விமான முன்பதிவு சேவையில் கால்பதிக்கும் அமேசான் நிறுவனம்
Amazon starts Flight ticket Services in India
சமீப வருடங்களாக நுகர்வோர் சந்தையில் நம் நாடு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. புதுவிதமான தொழில்களும், பொருட்களும் இங்கு வந்த வண்ணம் உள்ள நிலையில், பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் தோல்வியை தழுவினாலும் அவற்றின் பொருட்கள், பிராண்டுகளாக(Branding) மக்களிடையே சென்றடைந்து உள்ளன.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இணைய வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் அமேசான் நிறுவனம் தற்போது நம் நாட்டில் விமான டிக்கெட் சேவையை அளிக்கும் முனைப்பில் களம் இறங்கியுள்ளது. விமான முன்பதிவு சேவையிலிருக்கும் கிளீயர் ட்ரிப்(Cleartrip) தளத்துடன் இணைந்து அமேசான் நிறுவனம் இந்த புதிய சேவையை அளிக்க உள்ளது.
அமேசான் செயலி(Amazon app) மூலம் ஒருவர் தனது விமான பயணத்திற்கான முன்பதிவு டிக்கெட்டை பெறலாம். அமேசான் தளத்தில் பயணிகள் விமான டிக்கெட்டை ரத்து செய்யும் போது, கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை எனவும் அமேசான் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் தளத்தில் ஏற்கனவே ஆன்லைன் ஷாப்பிங், பண பரிமாற்றம்(Amazon Pay), பல சேவைகளுக்கு கட்டணம் செலுத்துதல் போன்றவற்றை அளித்து வரும் நிலையில், விமான முன்பதிவு சேவை சாதகமான அம்சத்தை வாடிக்கையாளர்களிடம் ஏற்படுத்தும்.
சமீபத்தில் உலக பெரும் பணக்காரர் மற்றும் முதலீட்டாளர் திரு. வாரன் பப்பெட்டின் பெர்க்சையர் ஹாத்தவே நிறுவனம்(Berkshire Hathaway), அமேசான் நிறுவனத்தில் 4.83 லட்சம் பங்குகளை வாங்கியது. இதன் மதிப்பு சுமார் 900 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை