மத்திய அரசின் 102 லட்சம் கோடி ரூபாய் பட்ஜெட் – எந்தெந்த துறைக்கு எவ்வளவு தொகை ?
Rs. 102 Lakh Crore Investment Plan – How much allocation for department wise ?
கடந்த செவ்வாய் கிழமை அன்று (31-12-2019) பேசிய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், நாட்டின் உட்கட்டமைப்புக்காக 102 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த முதலீடு அடுத்த ஐந்து வருடத்திற்கான முதலீட்டு திட்டம் எனவும் கூறியுள்ளார்.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
முதலீடு செய்யப்பட உள்ள ரூ. 102.5 லட்சம் கோடி மூலம் ஆற்றல் சேமிப்பு(Energy), சாலை மேம்பாடு(Roadways), ரயில் போக்குவரத்து(Railways), வீட்டு வசதி மற்றும் நீர்ப்பாசன(Irrigation) மேம்பாட்டிற்கு பயன்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீடுகளின் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளில் நீளத்தை அதிகரிப்பதும், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது, அனைத்து வீடுகளிலும் குடிநீர் தேவையை உறுதி செய்வது என பல திட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன.
மின் உற்பத்தியை அதிகரிப்பது, நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்ற பார்வையையும் அரசு முன்வைத்துள்ளது. நாட்டின் அடுத்த இலக்கான 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள்($5 Trillion Economy) பொருளாதாரம் என்ற நிலையை அடைய உட்கட்டமைப்பை மேம்படுத்தினால் மட்டுமே, அது சாத்தியம். இந்நிலையில் ஒவ்வொரு துறைக்குமான முதலீட்டு பட்ஜெட்டை பற்றியும் மத்திய அரசு கூறியுள்ளது.
போக்குவரத்து துறையில் சாலை மேம்பாட்டிற்கு 19.6 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறைக்கு 13.7 லட்சம் கோடி ரூபாயும், விமான துறைக்கு ரூ. 1.40 லட்சம் கோடி மற்றும் துறைமுகத்துக்கு ரூ. 1 லட்சம் கோடி என சொல்லப்பட்டுள்ளது.
ஆற்றல் சேமிப்பை(Energy) பொறுத்தவரை மின்சாரத்திற்கு(Power) 11.8 லட்சம் கோடி ரூபாய், புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு ரூ. 9.3 லட்சம் கோடி, அணு 1.5 லட்சம் கோடி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவிற்கு 1.9 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற வளர்ச்சிக்கென முதலீடும் கணிசமாக ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புற உட்கட்டமைப்புக்கு 4.1 லட்சம் கோடி ரூபாயும், கிராமப்புறங்களில் குடிநீர் மற்றும் சுகாதாரத்தை உறுதி செய்ய ரூ. 3.6 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற மேம்பாட்டுக்கு 16.3 லட்சம் கோடி ரூபாய் என கூறப்பட்டுள்ளது.
விவசாய துறைக்கு 8 லட்சம் கோடி ரூபாயும், சமூக உட்கட்டமைப்புக்கு (கல்வி, விளையாட்டு, உடல்நலம், சுற்றுலா துறை) ரூ. 3 லட்சம் கோடி, தொழிற்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு ஆறு லட்சம் கோடி ரூபாய் என சொல்லப்பட்டுள்ளது.
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
2025ம் ஆண்டின் முக்கிய இலக்காக 2 லட்சம் கிலோமீட்டர் சாலையும், 750 ரயில் நிலையங்கள் வளர்ச்சிக்காக தனியார் மயமாக்கப்படும் எனவும் கூறியுள்ளது. இணைய வேகம் மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பது, அரசு கட்டுப்பாட்டில் உள்ள 35 விமான நிலையங்கள் தனியார் மயமாக்கப்படுவது, 619 கிகா வாட் மின் உற்பத்தி, நாட்டில் உள்ள சாலைகளில் 10 சதவீதத்தை விரைவுவழி பாதைகளாக(Expressways) மாற்றுவது என இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், வரவிருக்கும் காலங்களில் அரசின் பட்ஜெட் அறிவிப்பு, அதனை சார்ந்த நிதி பற்றாக்குறை, பணவீக்கம் மற்றும் காலாண்டு பொருளாதார வளர்ச்சி எண்கள் முக்கியத்துவம் பெறும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை