ஆட்டோமொபைல் துறை விற்பனை வளர்ச்சி குறைகிறதா ?

ஆட்டோமொபைல் துறை விற்பனை வளர்ச்சி குறைகிறதா ?

Does Automobile Sector Sales growth declining ?

 

2019ம் வருடத்தின் இரண்டாவது நாளான (02-01-2019) புதன் கிழமை அன்று  பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஐஷர் மோட்டார்ஸ் (Eicher Motors) நிறுவன பங்கு விலை 9 சதவீத அளவிற்கு வீழ்ச்சி கண்டது. கடந்த டிசம்பர் மாத காலத்தில் இந்த நிறுவனத்தின் ராயல் என்பீல்ட் (Royal Enfield) வாகன விற்பனை அளவு குறைந்ததால், அதன் தாக்கம் பங்குகளின் விலையிலும் தெரிந்தது. புதன் கிழமை வர்த்தகத்தில் ஆட்டோமொபைல் துறை மட்டும் 3 சதவீத இறக்கத்தில் முடிந்தது.

 

கடந்த சில காலங்களாக ஆட்டோமொபைல் நிறுவனங்களின் (Automobile Sector) வாகன விற்பனை வெகுவாக குறைந்துள்ளது கவனிக்கத்தக்கது. டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா (Mahindra & Mahindra), ஐஷர் மோட்டார்ஸ், ஹீரோ மோட்டார் ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை சந்தை எதிர்பார்ப்பை விட குறைந்த அளவிலே விற்பனையாகி உள்ளது. மும்பை பங்குசந்தையில் ஆட்டோ குறியீடு (BSE Auto) கடந்த ஒரு வருடத்தில் 24 சதவீதம் இறங்கியுள்ளது.

 

வாகனங்களுக்கான அரசின் புதிய வரைமுறைகள், நிறுவனங்களிடையே உள்ள போட்டி, கடந்த கால கச்சா எண்ணெய் மாற்றம் மற்றும் வரி போன்றவை வாகன விற்பனை வளர்ச்சியில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இரு சக்கர வாகனங்களின் பிரியமான ராயல் என்பீல்ட் விற்பனை வளர்ச்சி கடந்த சில காலாண்டுகளாக பின்னடைவை சந்தித்துள்ளன. இதற்கு காரணமாக சொல்லப்படுவது ஜாவாவின் (Jawa Motor Cycle) வருகை தான்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஐஷர் மோட்டார்ஸ் (Eicher Motors) நிறுவனத்தின் ராயல் என்பீல்ட் விற்பனை கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 14 சதவீத வீழ்ச்சியை கண்டுள்ளது. ஐஷர் நிறுவனத்தின் மற்ற வாகனங்கள் 21 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ள போதும், ராயல் என்பீல்ட் பிராண்டின் மதிப்பு குறைய உள்ளதா என்ற ஐயமும் சந்தையில் நிலவுகிறது. 350 சி.சி. க்கு மேற்பட்ட வகைகளில் ராயல் என்பீல்ட் விற்பனை வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. ஆனால் 350 சி.சி. க்கு கீழ் உள்ள வாகனங்களில் ஜாவா (Jawa – Mahindra) சவாலாக உள்ளது. இன்சூரன்ஸ் மற்றும் வாகனத்தில் புகுத்தப்பட்ட அம்சங்கள் ஆகியவை ராயல் என்பீல்ட் விலையை சற்று அதிகரித்தது. அதே நேரத்தில் ராயல் என்பீல்ட் வாகனத்திற்கு மாற்றாக தற்போது ஜாவா இரு சக்கர வாகனம் பார்க்கப்படுகிறது.

 

ராயல் என்பீல்ட் வாகன விற்பனை கடந்த டிசம்பர் மாதத்தில் 56,000 வாகனங்களாக இருந்தது. இதே காலத்தில் இதற்கு முந்தைய (2017) வருடத்தில் 65,300 வாகனங்களாக விற்பனையானது கவனிக்கத்தக்கது. இதே போன்று மஹிந்திரா நிறுவனத்தின் டிராக்டர்(Tractors) விற்பனை வளர்ச்சியும் குறைந்துள்ளது. டிசம்பர் மாத காலத்தில் 16,510 டிராக்டர்கள் விற்பனையாக இருப்பினும், இதே காலத்தில் முந்தைய வருடத்தில் 16,855 வாகனங்களாக இருந்தது.

 

ஜாகுவார் (JLR) வருகைக்கு பின் டாடா மோட்டார்ஸின் வருவாய் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. உலகின் மிகப்பெரிய வாகன சந்தையை கொண்டிருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த இரண்டு காலாண்டு முடிவுகளில் நஷ்டத்தை கண்டிருக்கின்றன. செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் போன்ற புதுமையான விஷயங்கள் வாகனங்களில் வந்து கொண்டிருக்கும் காலம் இது. வாகன துறைகளின் வளர்ச்சியும் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை முன்னிறுத்தும் காரணியாகும். தற்போது ஏற்பட்டுள்ள இந்த சுணக்கம் வருங்காலத்தில் களையப்படலாம் என நாம் எதிர்பார்க்கலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

 

சேனல்களை தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு

சேனல்களை தேர்ந்தெடுப்பதற்கான காலக்கெடு ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிப்பு

The deadline for selection of TV Channels is extended to January 31, 2019

 

தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் (TRAI – Telecom Regulatory Authority of India) ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான புதிய கட்டமைப்பு முறையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. டி.டி.ஹெச் (DTH) ஆபரேட்டர்கள் மற்றும் பிற ஒளிபரப்பாளர்கள் புதிய நடைமுறையை பின்பற்றுமாறும், சந்தாதாரர்களின் விருப்பங்களை கொண்டு அவர்களே சேனல்களை தேர்வு செய்யும் முறையை நடைமுறைப்படுத்தும் படி டிராய் தனது அறிக்கையில் கூறியிருந்தது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

சந்தாதாரர்கள் (Subscribers) தாங்களே கேபிள் டிவி சேனல்களை தேர்வு செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் 28ம் தேதியாக அறிவித்தது டிராய். அதன் பின்னர் புதிய கட்டமைப்பின் கீழ் அனைத்து சேனல்களும் கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தது. தற்போது இந்த அறிவிப்பில் மாற்றத்தை கொண்டு வந்து, சந்தாதாரர்கள் சேனல்களை தேர்வு செய்வதற்கான கடைசி தேதியை வரும் ஜனவரி 31, 2019 ஆக வெளியிட்டுள்ளது.

