பங்குசந்தையில் தினசரி வர்த்தகரா நீங்கள் ?
Are you Day Trader (Intra day) in the Stock Market ?
சேமிப்பும், முதலீடும் (Savings & Investing) வெவ்வேறு என்பதை நாம் புரிந்து கொள்ளும் போது தான், செல்வம் சேர்ப்பதை பற்றிய புரிதல் அமையும். அதே போல தான் பங்குச்சந்தை முதலீடும். இன்று நாம் காணும் செல்வம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் – ரியல் எஸ்டேட், தங்கம், பங்குச்சந்தை. நம்மில் சிலர் மெய்நிகர் நாணயமும் (Crypto Currency – Bitcoin) ஒரு செல்வம் திரட்டுவதற்கான வாய்ப்பு என கூறினாலும், இன்னும் நம் நாட்டில் அதற்கான புரிதலும், வழிமுறைகளும் உருவாக்கப்படவில்லை. அதனாலேயே பாரத ரிசர்வ் வங்கி (RBI), மெய்நிகர் நாணய வர்த்தகத்தை தடை செய்துள்ளன.
மேலை நாடுகளிலும், இது சார்ந்த தகவல்கள் இன்றும் வெளிப்படையாக இல்லை. இருப்பினும் இதன் வர்த்தகம் சில நாடுகளில் விதிமீறலாக நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. உலகின் மாபெரும் முதலீட்டாளர் மற்றும் பணக்காரர் வாரன் பப்பெட் (Warren Buffet) கூறும் போது, ” மெய்நிகர் நாணயத்தை ஒரு சொத்தாக கருத முடியாது ” என்கிறார். ஆக, சொத்தினை உருவாக்க பயன்படும் சாதனமே இன்று உலகில் பரவலான தாக்கத்தை ஏற்படுத்திகிறது. இதன் காரணமாக தான் ரியல் எஸ்டேட்டும், அதனை சார்ந்த வாடகை வருமானமும் இன்றளவிலும் மதிப்புமிக்கதாக உள்ளன.
ரியல் எஸ்டேட்டும், தங்கமும் கடந்த சில வருடங்களாக பெரிய வருமானத்தை ஏதும் தராதது முதலீட்டாளர்களை கலக்கத்தில் ஏற்படுத்தியுள்ளது. வங்கிகளின் வட்டி விகிதமும் முதலீட்டிற்கு சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ஆனால் பங்குச்சந்தை (Share Market) என்னவோ ஏற்ற-இறக்கத்துடன் இருந்தாலும் வருமானம் பண்ணுவதற்கான மற்றும் நீண்டகால செல்வம் சேர்ப்பதற்கான வாய்ப்பாகவே உள்ளது. பங்குச்சந்தை ரிஸ்க் அதிகம் கொண்ட முதலீட்டு சாதனம் எனினும், இன்று நாம் பணவீக்கத்தை விட சிறந்த வருமானம் ஈட்டுவதற்கான நீண்டகால முதலீடு பங்குச்சந்தையை தவிர வேறு எதுவும் இல்லை.
பங்குசந்தையில் மூன்று விதமான மனிதர்கள் பொதுவாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். தினசரி வர்த்தகர் (Day Trader), குறுகிய கால முதலீட்டாளர் (Short Term Investor), நீண்ட கால முதலீட்டாளர் (Longterm Investor). பங்குச்சந்தையை ஒரு சொத்தாக கருதி, நீண்ட கால நோக்கில் முதலீடு செய்யும் நபர் – நீண்ட கால முதலீட்டாளர். வாங்கிய பங்குகளை மூன்று மாதத்திலிருந்து மூன்று வருடம் வரை வைத்திருக்க கூடியவர்கள் குறுகிய கால முதலீட்டாளர். தினமும் பங்குகளை வாங்கி அன்றே சந்தையில் விற்று விட்டு (Intra day) செல்பவர் தினசரி வர்த்தகர் ஆவர்.
( Read this post after the advertisement… )
//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
தினசரி வர்த்தகரா (Day Trader) நீங்கள் ?
தினசரி வர்த்தகர் என்பது அதிக ரிஸ்க் கொண்ட மனநிலை ஆகும். நீங்கள் 100 சதவீத லாபம் ஈட்டினாலும், அளவில்லா நஷ்டத்தை அடைய வாய்ப்புகள் அதிகம். இருப்பினும், சில நேர்த்தியான குறிப்புகளால் (Intra day Strategy) நீங்கள் உங்கள் நஷ்டத்தை குறைக்கலாம். நஷ்டத்தை நாம் குறைப்பதிலிருந்தே நமக்கான லாபம் வளரும். தினசரி வர்த்தகம் என்பது எல்லோருக்குமானதல்ல. சந்தையில் ஆளுமை உணர்வை (Aggressive) செலுத்தக்கூடியவர்கள் மட்டுமே செய்ய வேண்டிய வர்த்தகமிது.
- தினசரி வர்த்தகம் (Day Trading) என்பது உங்கள் ரிஸ்குக்கான வெகுமதியை அளிக்கும். அது லாபமாகவோ அல்லது நஷ்டமாகவோ (Risk-Reward) இருக்கலாம். இரண்டையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உங்களிடத்தில் வேண்டும். எல்லோரும் சந்தையில் பங்குகள் வாங்குகிறார்கள் என்ற மனநிலையை நீங்கள் கைவிட வேண்டும். எப்போதும் பங்குகள் வாங்கலாம் என்ற நினைப்பையும் நீங்கள் கொண்டிருக்கக்கூடாது. நாம் எந்த விலையில் பங்கினை வாங்க வேண்டும் (Entry price) மற்றும் எந்த விலைக்கு பங்கினை விற்க (Exit price) வேண்டும், எவ்வளவு நஷ்டம் வந்தால் நம்மால் தாங்கிக்கொள்ள முடியும் (Tolerance) போன்றவற்றை முன்னரே திட்டமிட்டு நீங்கள் சந்தைக்குள் செல்ல வேண்டும்.
- சந்தையின் போக்கினை (ஏற்ற-இறக்கம்) நன்றாக கணிக்க தெரிந்திருக்க வேண்டும். ஒரு நீண்ட கால முதலீட்டாளர் வேண்டுமானால் சந்தை போக்குக்கு எதிரே செயல்பட்டு பங்குகளை வாங்கலாம் அல்லது விற்கலாம். அதனால் அவருக்கு பெரிய பாதிப்பு உண்டாகாது. ஆனால் தின வர்த்தகரை பொறுத்தவரை, அவரிடம் இருப்பது அன்றைய நாள் மட்டுமே – சந்தை போக்கினை (Market Trend) பின்பற்ற வேண்டும்.
- உங்களுக்கான திட்டம் (Entry, Exit, Stoploss) செயல்பட்டவுடன், நீங்கள் அதனை உணர்வுபூர்வமாக (Emotional) அணுக கூடாது. உங்களுக்கான லாபமோ, நட்டமோ வந்தவுடன் வெளியேறுவதே உங்களுக்கான சிறந்த திட்டமாகும். Over Trade செய்வதை தவிர்ப்பது நலம்.
- எப்போதும் சந்தையில் ஒதுக்கப்பட்ட அளவை மீறி வெளிப்பாடை அதிகரிக்க வேண்டாம். (Don’t take over exposure on Margin) முடிந்தளவு உங்களிடம் உள்ள பணத்தை கொண்டே வர்த்தகம் செய்ய பழகுங்கள்.
- இழப்பை குறைப்பதற்கான STOP LOSS தேர்வை எப்போதும் குறிப்பிடுங்கள். STOP LOSS ஒரு பயனுள்ள தேர்வு என்பதை மறக்க வேண்டாம். இன்று நீங்கள் தோற்றாலும், நாளை வெற்றியடைவதற்கான பாதை தான் Stoploss.
- ஒவ்வொரு நாளும் சந்தை முடியும் முன், உங்களுடைய வர்த்தக செயல்பாட்டை (Order and Trade Execution) சரி பார்த்து கொள்ளுங்கள். அதே போல, வர்த்தகத்திற்கு பிந்தைய பரிவர்த்தனை அறிக்கைகளை (Transactions – Contract note) பொறுமையாக படியுங்கள்.
- பங்குச்சந்தை ஒவ்வொரு நாளும் அன்றைய தினத்தின் உலகளவிலான செய்திகள், வதந்திகள், நிறுவனத்தின் தாக்கங்கள், அரசின் கொள்கைகள் ஆகியவற்றால் தாக்கமடையும். அதனால் எல்லா நாட்களையும் ஒரே அளவில் கருதக்கூடாது. தின வர்த்தகத்துக்கு தேவையான அடிப்படை கல்வியை கற்று கொண்ட பின்னரே சந்தைக்கு வர வேண்டும். எல்லோரும் பங்குசந்தையில் உள்ளார்கள் என்று நீங்களும் பணத்தை கொண்டு வந்தால் – பங்குச்சந்தை உங்கள் பணத்தை உள்வாங்கி கொள்ளும், உங்களுக்கு பணம் திரும்ப வராது.
- நீண்டகால முதலீட்டாளர்களுக்கு அடிப்படை பகுப்பாய்வு (Fundamental Analysis), தின மற்றும் குறுகிய கால வர்த்தகர்களுக்கு தொழில்நுட்ப பகுப்பாய்வு (Technical Analysis) போன்ற பங்குச்சந்தை சார்ந்த அடிப்படை கல்வியை கற்று கொள்வது, உங்களுடைய முதலீட்டை பாதுகாக்கும்.
இலவச பங்குச்சந்தை வகுப்புகள் – Free Share Market Course online
ஆம், பங்குச்சந்தை ஆபத்தானது தான் – சாலையில் நாம் வாகனத்தை ஓட்டுவது போல..
பங்குச்சந்தை ஒரு முதலீட்டு வாய்ப்பு தான் – சாலை விதிமுறைகளை பின்பற்றும் போதும், நமக்கான வேகத்தை கொண்டிருக்கும் போதும்.
வாழ்க வளமுடன்,
நன்றி, வர்த்தக மதுரை