Tag Archives: budget india

பொருளாதார ஆய்வறிக்கை 2021 – என்ன சொல்கிறது ?

பொருளாதார ஆய்வறிக்கை 2021 – என்ன சொல்கிறது ?

Budget India 2021 – Economic Survey

மத்திய அரசின் பட்ஜெட் காலத்திற்கான நாடாளுமன்ற கூட்டம் நேற்று(29-01-2021) துவங்கியது. வரும் திங்கட்கிழமை(01-02-2021) மத்திய அரசு சார்பில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டின் பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு, நாட்டின் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும். இது அரசின் அடுத்தகட்ட பொருளாதார நடவடிக்கைக்கு உதவும்.

மூன்றாவது முறையாக நாட்டின் பட்ஜெட் தாக்கலை நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அறிவிக்க உள்ளார். நடப்பு நிதியாண்டில் காணப்பட்ட நடப்பு கணக்கு உபரித்தொகை(Current Account Surplus) கடந்த 17 வருடங்களில் இல்லாத அளவாகும். வரக்கூடிய 2021-22ம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடு நாடு சுதந்திரம் பெற்ற பிறகு சொல்லப்பட்ட அதிகபட்ச அளவாகும்.

கொரோனா நிவாரண நடவடிக்கைக்கு பின்னர், நாட்டில் உள்ள வங்கிகள் பழைய தவறுகளை மீண்டும் செய்யாமல் வங்கி நிதி நிலைமையை கவனத்துடன் வைத்திருக்க வேண்டும் என தலைமை பொருளாதார ஆலோசகர் திரு. கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் உயரும் போது, கடன் தன்மையிலும் எச்சரிக்கையாக செயல்படுவது அவசியம். நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் (-7.7%) என்ற அளவில் முடிவடையலாம்.

உலகளாவிய கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி(GDP Growth) அதிகமாக இருந்த போதிலும், சாதகமான நடப்பு கணக்கு, நிலையான நாணயம், அந்நிய செலவாணி கையிருப்பு அதிகரித்து வருவது, உற்பத்தி துறையில் ஊக்குவிப்பு ஆகியவை வரக்கூடிய காலங்களில் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் என சொல்லப்பட்டுள்ளது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் வரையிலான காலத்தில் அரசு ஈட்டிய வரி வருவாய் 12.6 சதவீதம் என்ற அளவில் குறைந்துள்ளது. இதன் மதிப்பு 10.26 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது கவனிக்கத்தக்கது.

அரசு நிறுவனங்களின் பங்கு விலக்கல்(Disinvestment) மூலமான இலக்கு 2.1 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கொரோனா பெருந்தொற்று காரணமாக சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்பில் மட்டுமே அடையப்பட்டுள்ளது. வரக்கூடிய பட்ஜெட் தாக்கலில் அரசுக்கான வருவாயை அதிகரிப்பதற்கான திட்டங்கள் விவாதிக்கப்படலாம்.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பட்ஜெட் 2019 அறிக்கை துளிகள்

பட்ஜெட் 2019 அறிக்கை துளிகள்

Budget 2019 Highlights (FY 2019-20)

 

பிப்ரவரி ஒன்றாம் தேதி நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பியூஸ் கோயல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். வருமான வரி சார்ந்த தள்ளுபடிகளும், பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 /- வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பட்ஜெட்டை ஒரு ரூபாய்(One Rupee Budget) வரவு-செலவில் கணக்கிடும் போது, வரவு தொகையில் 21 பைசா ஜி.எஸ்.டி.(GST) வரி மூலமும், 21 பைசா நிறுவனங்களின் வரி மூலமும், வருமான வரியில்(Income Tax) 17 பைசாவும் கிடைத்துள்ளதாக சொல்லப்பட்டது. செலவு தொகையில் 23 பைசா வரி வருவாயில் மாநிலங்களுடன் பங்கு பிரித்தது(Shares of Taxes), அரசு செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி ஒரு ரூபாயில் 18 பைசாவும், மானியங்களுக்கு 9 பைசாவும் செலவிடப்பட்டுள்ளது.

 

மத்திய நிதியுதவி திட்டத்தில் 9 பைசாவும், மத்திய துறையின்(Central Sector) திட்டங்களுக்கு 12 பைசாவும், ஓய்வூதியத்திற்கு(Pension) 5 பைசாவும், ராணுவத்திற்கு 8 பைசாவும் செலவில் உள்ளது. 2019-20ம் நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) ரூ.7.03 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு வருடத்தில் ரூ. 6.34 லட்சம் கோடியில் முடிவடையலாம் என மறுமதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

 

இடைக்கால பட்ஜெட் 2019ல் அறிவிக்கப்பட்ட பல விஷயங்களில் சில துளிகள் இங்கே,

 

 • அமைப்புசாரா துறையில்(Unorganized) பணிபுரியும் தொழிலாளிகளுக்கு பிரதம மந்திரியின் யோகி மாந்தன்(Yogi Maandhan) திட்டத்தின் மூலம் மாதாமாதம் ரூ. 3000/- பென்ஷன் வழங்கப்படும். இந்த துறையில் மாதம் ரூ. 15,000 வரை சம்பளம் பெறும் தொழிலாளிகள் வரை பயனடைவர். இது ஒரு ஓய்வூதிய திட்டம், தொழிலாளிகளின் சார்பாக ஒவ்வொரு மாதம் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும், அதே குறிப்பிட்ட தொகையை அரசும் பங்களிக்கும். 60 வயதின் முடிவில் அவர்களுக்கான ஓய்வூதியம், சேமிப்பிக்கப்பட்ட திட்டத்தின் மூலம் அளிக்கப்படும்.

 

 • கிசான்(Kisan) திட்டத்தின் மூலம் 2 ஹெக்டருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு ரூ.6000 /-(ஆண்டுக்கு) நேரடியாக ஆதரவளிக்கும் தொகை.

 

 • டிஜிட்டல் இணைப்பின் வாயிலாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் திட்டம்.

 

 • ஒரு நிதி வருடத்தில் ரூ. 5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரியில் முழுமையான வரி தள்ளுபடி(Full Tax Rebate).

 

 • வருமான வரியில் நிலைக்கழிவு(Standard Deduction) ரூ. 40,000/- லிருந்து 50,000/- ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

 • வங்கி மற்றும் அஞ்சலக வைப்பு தொகைக்கான வட்டி வருமான(Interest income) வரம்பு ரூ.10,000 லிருந்து 40,000 /- ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 • நேரடி வரி நடைமுறை(Direct Taxes) எளிமையாக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோர் அறிக்கை தாக்கல் செய்த 24 மணி நேரத்தில் வரவு பெறும் வசதி(Refund).

 

 • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வாங்கும் கடனில் (ஒரு கோடி ரூபாய்) 2 சதவீத வட்டி சலுகை.

 

 • பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை முதன்முறையாக ரூ. 3 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

 

 • சுங்கத்துறையில் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் மயமாக்கும் முடிவு.

 

 • மீன்பிடிப்புக்கு(Fisheries) தனி துறை அமைக்கப்படும். இந்திய திரைப்படங்களுக்கு ஒற்றை சாளர முறையை நடைமுறைப்படுத்தல் மற்றும் திரைப்படங்களை திருடுவதை தடுக்க புதிய ஒளிப்பதிவு சட்டம் கொண்டுவரப்படும்.

 

நாட்டின் பொருளாதாரம் அடுத்த ஐந்து வருடங்களில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களையும், அடுத்த பத்து வருடங்களில் 10 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை(10 Trillion Dollar Indian Economy) கொண்ட நாடாகவும் இருக்கும் என நிதி அமைச்சர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘ இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் அல்ல, நாட்டின் வளர்ச்சிக்கு உண்டானது ‘.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

வருமான வரி விதிகளில் மாற்றம் – இன்று முதல் அமல்

வருமான வரி விதிகளில் மாற்றம்  – இன்று முதல் அமல்

Income Tax Rules updated will effect from April 1, 2018

 

2018 ம் வருடத்திற்கான பொது  பட்ஜெட்(Budget India) கடந்த பிப்ரவரி 1 ம் தேதி நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் விவசாயம், தொழில் மற்றும் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.  குறிப்பாக, வருமான வரி சம்மந்தமான விஷயத்தில் தனி நபர் வருமானத்திற்கு சலுகைகள் ஏதும் தரப்படவில்லை.

 

தனி நபர் வருமான வரி வருவாய் அதிகரித்துள்ளதாக கூறிய அரசு, பட்ஜெட்டின் போது வரி விதிகளில் சில மாற்றங்களையும் கொண்டு வந்தது. அந்த மாற்றங்கள்(Income Tax Changes) இன்று முதல் (April 1, 2018) அமலுக்கு வருகிறது. அவ்வாறான வரி விதி மாற்றங்கள் சில…

 

மாத வருமானம் பெறும் தனி நபர் வருமான வரிப்பிரிவில் உள்ளவர்கள் அவர்களின் போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவுகளுக்காக, தங்கள் வருமானத்தில் ரூ. 40,000 வரை அடிப்படை கழிவுகளாக வரிச்சலுகை(Standard Deduction) பெறலாம். இதற்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

வங்கி வைப்பு தொகை(Fixed Deposits) மூலம் மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் வட்டி வருமானத்தில் ரூ. 50,000 வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ரூ. 10,000 ஆக வரம்பு இருந்தது. இன்று முதல் ரூ. 50,000 ஆக வட்டி வருமானத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.

 

பங்குச்சந்தையில் முதலீடு(Equity or Shares)  மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி முதலீடு (Equity oriented funds) ஆகியவற்றில் நீண்ட கால மூலதன ஆதாய வரியாக 10 % (LTCG Tax)  இன்று முதல் நிர்ணயிக்கப்படுகிறது. 10 % மூலதன  ஆதாய வரி என்பது ரூ. 1 லட்சத்திற்கு மேல் கிடைக்கும் நீண்ட கால வருமானத்திற்கு தான் பொருந்தும்.

 

மூத்த குடிமக்களுக்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருத்துவ காப்பீடு தொகை கழிவுகளில் இதுவரை ஆண்டுக்கு ரூ. 30,000 /- வரை இருந்தது. இனிமேல், இதற்கான அதிகபட்ச வரம்பு தொகையாக ரூ. 50,000/- ஆக (Medical for Senior Citizens) அமல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 50,000 /- க்கான மருத்துவம் சார்ந்த சலுகை வருமான வரி விதி (Income Tax u/s) 80D ன் கீழ் வரும்.

 

மருத்துவம் மற்றும் கல்விக்காக பெறப்படும் வரி சதவிகிதம்(Health and Education CESS) இன்று முதல் 3 லிருந்து 4 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இரு வரிகள் வருமான வரி செலுத்துவோரின் மொத்த வரி தொகையில் பிடிக்கப்படும் சதவிகிதமாகும். இரண்டாம் மற்றும் உயர்நிலை கல்விக்காக கல்வி வரி செலவழிக்கப்படுகிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com