக்கு இந்த செய்தி அமைந்துள்ளது.
- ஏற்கனவே பணவீக்க விகிதம் கட்டுக்குள் உள்ளதால் மத்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளுக்கான கடன் வழங்கும் வட்டி விகிதத்தை கடந்த சில காலாண்டுகளில் குறைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை சார்ந்து ரிசர்வ் வங்கியும், வங்கிகள் வாடிக்கையாளர் பலனை முழுமையாக தரும்படி கூறியுள்ளது.
- ஸ்டேட் வங்கியின் இந்த 8.65 % கடனுக்கான வட்டி விகிதம் Jan 1, 2018 முதல் அமல்படுத்தப்படும். இந்த வட்டி குறைப்பு மூலம் கடன் பெற்ற சுமார் 80 லட்சம் பேர் பலனை அனுபவிப்பர் எனவும், கடன் பெறுகின்ற புதிய வாடிக்கையாளர்களுக்கு பரிசீலனை கட்டணத்திலும் சலுகை தர போவதாக அறிவித்துள்ளது.
- இந்த வட்டி விகித தாக்கம், வங்கியில் வைப்பு தொகை வைத்திருப்போருக்கு சாதகமாக அமையாமல் போகலாம். பொதுவாக வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைக்கும் போது, வைப்பு தொகை மற்றும் இதர சேமிப்புக்கான வட்டியினை குறைக்கலாம்.
வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்
நன்றி, வர்த்தக மதுரை
உங்களுடைய பகிர்வுகளுக்கு:
https://www.facebook.com/varthagamadurai/
https://www.twitter.com/varthagamadurai/