பங்கு சந்தை பகுப்பாய்வு – 2.0 – Earnings Per Share (EPS)
- EPS ஒரு நிறுவனத்தில் காலாண்டு மற்றும் ஒரு வருட முடிவின் அடிப்படையில் கணக்கிடப்படும்.
- EPS வளர்ச்சி அதிகமாக உள்ள நிறுவன பங்குகளை வாங்குவது சிறந்தது.
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !
நன்றி, வர்த்தக மதுரை
P/E (Market Price/EPS): Price to Earnings
P/E (Price to Earnings) என்பது ஒரு பங்குக்கான வருமானத்தை போல, அந்த பங்கின் சந்தை விலை எத்தனை மடங்கு உள்ளது என கணக்கிடுவது.
உதாரணம்:
நாம் முன்னர் பார்த்த “SKYTECH” நிறுவனத்தின் EPS = 15.0 ரூபாய். அதனுடைய சந்தை விலை 90 ரூபாய் என கொள்வோம்.
இப்போது அதன் P/E = 90/15 = 6.0 மடங்கு
குறைந்த P/E இருப்பது நல்லது.
இந்த P/E விகிதத்தை நாம் தலை கீழாக பயன்படுத்தினால், நமது பங்கு முதலீடு எவ்வளவு லாபம்/நட்டம் தரும் என்பதை கணக்கிடலாம்.
1/PE * 100 = 1/6 * 100 = 16.66 %
ஆக, நமது பங்கு முதலீடு, 16.66 % லாபம் தருகிறது.
P/E ஐ நாம் வளர்ச்சியடனும் பொருத்தி பார்க்கலாம்.
P/E to Growth (PEG): Price to Earnings Growth
உதாரணம்:
“SKYTECH” நிறுவனம் கடந்த 5 வருட காலங்களாக, 15 % EPS வளர்ச்சியை கொடுக்கும் பட்சத்தில், அவற்றின் PEG
PEG Ratio = 5/15 = 0.333
PEG விகிதம் 1.0 கீழ் இருக்கும் பட்சத்தில், அந்த பங்கு சிறந்தது.
நினைவில் கொள்க:
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் !
நன்றி, வர்த்தக மதுரை
பங்கு சந்தை பகுப்பாய்வு பற்றிய புத்தகங்கள் இன்று ஏராளமாக வந்து விட்டன. நாம் அடிப்படை பகுப்பாயவுக்காக சில காரணிகளை இங்கு எடுத்துள்ளோம்.
1. P/E & P/B (Price to Earning and Price to Book value)
3. Sales & Profit – OPM, NPM, Other Income
4. ROE & CAGR (Return on equity)
5. Debt Free / Debt – Equity Ratio
8. Cash Flow
9. Study the business of the stock (Think like a Biz-Bee !)
10. Pay your price (Intrinsic Value – Margin of Safety)
மேலுள்ளவற்றை, நமக்கு புரிகிற மொழியில் ஒன்றன் பின் ஒன்றாக பார்ப்போம்.
Read also: Share Market Fundamental Analysis – Introduction