 

புதிய முறையின் கீழ் தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்கள் தங்களின் ஒவ்வொரு சேனல்களுக்கான சில்லறை விலையை அறிவிக்க வேண்டுமெனவும், வாடிக்கையாளர்களை (சந்தாதாரர்கள்) அனைத்து சேனல்களையும் பார்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

 

சந்தாதாரர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் அடிப்படை திட்டத்திற்கு ரூ. 130 உடன் ஜி.எஸ்.டி. (18% GST) கட்டணம் உட்பட மாதம் ரூ. 153 /- செலுத்த வேண்டும். இந்த அடிப்படை திட்டத்தில் 26 தூர்தர்சன்(Doordarshan) சேனல்களும், 500 பொது சேனல்களிலிருந்து 100 இலவச சேனல்களும் வழங்கப்படும். அதற்கு பிறகான சேனல் தேர்வுகளுக்கு சந்தாதார்கள் பணம் (Pay TV Channel) செலுத்த வேண்டும். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமில்லாத சேனல்களை தவிர்க்கலாம்.

 

புதிய கட்டமைப்பு முறையின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள கட்டண சேனல்களும், அதன் விலைப்பட்டியலும் கீழே உள்ள இணைப்பில் தரப்பட்டுள்ளது.

 

Tariff (Rates) under New Regulatory Framework (2018)

 

FAQs on New Regulatory Framework for Broadcasting and Cable TV Services

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

IBC திவால் சட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 80,000 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது

IBC திவால் சட்டத்தின் மூலம் நடப்பாண்டில் 80,000 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது  

80,000 Crore Rupees have been recovered through IBC – NCLT

 

நமது நாட்டில் பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் பொருளாதார வளர்ச்சியை ஒரு புறம் பாதிக்கும் நிலையில், தனியார் நிறுவனங்கள் பல கடன்களில் தத்தளித்து திவாலாகும் நிலை கடந்த சில வருடங்களாகவே அதிகரித்துள்ளது. நிறுவனங்களின் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனை அடைக்காமல், வெளிநாட்டிற்கு தப்பி செல்வதும், இதனால் வங்கிகள் பாதிக்கப்படுவதும் மக்களின் வங்கிகள் மீதான நம்பிக்கையை குறைத்து விட்டது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

நிறுவனங்கள் திவாலாகும் நிலையை தவிர்க்கவும், வாங்கிய கடனை மீட்டெடுக்கவும் அரசு சில கொள்கைகளை வரையறுத்தது. இவற்றில் ஒன்று தான் திவால் சட்டம் – IBC (Insolvency and Bankruptcy Code). கடந்த 2016 ல் அறிமுகப்படுத்தப்பட்ட திவால் சட்டம் மூலம் இன்று பல்வேறு நிறுவனங்கள் திவாலாகாத நிலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் மூலம் திரும்ப பெற வேண்டிய கடன் தொகையையும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

 

தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தின் மூலம் (NCLT – National Company Tribunal) கடந்த 2017 ம் ஆண்டு முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டு சினெர்ஜிஸ் (Synergies – Dooray Automotive) நிறுவனத்திடம் திவால் சட்ட முறையை பயன்படுத்தியது. நடப்பு வருடத்தில் கடனில் தத்தளித்து வரும் எஸ்ஸார் ஸ்டீல், பூஷன் (Bhushan) பவர் மற்றும் ஸ்டீல், மோனெட் இஸ்பாட் (Monnet Ispat), ஆம்டெக் ஆட்டோ (Amtek Auto), வீடியோகான், லாங்கோ இன்ப்ரா, ருச்சி சோயா (Ruchi Soya) ஆகிய நிறுவனங்கள் திவால் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.

 

இவற்றில் பூஷன் நிறுவனம் 45,000 கோடி ரூபாய் கடனையும், எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனம் சுமார் 80,000 கோடி ரூபாய் கடனையும் கொண்டுள்ளது. சொல்லப்பட்ட நிறுவனங்களின் வழக்கு தற்போது முடிவுறும் நிலையில், கடன் நிறுவனங்களை வாங்குவதற்காக மற்ற பெரிய நிறுவனங்களும் காத்திருக்கின்றன.

 

திவால் சட்டத்தின் மூலம் இந்த வருடத்தில் மட்டும் கடன் பெற்ற நிறுவனங்களிடம் இருந்து சுமார் 80,000 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திவால் நிலையில் தத்தளித்த நிறுவனங்களை கையகப்படுத்த டாட்டா ஸ்டீல், ரிலையன்ஸ், வேதாந்தா, அல்ட்ரா டெக் ஆகிய பெரு நிறுவனங்கள் தயாராக உள்ளன. வரும் ஆண்டுகளிலும் திவால் சட்டத்தின் மூலம் கடன் நிறுவனங்களை மீட்டெடுப்பதும், வங்கிகளின் கடனும் குறையலாம் என அரசு எதிர்பார்க்கிறது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

2018 ம் வருடத்தின் மிக மோசமாக சரிவடைந்த பங்கு – ஆஷா புரா

2018 ம் வருடத்தின் மிக மோசமாக சரிவடைந்த பங்கு – ஆஷா புரா

The worst stock returns of 2018 in Indian Stock Market – Ashapura Intimates

 

கடந்த 2017 ம் வருடம் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்ததை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் அதற்கு நேரெதிராக நடப்பு 2018 ம் வருடத்தின் தொடக்கத்திலிருந்தே இந்திய பங்குச்சந்தை சரிவில் தான் ஆரம்பித்தது. இந்த வருடத்தின் பங்கு வர்த்தகம் இன்னும் சில நாட்களே உள்ளன. நமது நாட்டின் சந்தை மட்டுமில்லாமல் உலகளவில் அனைத்து பங்குச்சந்தைகளும் இந்த வருடம் முழுவதும் இறக்கத்தில் மட்டுமே உள்ளன.

 

இந்திய பங்குசந்தையில் தேசிய சந்தையான நிப்டி 50 (Nifty) குறியீடு இதுவரை 1.30 சதவீதம் என்ற அளவிலும், மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் (BSE Sensex) 4.30 சதவீதம் என்ற அளவிலும் ஏற்றம் கண்டுள்ளது. கடந்த 2017 ம் ஆண்டில் நிப்டி 28 சதவீத (Returns) வருமானத்தை கொண்டிருந்தது. சென்செக்ஸ் குறியீடும் 18 சதவீத வளர்ச்சியுடன் 2017 ம் வருடத்தில் முடிவடைந்தது. இதனை ஒப்பிடும் போது நடப்பு வருடத்திற்குரிய பங்குச்சந்தை வருமானம் பெரிய ஏற்றம் காணாமல் இறக்கத்தில் இருந்துள்ளது.

 

இதே போல் அமெரிக்க பங்குச்சந்தை நடப்பாண்டில் 10 சதவீத இறக்கத்திலும் (NASDAQ), சீன சந்தை 23 சதவீத வீழ்ச்சியும், லண்டன் பங்குச்சந்தை (FTSE) 12 சதவீத இறக்கமும், ஜப்பான் நாட்டின் பங்குச்சந்தை 11 சதவீத வீழ்ச்சியிலும் உள்ளது. மற்ற நாடுகளை காட்டிலும் இந்திய பங்குச்சந்தை பெரிதாக வீழ்ச்சியை காணவில்லை. நமது நாட்டின் துரிதமான பொருளாதார வளர்ச்சியும், பங்குச்சந்தையை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கிறது.

 

நடப்பு 2018 வருடத்தில் இந்திய பங்குச்சந்தையில் உள்ள 10 சதவீதத்திற்கும் மேலான பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் பங்கு விலை (Share Price) 50 சதவீதத்திற்கும் மேலாக இறக்கம் (Stock Crash) கண்டுள்ளது. வங்கிகளின் வாராக்கடன், அரசின் கொள்கைகள், கச்சா எண்ணெய் விலை மாற்றம், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவை பங்குச்சந்தை விலைகளிலும் பெருத்த மாற்றத்தை கொண்டு வந்தன. இறக்கம் ஏற்பட்டாலும், சந்தையில் உள்ள நல்ல நிறுவன பங்குகளை வாங்குவதற்கான தள்ளுபடி விலையாகவே சந்தை வல்லுநர்கள் பார்க்கின்றனர்.

 

அதே வேளையில் சில நிறுவன பங்கின் விலை ஆச்சர்யமூட்டும் வகையில் இறக்கம் கண்டுள்ளது. அவற்றில் JP Associates, Jet Airways, Infibeam, Vodafone Idea, PC Jeweller, Manpasand Beverages ஆகிய நிறுவனங்களும் அடங்கும். இந்த நிறுவனங்கள் சுமார் 65 – 80 சதவீதம் வீழ்ச்சி கண்டன. ஆனால் ஒரே ஒரு பங்கின் விலை மட்டும் இந்த வருடத்தின் மிக மோசமாக இறக்கமடைந்த பங்காக உள்ளன – Ashapura Intimates Fashion Ltd

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ஆஷா புரா  பேஷன் நிறுவனம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஆடைகள், உள்ளாடைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகின்றன. ‘ Valentine ‘ என்ற பிராண்டை கொண்டு இயங்கும் இந்த நிறுவனம் 2006 ம் ஆண்டு ஹர்ஷத் தக்கார் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. 2013 ம் வருடம் பங்குசந்தையில் பட்டியிலடப்பட்ட ஆஷா புரா பேஷன் (Ashapura Fashion) நிறுவனம் நடப்பு  வருடத்தில் தனது பங்கின் உச்சமாக ரூ. 523 விலைக்கு வர்த்தகமானது. வருடத்தின் தொடக்கத்தில் சுமார் 1300 கோடி ரூபாய் சந்தை மதிப்பை கொண்டிருந்த இந்த நிறுவனம் தற்போது 74 கோடி ரூபாய் மதிப்பை மட்டுமே கொண்டுள்ளது. இதன் பங்கின் விலையும் தற்போது  29 ரூபாயில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் குறைந்தபட்ச விலையாக பங்கு ஒன்றுக்கு 19 ரூபாய் வரை சென்றது.

 

ஆஷா புரா பேஷன் நிறுவனம் நடப்பு வருடத்தில் 96 சதவீதம் பங்கின் விலையில் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த இறக்கம் வந்ததும் வெறும் இரண்டு மாதங்களில். பங்கு விலை குறைந்ததற்கு காரணமாக சொல்லப்படுவது, நிறுவனத்தின் நிறுவனர் ஹர்ஷத் தக்கார் (Harshad Thakkar) காணவில்லை என்ற செய்தி தான். நிறுவனம் சார்பில் கடந்த அக்டோபர் மாதம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹர்ஷத் தக்கார் தனது நிறுவன பங்குகளை அடமானம் வைத்துள்ளதாகவும் வந்த செய்திகள் இந்த பங்கின் விலையை மேலும் மோசமடைய செய்தது. இன்னும் அவர் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்களை கவலை அடைய செய்துள்ளது.

 

பங்குச்சந்தையில் இது போன்ற சம்பவங்கள் வியப்புக்குரியதாக அமைந்துள்ளன. வெறும் பங்கின் விலையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், ஒரு நிறுவனத்தின் அடிப்படை பகுப்பாய்வு (Fundamental Analysis) மற்றும் அதன் நிர்வாகத்தையும் (Management) கருத்தில் கொண்டே ஒரு பங்கினை தேர்வு செய்ய வேண்டும்.

 

இலவச  பங்குச்சந்தை பயிற்சி வகுப்புக்கு (Share Market Course) பதிவு செய்ய வேண்டுமா ?

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

23 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக குறைப்பு

23 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 18 சதவீதமாக குறைப்பு

GST for 23 products were reduced to 18 Percent

 

நேற்று (22-12-2018) நாட்டின் சரக்கு மற்றும் சேவைகள் வரிக்கான (Goods and Services Tax) 31வது கவுன்சில் கூட்டம் டில்லியில் நடைபெற்றது. இந்தியாவில் விதிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. வரி ஒரு முறைமுக வரியாகும். இதனை நுகர்வு வரி எனவும் சொல்லலாம். ஜி.எஸ்.டி. வரி அமைப்பு ஐந்து அடுக்குகளை கொண்டுள்ளது – 0%, 5%, 12%, 18% மற்றும் 28 சதவீதம். நேற்று நடைபெற்ற கூட்டத்தில் சுமார் 23 பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீத வரியாக குறைக்கப்பட்டது.

 

மூன்றாம் நபர் காப்பீடு (Third party insurance), திரையரங்கு கட்டணம் (Movie Tickets), 32 இன்ச் டி.வி மற்றும் மானிட்டர்கள், லித்தியத்திலான பவர் பேங்குகள் (Power Banks), டிஜிட்டல் கேமரா மற்றும் சில பொருட்களுக்கான வரி விகிதம், முன்னர் இருந்த 28 சதவீத அளவிலிருந்து 18 சதவீத வரியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான வண்டி உதிரி பாகங்கள் 5 சதவீத வரிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட தேதியிலிருந்து இதுவரை 360 பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனிவரும் கூட்டத்தில் சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில்கள், சிறிய சேவை வழங்குவோர்களுக்காக எளிய வரி விதிமுறைகள் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

நேற்று அறிவிக்கப்பட்ட வரி (GST) குறைப்பால் மத்திய அரசுக்கு 5500 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. வரும் 2019 ம் ஆண்டில் மேலும் சில பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவைகள் வரி விகிதம் குறைக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. அறிவிக்கப்பட்ட இந்த வரி குறைப்பு வரும் ஜனவரி 1, 2019 முதல் அமலுக்கு வரும். ஒரு சில நாட்களுக்கு முன், ‘ 99 சதவீத பொருட்களை ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் 18 சதவீதம் அல்லது அதற்கு குறைவாகவோ அமைக்க அரசு முனைந்துள்ளதாக ‘ பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அதிகபட்ச விகிதமான 28 % வரி அடுக்கில் தற்போது மொத்தம் 28 பொருட்கள் உள்ளன. ஆடம்பர பொருட்களும், சிமெண்ட் மற்றும் வாகனம் சார்ந்த பொருட்களும் இந்த வரி விதிப்பில் அடங்கும். இவற்றில் சிமெண்ட் மற்றும் வாகனம் சார்ந்த பொருட்களுக்கான வரி விகிதத்திலும் அடுத்த கூட்டத்தில் மாற்றம் ஏற்படலாம் என தெரிகிறது. 28 சதவீத வரி அடுக்கில் ஆடம்பர மற்றும் இதர (Sin Goods) பொருட்களும், 13 வாகனம் சார்ந்த பொருட்களும் மற்றும் சிமெண்ட் வகையில் ஒரு பொருளும் உள்ளது. அரசுக்கு சிமெண்ட் மூலமான ஜி.எஸ்.டி. வரி (Tax Revenue வருவாய் ரூ. 13,000 கோடி எனவும், வாகன பொருட்களுக்கான வரி வருவாய் 20,000 கோடி ரூபாயாகவும் சொல்லப்பட்டுள்ளது.

 

பெட்ரோலிய பொருட்கள், மது பானங்கள், மின்சாரம் போன்றவை ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இல்லை. அதற்கு பதிலாக இந்த மூன்றும் மாநில அரசின் கீழ் வரி விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரி வரம்பில் வரும்பட்சத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையலாம்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மேட்டிஸ் ராஜினாமா – பங்குச்சந்தை வீழ்ச்சிக்கான மற்றொரு செய்தி

அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மேட்டிஸ் ராஜினாமா – பங்குச்சந்தை வீழ்ச்சிக்கான மற்றொரு செய்தி

US Defence Secretary James Mattis resigns – News for the Stock Market Crash

 

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கணக்கிட பல அளவுகோல்கள் இருந்தாலும், இவையனைத்தும் ஒரே இடத்தில் அமைய பெற்றது அந்த நாட்டினுடைய பங்குச்சந்தை தான். வெறும் முதலீட்டுக்கான மற்றும் பணம் பண்ணுவதற்கான சந்தையாக மட்டுமில்லாமல், ஒரு நாட்டின் மற்றும் உலகளாவிய பொருளாதாரத்தை சார்ந்து தான் பங்குச்சந்தை இயங்கி கொண்டிருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.

 

வெள்ளிக்கிழமை அன்று (21-12-2018) வெளிவந்த அமெரிக்க செய்தி ஒன்று, உலகில் உள்ள ஏறக்குறைய அனைத்து பங்குச்சந்தைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தின. சிரிய நாட்டிலிருந்து தனது நாட்டு ராணுவ படைகளை திரும்ப பெறுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) அறிவித்த செய்தி, மற்ற நாடுகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியின் போது, சிரியா நாட்டில் ஆக்கிரமித்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளை களைய அமெரிக்க படைகள் களமிறக்கப்பட்டன.

 

ஐ.எஸ்.ஐ.எஸ். க்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க படைகள் வெற்றி பெற்றதாகவும், இனி மேல் அங்கு படைகள் இருப்பதற்கான வேலையெதுவும் இல்லையென்றும் அதிபர் டிரம்ப் செய்தி வெளியிட்டிருந்தார். மேலும் அவர் கூறுகையில், ‘ சிரியாவில் இருக்கும் அமெரிக்க படைகளை அமெரிக்க அரசு திரும்ப பெற்று கொள்ளும் (Getting out of Syria). ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் எதிரிகள் ஈரான், ரஷ்யா மற்றும் சிரியா மட்டுமே ‘ என்றார்.

 

இந்த செய்தியை தொடர்ந்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மேட்டிஸ் ராஜினாமா செய்த விஷயமும் அமெரிக்காவில் சூடான விவாதமாக அமைந்தது. அதிபர் (President Trump) ட்ரம்பின் படைகளை திரும்ப பெறுவதற்கான முடிவில் தனக்கு திருப்தி இல்லை என பாதுகாப்பு செயலாளர் மேட்டிஸ் (James Mattis), தனது  பதவியிலிருந்து விலகி கொண்டார். இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் எல்லைச்சுவர் (அமெரிக்க-மெக்ஸிகோ – Mexico Wall) கட்டுவதற்கான நிதி கோரிக்கையை வலியுறுத்தியதால் மத்திய அரசாங்கத்தை மூடுவதற்கான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

