பங்குச்சந்தை பரிவர்த்தனையில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் என்னென்ன ?
What are the charges for Shares on Stock Exchange ?
பங்குச்சந்தை ஏற்ற – இறக்கமிருக்கும் காலம் இது. உலகளாவிய செய்திகள், பொருளாதார நிலைகள், உள்நாட்டு நிகழ்வுகள் என பல்வேறு விஷயங்கள் பங்குச்சந்தையை நகர்விக்கும் செயலாக உள்ளன. இன்று நம்மில் பலருக்கு பங்குச்சந்தை பற்றிய விழிப்புணர்வு இல்லாவிட்டாலும், அவற்றிலும் புகுந்து லாபம் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டுள்ளது.
பங்குச்சந்தை என்பது ஒரு நல்ல தொழில் சார்ந்த தன்மையாகும், இருப்பினும் சற்று ரிஸ்க் அதிகமுள்ள சந்தையாகும். ஒரு நாட்டின் பொருளாதார நாடியை அளந்து பார்க்கும் திறன் பங்குச்சந்தையிடத்தில் உள்ளது. தின வர்த்தகர், குறுகிய கால வர்த்தகர் மற்றும் நீண்ட கால முதலீட்டாளர் என பல்வேறு முகங்கள் பங்குச்சந்தைக்கு உள்ளன. பங்குச்சந்தையில் நாம் வாங்கும் மற்றும் விற்கும் பங்குகளுக்கு எவ்வாறு கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன என பார்ப்போம்.
பங்குகளை பொறுத்தவரை நாம் வாங்குவது (Buy Shares) என்பது ஒரு பரிவர்த்தனை (Trade) ஆகும். அதே போன்று, விற்பதும் ஒரு பரிவர்த்தனையாக கொள்ளப்படுகிறது. இந்த பரிவர்த்தனைகளுக்கு ஏற்றாற் போல், தரகு கட்டணம் (Brokerage) மற்றும் இதர சேவை கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. தினசரி வர்த்தகத்திற்கு (Equity Intra day) என ஒருவித கட்டண முறையும், பங்குகளை இன்று வாங்கி விட்டு, மறுநாளோ அல்லது எதிர்வரும் காலங்களில் விற்பதன் (Equity Delivery) மூலமான பரிவர்த்தனைகளுக்கு மற்றொரு விதமாக கட்டணங்கள் விதிக்கப்படுகின்றன. டெரிவேட்டிவ்ஸ் (Derivatives – Futures & Options) என்ற சொல்லக்கூடிய ஆபத்தான வர்த்தகத்திற்கு என கட்டணங்கள் வேறுபடுகின்றன. பொதுவாக பங்கு பரிவர்த்தனைகளுக்கு தரகரின் (Stock Broker) தரகு கட்டணம், சந்தை அமைப்பின் பங்கு பரிவர்த்தனை கட்டணம் (Securities Transaction Tax – STT), பரிமாற்ற கட்டணம் (Exchange Transaction Charges), செபி கட்டணம் (SEBI Turnover), ஜி.எஸ்.டி மற்றும் முத்திரை வரி (Stamp Duty) வசூலிக்கப்படுகிறது.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தினசரி வர்த்தகரா (Day Trader) நீங்கள் ?
மேலே உள்ள அட்டவணையில் ஒவ்வொரு வகையான பங்கு வர்த்தகத்திற்கும் அதற்குரிய கட்டணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள முத்திரை வரி நமது மாநிலத்திற்கு உரியது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் முத்திரை வரி வேறுபடும். தரகு கட்டணம் ஒவ்வொரு தரகு நிறுவனத்தினை பொறுத்து மாறுபடும். தரகு கட்டணத்தில் தள்ளுபடியை நாம் நமது தரகரிடம் கேட்டு பெறலாம். இது போக நாம் பங்குகள் மூலம் பெற்ற லாபங்களுக்கு வருமான வரிச்சட்டத்தில் சில வரிகளும், நீண்ட கால மூலதன ஆதாயத்திற்கு வரி விலக்கும் உண்டு. பங்குகள் மூலமான நஷ்டத்தை ஈடுகட்ட அதற்கான சலுகையும் வருமான வரி வரம்பின் அடிப்படையில் விலக்கினை பெறலாம்.
பங்குச்சந்தையில் நாம் பெறும் ஈவுத்தொகைக்கு (Dividend), பங்கு நிறுவனங்களே வரியை செலுத்தி விடும். அதே வேளையில் ஒரு நிதியாண்டில் பெறும் ஈவுத்தொகை ரூ. 10 லட்சத்தை தாண்டும் பட்சத்தில் 10 சதவீத வரி (Dividend Distribution Tax) செலுத்த வேண்டும். பங்குகள் சார்ந்த வருமான வரிச்சட்டத்தினை அடுத்து வரும் கட்டுரையில் நாம் பார்ப்போம். எனவே நாம் பங்குச்சந்தையில் வருமானம் ஈட்டும் போது, இது போன்ற கட்டணங்களை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை