Budget Highlights

பட்ஜெட் 2019 அறிக்கை துளிகள்

பட்ஜெட் 2019 அறிக்கை துளிகள்

Budget 2019 Highlights (FY 2019-20)

 

பிப்ரவரி ஒன்றாம் தேதி நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் பியூஸ் கோயல் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். வருமான வரி சார்ந்த தள்ளுபடிகளும், பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 /- வழங்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பட்ஜெட்டை ஒரு ரூபாய்(One Rupee Budget) வரவு-செலவில் கணக்கிடும் போது, வரவு தொகையில் 21 பைசா ஜி.எஸ்.டி.(GST) வரி மூலமும், 21 பைசா நிறுவனங்களின் வரி மூலமும், வருமான வரியில்(Income Tax) 17 பைசாவும் கிடைத்துள்ளதாக சொல்லப்பட்டது. செலவு தொகையில் 23 பைசா வரி வருவாயில் மாநிலங்களுடன் பங்கு பிரித்தது(Shares of Taxes), அரசு செலுத்த வேண்டிய கடனுக்கான வட்டி ஒரு ரூபாயில் 18 பைசாவும், மானியங்களுக்கு 9 பைசாவும் செலவிடப்பட்டுள்ளது.

 

மத்திய நிதியுதவி திட்டத்தில் 9 பைசாவும், மத்திய துறையின்(Central Sector) திட்டங்களுக்கு 12 பைசாவும், ஓய்வூதியத்திற்கு(Pension) 5 பைசாவும், ராணுவத்திற்கு 8 பைசாவும் செலவில் உள்ளது. 2019-20ம் நிதியாண்டில் நாட்டின் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) ரூ.7.03 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு வருடத்தில் ரூ. 6.34 லட்சம் கோடியில் முடிவடையலாம் என மறுமதிப்பீடு செய்யப்பட்டிருந்தது.

 

இடைக்கால பட்ஜெட் 2019ல் அறிவிக்கப்பட்ட பல விஷயங்களில் சில துளிகள் இங்கே,

 

  • அமைப்புசாரா துறையில்(Unorganized) பணிபுரியும் தொழிலாளிகளுக்கு பிரதம மந்திரியின் யோகி மாந்தன்(Yogi Maandhan) திட்டத்தின் மூலம் மாதாமாதம் ரூ. 3000/- பென்ஷன் வழங்கப்படும். இந்த துறையில் மாதம் ரூ. 15,000 வரை சம்பளம் பெறும் தொழிலாளிகள் வரை பயனடைவர். இது ஒரு ஓய்வூதிய திட்டம், தொழிலாளிகளின் சார்பாக ஒவ்வொரு மாதம் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும், அதே குறிப்பிட்ட தொகையை அரசும் பங்களிக்கும். 60 வயதின் முடிவில் அவர்களுக்கான ஓய்வூதியம், சேமிப்பிக்கப்பட்ட திட்டத்தின் மூலம் அளிக்கப்படும்.

 

  • கிசான்(Kisan) திட்டத்தின் மூலம் 2 ஹெக்டருக்கு குறைவான நிலம் உள்ள விவசாயிகளுக்கு ரூ.6000 /-(ஆண்டுக்கு) நேரடியாக ஆதரவளிக்கும் தொகை.

 

  • டிஜிட்டல் இணைப்பின் வாயிலாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் திட்டம்.

 

  • ஒரு நிதி வருடத்தில் ரூ. 5 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரியில் முழுமையான வரி தள்ளுபடி(Full Tax Rebate).

 

  • வருமான வரியில் நிலைக்கழிவு(Standard Deduction) ரூ. 40,000/- லிருந்து 50,000/- ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

 

  • வங்கி மற்றும் அஞ்சலக வைப்பு தொகைக்கான வட்டி வருமான(Interest income) வரம்பு ரூ.10,000 லிருந்து 40,000 /- ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

  • நேரடி வரி நடைமுறை(Direct Taxes) எளிமையாக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவோர் அறிக்கை தாக்கல் செய்த 24 மணி நேரத்தில் வரவு பெறும் வசதி(Refund).

 

  • சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வாங்கும் கடனில் (ஒரு கோடி ரூபாய்) 2 சதவீத வட்டி சலுகை.

 

  • பாதுகாப்பு துறைக்கு ஒதுக்கப்பட்ட பட்ஜெட் தொகை முதன்முறையாக ரூ. 3 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

 

  • சுங்கத்துறையில் மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளை டிஜிட்டல் மயமாக்கும் முடிவு.

 

  • மீன்பிடிப்புக்கு(Fisheries) தனி துறை அமைக்கப்படும். இந்திய திரைப்படங்களுக்கு ஒற்றை சாளர முறையை நடைமுறைப்படுத்தல் மற்றும் திரைப்படங்களை திருடுவதை தடுக்க புதிய ஒளிப்பதிவு சட்டம் கொண்டுவரப்படும்.

 

நாட்டின் பொருளாதாரம் அடுத்த ஐந்து வருடங்களில் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களையும், அடுத்த பத்து வருடங்களில் 10 டிரில்லியன் அமெரிக்க டாலர்களை(10 Trillion Dollar Indian Economy) கொண்ட நாடாகவும் இருக்கும் என நிதி அமைச்சர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘ இந்த பட்ஜெட் இடைக்கால பட்ஜெட் அல்ல, நாட்டின் வளர்ச்சிக்கு உண்டானது ‘.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Advertisement