அமெரிக்காவில் நடந்த இந்த செய்திகள் மற்ற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற விஷயம் பங்குச்சந்தைக்கு பாதகமான செய்தியாக அமைந்தது. பொதுவாக நமது நாட்டில் தான் அரசியல் சார்ந்த நகர்வுகளுக்கு பங்குச்சந்தை செவி சாய்க்கும். அமெரிக்க நாட்டில் அவ்வாறு நடைபெறுவது கிடையாது.  ஆனால் தற்போது அதிபராக உள்ள டிரம்ப் விஷயத்தில் ஒவ்வொரு செய்தியும் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

 

முன்னர் வட கொரிய அணு சார்ந்த பிரச்சனை, அமெரிக்க-சீன வர்த்தக போர், விசா விவாகரம், ஈரானுடன் கச்சா எண்ணெய் பிரச்சனை போன்றவை நடப்பு அமெரிக்க அரசில் பேசப்பட்ட செய்திகளாகும். வெள்ளிக்கிழமை அன்று இந்திய பங்குச்சந்தை (Indian Stock Market) வெகுவான இறக்கத்தை அடைந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி (Nifty 50) சுமார் 200  புள்ளிகள் என்ற அளவிலும், மும்பை சந்தை கிட்டத்தட்ட 700 புள்ளிகள் சரிவிலும் முடிவடைந்தது.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

ஐ.டி.எப்.சி. வங்கி இனி ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் (IDFC First)

ஐ.டி.எப்.சி. வங்கி இனி ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் (IDFC First)

IDFC Bank is now IDFC First Bank

 

ஐ.டி.எப்.சி. (Infrastructure Development Finance Company) குழுமத்தின் ஒரு அங்கமான ஐ.டி.எப்.சி. வங்கி கடந்த 2015 ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. மும்பையை தலைமையிடமாக கொண்ட இந்த வங்கி நூற்றுக்கும் மேற்பட்ட கிளைகளையும், 1,12,160 கோடி ரூபாய் சொத்து மதிப்பையும் கொண்டுள்ளது. உள்கட்டமைப்பு சார்ந்த துறையில் உள்ள நிறுவனங்களுக்கும், தனியார் வாடிக்கையாளர்களுக்கும் கடன்களை வழங்கி வருகின்றன.

 

ஐ.டி.எப்.சி. வங்கி அதிகபட்ச கடனாக பிளிப்கார்ட் (Flipkart) நிறுவனத்திற்கு கடந்த வருடத்தில் 300 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. இந்த வங்கியுடன் கேப்பிடல் பர்ஸ்ட் (Capital First) நிறுவனத்தை இணைப்பது சம்மந்தமான கோரிக்கை  வருடத்தின் தொடக்கத்தில் துவங்கப்பட்டது. கேப்பிடல் பர்ஸ்ட் நிறுவனம் சிறு தொழில்களுக்கான கடனை வழங்கி வரும் நிதி சேவை நிறுவனமாகும். 10,000 ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாய் வரை கடன் அளிக்கும் நிறுவனமான இதற்கு 225 க்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.

 

நிதி சேவை (Financial Services) சார்ந்த இந்த இரு நிறுவனங்களின் இணைப்பு நேற்று (18-12-2018) தேசிய கம்பெனி சட்டம் தீர்ப்பாயம் (NCLT) மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் இனி ஐ.டி.எப்.சி. வங்கி, IDFC First Bank என அழைக்கப்படும். வரும் ஜனவரி 2019 முதல் இதன் புதிய பெயரிலான சேவை தொடங்கப்படலாம். ஐ.டி.எப்.சி. வங்கி 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பையும், ஒரு பங்குக்கு 44 ரூபாய் புத்தக மதிப்பையும் (Book Value) கொண்டுள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

கேப்பிடல் பர்ஸ்ட் நிறுவனம் 5,600 கோடி ரூபாய் சந்தை மதிப்பு (Market Capitalization) மற்றும் ஒரு பங்குக்கு 295 ரூபாய் புத்தக மதிப்பையும் கொண்டு இயங்கி வருகிறது. இணைப்பிற்கு பின் (Merger), ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கியின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 72 லட்சமாக இருக்கும். வங்கிகளின் கிளை 203 என்ற அளவிலும், அதன் கடன் சொத்துக்கள் ரூ. 1 லட்சம் கோடியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

 

கேப்பிடல் பர்ஸ்ட் நிறுவனத்தின் நிறுவனர் திரு. வைத்தியநாதன், ஐ.டி.எப்.சி. பர்ஸ்ட் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக செயல்படுவார். ஐ.டி.எப்.சி. வங்கியின் தலைவர் திரு. ராஜிவ் லால் இனி IDFC First வங்கியின் நிர்வாகம் அல்லாத தலைவராக (Non Executive Chairman) இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் பிறந்த திரு. வைத்தியநாதன் தனது பள்ளிக்காலத்தை சென்னையில் தொடங்கி, மேற்படிப்பை ராஞ்சியில் உள்ள பிர்லா கல்வி நிறுவனத்தில் (BIT Mesra) முடித்தார். Citibank மற்றும் ICICI வங்கியில் பணிபுரிந்த இவர் 2012 ம் ஆண்டு தனது கேப்பிடல் பர்ஸ்ட் நிதி சேவையை துவக்கினார். இந்த நிறுவனம் கடந்த ஐந்து வருடங்களில் 40 % தொடர்ச்சியான லாப வளர்ச்சியை கொண்டுள்ளது. நிறுவனத்தின் லாபம் கடந்த நிதி ஆண்டில் 327 கோடி ரூபாயாகும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் அந்நிய முதலீடு

இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் அந்நிய முதலீடு

Massive Outflows from Indian Stock Market by the Foreign Investors

 

இந்திய பங்குச்சந்தை நடப்பு வருடம் முழுவதும் ஏற்ற-இறக்கமாகவே காணப்பட்டுள்ளது. தேசிய பங்குச்சந்தையான நிப்டி 50 (Nifty 50) குறியீடு இந்த ஆண்டில் (14-12-2018 வரை) சுமார் 5.90 சதவீத ஏற்றத்திலும், மும்பை பங்குச்சந்தை 8.70 சதவீத ஏற்றத்திலும் உள்ளது. அதே நேரத்தில் கடந்த மூன்று மாத கால அடிப்படையில் பார்க்கும் போது, நிப்டி 50 குறியீடு 6.30 சதவீத இறக்கத்திலும், மும்பை சந்தை ஆறு சதவீத இறக்கத்திலும் இருக்கிறது.

 

அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு (Foreign Portfolio Investors), நம் நாட்டின் சந்தையில் கடந்த ஒரு வருடமாக குறைவான அளவிலே உள்ளது. கடந்த வருடத்தில் அதிகபட்ச வெளிநாட்டு முதலீடாக சுமார் 2 லட்சத்தை பெற்ற இந்திய பங்குச்சந்தை, இந்த வருடத்தில் அதற்கு நேரெதிர் மாறாக அமைந்தது. இந்த ஆண்டில் இதுவரை மட்டும், அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் (Equity & Debt) இருந்து வெளியே எடுத்த தொகை மட்டும் சுமார் 87,700 கோடி ரூபாய்.

 

பொருளாதார தேக்க நிலை, சமீபத்திய பாரத ரிசர்வ் வங்கியின் கவர்னர் ராஜினாமா, வரவிருக்கும் அமெரிக்க வட்டி விகித அறிவிப்பு, உள்நாட்டு அரசியல் என பங்குச்சந்தையை வெகுவாக பாதித்ததும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை சந்தையில் இருந்து வெளியே எடுக்க காரணமாக அமைந்துள்ளது. இந்திய சந்தையில் உள்ள மிகப்பெரிய மற்றும் வளர்ச்சி நிறுவனங்களில் அந்நிய முதலீட்டாளர்களின் பங்கு (Share Holding) மட்டும் சுமார் 25 சதவீதமாகும்.

 

சந்தையில் உள்ள நிறுவனங்களின் நிறுவனர்கள் வைத்திருக்கும் பங்குகளுக்கு அடுத்தாற் போல், அந்நிய முதலீட்டாளர்களின் பங்கு இருப்பது கவனிக்கத்தக்கது. இவர்கள் வெளியேறும் பட்சத்தில், பங்குச்சந்தை ஆட்டம் காண்பது இயல்பு. வரவிருக்கும் அமெரிக்க வட்டி விகித அறிவிப்பை (US Fed Rate) சார்ந்தும், அவர்களின் முதலீடு வெளியேறுகிறது. முன்னாள் கவர்னர் திரு. உர்ஜித் பட்டேல் அவர்களின் தீடீர் ராஜினாமாவும் (RBI Governor’s Resignation) மற்றொரு காரணமாக உள்ளது.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

இந்திய கடன் சந்தையிலும் (Debt Market) அந்நிய முதலீட்டாளர்களின் வெளியேறும் மதிப்பு 50,000 கோடி ரூபாயை தாண்டியது. கடந்த ஆறு வருடங்களாக வாங்கும் போக்கையே கொண்டிருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதன்முறையாக இந்த வருடம் முழுவதும் முதலீட்டை வெளியே எடுத்து கொண்டிருக்கின்றனர். நாட்டில் அடுத்து வரவிருக்கும் பட்ஜெட் அறிக்கையும், தேர்தலும் (Elections 2019) மற்றும் அதனை சார்ந்த காரணிகளும் இனி பங்குச்சந்தையை நகர்த்தலாம்.

 

அந்நிய முதலீட்டாளர்கள் (FII Outflows) வெளியேறி சென்றாலும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் (Domestic Investors) சதவீதம் சற்று சாதகமாக உள்ளது. பரஸ்பர நிதி முதலீடுகளில் வரும் SIP முதலீடும் சந்தைக்கு பலத்தை சேர்கின்றன. நடப்பு மாதத்தில் பங்குச்சந்தையில் அந்நிய முதலீட்டாளர்கள் 2,930 கோடி ரூபாயை விற்றும், உள்நாட்டு முதலீட்டாளர்கள் 610 கோடி ரூபாய்க்கு வாங்கியும் உள்ளனர். அதே வேளையில் கடந்த மாதம் அந்நிய முதலீட்டாளர்களின் முதலீடு சுமார் 12,000 கோடி ரூபாய். இது கடந்த 11 மாதங்களில் இல்லாத தொகையாகும். இதற்கு காரணமாக சொல்லப்பட்ட விஷயம் கச்சா எண்ணெய் விலை குறைவு.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பங்குச்சந்தை பரிவர்த்தனையில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் என்னென்ன ?

பங்குச்சந்தை பரிவர்த்தனையில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் என்னென்ன ?

What are the charges for Shares on Stock Exchange ?

 

பங்குச்சந்தை ஏற்ற – இறக்கமிருக்கும் காலம் இது. உலகளாவிய செய்திகள், பொருளாதார நிலைகள், உள்நாட்டு நிகழ்வுகள் என பல்வேறு விஷயங்கள் பங்குச்சந்தையை நகர்விக்கும் செயலாக உள்ளன. இன்று நம்மில் பலருக்கு பங்குச்சந்தை பற்றிய விழிப்புணர்வு இல்லாவிட்டாலும், அவற்றிலும் புகுந்து லாபம் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.

 

பங்குச்சந்தை என்பது ஒரு நல்ல தொழில் சார்ந்த தன்மையாகும், இருப்பினும் சற்று ரிஸ்க் அதிகமுள்ள சந்தையாகும். ஒரு நாட்டின் பொருளாதார நாடியை அளந்து பார்க்கும் திறன் பங்குச்சந்தையிடத்தில் உள்ளது. தின வர்த்தகர், குறுகிய கால வர்த்தகர் மற்றும் நீண்ட கால முதலீட்டாளர் என பல்வேறு முகங்கள் பங்குச்சந்தைக்கு உள்ளன. பங்குச்சந்தையில் நாம் வாங்கும் மற்றும் விற்கும் பங்குகளுக்கு எவ்வாறு கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன என பார்ப்போம்.

 

பங்குகளை பொறுத்தவரை நாம் வாங்குவது (Buy Shares) என்பது ஒரு பரிவர்த்தனை (Trade) ஆகும். அதே போன்று, விற்பதும் ஒரு பரிவர்த்தனையாக கொள்ளப்படுகிறது. இந்த பரிவர்த்தனைகளுக்கு ஏற்றாற் போல், தரகு கட்டணம் (Brokerage) மற்றும் இதர சேவை கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. தினசரி வர்த்தகத்திற்கு (Equity Intra day) என ஒருவித கட்டண முறையும், பங்குகளை  இன்று வாங்கி விட்டு, மறுநாளோ அல்லது எதிர்வரும் காலங்களில் விற்பதன் (Equity Delivery) மூலமான பரிவர்த்தனைகளுக்கு மற்றொரு விதமாக கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. டெரிவேட்டிவ்ஸ் (Derivatives – Futures & Options) என்ற சொல்லக்கூடிய ஆபத்தான வர்த்தகத்திற்கு என கட்டணங்கள் வேறுபடுகின்றன. பொதுவாக பங்கு பரிவர்த்தனைகளுக்கு தரகரின் (Stock Broker) தரகு கட்டணம், சந்தை அமைப்பின் பங்கு பரிவர்த்தனை கட்டணம் (Securities Transaction Tax – STT), பரிமாற்ற கட்டணம் (Exchange Transaction Charges), செபி கட்டணம் (SEBI Turnover), ஜி.எஸ்.டி மற்றும் முத்திரை வரி (Stamp Duty) வசூலிக்கப்படுகிறது.

( Read this post after the advertisement… )

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 

Securities Charges Stock Exchange

தினசரி வர்த்தகரா (Day Trader) நீங்கள் ?

மேலே உள்ள அட்டவணையில் ஒவ்வொரு வகையான பங்கு வர்த்தகத்திற்கும் அதற்குரிய கட்டணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள முத்திரை வரி நமது மாநிலத்திற்கு உரியது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் முத்திரை வரி வேறுபடும். தரகு கட்டணம் ஒவ்வொரு தரகு நிறுவனத்தினை பொறுத்து மாறுபடும். தரகு கட்டணத்தில் தள்ளுபடியை நாம் நமது தரகரிடம் கேட்டு பெறலாம். இது போக நாம் பங்குகள் மூலம் பெற்ற லாபங்களுக்கு வருமான வரிச்சட்டத்தில் சில வரிகளும், நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு வரி விலக்கும் உண்டு. பங்குகள் மூலமான நஷ்டத்தை ஈடுகட்ட அதற்கான சலுகையும் வருமான வரி வரம்பின் அடிப்படையில் விலக்கினை பெறலாம்.

பங்குச்சந்தையில் நாம் பெறும் ஈவுத்தொகைக்கு (Dividend), பங்கு நிறுவனங்களே வரியை செலுத்தி விடும். அதே வேளையில் ஒரு நிதியாண்டில் பெறும் ஈவுத்தொகை ரூ. 10 லட்சத்தை தாண்டும் பட்சத்தில் 10 சதவீத வரி (Dividend Distribution Tax) செலுத்த வேண்டும். பங்குகள் சார்ந்த வருமான வரிச்சட்டத்தினை அடுத்து வரும் கட்டுரையில் நாம் பார்ப்போம். எனவே நாம் பங்குச்சந்தையில் வருமானம் ஈட்டும் போது, இது போன்ற கட்டணங்களை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

பங்குசந்தையில் தினசரி வர்த்தகரா நீங்கள் ?

பங்குசந்தையில் தினசரி வர்த்தகரா நீங்கள் ?

Are you Day Trader (Intra day) in the Stock Market ?

 

சேமிப்பும், முதலீடும் (Savings & Investing) வெவ்வேறு என்பதை நாம் புரிந்து கொள்ளும் போது தான், செல்வம் சேர்ப்பதை பற்றிய புரிதல் அமையும். அதே போல தான் பங்குச்சந்தை முதலீடும். இன்று நாம் காணும் செல்வம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் – ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச்சந்தை. நம்மில் சிலர் மெய்நிகர் நாணயமும் (Crypto Currency – Bitcoin) ஒரு செல்வம் திரட்டுவதற்கான வாய்ப்பு என கூறினாலும், இன்னும் நம் நாட்டில் அதற்கான புரிதலும், வழிமுறைகளும் உருவாக்கப்படவில்லை. அதனாலேயே பாரத ரிசர்வ் வங்கி (RBI), மெய்நிகர் நாணய வர்த்தகத்தை தடை செய்துள்ளன.

 

மேலை நாடுகளிலும், இது சார்ந்த தகவல்கள் இன்றும் வெளிப்படையாக இல்லை. இருப்பினும் இதன் வர்த்தகம் சில நாடுகளில் விதிமீறலாக நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. உலகின் மாபெரும் முதலீட்டாளர் மற்றும் பணக்காரர் வாரன் பப்பெட் (Warren Buffet) கூறும் போது, ” மெய்நிகர் நாணயத்தை ஒரு சொத்தாக கருத முடியாது ” என்கிறார். ஆக, சொத்தினை உருவாக்க பயன்படும் சாதனமே இன்று உலகில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்திகிறது. இதன் காரணமாக தான் ரியல் எஸ்டேட்டும், அதனை சார்ந்த வாடகை வருமானமும் இன்றளவிலும் மதிப்புமிக்கதாக உள்ளன.

 

ரியல் எஸ்டேட்டும், தங்கமும் கடந்த சில வருடங்களாக பெரிய வருமானத்தை ஏதும் தராதது முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளின் வட்டி விகிதமும் முதலீட்டிற்கு சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ஆனால் பங்குச்சந்தை (Share Market) என்னவோ ஏற்ற-இறக்கத்துடன் இருந்தாலும் வருமானம் பண்ணுவதற்கான மற்றும் நீண்டகால செல்வம் சேர்ப்பதற்கான வாய்ப்பாகவே உள்ளது. பங்குச்சந்தை ரிஸ்க் அதிகம் கொண்ட முதலீட்டு சாதனம் எனினும், இன்று நாம் பணவீக்கத்தை விட சிறந்த வருமானம் ஈட்டுவதற்கான நீண்டகால முதலீடு பங்குச்சந்தையை தவிர வேறு எதுவும் இல்லை.

 

பங்குசந்தையில் மூன்று விதமான மனிதர்கள் பொதுவாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். தினசரி வர்த்தகர் (Day Trader), குறுகிய கால முதலீட்டாளர் (Short Term Investor), நீண்ட கால முதலீட்டாளர் (Longterm Investor). பங்குச்சந்தையை ஒரு சொத்தாக கருதி, நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யும் நபர் – நீண்ட கால முதலீட்டாளர். வாங்கிய பங்குகளை மூன்று மாதத்திலிருந்து மூன்று வருடம் வரை வைத்திருக்க கூடியவர்கள் குறுகிய கால முதலீட்டாளர். தினமும் பங்குகளை வாங்கி அன்றே சந்தையில் விற்று விட்டு (Intra day) செல்பவர் தினசரி வர்த்தகர்  ஆவர்.

( Read this post after the advertisement… )

 

//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

தினசரி வர்த்தகரா (Day Trader) நீங்கள் ?

 

தினசரி வர்த்தகர் என்பது அதிக ரிஸ்க் கொண்ட மனநிலை ஆகும். நீங்கள் 100 சதவீத லாபம் ஈட்டினாலும், அளவில்லா நஷ்டத்தை அடைய வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், சில நேர்த்தியான குறிப்புகளால் (Intra day Strategy) நீங்கள் உங்கள் நஷ்டத்தை குறைக்கலாம். நஷ்டத்தை நாம் குறைப்பதிலிருந்தே நமக்கான லாபம் வளரும். தினசரி வர்த்தகம் என்பது எல்லோருக்குமானதல்ல. சந்தையில் ஆளுமை உணர்வை (Aggressive) செலுத்தக்கூடியவர்கள் மட்டுமே செய்ய வேண்டிய வர்த்தகமிது.

 

  • தினசரி வர்த்தகம் (Day Trading) என்பது உங்கள் ரிஸ்குக்கான வெகுமதியை அளிக்கும். அது லாபமாகவோ அல்லது நஷ்டமாகவோ (Risk-Reward) இருக்கலாம். இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களிடத்தில் வேண்டும். எல்லோரும் சந்தையில் பங்குகள் வாங்குகிறார்கள் என்ற மனநிலையை நீங்கள் கைவிட வேண்டும். எப்போதும் பங்குகள் வாங்கலாம் என்ற நினைப்பையும் நீங்கள் கொண்டிருக்கக்கூடாது. நாம் எந்த விலையில் பங்கினை வாங்க வேண்டும் (Entry price) மற்றும் எந்த விலைக்கு பங்கினை விற்க (Exit price) வேண்டும், எவ்வளவு நஷ்டம் வந்தால் நம்மால் தாங்கிக்கொள்ள முடியும் (Tolerance) போன்றவற்றை முன்னரே திட்டமிட்டு நீங்கள் சந்தைக்குள் செல்ல வேண்டும்.

 

  • சந்தையின் போக்கினை (ஏற்ற-இறக்கம்) நன்றாக கணிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒரு நீண்ட கால முதலீட்டாளர் வேண்டுமானால் சந்தை போக்குக்கு எதிரே செயல்பட்டு பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம். அதனால் அவருக்கு பெரிய பாதிப்பு உண்டாகாது. ஆனால் தின வர்த்தகரை பொறுத்தவரை, அவரிடம் இருப்பது அன்றைய நாள் மட்டுமே – சந்தை போக்கினை (Market Trend) பின்பற்ற வேண்டும்.

 

  • உங்களுக்கான திட்டம் (Entry, Exit, Stoploss) செயல்பட்டவுடன், நீங்கள் அதனை உணர்வுபூர்வமாக (Emotional) அணுக கூடாது. உங்களுக்கான லாபமோ, நட்டமோ வந்தவுடன் வெளியேறுவதே உங்களுக்கான சிறந்த திட்டமாகும். Over Trade செய்வதை தவிர்ப்பது நலம்.

 

  • எப்போதும் சந்தையில் ஒதுக்கப்பட்ட அளவை மீறி வெளிப்பாடை அதிகரிக்க வேண்டாம். (Don’t take over exposure on Margin) முடிந்தளவு உங்களிடம் உள்ள பணத்தை கொண்டே வர்த்தகம் செய்ய பழகுங்கள்.

 

  • இழப்பை குறைப்பதற்கான STOP LOSS தேர்வை எப்போதும் குறிப்பிடுங்கள். STOP LOSS ஒரு பயனுள்ள தேர்வு என்பதை மறக்க வேண்டாம். இன்று நீங்கள் தோற்றாலும், நாளை வெற்றியடைவதற்கான பாதை தான் Stoploss.

 

  • ஒவ்வொரு நாளும் சந்தை முடியும் முன், உங்களுடைய வர்த்தக செயல்பாட்டை (Order and Trade Execution) சரி பார்த்து கொள்ளுங்கள். அதே போல, வர்த்தகத்திற்கு பிந்தைய பரிவர்த்தனை அறிக்கைகளை (Transactions – Contract note) பொறுமையாக படியுங்கள்.

 

  • பங்குச்சந்தை ஒவ்வொரு நாளும் அன்றைய தினத்தின் உலகளவிலான செய்திகள், வதந்திகள், நிறுவனத்தின் தாக்கங்கள், அரசின் கொள்கைகள் ஆகியவற்றால் தாக்கமடையும். அதனால் எல்லா நாட்களையும் ஒரே அளவில் கருதக்கூடாது. தின வர்த்தகத்துக்கு தேவையான அடிப்படை கல்வியை கற்று கொண்ட பின்னரே சந்தைக்கு வர வேண்டும். எல்லோரும் பங்குசந்தையில் உள்ளார்கள் என்று நீங்களும் பணத்தை கொண்டு வந்தால் – பங்குச்சந்தை உங்கள் பணத்தை உள்வாங்கி கொள்ளும், உங்களுக்கு பணம் திரும்ப வராது.

 

  • நீண்டகால முதலீட்டாளர்களுக்கு அடிப்படை பகுப்பாய்வு (Fundamental Analysis), தின மற்றும் குறுகிய கால வர்த்தகர்களுக்கு தொழில்நுட்ப பகுப்பாய்வு (Technical Analysis) போன்ற பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை கல்வியை கற்று கொள்வது, உங்களுடைய முதலீட்டை பாதுகாக்கும்.

 

இலவச பங்குச்சந்தை வகுப்புகள் – Free Share Market Course online

 

ஆம், பங்குச்சந்தை ஆபத்தானது தான் – சாலையில் நாம் வாகனத்தை ஓட்டுவது போல..

 

பங்குச்சந்தை ஒரு முதலீட்டு வாய்ப்பு தான் – சாலை விதிமுறைகளை பின்பற்றும் போதும், நமக்கான வேகத்தை கொண்டிருக்கும் போதும்.

 

வாழ்க வளமுடன்,

 

நன்றி, வர்த்தக மதுரை

 

www.varthagamadurai.com

 

Financial Blog in Tamil