ரெப்போ வட்டியில் மாற்றமில்லை – RBI – March 2018
Unchanged Repo Rate – RBI Monetary Policy for March 2018
பாரத ரிசர்வ் வங்கியின் (RBI Monetary policy committee) நிதி கொள்கை கடந்த புதன் கிழமை (05-04-2018) அன்று நடைபெற்றது. இதன் நிதி கொள்கை குழுவில் வெளியிடப்பட்ட தகவல்கள் பின்வருமாறு:
ரெப்போ (REPO Rate) வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவுமில்லை எனவும், கடந்த காலத்தில் இருந்த 6 சதவீதம் இம்முறையும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அது போலவே ரிவர்ஸ் ரெப்போ வட்டி(Reverse Repo) விகிதத்திலும் மாற்றமில்லை என வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இருந்த 5.75 % ஆக தொடரும்.
CRR (Cash Reserve Ratio) விகிதம் 4 % ஆக தொடரும் எனவும், சில்லறை பணவீக்கம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 4.4 % என்ற அளவிலும் உள்ளது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
உற்பத்தி துறையில்(Manufacturing) வளர்ச்சியை எதிர்பார்த்த போதிலும், அந்த துறை அழுத்தத்திற்கான சூழ்நிலையிலே உள்ளது என தனது நிதி கொள்கை நிகழ்வில் குறிப்பிட்டுள்ளது.
நடப்பு 2018-19 ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும். மேலும் மெய் நிகர் நாணயங்கள் என்று சொல்லப்படும் பிட் காயின் (Bitcoin – Cryptocurrency) வர்த்தகத்தை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கும் சேவைகளை வங்கிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிறுத்தி கொள்ள வேண்டும் என பாரத ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதி கொள்கை குழு வரும் ஜூன் 6 ம் தேதி கூடுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை