Tag Archives: 5 trillion economy

மத்திய அரசின் 102 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் – எந்தெந்த துறைக்கு எவ்வளவு தொகை ?

மத்திய அரசின் 102 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் – எந்தெந்த துறைக்கு எவ்வளவு தொகை ?

Rs. 102 Lakh Crore Investment Plan – How much allocation for department wise ?

 

கடந்த செவ்வாய் கிழமை அன்று (31-12-2019) பேசிய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், நாட்டின் உட்கட்டமைப்புக்காக 102 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த முதலீடு அடுத்த ஐந்து வருடத்திற்கான முதலீட்டு திட்டம் எனவும் கூறியுள்ளார்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

முதலீடு செய்யப்பட உள்ள ரூ. 102.5 லட்சம் கோடி மூலம் ஆற்றல் சேமிப்பு(Energy), சாலை மேம்பாடு(Roadways), ரயில் போக்குவரத்து(Railways), வீட்டு வசதி மற்றும் நீர்ப்பாசன(Irrigation) மேம்பாட்டிற்கு பயன்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீடுகளின் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் நீளத்தை அதிகரிப்பதும், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது, அனைத்து வீடுகளிலும் குடிநீர் தேவையை உறுதி செய்வது என பல திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன.

 

மின் உற்பத்தியை அதிகரிப்பது, நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்ற பார்வையையும் அரசு முன்வைத்துள்ளது. நாட்டின் அடுத்த இலக்கான 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்($5 Trillion Economy) பொருளாதாரம் என்ற நிலையை அடைய உட்கட்டமைப்பை மேம்படுத்தினால் மட்டுமே, அது சாத்தியம். இந்நிலையில் ஒவ்வொரு துறைக்குமான முதலீட்டு பட்ஜெட்டை பற்றியும் மத்திய அரசு கூறியுள்ளது.

 

போக்குவரத்து துறையில் சாலை மேம்பாட்டிற்கு 19.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு 13.7 லட்சம் கோடி ரூபாயும், விமான துறைக்கு ரூ. 1.40 லட்சம் கோடி மற்றும் துறைமுகத்துக்கு ரூ. 1 லட்சம் கோடி என சொல்லப்பட்டுள்ளது.

 

ஆற்றல் சேமிப்பை(Energy) பொறுத்தவரை மின்சாரத்திற்கு(Power) 11.8 லட்சம் கோடி ரூபாய், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு ரூ. 9.3 லட்சம் கோடி, அணு 1.5 லட்சம் கோடி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கு 1.9 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

 

கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கென முதலீடும் கணிசமாக ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற உட்கட்டமைப்புக்கு 4.1 லட்சம் கோடி ரூபாயும், கிராமப்புறங்களில் குடிநீர் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய ரூ. 3.6 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மேம்பாட்டுக்கு 16.3 லட்சம் கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது.

 

விவசாய துறைக்கு 8 லட்சம் கோடி ரூபாயும், சமூக உட்கட்டமைப்புக்கு (கல்வி, விளையாட்டு, உடல்நலம், சுற்றுலா துறை) ரூ. 3 லட்சம் கோடி, தொழிற்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு ஆறு லட்சம் கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது. 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

2025ம் ஆண்டின் முக்கிய இலக்காக 2 லட்சம் கிலோமீட்டர் சாலையும், 750 ரயில் நிலையங்கள் வளர்ச்சிக்காக தனியார் மயமாக்கப்படும் எனவும் கூறியுள்ளது. இணைய வேகம் மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பது, அரசு கட்டுப்பாட்டில் உள்ள 35 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படுவது, 619 கிகா வாட் மின் உற்பத்தி, நாட்டில் உள்ள சாலைகளில் 10 சதவீதத்தை விரைவுவழி பாதைகளாக(Expressways) மாற்றுவது என இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், வரவிருக்கும் காலங்களில் அரசின் பட்ஜெட் அறிவிப்பு, அதனை சார்ந்த நிதி பற்றாக்குறை, பணவீக்கம் மற்றும் காலாண்டு பொருளாதார வளர்ச்சி எண்கள் முக்கியத்துவம் பெறும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

இந்திய பொருளாதார வளர்ச்சி குறைவு – ஒரு சிறு பார்வை

இந்திய பொருளாதார வளர்ச்சி குறைவு – ஒரு சிறு பார்வை

Declining Economic Growth – GDP in India – A Short look

கடந்த வெள்ளிக்கிழமை (30-08-2019) அன்று மத்திய புள்ளியியல் அமைச்சகம்(Central Statistics Office – CSO) நாட்டின் பொருளாதார வளர்ச்சி அறிக்கையை வெளியிட்டது. 2019ம் ஆண்டின் ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக உள்ளதாக கூறப்பட்டது. அதாவது இதற்கு முந்தைய காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) 5.8 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது 5 சதவீதமாக குறைந்துள்ளது.

அடுத்து வரவிருக்கும் செப்டம்பர் காலாண்டிலும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறையக்கூடும். உலகளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை மற்றும் உள்நாட்டு பொருளாதார புள்ளி விவரங்கள் சாதகமான அம்சத்தை கொண்டிருக்கவில்லை.

நாட்டின் தற்போதைய மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு 2.72 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது கவனிக்கத்தக்கது. இதுவே நம் நாட்டின் உச்சபட்ச அளவாக நடப்பில் காணப்படுகிறது. உலக பொருளாதார உற்பத்தி வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பு 4.40 சதவீதமாகும். கடந்த வாரம் சொல்லப்பட்ட 5 சதவீத வளர்ச்சி, கடந்த ஆறு வருடங்களில் காணப்பட்ட குறைந்த பட்ச அளவாக உள்ளது.

வருட அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை காணும் போது, கடந்த 68 வருடங்களில் நாட்டின் சராசரி வளர்ச்சி 6.20 சதவீதமாகவும், வாழ்நாள் உச்சமாக 2010ம் ஆண்டின் முதல் காலாண்டில் 11.40 சதவீதமும், குறைந்த பட்சமாக 1979ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் (-5.20) சதவீதம் என்ற அளவிலும் இருந்துள்ளது.

2016ம் ஆண்டு இரண்டாம் அரையாண்டின் துவக்கத்தில் 8.7 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி படிப்படியாக இறக்கத்தில் சென்றுள்ளது. கடந்த ஒரு வருடமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி கணிசமாக குறைந்து வருவது பாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. ஒரு புறம் கட்டமைப்பு பொருளாதார சீர்திருத்த மாற்றங்களால் வளர்ச்சி குறைந்துள்ளது என சொல்லப்பட்டாலும், நுகர்வு தேவை குறைந்து(Weak Demand Consumption) வருவதே பொருளாதார வளர்ச்சி குறைவுக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

உற்பத்தி மற்றும் கட்டுமான துறைகள் இன்னும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பாதைக்கு செல்லவில்லை. விவசாயம், ரியல் எஸ்டேட் மற்றும் வாகன துறை தேவையான வளர்ச்சியை பெறும் பட்சத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கலாம். அதே வேளையில் வங்கிகளின் வாராக்கடன் மற்றும் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் சிக்கல்கள் தீர்க்கப்படுமாயின், அது பொருளாதார வளர்ச்சிக்கு உந்துகோலாக அமையும் என்பதனை மறுப்பதற்கில்லை.

நுகர்வு மற்றும் முதலீட்டு தேவைகளும் குறைந்துள்ளதாக பெருவாரியான நிதி மதிப்பீடு நிறுவனங்கள் கூறியுள்ளது. தற்போது பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி வியட்நாம், சீனா, எகிப்து ஆகியவை முன்னிலையில் உள்ளது. கடந்த 2014 – 2017 காலத்தில் இந்தியா வேகமாக வளரும் நாடுகளில்(Emerging Economy) முதலிடத்தை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பொருளாதார சூழலில், நடப்பு நிதியாண்டில் ஏழு சதவீத வளர்ச்சி இலக்கை அடைவது கடினமாக இருக்கும். 2019-20ம் நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதத்திற்கு குறைவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வாழ்க வளமுடன்,

நன்றி, வர்த்தக மதுரை 

www.varthagamadurai.com

பொது பட்ஜெட் 2019 – அறிக்கை துளிகள்

பொது பட்ஜெட் 2019 – அறிக்கை துளிகள் 

Union Budget 2019 – Highlights

 

ஐந்து ட்ரில்லியன் டாலர்($5 Trillion Economy) பொருளாதார இலக்கு, கிராமப்புற வாழ்வை மேம்படுத்துதல், சாலை மற்றும் உட்கட்டமைப்பு சேவையை அதிகரித்தல் என பல இலக்குகள் நடப்பு மத்திய அரசினால் கூறப்பட்டுள்ளது. இதனை சார்ந்து நேற்று பட்ஜெட் தாக்கலும் முடிந்து விட்டது.

 

நேற்றைய பொது பட்ஜெட் 2019 – தாக்கலை நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் வழங்கினார். நடப்பு 2019ம் வருடத்தின் இரண்டாவது மற்றும் இறுதி பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட்டில் பல அம்சங்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நிறை, குறைகள் சமமாக உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

2013-14ம் நிதியாண்டில் 11வது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா, தற்போது உலகின் 6வது பெரிய பொருளாதார நாடாக உருவாகியுள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை(Current Account Deficit) கடந்த வருடம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) 2.1 சதவீதமாக உள்ளது. இது 2013-14ம் நிதியாண்டில் 5.6 சதவீதமாக இருந்துள்ளது.

 

கடந்த நிதியாண்டில் பெறப்பட்ட அந்நிய நேரடி முதலீடு(FDI) சுமார் 64.4 பில்லியன் டாலர்கள். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பில் நிதி பற்றாக்குறை(Fiscal Deficit) 3.3 சதவீதமாக கூறப்பட்டுள்ளது. இது கடந்த 2013-14ம் நிதியாண்டில் 4.5 சதவீதமாக இருந்தது.

 

சாலை மற்றும் கடல்வழி போக்குவரத்தை மேம்படுத்த அதற்கான திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன. வான் வழி போக்குவரத்தில் சேவையை சிறப்பாக செய்யவும், ரயில் சேவையை மேம்படுத்தவும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ரயில்வே உட்கட்டமைப்புக்காக ரூ. 50 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. இது 2018ம் ஆண்டு முதல் 2030 வரையிலான காலத்திற்கு எனவும், ரயில்வே துறையில் அரசு-தனியார் கூட்டு(PPP) ஒப்பந்தம் மூலம் திட்டங்கள் நிறைவேற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளதாகவும், இதற்காக நடப்பு நிதியாண்டில் தற்போது ரூ.350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்முனைவை ஊக்குவிக்க தூர்தர்சன் மூலம் புதிய சேனல்(New Startup TV Channel) தொடங்கப்படும்.

 

2019-20ம் நிதியாண்டிற்கு பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல்(Disinvestment) தொகை ரூ. 1.05 லட்சம் கோடியாக இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ரூபாய் பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி மூலம் அரசுக்கு 21 பைசா வருமானமாக கிடைத்துள்ளது. அதே வேளை செலவினங்களில் வரிகள் மூலம் 23 பைசாவை மத்திய, மாநில அரசுகள் பங்கிட்டுள்ளன.

 

ஐந்து சதவீதம் பென்ஷன் திட்டத்திற்கும், 8 சதவீதம் மானியத்திற்கும் மற்றும் 9 சதவீத தொகை பாதுகாப்பு துறைக்கும் செலவிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் நேரடி வரி மூலம்(Direct Tax) அரசுக்கு 11.4 லட்சம் கோடி ரூபாய் வருமானமாக கிடைத்துள்ளது.

 

திறந்த மலம் கழித்தல் இல்லா (Open defecation free) திட்டத்தின் மூலம் 5.6 லட்சம் கிராமங்கள் பயன்பெற்றுள்ளன. இதுவரை 95 சதவீத நகரங்கள் இதன் மூலம் பயனடைந்துள்ளன. நாடு முழுவதும் உள்ள 45,000க்கும் மேற்பட்ட பொது கழிப்பிடங்களின் இடஅமைவு கூகுள் மேப்பில்(Google map) பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கிராமப்புற வாழ்வை மேம்படுத்த அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்குதலை உறுதி செய்வது, சாலைகளை இணைப்பது மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவு தொகையை உறுதி செய்வதென பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

 

முத்ரா(Mudra Loan Scheme) திட்டத்தின் மூலம் பயன் அடைந்தவர்களில் 70 சதவீதம் பெண்களே. 7 கோடிக்கும் அதிகமான சமையல் எரிவாயு இணைப்புகள் இதுவரை நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளது. சிறு கடைகள் மற்றும் சில்லறை வியாபாரிகளின் ஓய்வு காலத்தை பாதுகாக்க குறைந்தபட்ச பென்ஷன் திட்டம், இளைஞர்களின் கல்வித்திறனை மேம்படுத்த திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளது.

 

நீர் ஆதாரத்தை பாதுகாக்கவும், டிஜிட்டல் பண பரிவர்த்தனைக்கு மாறவும், மாசில்லா நகரங்களை உருவாக்க மின்சார வாகனங்களை ஊக்குவித்தல் என பல விஷயங்கள் நேற்றைய பட்ஜெட்டில் சொல்லப்பட்டுள்ளது. பட்ஜெட் 2019க்கான நிறை மற்றும் குறைகளை அடுத்து வரும் பதிவில் காண்போம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com

 

 

 

5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையுமா இந்தியா – பொருளாதார ஆய்வு 2019

5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையுமா இந்தியா – பொருளாதார ஆய்வு 2019

India to achieve $ 5 trillion economy target – Economic Survey 2019

 

பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னர் பொருளாதார ஆய்வு நடைபெறுவது இயல்பு. சாலை வழிகாட்டி(Roadmap) போன்று பொருளாதார இலக்கை அடைவதற்கான வரைபடம் ஒன்று மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும். இதனை பொதுவாக அரசு சார்ந்த பொருளாதார ஆலோசகர் திட்டமிட்டு வழங்குவார்.

 

நடப்பு அரசின் முக்கிய இலக்காக வரும் 2024ம் வருடத்திற்குள் நாட்டின் பொருளாதாரம் 5 ட்ரில்லியன் மதிப்பை அடைவது. இதற்கான காலம் நெருங்கி வரும் நிலையில், நடப்பு மத்திய அரசுக்கு பல சவாலான பொருளாதாரம் சார்ந்த விஷயங்கள் காத்திருக்கின்றன.

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

பொருளாதார ஆலோசகர் சார்பில் அரசுக்கு முன்வைத்த சில பரிந்துரைகள் – சேமிப்பு மற்றும் முதலீட்டை அதிகரிப்பது, வளர்ச்சியில் தொடர் கண்காணிப்பு ஆகியவை ஆகும். வட்டி விகிதத்தை சரியான தருணத்தில் குறைப்பதால், தொழில்கள் ஊக்குவிக்கப்படும். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என சொல்லப்பட்டிருக்கிறது.

 

சரியான வளர்ச்சி 8 சதவீதமாகவும், பணவீக்கம் 4 சதவீதமாகவும் இருக்கும் நிலையில் பொருளாதார வளர்ச்சியின் மதிப்பு(Nominal GDP growth) 12 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பெயரளவு பொருளாதார வளர்ச்சியின் படி, நடப்பு நிதி வருடத்தில் 190 ட்ரில்லியன் ரூபாய் மதிப்பில் வளர்ச்சி இருக்கும் எனவும், இதுவே 2024-25ம் நிதியாண்டில் 375 ட்ரில்லியன் ரூபாய் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிலையில், அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் 75 ஆக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

இலக்குகளுக்கான கணிப்புகள் இருப்பினும், 5 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சியை(5 Trillion Economy) அடைவது பெரும் சவாலாகவே இருக்கும். வரி மாற்றங்கள், வேலைவாய்ப்புகளை பெருக்குதல் மற்றும் தொழிலாளர் கொள்கையில் புதிய மாற்றங்கள் ஆகியவை மேம்படும் போது, இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரியும்.

 

தற்போது அரசுக்கு சவாலான காரியங்களாக பருவ மழை, வங்கிகளின் நிதி நிலைமை, எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம்(Iran Tension), வர்த்தக போர்(Trade war), விவசாயிகளுக்கான(Farmers) ஆதரவளிக்கும் கொள்கை ஆகியவை உள்ளன. சீன நாட்டின் வளர்ச்சிக்கு சேமிப்பு மற்றும் சரியான முதலீடு, ஏற்றுமதி வளர்ச்சியில் முக்கியத்துவம் என பல காரணிகள் உதாரணமாக சொல்லப்பட்டுள்ளது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை 

 

www.varthagamadurai.com