Tag Archives: rbi

கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு – RBI

கடனுக்கான வட்டி விகிதம் அதிகரிப்பு – RBI

RBI hikes Repo rate and Banks already hiked Interest Rate

 

கடந்த 4-6 ம் தேதி காலத்தில், பாரத ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவுகள் சில:

 

கடந்த சில காலங்களாக மாற்றம் பெறாத ரெப்போ வட்டி விகிதத்தில் இப்போது ரிசர்வ் வங்கி வட்டி விகித மாற்றத்தை அறிவித்துள்ளது. கடந்த காலத்தில் இருந்த ரெப்போ வட்டி விகிதமான 6 சதவீதத்திலிருந்து 0.25 % அதிகரித்து 6.25 % ஆக வெளியிடப்பட்டுள்ளது.

 

இதன் விளைவாக வங்கிகள் வழங்கும் கடன்கள் மற்றும் டெபாசிட் போன்றவைகளுக்கு வட்டி விகிதங்கள் அதிகரிக்க கூடும். ஆனால் சில வங்கிகள் ரிசர்வ் வங்கி நிதி கொள்கை முடிவு வருவதற்கு முன்னரே வட்டி விகித அதிகரிப்பை ஏற்படுத்தி விட்டன.

 

RBI Rates updated on June 2018

 

ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 6 சதவீதத்தில் தொடரும் எனவும், 2018-19 ம் நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி மதிப்பீடு 7.4 % ஆக இருக்கும் எனவும் பாரத ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

 

வரும் காலத்தில் (ஏப்ரல்- செப்டம்பர் 2018) நாட்டின் சில்லரை பணவீக்கம் 4.8 – 4.9 % ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் பணவீக்கத்தை அதிகரிக்க கூடும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

 

வங்கி வட்டி விகிதங்கள் ஏன் மாறுகிறது ?

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

திவால் சட்டத்தின் மூலம் விரைவான தீர்வுகளை எட்டும்பட்சத்தில் பெறப்படும் முதலீடுகளை அதிகரிக்க முனைவதாக மத்திய வங்கி சொல்லியுள்ளது. அடுத்த நிதி கொள்கை குழு(Monetary Policy Committee)  வரும் ஜூலை மாதம் 31 ம் தேதியில் கூடுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ரெப்போ வட்டியில் மாற்றமில்லை – RBI – March 2018

ரெப்போ வட்டியில் மாற்றமில்லை – RBI – March 2018

 

Unchanged Repo Rate – RBI Monetary Policy for March 2018

 

பாரத ரிசர்வ் வங்கியின் (RBI Monetary policy committee) நிதி கொள்கை கடந்த புதன் கிழமை (05-04-2018) அன்று நடைபெற்றது. இதன் நிதி கொள்கை குழுவில் வெளியிடப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:

 

ரெப்போ (REPO Rate) வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவுமில்லை எனவும், கடந்த காலத்தில் இருந்த  6 சதவீதம் இம்முறையும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது போலவே ரிவர்ஸ் ரெப்போ வட்டி(Reverse Repo) விகிதத்திலும் மாற்றமில்லை என வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 5.75 % ஆக தொடரும்.

 

CRR (Cash Reserve Ratio) விகிதம் 4 % ஆக தொடரும் எனவும், சில்லறை பணவீக்கம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 4.4 % என்ற அளவிலும் உள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

உற்பத்தி துறையில்(Manufacturing) வளர்ச்சியை எதிர்பார்த்த போதிலும், அந்த துறை அழுத்தத்திற்கான சூழ்நிலையிலே உள்ளது என தனது நிதி கொள்கை நிகழ்வில் குறிப்பிட்டுள்ளது.

 

நடப்பு 2018-19 ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும். மேலும் மெய் நிகர் நாணயங்கள் என்று சொல்லப்படும் பிட் காயின் (Bitcoin – Cryptocurrency) வர்த்தகத்தை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கும் சேவைகளை வங்கிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிறுத்தி கொள்ள வேண்டும் என பாரத ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

 

ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதி கொள்கை குழு வரும் ஜூன் 6 ம் தேதி கூடுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

கடனுக்கான வட்டி குறைப்பு – 8.65 % – SBI

 

SBI Loan Interest rate at 8.65 % – Cut rate by 30 basis points ( Jan 1, 2018) – State Bank of India

 

கடனுக்கான வட்டி குறைப்பு – 8.65 % – State Bank of India

 

  • பாரத ஸ்டேட் வங்கி (State Bank of India) வாடிக்கையாளர்களுக்கான கடன் வட்டி விகிதத்தை 0.30 % குறைத்து 8.65 % ஆக அறிவித்துள்ளது.

 

  • புத்தாண்டு தின பரிசாக வங்கி வாடிக்கையாளருக்கு இந்த செய்தி அமைந்துள்ளது.

 

  • ஏற்கனவே பணவீக்க விகிதம் கட்டுக்குள் உள்ளதால் மத்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளுக்கான கடன் வழங்கும் வட்டி விகிதத்தை கடந்த சில காலாண்டுகளில் குறைத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதனை சார்ந்து ரிசர்வ் வங்கியும், வங்கிகள் வாடிக்கையாளர் பலனை முழுமையாக தரும்படி கூறியுள்ளது.

 

  • ஸ்டேட் வங்கியின் இந்த 8.65 % கடனுக்கான வட்டி விகிதம் Jan 1, 2018 முதல் அமல்படுத்தப்படும். இந்த வட்டி குறைப்பு மூலம் கடன் பெற்ற  சுமார் 80 லட்சம் பேர்  பலனை அனுபவிப்பர் எனவும், கடன் பெறுகின்ற புதிய வாடிக்கையாளர்களுக்கு பரிசீலனை கட்டணத்திலும் சலுகை தர போவதாக அறிவித்துள்ளது.

 

  • இந்த வட்டி விகித தாக்கம், வங்கியில் வைப்பு தொகை வைத்திருப்போருக்கு சாதகமாக அமையாமல் போகலாம். பொதுவாக வங்கிகள் கடனுக்கான வட்டியை குறைக்கும் போது, வைப்பு தொகை மற்றும் இதர சேமிப்புக்கான வட்டியினை குறைக்கலாம்.

வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்

 

நன்றி, வர்த்தக மதுரை

உங்களுடைய பகிர்வுகளுக்கு:

 

https://www.facebook.com/varthagamadurai/

https://www.twitter.com/varthagamadurai/

contact@varthagamadurai.com                   

 

ரிசர்வ் வங்கி நிதி கொள்கை -RBI- Oct 2017

ரிசர்வ் வங்கி நிதி கொள்கை – RBI – Oct, 2017

RBI Policy Rates – Oct, 2017

 

  • ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) அக்டோபர் 4 ம் தேதி அறிவித்துள்ள  நிதி கொள்கையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ (Repo Rate) வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என வெளியிட்டுள்ளது. முன்னர் இருந்த ரெப்போ வட்டி விகிதம் 6 % ஆக தொடரும். (Reverse Repo Rate – 5.75 %)

 

  • 2017-18 நிதிக்கொள்கை மதிப்பீடு அறிக்கையில் சொன்னது போல (7.3 %) அல்லாமல், பொருளாதார வளர்ச்சி 6.7 ஆக எனவும் தனது மதிப்பீட்டை குறைத்துள்ளது.

 

  • வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதம் (Cash Reserve Ratio -CRR) முன்னர் இருந்த 4 % ஆக இருக்கும்.

 

  • சில்லறை பணவீக்கத்தை 4 சதவீதத்திற்குள் இருக்குமாறு இலக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2018 ம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் பணவீக்க மதிப்பு 4.2 – 4.6 % இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது.

 

  • ஜி.எஸ்.டி அமல் – உற்பத்தி துறைக்கு சாதகமாக இல்லையென்றும், முதலீடுகளும் இந்த துறைக்கு வருவதில் தாமதமடையலாம் எனவும் அறிவித்துள்ளது.

 

  • வங்கிகளின் நிதிநிலை அறிக்கை (Balance Sheet) பாதிப்புகளையும் களைய தீர்வு காணப்படும் என அறிவித்துள்ளது.

 

Recent RBI Policy rates: (Oct 4, 2017)

Policy Repo Rate : 6.00%
Reverse Repo Rate : 5.75%
Marginal Standing Facility Rate : 6.25%
Bank Rate : 6.25%

 

(Data Source: https://www.rbi.org.in/home.aspx )

 

வாழ்க வளமுடன்,

வாழ்த்துக்கள் வர்த்தக மதுரையுடன் !

 

வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்

 

வங்கிகளின் வட்டி விகிதங்களை அறிவோம்

What is Bank Repo Rate ?

 

வங்கிகள் அவ்வப்போது சேமிப்பு மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தில் மாற்றத்தை கொண்டு வரும். தற்சமயம் பல வங்கிகளில் வட்டி விகித குறைப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்பதை அறிவோமா…?

 

நமது நாட்டில் வங்கிகள் பெரும்பாலான தொழில்களுக்கும், பொருளாதாரத்திற்கும் ஊன்றுகோலாக அமைகின்றன. இந்த வங்கிகளின் செயல்பாடுகளையும், அதன் பணத்தையும் ஒழுங்குமுறைப்படுத்தி நிர்வகிப்பது நாட்டின் மத்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India – RBI) ஆகும். RBI நாணயத்தின் மதிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்த ரிசர்வ் வங்கி தான் நாட்டின் தலைமை வங்கியாகவும் செயல்படுகிறது. வங்கிகளுக்கான கட்டுப்பாடுகள், கொள்கைகளில் இவை அதற்கான காலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். நாட்டின் பணவீக்கத்திற்கு ஏற்றாற் போல, வங்கியின் வட்டி விகிதத்திலும் ஏற்ற, இறக்கம் இருக்கும். நீங்கள் வங்கிகளில் பெறும் வீட்டுக்கடனுக்கு சில காலங்களில் வட்டி விகிதம் அதிகரிக்கும் (அ) குறைக்கப்படும். நீங்கள் வங்கியில் சேமிக்கும் பணத்திற்கும் தான் அது போல !  வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் நமக்கு நல்லது தான். ஆனால் நமது சேமிப்பு, வைப்பு நிதி தொகைக்கு வட்டி குறைந்தால்… ?

 

நாம் எதிர்பார்த்த பலன் (பணம்) முதிர்வில் கிடைக்காது. வட்டி குறைப்புக்கான காரணத்தை வங்கிகளிடம் கேட்டால், “ ரிசர்வ் வங்கி, ரெபோ விகிதத்தை (Repo Rate) குறைத்ததால் நாங்களும் வட்டி விகிதத்தை குறைத்தோம் “ என்பார்கள் 🙂 செய்திகளிலும் நாம் எப்போதாவது கேள்விப்படும் வார்த்தை, ‘ ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரெபோ விகிதத்தை குறைத்தது ‘. அது என்ன ரெபோ விகிதம் (Repo or Repurchase Rate) ?

 

ரெபோ விகிதம் (Repo or Repurchase Rate):

 

நமது தொழிலுக்கோ, தனி நபர் அவசரத்திற்கோ (அ) வீடு கட்டுவதற்கோ நாம் வங்கியில் கடன் கேட்டு சென்றால், அவர்கள் நாம் பெறும் கடனுக்கு ஒரு வட்டி விகிதத்தை நிர்ணயிப்பார்கள். அதாவது வங்கிகள் நமக்கு இலவசமாக கடன் தர விரும்பவில்லை. மாறாக நாம் பெறும் தொகைக்கு ஒரு தொகையை கட்டணமாக வசூலிப்பார்கள், அது தான் அந்த வட்டி. அதனால் நமது கடன் தொகையுடன், வட்டியும் சேர்த்து நாம் கட்ட வேண்டும். இந்த  வட்டி தான் , “Cost of Credit” எனவும் சொல்லப்படும். அது போல வங்கிகளுக்கு பணத்தேவை ஏற்படும் போது ரிசர்வ் வங்கியை நாடுகிறது. ரிசர்வ் வங்கியும் வங்கிகளுக்கு தேவையான கடன் தொகையை அதன் அரசாங்க பத்திரங்கள் விற்பனை மூலம் பணத்தை திரட்டி தரும். அதற்கு ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு விதிக்கும் வட்டி விகிதமே, ரெபோ விகிதமாகும் (Repurchase Rate).

 

உதாரணமாக:

 

ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ரெபோ விகிதத்தை 4 % என அறிவிக்கிறது எனில், வங்கி ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் ரூ. 100 க்கு,  4 ரூபாய் வட்டியை செலுத்தும்.

 

அதனால் தான் ரெபோ விகிதம் அதிகமாகும் போது வங்கிகளும் கடன் மற்றும் சேமிப்புக்கான வட்டி விகிதத்தை அதிகரிக்கும்.

 

ரிவர்ஸ் ரெபோ விகிதம் (Reverse Repo Rate):

 

வங்கிகள் தங்களது உபரித்தொகையை (Surplus Funds) ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்தால் (குறுகிய காலத்திற்கு) அதற்கான வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெபோ விகிதம் எனப்படும். ரிசர்வ் வங்கி இந்த Reverse Repo விகிதத்தின் அடிப்படையில் வங்கிகளுக்கு வட்டியை அளிக்கும்.

 

பண இருப்பு விகிதம் (Cash Reserve Ratio -CRR):

 

வங்கிகள் தங்களிடம் உள்ள எல்லா பணத்தையும் கடனாக அளிக்க முடியாது. ஒரு சிறு தொகையை ரிசர்வ் வங்கியில் இருப்பு (Reserve) தொகையாக கட்டாய டெபாசிட் செய்ய வேண்டும். அது தான் Cash Reserve Ratio. வங்கிகள் இந்த டெபாசிட் தொகையை வர்த்தக, தனி நபர் கடன்களுக்கு அளிக்க இயலாது.

 

உதாரணமாக:

 

நாம் ரூ. 100 ஐ வங்கியில் சேமிக்கிறோம் என்றால், அந்த முழு பணத்தையும் வங்கி மற்றொருவருக்கு கடனாக கொடுக்க முடியாது. ரிசர்வ் வங்கியின் CRR விகிதம் –  6 % எனில், நாம் டெபாசிட் செய்த ரூ. 100 ல், 6 ரூபாயை ரிசர்வ் வங்கியில் டெபாசிட் செய்யும்; மீதம் உள்ள ரூ. 94 ஐ கடன்களுக்கோ, மற்ற முதலீட்டு செலவுகளுக்கோ பயன்படுத்தும்.

 

அனுமதிக்கப்பட்ட பணப்புழக்க விகிதம் (Statutory Liquidity Ratio):

 

வங்கிகள் தாங்கள் பெறும் தொகையில் சிறு தொகையை அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யும். அந்த தொகை விகிதம் தான் Statutory Liquidity Ratio (SLR). இந்த தொகைக்கு அரசாங்கத்திடம் இருந்து வங்கி,  வட்டி வருமானத்தை பெறும். இந்த SLR விகிதத்தை நிர்ணயிப்பது RBI ஆகும்.

 

உதாரணமாக:

 

ரிசர்வ் வங்கியின் SLR விகிதம் – 10 %

 

வங்கி நம்மிடமிருந்து பெறும் ரூ. 100 ல்  10 ரூபாயை அரசாங்க பத்திரங்களில் முதலீடு செய்யும். ஏற்கனவே நாம் சொன்னது போல CRR விகிதத்திற்கும் டெபாசிட் செய்ய வேண்டும். ஆக, CRR மற்றும் SLR தொகை போக தான், வங்கிகள் கடன் மற்றும் முதலீடு, செலவுகளுக்கு பயன்படுத்த முடியும்.

 

நாட்டின் பொருளாதார தன்மை மற்றும் பணவீக்கத்திற்கு தகுந்தாற் போல தான், ரிசர்வ் வங்கி தனது வட்டி விகித கொள்கைகளை மாற்றியமைக்கும். Repo  விகிதம்,SLR மற்றும் CRR விகிதம் குறைந்தால், பணப்புழக்கமும் நன்றாக ஏற்பட்டு மக்களுக்கு குறைந்த வட்டியில் கடனும் கிடைக்கும். தொழில்களும் மேம்பட்டு, நாட்டின் பொருளாதாரமும் உயரும். மாறாக ரெபோ விகிதங்கள் அதிகமிருந்தால், பொருளாதாரத்தில் மந்தநிலையை உருவாகும்.

 

சில சமயம் நமக்கு ஒரு சந்தேகம் இருக்கும். அதாவது ரிசர்வ் வங்கி ரெபோ வட்டி விகிதத்தை குறைத்தாலும், வங்கிகள் நமக்கான கடன் தொகைக்கு வட்டியை குறைக்கவில்லையே என்று ! அதற்கு காரணம், வங்கிகளுக்கென ஒரு அடிப்படை வட்டி விகிதம் (Base Rate) உள்ளது. Base Rate என்பது ஒரு குறைந்தபட்ச விகிதத்தை பராமரிப்பது, அதற்கும் கீழ் வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்காது. இது அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும். இந்த அடிப்படை விகிதம் எப்போது மாறுபடுகிறதோ (குறைந்தால்), அப்போது ரிசர்வ் வங்கியின்  ரெபோ விகித தாக்கம், நமக்கான கடன் வட்டிக்கும் பலனை தரும்.

சில அண்மைய புள்ளி விவரங்கள்:

வாழ்க வளமுடன்,

 

வாழ்த்துக்கள் வர்த்தக மதுரையுடன் !