வருமான வரி விதிகளில் மாற்றம் – இன்று முதல் அமல்
Income Tax Rules updated will effect from April 1, 2018
2018 ம் வருடத்திற்கான பொது பட்ஜெட்(Budget India) கடந்த பிப்ரவரி 1 ம் தேதி நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் விவசாயம், தொழில் மற்றும் மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. குறிப்பாக, வருமான வரி சம்மந்தமான விஷயத்தில் தனி நபர் வருமானத்திற்கு சலுகைகள் ஏதும் தரப்படவில்லை.
தனி நபர் வருமான வரி வருவாய் அதிகரித்துள்ளதாக கூறிய அரசு, பட்ஜெட்டின் போது வரி விதிகளில் சில மாற்றங்களையும் கொண்டு வந்தது. அந்த மாற்றங்கள்(Income Tax Changes) இன்று முதல் (April 1, 2018) அமலுக்கு வருகிறது. அவ்வாறான வரி விதி மாற்றங்கள் சில…
மாத வருமானம் பெறும் தனி நபர் வருமான வரிப்பிரிவில் உள்ளவர்கள் அவர்களின் போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவுகளுக்காக, தங்கள் வருமானத்தில் ரூ. 40,000 வரை அடிப்படை கழிவுகளாக வரிச்சலுகை(Standard Deduction) பெறலாம். இதற்கு எந்த ஆதாரத்தையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வங்கி வைப்பு தொகை(Fixed Deposits) மூலம் மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் வட்டி வருமானத்தில் ரூ. 50,000 வரை வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ரூ. 10,000 ஆக வரம்பு இருந்தது. இன்று முதல் ரூ. 50,000 ஆக வட்டி வருமானத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளது.
பங்குச்சந்தையில் முதலீடு(Equity or Shares) மற்றும் பங்கு சார்ந்த பரஸ்பர நிதி முதலீடு (Equity oriented funds) ஆகியவற்றில் நீண்ட கால மூலதன ஆதாய வரியாக 10 % (LTCG Tax) இன்று முதல் நிர்ணயிக்கப்படுகிறது. 10 % மூலதன ஆதாய வரி என்பது ரூ. 1 லட்சத்திற்கு மேல் கிடைக்கும் நீண்ட கால வருமானத்திற்கு தான் பொருந்தும்.
மூத்த குடிமக்களுக்கான மருத்துவ செலவுகள் மற்றும் மருத்துவ காப்பீடு தொகை கழிவுகளில் இதுவரை ஆண்டுக்கு ரூ. 30,000 /- வரை இருந்தது. இனிமேல், இதற்கான அதிகபட்ச வரம்பு தொகையாக ரூ. 50,000/- ஆக (Medical for Senior Citizens) அமல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 50,000 /- க்கான மருத்துவம் சார்ந்த சலுகை வருமான வரி விதி (Income Tax u/s) 80D ன் கீழ் வரும்.
மருத்துவம் மற்றும் கல்விக்காக பெறப்படும் வரி சதவிகிதம்(Health and Education CESS) இன்று முதல் 3 லிருந்து 4 % ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இரு வரிகள் வருமான வரி செலுத்துவோரின் மொத்த வரி தொகையில் பிடிக்கப்படும் சதவிகிதமாகும். இரண்டாம் மற்றும் உயர்நிலை கல்விக்காக கல்வி வரி செலவழிக்கப்படுகிறது.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை